Sep 212014
 

 

bus

காலை 8.30 மணி. சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம். அம்பத்தூரிலிருந்து திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லம் வரை செல்லும்பஸ், புறப்பட தயாராகி கொண்டிருந்தது. கண்டக்டர் டிக்கட் கொடுக்க ஆரம்பித்து விட்டார். டிரைவர் டீ கடையில் அரசியல்  அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.  கண்டக்டர் விசில் அடிப்பதை அசிரத்தையோட நோக்கி , கை காட்டி விட்டு,  நண்பர்களிடமிருந்து பிரியா விடை பெற்று திரும்பினார். அவர் அமர்ந்தவுடன்  வண்டி கிளம்ப வேண்டியது தான்.

அலுவலகம் செல்பவர்கள், கல்லூரி, பள்ளி செல்பவர்கள் அவசர அவசரமாக பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தனர். ஆயிற்று, ஏறக்குறைய ஒரு நான்கு ஐந்து இருக்கை தவிர வண்டி நிரம்பி விட்டது.

பேருந்து கிளம்பியது. முதல் நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன், பத்து பதினைந்து பேர் தடதடவென அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறினர். அவர்கள் கண்கள் காலியான இருக்கைகளை தேடிக்கொண்டே. அவர்களிடையே அவசரம். ஒவ்வொருவரிடமும், ஒரு மியூசிகல் சேர் போல் ஒரு பதற்றம்.

இந்த களேபரத்தில், ஒரு முதியவர், கிட்டதட்ட ஒரு 60 வயதிருக்கும், ஒரு காலி இருக்கையை கண்டு பிடித்து, அதை நோக்கி அவரால் முடிந்த வேகத்தில் ஓடினார். நோயாளி என்பது முக சோர்விலேயே தெரிந்தது. வயது கொஞ்சம் அதிகம். ஆரோக்கியம் கொஞ்சம் கம்மி. சில பல அரசு பேருந்து போல.

அவர் இருக்கையை அடையுமுன், பின்னால் வந்த ஒரு 20-25 வயது, வாட்ட சாட்டமான இளைஞன், அவரை இடித்து தள்ளி விட்டு, எகிறி குதித்து, அந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவனது முகத்தில், ஒரு கோப்பையை தட்டிய மலர்ச்சி. ஒரு ராஜ பார்வை. பெரியவரை தள்ளி விட்டோமே என்ற வருத்தம் சிறிதும் இல்லை. பெரியவரிடம், ஒரு சின்ன சாரி கூட கேட்கவில்லை.

சிகப்பு நிற சட்டை, தாடை வரை கிருதா, வாராத தலை, ஐந்து நாள் தாடி, கொஞ்சம் சிவந்த கண்கள். சண்டைக்கு தயார் என்ற தோற்றம் அவனுக்கு. பின்னாளில், முயற்சி பண்ணினால், அவன் அடியாளாக வர வாய்ப்பு இருப்பது போல் தெரிந்தது. அவனை தட்டி கேட்கிற தைரியம், சுற்றி இருந்த எவருக்கும் இருந்ததாக தெரியவில்லை.

பெரியவர், பாவம், தள்ளாடி எழுந்து கொண்டார். கம்பியை பிடித்து கொண்டு. “த்சொ! த்சொ” கொட்டினார்கள்,அருகிலிருந்த சிலர். “பெரியவரே, பார்த்து! பார்த்து!,” என்றனர். அவரது தள்ளாமை கண்டு சிலருக்கு அனுதாபம்.

இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நாகரிக யுவதி, அவள் ஒரு பள்ளி ஆசிரியை. அருவருப்புடன் பக்கத்து சீட் பெண்ணிடம் முணுமுணுத்தாள். “ சே! என்ன ஒரு அரகன்ஸ் அந்த பையனுக்கு! பார்த்தீங்களா?  இந்த மாதிரியா அநாகரிகமாக நடந்து கொள்வார்கள்?”

இன்னொரு பயணி, ஒரு வக்கீல் கோபப்பட்டார் , “சார் ! இந்த மாதிரி நடந்துகிறவர்களை கிரிமினல் வழக்கு போட்டு தண்டனை வாங்கி கொடுக்கணும்!. பொறுக்கி பசங்க. இதுக்கு ஏதாவது சட்டம் இருக்கா, பாக்கறேன்?”

