Apr 142015
 

1

பலவிதமான சிந்தனைகளுக்கும் சீரிய திட்டமிடலுக்கும் பின், ஓர் மாபெரும் இலக்கை உங்களுக்கு தீர்மானித்து விடுகிறீர்கள். தேவையான கடின உழைப்பையும் போடுகிறீர்கள். ஆனாலும் எதிர்பார்த்த வெற்றியை உங்களால் அடையமுடியவில்லை என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? அப்படியெனில் இந்த பதிவு உங்களுக்கு தான். மேலே படியுங்கள்..

முதல் சம்பவம். ஓர் மேடைப் பேச்சாளரின் தீவிர ரசிகரான நண்பர், பேச்சாளர் என்ன விதமான அறிவுரையோ, கருத்தோ சொன்னாலும் அதை அப்படியே ஏற்று தன் வாழ்வில் நடைமுறைப் படுத்த முயற்ச்சிக்கும் பழக்கம் உடையவர். அன்று ஒரு கூட்டத்தில் அப்பேச்சாளர், உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதின் முக்கியத்துவத்தை விளக்கிக்கொண்டிருந்தார். “உங்கள் உடலுக்கு என்று தினமும் ஒருமணி நேரமாவது ஒதுக்கி உடற்பயிற்சி செய்யுங்கள். அதற்கு தூக்கத்தை ஒரு மணி நேரம் தியாகம் செய்யுங்கள். உங்களை நம்பி இந்த திட்டத்தை துவக்குங்கள், உங்களால் சீக்கிரம் எழ முடியும்” என அனைவரையும் ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்த பேச்சைக் கேட்ட நண்பருக்குள் ஒரு பெரிய மாற்றம் வந்து, என்னால் சீக்கிரம் எழுந்து உடலுக்காக நேரம் ஒதுக்க முடியும் என உறுதியாக நம்பி அன்றிரவு படுக்கச் சென்றார். அவர் நம்பியது போலவே, அடுத்த நாள் ஒரு மணி நேரம் முன்கூட்டியே எழுந்து, உடற்பயிற்சியும் செய்யத் தொடங்கினார். ஒரு பத்து நாட்கள் இவ்வாறாக ஒடி இருந்தது.

பத்து நாட்களுக்கு பின் அந்த நண்பர், அதே பேச்சாளரின் வேறொரு கூட்டத்தில் கலந்து அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த கூட்டத்தில் பேச்சாளரின் தலைப்பு “இந்த கால வாழ்க்கை முறை” என்பதை பற்றி இருந்தது. “இன்று நிறைய பேர், இரவு தாமதமாக உறங்கி, பின்னர் அடுத்த நாள் காலையிலும் தாமதமாகவே எழுந்திருக்கும் போக்கை கடைபிடிக்கின்றனர். சில இளைஞர்களிடம் தினமும் உங்களால் ஐந்து மணிக்கு எழுந்திருக்க முடியுமா என்று சவால் விட்டுப்பாருங்கள், அவர்களுள் பலர் முடியாது என்றே பதில் தருவர்” என முடித்தார்.

இதைக் கேட்ட நண்பருக்கு அன்று இரவு தூங்க செல்கையில், நம்மால் தொடர்ந்து அதிகாலை சீக்கிரம் எழ முடியாதோ என்ற ஒரு சிறு சந்தேகம் எட்டிப்பார்த்தது. தொடர்ந்து பத்து நாட்களாய் ஐந்து மணிக்கெல்லாம் சட்டென்று விழித்த நண்பருக்கு அடுத்த நாள் தாமதமாக தான் எழ முடிந்தது.

காரணம் என்ன என்று யோசித்துப்பார்த்தால், முதல் பேச்சைக் கேட்ட நண்பரின் மனதில் “என்னால் முடியும்” என்று ஆழமாக இருந்த எண்ணம், இரண்டாம் பேச்சைக் கேட்டபின் “என்னால் முடியாதோ” என்ற கேள்வியாக மாறுகிறது.

இந்த மனப்பாண்மை தான் தோல்வியின் பக்கம் நம்மை அழைத்து செல்கிறது என்கின்றனர் லட்சியத்தை நம்பிக்கையுடன் கடந்து சென்ற வெற்றியாளர்கள். “ஒரு வேலை ஆரம்பிக்குமுன் எத்தனை முறை வேண்டுமானாலும், இது என்னால் முடியுமா, முடியாதா என்று யோசிக்கலாம்; ஆனால் முடியும் என்று தீர்மானித்த பின், இது என்னால் முடியுமா என்ற சந்தேகம் என்றுமே தங்களுக்கு வந்ததில்லை” என்றே வெற்றியாளர்கள் அழுத்தமாக குறிப்பிடுகின்றனர்.

