May 142015
 

6

பிரபலமான MGR பாடல் ஒன்று FM-இல் ஒலித்தது

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,

அவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே

அருகில் இருந்த நண்பர் எந்த அம்மாவது தன் பிள்ளை கெட்டவனாக வளரணும்னு நினைப்பாளா அப்புறம் எப்படி நல்லவன் ஆவதும் கேட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலேனு கவிஞர் பாடினார் என்றார் நண்பர்.

கரெக்ட் சார். ஆனால் ஒரு தாயால் ஓர் மகனை பண்பில் சிறந்தவனாக வளர்க்க முடியும் என்றேன்

ஏதாவது உதாரணம் இருக்கா? என்றார் நண்பர்.

இந்த கதையை கேளுங்க என்றேன் –

சத்ரபதி சிவாஜி சிறு வயதில் தன் தந்தையை இழந்ததும் தன் தாயார் ஜிஜபாயிடம் கல்வி கற்றதும், முகலாயர்களிடம் சண்டை இட்டதும் அனைவரும் அறிந்ததே. அதேபோல் முகலாயர்கள் தாங்கள் வென்ற பகுதியின் பெண்களை கவர்ந்து செல்வதும் அனைவரும் அறிந்ததே.

ஒரு சமயம் ஒரு போரில், சிவாஜியின் படை வென்றதும் சிவாஜியின் தளபதி தான் அரசனை மகிழ்விக்க எதிரியின் மனைவியை பரிசாக கொடுத்தான். சிவாஜி அந்த பெண்ணை பார்த்தவுடன், இவ்வளவு அழகான பெண் என் தாயாக தானே இருக்க முடியும் என்று சொல்லி அவள் முன் வணங்கி, “தாயே அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு மகனாக பிறக்க எனக்கு அருள் புரியுங்கள்” என்றாராம்.

பிறகு அத்தளபதியிடம் எந்த பெண்ணையும் கவர்ந்து வர கூடாது என்று ஆணை இட்டார்.

சார், இப்போ சொல்லுங்க எந்த அளவிற்கு ஒரு தாயின் வளர்ப்பு இருந்தால் எந்த ஒரு அழகான பெண்ணும் தான் தாயாக தான் இருக்க முடியும் என்று சொல்ல தோணும்.

ஆமாம் சார் என்றார் நண்பர்

நீங்க சொன்ன பாடல் வரியிலிருந்து கவிஞரை எடை போடுவதற்கு பதில் நம்மை எடை போடுவது நமக்கு ஒரு பிரயோஜனம் என்ன சொல்றீங்கன்னு கேட்டேன்

அதுவும் கரெக்ட் தான்னு சொன்னார் நண்பர். படத்துல அம்மா பையனை தூங்க வைக்கும் பாடல் அதனால் அன்னை-ஆவன்ணு வருது. ஆனா நிஜத்துல தாய் தந்தை இருவருக்குமே தங்கள் பிள்ளைகளின் வளர்ப்பில் சரி பங்கு உள்ளது சார் என்றார் நண்பர்.

சிறிது மௌனத்திற்குப் பிறகு, சரி சார் இந்த கதை அன்னையார் தின ஸ்பெஷலாக இருக்கட்டும் என்று சொல்லி கிளம்பினார்.

– D.சரவணன்

Likes(4)Dislikes(0)
Share
Aug 152014
 

kids

மஹாபாரதத்திலிருந்து ஒரு சின்ன சம்பவம்..

கெளரவர்களுக்கு பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனன் மேல் எப்போதும் பொறாமை உண்டு. பொறாமைக்கு காரணம் அவர்களுடைய குரு துரோணாச்சாரியர் அர்ஜுனன் மீது அன்பு செலுத்துகிறார் என்பதே. இதனை அவர்களின் குருவும் அறிவார். கௌரவர்களின் இந்த எண்ணம் தவறு என்று அவர்களுக்கு உணர்த்த ஒரு உபாயம் கண்டு பிடித்தார்.

துரோணர் எப்பொழுதும் மாணவர்களுடன் அருகில் உள்ள ஆற்றினில்  குளிப்பது வழக்கம். அன்று குளியல் எண்ணையை வேண்டுமென்றே  ஆசிரமத்தில் விட்டுச் சென்றார். ஆற்றங்கரையை அடைந்தவுடன், அர்ஜுனனை ஆசிரமத்திற்கு சென்று எண்ணையை எடுத்து வர சொன்னார்.

அர்ஜுனன் சென்றவுடன் துரோணர் ஒரு மந்திரம் சொல்லி ஓர் அம்பினை எய்தினார். அந்த அம்பு அருகில் இருந்த ஓர் அரச மரத்தில் உள்ள அனைத்து இலைகளிலும் துளையிட்டு துரோணரிடமே வந்து சேர்ந்தது. அனைவரும் வியப்புடன் பார்த்து கொண்டிருக்கையில், துரோணர் அந்த மந்திரத்தை ஓர் ஓலைச் சுவடியில் எழுதி வைத்தார்.