மூன்றாவது ஒரு நர்ஸ் “ ஐயோ பாவம்! இந்த வயசானவர் கீழே விழுந்துட்டாரே! அடி கிடி பட்டிருக்குமோ?”. அவளது பார்வை அப்படி!

நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த ஒரு கல்லூரி விரிவுரையாளர் “ வளர்ப்பு சரியில்லை சார்.  அப்பா அம்மா சரியாயிருந்தா, இந்த பையன் நிச்சயமா இப்படி நடக்க மாட்டான்! இந்த பையன் சரியான  மெண்டல் கேசா இருக்கும்”.
பெண்கள் பகுதியில், ஒரு 45 வயது பெண்மணி, குழந்தை இல்லாதவள், “இந்த மாதிரி பசங்களை பெத்துக்காம இருக்கறதே புண்ணியம்!” பக்கத்தில் இருப்பவளிடம் பொருமினாள்.  இவ்வாறு சொல்வதே அவளது இயல்பாகி விட்டது.  அவளது மன உளைச்சலுக்கு அதுவே ஒரு எஸ்கேப் ரூட். அவளது புண்ணுக்கு அவளாக தேடிக் கொண்ட ஒரு மருந்து.
கல்லூரி பெண் ஒன்றை கரெக்ட் பண்ணிக் கொண்டிருந்த ஒரு மாணவன் “பாத்து பெருசு! ஏன் இந்த கூட்டத்திலே வந்து கஷ்டப் படறீங்க! ஆட்டோல போலாமில்லே!”. நக்கலுக்கு, களுக்கென்று சிரித்தாள் அந்த பெண். விடலைப் பசங்களின் உலகமே வேறு.

அதை பார்த்து பொறாமை பட்ட சக மாணவன், தன் பங்குக்கு“மேல போக டிக்கெட் எடுங்க பெரியவரே! இங்கே வந்து எடுக்கறீங்க?”. பெண்களை பார்த்தால் எங்கேருந்து தான் வருமோ, இந்த அசட்டு பிசட்டு ஜோக்குகள். இதுக்கும் ஒரு களுக் அந்த பெண்ணிடமிருந்து. ‘எத்தனை பசங்க என்னை பாத்து வழியறாங்க!’, யவ்வன கர்வம் அந்த பெண்ணின் முகத்தில்..

“முதியவர்களுக்கு மட்டும்” இருக்கையில் அமர்ந்திருந்தான் ஒரு 35 வயது இளையவன். எங்கே தன்னை எழுந்துக்க சொல்லுவாங்களோ என்று, ஆஸ்டிரிச் பறவை போல தலையை குனிந்து கொண்டான்.

ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது. கீழே விழுந்த பெரியவருக்கு யாரும்எழுந்து இடம் கொடுக்க தயாரில்லை. மனமுமில்லை. ‘வேறே யாராவது இடம் தரட்டுமே? நான் ஏன் தரணும்? அப்புறம், யார் இந்த கூட்டத்தில் நின்னுகிட்டே பிரயாணம்பண்றது?”

அவரவர் பாணியில், அவரது படிப்பு, வேலை, மன நிலைக்கேற்ப, தங்கள் எண்ண வெளிப்பாட்டை முணு முணுத்தனர். ஏதோ அவர்களால்முடிந்தது இவ்வளவுதான் !
கண்டக்டர் அவரது இடத்திலேருந்து “ டிக்கெட்! டிக்கெட்!” என்று கத்தினார்.

பெரியவர் “சத்யம் தியேட்டர் ஒரு டிக்கெட் கொடுங்க!”

“இந்தாங்க சார் டிக்கெட்! அடி கிடி ஒண்ணும் படலியே!”

“ஒண்ணும் ஆவலை கண்டக்டர் சார். தேங்க்ஸ்”

“ சார், இங்கே யாரையும் கேக்க முடியாது. அந்த பையனை போய் எழுந்திருக்க சொன்னா, சண்டைக்கு வருவான். பொறுக்கி மாதிரி இருக்கான். எதுக்கு வம்பு?”  என்றார் கண்டக்டர்

இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த, ஒரு இளைஞன் “ஐயா! இங்கே வந்து என் இருக்கையிலே அமர்ந்துகொள்ளுங்கள்!”

“இருக்கட்டும்பா! வேண்டாம்பா!”அவசரமாக பதட்டத்தோடு மறுத்தார் பெரியவர்.

“இல்லேசார்!, இதுலே என்ன இருக்கு?  என்னாலே நிக்க முடியும்! நீங்க உக்காருங்க ப்ளீஸ்!”

