Mar 012014
 

 

வாழ்க்கையின் அழகு..

நீ எத்தனை சந்தோஷமாக இருக்கிறாய் என்பதில் இல்லை,

உன்னால் எத்தனை பேர் சந்தோஷமாக இருக்கிறார்கள்

என்பதில் தான் அடங்கி இருக்கிறது!!

 

 

சாக்கு போக்குகளையும் காரணங்களையும் விட,

உனது விருப்பமும் உழைப்பும் பெரியதாகும் போது,

வெற்றி பிறக்கின்றது..

 

 

தடைக்கல்லுக்கும் வெற்றிப்படிக்கும் உள்ள வித்தியாசம்,

ஓருவர் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்துள்ளது

 

 

வெற்றிப் பெறும் நோக்கத்திற்கு மட்டும் மன உறுதி முக்கியமல்ல..

வெற்றிக்கு தேவையான பயிற்சிக்கும், முன்னேற்பாட்டிற்கும்

உள்ள மன உறுதி மிக மிக முக்கியம்.

 

 

தோல்வி என்பது,

வீழ்வதில் இல்லை,

வீழ்ந்த பின், எழாமல் இருப்பதில்..

 

 

முயற்சிகளை கைவிட்டு விடுதலில் தான், நமது தோல்வி உள்ளது,

வெற்றியை நிர்ணையிக்கும் சிறந்த பாதை…

இன்னொறு முறை முயற்சிப்பதே ஆகும்.

 

 

ஒரே ஒரு மனிதனை நீங்கள் தோற்கடிக்க வேண்டுமெனில், அது உங்களை மட்டும்தான்…

உங்களுக்குப் போட்டி நீங்கள் மட்டும் தான்.

 

 

ஒரே ஒரு இடம் மட்டும் தான் உங்கள் கனவு நடக்க முடியாமல் போகும்..

அது உங்கள் சிந்தனையில் மட்டும்

 

 

தன்னம்பிக்கையை அடைய சிறந்த வழி என்ன தெரியுமா?

நீங்கள் மிகவும் அச்சப்படும் செயலை செய்வதாகும்…

 

 

நாம் வளர்கிறோம் என்றால்…

நம் சுகத்தை தியாகம் செய்வதற்கு,

தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்

           

 

எவ்வாறு உடல் வலுவற்றவன்,

கடின உடற்பயிற்சியின் மூலம் தன் உடலை வலுவானதாக மாற்ற முடியுமோ,

மன வலுவற்றவன்,

நல்ல, ஆரோக்கியமான சிந்தனைகள் மூலம் தன் மனதை வலுவானதாக மாற்ற முடியும்       

 

 

 

கட்டுபாடு என்பது விருப்பமே இல்லை என்றாலும்,

சில செய்ய வேண்டிய

முக்கியமான வேலைகளை செய்வதாகும்.

 

 

விஷயங்களை தெரிவது மட்டும் போதுமானது அல்ல,

தெரிந்தனவற்றை உபயோகப்படுத்த வேண்டும்..

விருப்பம் மட்டும் போதுமானது அல்ல,

முழு அர்ப்பணிப்புடன் விரும்பியவற்றை செயல்படுத்த வேண்டும்..        

 

 

சூழ்நிலை எளிதாக இருக்கும் போது

நீ யாரென்று தெரிவதில்லை..

சூழ்நிலை கடினமாக இருக்கும் போதும்,

சவால்கள் அதிகமாகும் போதும் தான்,

நீ யாரென்று தெரிகிறது..

 

 

பிறரை அறிந்தவன் படிப்பாளி

தன்னையே அறிந்தவன் அறிவாளி

பிறரைக் கட்டுப்படுத்த தெரிந்தவன் சக்திசாளி

தன்னையே கட்டுப்படுத்த தெரிந்தவன் மிகப்பெரிய ஞானி!!

Likes(1)Dislikes(0)
Share
Mar 012014
 

எல்லா பறவைகளும் மழையின் போது ஒரு உறைவிடத்தை தேடி ஒளிகிறது.

ஆனால் பருந்து மட்டும் தான், மேகத்துக்கு மேலே பறக்கிறது.

பிரச்சனைகள் பொதுவானது தான், ஆனால் சிந்தனையும் செயலும் உன்னை

வித்தியாசப் படுத்திக் காட்டுகிறது.

– திரு அப்துல் கலாம்

 

கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல,

உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு

– திரு அப்துல் கலாம்

 

நான் எனது எதிரிகளை அழிக்கிறேன், அவர்களை நண்பர்கள் ஆக்கி் விடும்போது.

– ஆப்ரஹாம் லிங்கன்

 

சுவாமி விவேகானந்தரின் வரிகள்

அனைத்து விதமான சுதந்திரத்திற்கும் துணிந்து நில்

உனது எண்ணம் எத்தனை தூரம் செல்கிறதோ,அத்தனை தூரம் துணிந்து செல்

அந்த உத்தம செயலை செய்வதற்க்கு துணிந்து புறப்படு.

 

நமது வாழ்க்கையை நமது எண்ணங்களே தீர்மானித்து செதுக்குகின்றன

அதனால் உங்கள் எண்ணங்களை கவணியுங்கள், அக்கறையுடன் பார்த்து கொள்ளுங்கள்.

எண்ணங்கள் வாழ்கின்றன, வெகுதூரம் பயணிக்கின்றன.

 

ஓவ்வொரு செயலும் சில கட்டத்தை தாண்ட வேண்டி உள்ளது – அவை

கிண்டல், எதிர்ப்பு, ஒப்புதல் மூன்றும்.

எவன் ஒருவன் அவனது காலக்கட்டத்தின் இயல்பை மீறி சிந்திக்கிறானோ,

கண்டிப்பாக மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுவான்.

 

வாழ்க்கையில் புதிய முயற்சி எடு.

ஜெயித்தால் தலைமை ஏற்கலாம்,

தோற்றால் வழி சொல்லலாம்.

 

உனக்கு உதவி புரிந்த மனிதனை மறக்காதே

உன்னிடம் அன்பு செலுத்தும் மனிதனை வெறுக்காதே

உன்னிடம் நம்பிக்கை வைக்கும் மனிதனை ஏமாற்றாதே

Likes(1)Dislikes(0)
Share
Share
Share