Oct 152014
 

Intro1

லண்டனில் வசிக்கும் எனது உறவினர் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். உரையாடல், சமூகத்தின் பக்கம் திரும்பி, இன்றைய கல்வி நிலையை எட்டியது. அப்போது லண்டனில் உள்ள பள்ளி கல்வி முறையின் சில சுவாரஸ்யமான தகவல்களை கூறினார்.

அவர் சொன்ன முக்கியமான விஷயம் “அங்கு பாட புத்தகங்களில் உள்ள விஷயங்களை மனப்பாடம் செய்து பின்பற்றும் மாணவர்களை விட, ஏன், எதற்கு, எவ்வாறு என்று ஆராய்ந்து, எதிர் கேள்வி கேட்டு, பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகம் கிடைக்கும். அதோடு நில்லாமல், எதாவது ஒரு மாணவன் ஒரு படி மேலே சென்று, அந்த பாட புத்தகத்தில் வந்திருக்கும் விதியோ, கருத்தோ, செயல்திட்டமோ தவறு என்று நிரூபித்து விட்டால், அவனுக்கு மதிப்பெண்கள் மட்டுமின்றி, மதிப்பும் அதிகம்” என்பதே.

அந்த உரையாடல் என்னை சற்று ஆழமாக யோசிக்க வைத்தது. சிறு வயது முதல் ஆராய்ந்து, தெளிந்து படிக்கும் முறை இருப்பதால் தான் என்னவோ, மேற்கத்திய நாடுகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை (RESEARCH &DEVELOPMENT) மிக சிறப்பாக இயங்கி வருகிறது. எந்த பெரிய கண்டுபிடிப்பும், புது தொழில்நுட்பமும் அமெரிக்கா, UK, ஜெர்மனி மற்ற சில மேற்கத்திய நாடுகளின் கைவசம் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நமது பள்ளிகளின் பக்கம் வருவோம். பள்ளிகளில் இன்றும் மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வில் கொட்டி விடும் சூழ்நிலை. தேர்வு முடிந்து, மதிப்பெண் வாங்கியபின், படித்த விஷயங்கள் மாணவர்களுக்கு சுத்தமாக தெரியவில்லை என்றாலும் நம் சமுதாயம் அதை பற்றியெல்லாம் அக்கறைப்படுவது இல்லை.

உதாரணத்திற்கு, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனிடம் அவனது மதிப்பெண் என்ன என்று கேட்போமே தவிர, அவன் என்னென்ன கற்று கொண்டான், அது சமுதாயத்திற்கும் அவனுக்கும் எப்படி பயன்பெறும் என்று பொதுவாக நம்மில் பலர் கேட்க மாட்டோம்.

மதிப்பெண் வந்தாயிற்று, அது போதும் என்று தான் பலரும் நினைக்கிறோம். மதிப்பெண்களுக்கு தான் நாம் படிக்கிறோம், மதிப்பெண்களுக்கும், ரிஸல்ட்களுக்கும் தான் பல பள்ளிகளும் ஆசிரியர்களும் பாடம் நடத்துகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

புத்தகத்தில் உள்ள பாதி சேப்டர்களை கண்மூடித்தனமாக மனப்பாடம் செய்து தேர்வில் கொட்டிவிட்டால் கூட, 100% மதிப்பெண்கள் எடுத்துவிடலாம் என்பதும் பலருக்கு தெரிந்த உண்மை.

எப்போது மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆராய்ச்சி முறை கல்வி, உன்மையான அறிவு வளர்க்கும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அப்போது தான் மேலை நாடுகளின் தரத்திற்கு நிகராக நம் கல்வியும் வரும்.

நாடு நிலவரம் இப்படி இருக்கிறதே என்று எண்ணி கொண்டிருக்கையில், நம்பிக்கை ஒளி ஏற்படுத்தும் விதத்தில் ஒரு நிகழ்வும் நடந்தது. சென்ற வாரம் புகழ் பெற்ற சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், “POSITIVE JOURNALISM – A NEW THINKING” என்ற தலைப்பில் என்னை “GUEST LECTURE” தருவதற்கு அழைத்திருந்தனர். இன்டெர்நெட் JOURNALISM பற்றி பேசுகையில், நமது B+ வெப்சைட் பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் அவர்களிடம் எடுத்து கூறினேன்.

அங்கு பயில்பவர்களிடமும், தலைமை ஆசிரியரிடமும் அந்த செமினாருக்கு கிடைத்த கவனமும், உற்சாக வரவேற்பும், ஆர்வமும் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. செமினாருக்கு வந்திருந்தவர்கள் எழுதி கொடுத்த FEEDBACK, உற்சாக மருந்தாய் இருந்தது.