இரண்டாவதாக ஒரு உதாரணம். நம்மில் பலருக்கு தெரிந்தவர் ஒருவர். படித்தவுடன் வேலைத் தேடி அலைந்துக் கொண்டிருந்தார் அவர். கிட்டத்தட்ட 30 விதமான வேலைக்கு விண்ணப்பித்தும், தகுதியில்லை என்று நிராகரிக்கப்படுகிறார். பின்னர் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் சில வேலைகள் காலியாக இருக்கிறது என தகவல் வர, அங்கும் விண்ணப்பிக்கிறார். சோதனையாக, விண்ணப்பித்த 24 பேர்களில் 23 பேருக்கு வேலை கிடைக்க, இவர் மட்டும் வழக்கம் போல் நிராகரிக்கப்படுகிறார். இதுபோன்று அடுக்கடுக்காய் தோல்விகள், துரத்தும் சோதனைகள்.

ஆனாலும் தன் மீது உள்ள நம்பிக்கையினால் அந்த மனிதர், தன் நண்பர்களிடம் சிலரின் பண முதலீட்டுடன் தனியே தொழில் தொடங்குகிறார். தன்மீது அவர் வைத்த அபரிமிதமான நம்பிக்கை வீணாகவில்லை. தன் நாட்டின் பொருளாதாரத்திற்கே முக்கிய பங்களிப்பாய் இருக்குமளவிற்கு தன் நிறுவனத்தை வளர்த்து, விண்ணைத் தொடும் வெற்றி அடைகிறார்.

2005ஆம் ஆண்டு ஃபார்ட்யுன் நிறுவனம், இவரை ஆசியாவின் 25 மிக சக்திவாய்ந்த தொழில் புரிவோரில் ஒருவராக கவுரவித்துள்ளது. இது போல் பல விருதுகளையும், பெயர்களையும் சம்பாதித்த இவரது சமீபத்திய மதிப்பு,  கிட்டத்தட்ட 21பில்லியன் அமெரிக்க டாலர்கள்!! 25000க்கும் அதிகமானோர் இவரிடம் இன்று வேலை பார்க்கிறார்கள். அமெரிக்காவில் புகழின் உச்சியில் உள்ள அமேசான் நிறுவனத்திற்கே சவாலாக, தன் நிறுவனத்தை உயர்த்தி காட்டியுள்ளார். அவரது நிறுவனம் “அலிபாபா”, அந்த மனிதர் சீனாவை சேர்ந்த  “ஜாக் மா”.

ஜாக் மாவைப் பற்றி இணையத்தில் பல சுவாரசியமான தகவல்கள் குவிந்துள்ளன. அத்தனை நிராகரிப்புகளை, தோல்விகளை சந்தித்தபின்னும், “தன்னால் முடியாதோ?” என்ற எண்ணமும் “தன்னால் முடியுமா?” என்ற சந்தேகமும் என்றுமே தனக்குள் வர வாய்ப்பே அளிக்காமல், கண்டிப்பாக “தன்னால் முடியும்” என்று மட்டும் உறுதியாக நம்பிக்கையுடன் உழைத்ததால் தான் இன்று இந்தளவிற்கு உயரத்தை அடையமுடிந்துள்ளது.

மூன்றாவது சம்பவம், 2007 ஆம் ஆண்டு. கேரளத்தை சேர்ந்த நான்கு சகோதரர்கள், சூப்பர் மார்க்கெட் வியாபாரத்தை தொடங்கி, மிக சிறப்பாக வணிகம் செய்து, தொடர்ந்து தங்களது கிளைகளை வெவ்வேறு இடங்களில் தொடங்கி விரிவாக்கம் செய்தவாறு இருந்தனர். நான் அப்போது துபாயில் ஒரு லிஃப்ட் (LIFT) நிறுவனத்தில் பணிபுரிந்த சமயம். அந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்கும் நாங்கள் லிஃப்ட் (LIFT) விற்றிருந்த உறவில், என்னையும் புதுக்கிளை துவக்க விழாவிற்கு அழைத்திருந்தனர்.

படு பிஸியாக இருந்த அந்த நால்வரில், ஒரு சகோதரரிடம் மட்டும் சிறிது நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது. “சார், இப்படி தொடர்ந்து கிளைகளை பெருக்கிக் கொண்டே செல்கிறீர்களே, உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?” என்றேன்.