அர்ஜுனன் திரும்பி வர நேரம் ஆனதால், மாணவர்கள் அனைவரும் விளையாடச் சென்றனர். சிறிது நேரம் கழித்து அர்ஜுனன் எண்ணையுடன் திரும்பி வரவே, அனைவரும் எண்ணையை எடுத்துக் குளிக்கச் சென்று விட்டனர்.

குளித்தவுடன் குரு தியானத்தில் இருந்தார். மாணவர்கள் அனைவரும் மறுபடியும் விளையாடச் சென்றனர். சிறிது நேரம் கழித்து ஆசிரமத்திற்கு செல்லலாம் என்று கிளம்பும்போது, அந்த அரசமர இலையில் இரண்டு துளைகள் இருப்பதை பார்த்தார் துரோணர்.

இன்னொரு துளையினை யார் செய்தது என்று கேட்டார். அர்ஜுனன் முன் வந்து, “குருவே, குளித்து வந்தவுடன், அரச மர இலையில் துளை இருப்பதை பார்த்தேன், உங்களுடய வில் மற்றும் அம்பு அருகில் ஓர் ஓலை சுவடியில் மந்திரம் எழுதி இருப்பதைப் பார்த்தேன். நான் இல்லாத சமயத்தில் நீங்கள் இந்த மந்திரத்தை சொல்லி கொடுத்திரூப்பீர்கள் என்று எண்ணி நானும் முயற்சி செய்தேன்” என்றான்.

துரோணர் சிரித்துக்கொண்டே “இது தான் ஓர் நல்ல மாணவனுக்கு அடையாளம். எந்த ஒரு விஷயத்தையும் இன்னொருவர் சொல்லி தர வேண்டிய கட்டாயம் இல்லை. மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப் பட்ட மாணவர்களை அனைவரும் விரும்புவார்” என்றார்.

 –          D. சரவணன்

Likes(9)Dislikes(0)
Share
Jul 142014
 

9.2 spiderman2

 

நம் கதையின் கதாநாயகர்கள் புலியும் குதிரையும். என்னடா! எதிரும் புதிருமாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? வழக்கத்திற்கு மாறாக இருவரும் உயிர் நெடுங்கால நண்பர்கள்.
தினமும் காலையும் மாலையும் மலை அடிவாரத்தை இருவரும் ஒன்றாக சுற்றி வருவது வழக்கம். இதை அடிக்கடி ஒரு நரி பார்த்து வந்தது. பொறாமையும் கொண்டது.  புலி குதிரயை கொன்றால் தனக்கும் விருந்து தான் என திட்டம் தீட்டியது.
ஒரு நாள் புலியிடம் சென்று நரி “குதிரையுடன் நட்பாக இருக்கிறாயே, உனக்கு இது வீரத்திற்கு இழுக்கு  இல்லையா?” என வினவியது.
புலியோ “நட்பில் வீரத்திற்கு என்ன இடம்? நான் அதை குதிரையாக அல்ல, என் நண்பனாக பார்க்கிறேன் என்றது”.
தந்திரக்கார நரியாயிற்றே. சும்மா விடுமா என்ன?  இவர்களை பிரித்தே ஆக வேண்டும் என கங்கனம் கட்டியது.
விடாமுயற்சியாக மீண்டும் புலியிடம் சென்று “நேற்று நான் குதிரையிடம் பேசினேன். அதுவோ நீ ஒரு ஏமாளி, அதனால் தான் நட்பாக இருக்கிறாய்” என கூறியதாக உசுப்பேற்றியது. ஆத்திரமடைந்த புலி நரியின் வார்த்தையை நம்பி நிஜமாக ஏமாளி ஆனது. “ஆனால் எக்காரணத்தை கொண்டும் தன் நீண்ட கால நண்பனை கொன்று இறை ஆக்க முடியாது” என்றும் உறுதியாக கூறியது.
தன்னுடன் பேசாமல் போகிறதே என்று குதிரையும் வருத்தப்பட்டது. நாட்கள் செல்ல செல்ல புலி குதிரையுடன் பேசாமல் கவலைக்கு உள் ஆகியது. “இந்த புலிக்கு என்னதான் பிரச்சனை?  கண்டுபிடித்தே ஆக வேண்டும்” என குதிரை தீர்மானித்தது.
ஒரு நாள் குதிரை மனம் விட்டு பேசியபொழுது தான் புலிக்கும் நரியின் சூழ்ச்சி புரிந்தது. மாற்றான் பேச்சை கேட்டு தன் நீண்ட கால நண்பனை சந்தேகப்பட்டோமே என வெட்கி மனதார குதிரையிடம் மன்னிப்பு கேட்டது.
குழந்தைகளே, எந்த ஒரு விஷையத்தையும் யார் கூறினாலும் அதை அப்படியே நம்பாமல் “சரியா, தவறா?” என யோசித்து ஏற்பது தான் புத்திசாலித்தனம்.
இதை தான், திருவள்ளுவர்
“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு” என கூறியுள்ளார். எதையும் ஆராய்ந்து பின் பற்றுவோம்.

– Dr. K. நந்தினி (லண்டனிலிருந்து)

Likes(8)Dislikes(0)
Share
Share
Share