அதன் மூலம், இரண்டு விஷயங்கள் மிக தெளிவாக தெரிந்தது. நல்ல விஷயங்களை என்றுமே அனைத்து தரப்பு மக்களும் முழு ஈடுபாட்டுடன் ஏற்று கொள்கின்றனர். மாணவ சமுதாயம், எல்லையற்ற ஆற்றலை பெற்றுள்ளது. அவர்களை மதிப்பெண் என்ற கண்ணோட்டத்துடன் ஒரு சிறையில் பூட்டி வைத்து விடாமல், அவர்களின் எண்ணச் சிறகை பறக்க விட்டு தொலைநோக்கு பார்வையுடன், நாட்டை உண்மையான வளர்ச்சி பாதையில் செலுத்த வேண்டிய கடமை, கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறது.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு பல நல்ல விஷயங்களை, எதிர் காலத்தில் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை சமாளிக்கும் முறைகளை, அவர்களுக்கு பிடித்த விதத்தில், ஆசிரியர்கள் புரியுமாறு சொல்லி தர வேண்டும்.

Intro2

இது எவ்வாறு சாத்தியம். என்ன மாதிரியான மாற்றங்கள் நம் கல்வி முறையில் தேவையாக உள்ளது என பார்க்கும் போது சில கருத்துகளை பட்டியலிடலாம். இது போன்ற பலக் கருத்துக்கள், இணையங்களிலும், பல பொது கூடல்களிலும் சமீபக் காலமாய் கேட்க முடிவதனால், கீழே குறிப்பிட்டுள்ள சில மாற்றங்கள் காலத்தின் கட்டாயமாக கூடிய விரைவில் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

1)   தேர்வு மற்றும் மதிப்பெண் முறையிலிருந்து வெளிவந்து, ஒவ்வொரு மாணவனும் அவனுக்கு பிடித்த துறையை சிறு வயது முதலே கண்டுபிடிக்க வைத்து, பின் அதில் ஈடுபடுத்தி, அந்த துறையில் ஸ்பெஷலிஸ்ட் ஆக்கும் கல்வி முறை. இவ்வாறு செய்யும்போது மாணவர்கள் படிப்பை ஒரு மன அழுத்தமாக எடுத்துக்கொள்ளாமல், தங்களை முழுமையாக அர்பணிப்பர்.

2)   குழந்தைகளை மூட்டை மூட்டையாய் புத்தகமும் நோட்டுகளும் சுமக்க விடாமல் SMART CLASS கல்விமுறைக்கு மாறுதல்.

3)   இஸ்ரேல் நாட்டைப் பற்றி சமீபத்தில் WHATSAPP இல் வந்த தகவல். அந்நாட்டில், ஒரு சிறுத் தொகையை முதலீடு செய்து 15 நபர்களுக்கு கட்டாயம் வேலை கொடுத்து, அந்த தொகையை மூன்று மடங்காக பெருக்கிக் காட்டியபின்தான், ஒரு மாணவன் கல்லூரியில் சேர முடியுமாம். நாமும், குறைந்தபட்சம் வியாபாரம் தொடர்பான கல்வியில் இதுபோன்று கடைபிடிக்கலாம்.

4)   அதேப்போல் ஜப்பானைப் பற்றி சில வரிகள். அங்கு பள்ளிகளில் தினமும், குழந்தைகள் ஆசிரியர்களுடன் சேர்ந்து கால் மணி நேரம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனராம். அதேபோல் முதலாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கும் சமூகத்தில் பழகும் விதமும், நடத்தையும் கற்றுக் கொண்டே ஆக வேண்டும். நம் கல்வி முறையிலும் இவற்றைக் கொண்டுவரும்போது, கண்டிப்பாக நாமே அசுத்தம் செய்யமாட்டோம்.

5)   ஏதோ ஒரு படிப்பு படித்து, பணம் சம்பாதிக்க, கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத ஒரு வேலைக்கு செல்லாமல், இது தான் படிப்பு, இது தான் எதிர்காலம் என்ற திட்டமிட்டு பயிலும் கல்விமுறை.

6)   “DISCOVERY CHANNEL” தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகள் போல் சில நிகழ்ச்சிகள் எடுத்து, தயாரித்து நடத்த முடியும் என்ற நிலையை எட்டுமளவு பயிற்சியளிக்கும் கல்விமுறை.

7)   நம் கல்விமுறை மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்கும் (CHARACTER BUILDING) விதமாய் இருத்தல் மிக முக்கியம். குறிப்பாக, தேசபக்தி, நேரம் தவறாமை, சுத்தமாக இருத்தல், சுற்றுப்புற சூழலைக் காத்தல், சுயநலமின்றி சமுதாயக் கண்ணோட்டத்துடன் இருத்தல், டிராஃபிக் விதிகளை மதித்தல், ஊணமுற்றவர்கள் மீது இரக்கம் காட்டுதல், போன்ற அடிப்படை விஷயங்களை கடைப்பிடிக்க வைக்கும் கல்விமுறை மிக அவசியம்.