தட்டுத் தடுமாறி கம்பியை பிடித்து கொண்டு எழுந்தான்,  கருப்பு கண்ணாடி அணிந்த அந்த நாகரிக இளைஞன்.

அவனுக்கு…பார்வை இல்லையென்றால் என்ன!  மனசிருக்கே. போதாதா? !

–    முரளிதரன் செளரிராஜன்

Likes(1)Dislikes(0)
Share
 Posted by at 8:55 pm

  13 Responses to “பார்வைகள் பலவிதம் !”

 1. Excellent

  Likes(0)Dislikes(0)
 2. வயதான பெரியவர் கூட்டம் குறைவான பேருந்தில் ஏறி இருக்கலாம். இந்த காலத்தில் மனித நேயம் மிகவும் குறைவு மற்றும் அதை எதிர் பார்ப்பது தவறு. பார்வை இல்லாத வாலிபன் போன்றவர்கள் மிகவும் அரிது. மிகவும் அருமையான படைப்பு. படைத்தவருக்கு
  பாராட்டுக்கள்.

  Likes(0)Dislikes(0)
 3. சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  Likes(0)Dislikes(0)
 4. Except that black sunglass guy, all of them in the bus are handicapped! Nowadays youngsters are given importance to impress girls instead of helping aged people! Am proud to share, I gave a seat to a old man and standing from chennai to trichy more than 6 1/2 hrs in the bus that too night travel, when I was 18. Many occasions I have done the same. After reading this just want to share that incidence. Really it was a long journey !

  Likes(1)Dislikes(0)
  • Wonderful!!! As a friend, am proud of you Karthik for all ur great deeds..
   you would have stood for 6 1/2 hrs in that bus, but you must be sitting in that man's mind and heart for ever... Keep the good works on. Cheers, Vimal

   Likes(1)Dislikes(0)
 5. காலத்தின் கோலம்... மன ஊனமுற்றவர்கள் பெருக்கம். நிகழ்வில் ஒவ்வொருவரின் மனசையும் நன்றாகவே அவதானித்து பதிவிட்டமை நன்று!

  Likes(0)Dislikes(0)
 6. பெரியவர் பயணத்தை தவிர்த்து காலியான பேருந்தில் காத்திருந்து சென்றிருக்கலாம்.
  இந்த காலத்தில் இதெல்லாம் சகஜமப்ப. மனித நேயம் என்றால் என்ன என்று கேட்கிற காலம். ஆனால் ஒன்று நல்லவர்கள் எப்போதும் இருப்பார்கள் அந்த பார்வையற்ற வாலிபன் போல். அருமையான படைப்பு.

  Likes(0)Dislikes(0)
  • மிக்க நன்றி திரு.வா.ஜோதி இராமலிங்கம் அவர்களே...

   Likes(0)Dislikes(0)
 7. http://usa.chinadaily.com.cn/opinion/attachement/jpg/site1/20140917/001aa018f68c15830c1b01.jpg. "Offering one's seat to the elderly or sick may be basic civilized behavior, but no one should be forced to do so"

  Likes(0)Dislikes(0)
 8. This happens everywhere. This type of selfish behaviour seems to be the very essence of Kaliyug! At the same time, there is another point. There is (legal) punishment for any bad deed, including misbehaviour. But, are good samaritans praised or just even appreciated publicly? We should show appreciation in anyway, like recommending the name of that blind man for a compliment from an official( say,the collector), who could just mention his good deed in any public function and give him a pat. This kind of encouragement will at least create an awareness to exhibit humanitarianism present in us!

  Likes(0)Dislikes(0)
  • Excellent Views Mr.Krishnaraj!!!
   Good deeds have to be appreciated in public and circulated to create awareness and spread positive feelings about the society we live. Good deeds are happening everywhere, it is the responsibility of all of us to spread that news.

   Likes(0)Dislikes(0)
 9. நிதர்சனமான உண்மை...! நன்றி.

  Likes(0)Dislikes(0)
  • Thank you. Inspired from a book by an Indian Author in English, I read long time ago , and based an incident narrated by Brahmakumaris "Attitude of society towards senior citizens : http://www.brahmakumaris.info/forum/viewtopic.php?f=12&t=1936. Very recently, there is another incident in China :"Death of Elderly Man Denied a Bus Seat Sets Off Introspection in China" http://blogs.wsj.com/chinarealtime/2014/09/15/.

   Likes(0)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share