அவரோ சற்றும் யோசிக்காமல், “ஒரே ஒரு விஷயம் தான் தம்பி, முதலில் ஒரு இலக்கை செய்யலாமா என்று விவாதிப்போம், பின்னர் அது சரி வருமா என்று நன்றாக ஆராய்வோம், சரியாக வரும் என முடிவெடுத்து இறங்கிவிட்டால், எங்கள் நால்வர் மனதிலும் ஒரே ஒரு எண்ணம் மட்டும் தான் இருக்கும். அது எங்களால் முடியும் என்பது மட்டும் தான். இதுதான் பணி, இதை செய்து தான் ஆக வேண்டுமென முடிவெடுத்துவிட்டால், ‘WILL I DO IT?’ என்று நாங்கள் கேட்டதே இல்லை, எங்கள் வெற்றியின் தாரக மந்திரமே, ‘I WILL DO IT’ என்ற எண்ணம் மட்டும் தான்” என்று விளக்கினார்.

இந்த மூன்று சம்பவங்களும் நமக்கு உணர்த்துவது ஒன்றை மட்டும் தான். என்னால் முடியுமா என்ற ஐயம் வந்து விட்டால், வெற்றி கடினம் தான்.

என்னால் முடியும் என்று உழைக்கும் போது தான் வெற்றி பிறக்கிறது. அவ்வாறு எண்ணி உழைக்கையில், நேரமோ, அதிர்ஷ்டமோ, விதியோ குறுக்கிட்டு வெற்றியை தற்காலிகமாக தள்ளி வைக்கலாமே தவிர, நிரந்தரமாக தடுக்க இயலாது.

எனவே என்னால் முடியும் என்று நம்பிக்கையுடன் உழைக்க தொடங்குவோம், இலக்கை அடைந்து சரித்திரம் படைப்போம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,

விமல் தியாகராஜன் & B+ TEAM.

Likes(25)Dislikes(1)
Share

  14 Responses to “அடுக்கடுக்காய் தோல்விகளும், பில்லியன் டாலர்களும்!!”

 1. முயற்சி திரு வினை ஆக்கும்,சோர்விலாது முயல்தல் அவசியம் அதுவே வெற்றிக்கு வழி
  சரஸ்வதி ராசேந்திரன்

  Likes(2)Dislikes(0)
 2. Sir, this essay once again reminds me that " NOTHING IS IMPOSSIBLE"...
  thank so much for the wonderful message...

  I feel your B-positive is also a classic example for this month's edition...

  Quote:

  " WILL I PUBLISH MY EDITION ON EVERY MONTH"
  " YES I CAN PUBLISH" and of course you are doing it..

  once again my wishes to you & your team ji !!!

  keep rocking !!!

  Likes(1)Dislikes(0)
 3. Thankyou very much.

  Likes(1)Dislikes(0)
 4. வணக்கம்
  அண்ணா.

  உண்மைதான் தன்னம்பிகை துணி இந்த இருண்டும் சேரும் போதுதான் ஒரு உத் வேகம் பிறக்கிறது.. வெற்றி என்பது தற்காலிகம் இன்று தற்காலிக வெற்றியை எத்தனை மனிதர்கள் நிரந்தரமாக்க துடிக்கின்றார்கள் அவர்கள் படித்தால் அவர்களின் வாழ்விலும் ஒரு விடிய் புலரும்.. அருமையாக சொல்லியுள்ளீர்கள்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்.. சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  Likes(1)Dislikes(0)
  • அன்பிற்குறிய ரூபன் அவர்களுக்கு, மிக அருமையாக தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளீர்கள். தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

   Likes(0)Dislikes(0)
 5. Excellent! Very interesting and inspiring. New year wishes and God bless your team.

  Likes(1)Dislikes(0)
 6. அருமை . வாசகர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

  'வெல்வேன்' என்பதே முன்னோக்கு பயணம்
  வெல்லவே வேண்டும் முயற்சியும் துணிவும்
  கொள்ளவே வேண்டும் உழைப்பும் உறுதியும்
  கூடவே வேண்டும் உண்மையுடன் பொறுமையும்
  கொள்கையுடன் திட்டமும் இலக்கும்
  கொண்டால் என்றும் வெற்றி நிச்சயம் !

  Likes(4)Dislikes(0)
  • விமல் ! உங்களுக்கும் உங்கள் உறவு மற்றும் நண்பர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். !

   Likes(1)Dislikes(0)
   • மிக்க நன்றி சார். அருமையான வரிகள். உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    Likes(0)Dislikes(0)
 7. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  Likes(1)Dislikes(0)
  • நன்றி திரு.காசிராஜலிங்கம் அவர்களே..

   Likes(0)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share