சுருக்கமாக சொன்னால், கல்வி என்பது, வெறும் ஏட்டு சுரைக்காயாக இல்லாமல், சமூக முன்னேற்றத்திற்கும், மக்களின் மகிழ்ச்சி, சமுதாய ஒற்றுமை, பிராக்டிக்கல் அறிவு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை பெருக்க கூடிய கருவியாக இருக்க வேண்டும்.

இதெல்லாம் நடக்க கூடுமா என சிறு சந்தேகம் வருமாயின், ISRO போன்ற நம் நிறுவனங்களின் வெற்றிப் பாதையை பார்க்கலாம். மாங்கள்யானை வெற்றிகரமாய் அனுப்பி, அதன் பணியில் ஈடுபடுத்தி, செவ்வாய் கிரஹத்தை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெயரையும், பெருமையையும் அடைந்துவிட்டோம். அப்பெரும் சாதனையையே செய்து முடித்த நம்மால், இதை செய்ய முடியாமலா போகும்?

நமது மாணவர்கள் மிகுந்த திறமைசாலிகள், சமுதாய முன்னேற்றத்திற்கான அந்த கல்வி மாற்றத்தை அவர்கள் ஏற்க தயாராக தான் இருக்கிறார்கள்.

இளைஞர்கள் கையில் இந்தியா இருக்கிறது என்பது உண்மை தான், ஆனால் அவர்கள் கையில் தரும் சாவியும் வண்டியும் சமுதாயத்தில் உள்ள நம் அனைவர் கைகளிலும் இருக்கிறது.

பூட்டிய சிறையினை உடைப்போம் என்ற நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ TEAM.

Likes(5)Dislikes(1)
Share
 Posted by at 1:19 am

  14 Responses to “பூட்டிய சிறையினை உடைப்போம்!”

 1. really good article. but one thing has to b noted it s the way of learning tat our country once taught tis world. now the same country s n the stage of receiving it from the other countries.

  Likes(1)Dislikes(0)
 2. Do any one remember our 'pandaya Kala'i education system. V r the best. But now simply implementing others idea v r here.after though v follow other v will be in deep ..........

  Likes(2)Dislikes(0)
 3. அருமையான கட்டுரை , நம் கல்வியாளர்கள் சிந்திக்கவேண்டும்,,, ஒரு B>E படித்த மாணவனுக்கு சாதாண விஷயம் கூட தெரிவதில்லைஅவன் படித்தவைகளைத்தவிர
  கல்வியின் தரம் அரசியல் வாதிகளின் குறுக்கீடுகளால் குட்டிச்சுவராகி விட்டது ,ஆசிரியர்களூக்கு சம்பளம்தான் அதிகமேத்தவிர அவ்ர்களிடமும் உண்மையான அர்ப்பணிப்பு முன்போல் இல்லை என்பதும் வருத்தத்திற்குறியது

  சரஸ்வதி ராஜேந்திரன்

  Likes(2)Dislikes(0)
  • அருமையாக சொன்னீர். நமது கல்வியாளர்கள் நிச்சயமாக சிந்திப்பர்...

   Likes(0)Dislikes(0)
 4. Very good article... Each and every person should think and realise the necessity to bring this dream become true... I am sure soon things will change as our younger generations proved many times...!

  Likes(1)Dislikes(0)
 5. அர்த்தம் புரியாமலே பாடங்களை மனப்பாடம் செய்துகொண்டு தேர்வுத் தாளில் கொட்டிவிட்டு, மறந்து போகும் நிலையை மாற்றி மாணவர்கள் புரிந்துகொண்டு படித்தால் படிக்கும் பாடம் பயனுள்ளதாக இருக்கும். வெறும் புத்தகப் படிப்போடு நின்று விடாமல் அதையும் தாண்டி தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபடவும் அதனைப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஊக்குவிக்கவும் வேண்டும்.

  Likes(2)Dislikes(0)
  • கண்டிப்பாக நீங்கள் கூறிய மாற்றம் தேவை...

   Likes(0)Dislikes(0)
 6. Thanks a lot Murali Sir, Nandhini and Aaishwarya Diniesh for your encouraging comments...

  Likes(0)Dislikes(0)
 7. Very Nice Article. Gives a clear picture of where we are and where we should go ! Way to go for this positive magazine

  Likes(1)Dislikes(0)
 8. Wow very good article sir.All are true words..if it happens India will be the first and best..

  Likes(1)Dislikes(0)
 9. இந்த கட்டுரை கல்வியை உயர்த்த உதவக்கூடிய நல்ல சிந்தனை.

  Likes(1)Dislikes(0)
 10. தமிழ் நாட்டு கல்வியாளர்களும் சிந்திக்க வேண்டிய நல்ல கருத்து

  Likes(1)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share