Jul 142014
 

8

ஈரைந்து மாதங்கள்
எனை சுமந்து

மூவைந்து மாதங்கள்
பாலூட்டி சீராட்டி

நாலைந்து மாதங்கள்
நடைபயிற்று

ஐந்தைந்து மாதங்கள்
பிணி நீக்கி பேணி காத்து

ஆறைந்து மாதங்கள்
பசி மறந்து

ஏழைந்து மாதங்கள்
பள்ளி அனுப்பி

எனை மேதையாக்க பேதையாய் நீ
இருந்து என் கனவுகளை நீ சுமந்து

நிசங்களை எனக்களித்து
நிதர்சனமற்று  போனாலும்
நெறிகெட்டு நான் போகா வண்ணம்
காத்திட்ட என் தாயே

மீண்டும் ஒரு முறை  எனை சுமப்பாயா
கல்லறை சென்றிடும் முன் கருவறை கண்டிட துடிக்கிறேன்…! 

– கவிஞர் காமராசு

Likes(11)Dislikes(1)
Share

  One Response to “அம்மா!!!!”

  1. வணக்கம்

    கவிதையின் ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது... கவிதை புனைந்த கவிஞருக்கு எனது அன்பு கனிந்த வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    Likes(2)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share