Nov 252017
 

accident

முரளி ஒரு பேச்சளார். சகஜமாக பழகக்கூடியவர். உற்சாகமான மனிதர். நிறைய புத்தகங்கள் வாசித்து, பல விஷயங்களை தெரிந்து வைத்துள்ளவர். பாசிட்டிவான மனிதர். அனால்..

சுமார் பத்து வருடங்களுக்கு முன் ஹோசூர் பகுதியில் நடந்த ஒரு சோக சம்பவம் அவரது வாழ்வை புரட்டிப் போட்டு, அவரை நிலைக்குலைய வைத்தது.

21/4/2007 அன்று முரளி இரு சக்கர வண்டியில் தனது குடும்பத்துடன் சென்றுக் கொண்டிருந்தார். வண்டியின் முன் புறத்தில் அவரது பத்து வயது பெண் குழந்தை நின்றுக்கொள்ள, அவரது துணைவியார் பின் சீட்டில் அமர்ந்து இருந்தார். ஹோசூரில் உள்ள TVS நிறுவனத்தின் அருகில், இவரது வண்டி கடக்கும்போது, ஒரு லாரி இவர்களை மோதி விடுகிறது.

இந்த மோதலில் மூன்று பேரும் கீழே விழுந்து விடுகின்றனர். முரளியின் கால் மீது லாரி ஏறி இறங்கிவிடுகிறது. கால் மிகவும் பாதிப்பு அடைகிறது. இவரது மனைவிக்கு பெரிய ஆபத்து இல்லை; சிறு காயங்களுடன் தப்பிவிடுகிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக முன்னால் நின்ற அவரது மகள் இறந்து விடுகிறார்.

கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் எல்லாம் முடிந்து விடுகிறது. எதிர்பாராது நடந்த இந்த விபத்து, பெரும் துயரத்தை இவருக்கு விட்டுச் செல்கிறது.

இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. காலில் இரும்புக் கம்பிகள் பொருத்தப்படுகிறது. மகளை இழந்த சோகம் ஒரு புறம். மருத்துவ மனையில் காலுக்காக போராட வேண்டிய வலி மறு புறம்.

வாழ்வின் அதிகபட்ச சோகத் தருணங்களை அவருக்கு கடக்க வேண்டி இருந்தது. வெறுப்பு மற்றும் துக்கத்தின் உச்சத்திற்கே சென்று விடுகிறார். மருத்துவர்கள் ஓரளவு காலை தயார் செய்து கொடுத்துவிட்டாலும், பாசமாக வளர்த்த ஒரே குழந்தையை விபத்தில் பரி கொடுத்ததில் முரளிக்கு வாழ்வதற்கான அர்த்தம் புரியவில்லை.

பொதுவாக இந்த மாதிரியான நிகழ்வுகளில் தான் மனிதர்களுக்கு மனச்சோர்வு, நம்பிக்கையின்மை, விரக்தி ஆகியவை தொற்றிக்கொள்ளும். ஆனால் முரளி அந்த மனநிலையிலும் சற்றே வித்தியாசமாக சிந்தித்துள்ளார்.

“சரி இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது. யாரும் அதற்கு பொறுப்பு அல்ல. அடுத்து என்ன செய்யலாம்” என யோசித்து, பெரும் சோகத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறார்.

தன் அதிகபட்ச துக்கத்தை திசைத் திருப்பும் வகையில் இரண்டு கேள்விகளை தன்னையே கேட்க ஆரம்பிக்கிறார்.

“அதனால் என்ன?

அடுத்து என்ன?”

(So What?..  What Next) என்று அந்த இரு கேள்விகளை தனக்குள் மீண்டும் மீண்டும் ஆழமாக கேட்க ஆரம்பிக்கிறார். அந்த இரு கேள்விகளும் பிற்காலத்தில் அவரது வெற்றிக்கு அடித்தளமாக மாறுகின்றன.

இன்று முரளி நிறைய பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு சென்று பல குழந்தைகளுடன் உரையாடுகிறார். “அங்குள்ள பெண் குழந்தைகளைப் பார்த்து பேசும்போது, தன் குழந்தையுடன் பேசுவது போல் உணர்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். தன் மகள் உயிருடன் இருந்திருந்தால் அத்தகைய வயது தான் இருக்கும் என்று நினைவுக் கொள்கிறார்.

மிக முக்கியமாக பல பெற்றோர்களை சந்தித்து தனது அனுபவத்தை  பகிர்ந்துக் கொள்கிறார். அவர்களிடம். “உங்கள் குழந்தைகளை மதிப்பெண்களுக்காக,  சின்னஞ்சிறு தவறுகளுக்காக கடிந்துக் கொள்ளாதீர்கள். எத்தனை அன்பு காட்ட முடிகிறதோ அத்தனை அன்பு காட்டுங்கள். உங்களுக்கு கிடைத்துள்ள வரத்தை மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாடுங்கள்” எனக் கேட்டுக்கொள்கிறார்.

வாழக்கை ஒரு முறை தான், அதை வீனடிக்காதீர் (“Life is one time offer. Don’t waste it”) என ஒரு அழகான வாக்கியம் உண்டு. நம்மைச் சுற்றியுள்ள சில மனிதர்கள் நமக்கு அதை உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். நாம் தான் அதை உணராமல் பல நேரங்களில் கவலைகளில் ஆழ்ந்து விடுகிறோம்.

முரளி போன்ற மனிதர்களுக்கு நடக்கும், இயற்கை தரும் இத்தகைய பெரும் இழப்புகளை காண்கையில், நமது அன்றாட சவால்கள், பொருளாதார பிரச்சினைகள் எல்லாம் மிகவும் சிறியது தானே?

அதனால் கவலைகளை, துன்பங்களை உதறித் தள்ளுங்கள். சோகத்திலிருந்து மீண்டு வாருங்கள். வெற்றி உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி என்ற சாவியின் மூலம் வெற்றி பாதைக்கான கதவைத் திறங்கள்.

வெற்றிப் பயணம் தொடங்கட்டும்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(7)Dislikes(0)
Share

  One Response to “வாழ்வை மாற்றிய இரு கேள்விகள்!”

  1. அருமையான B + பதிவு.
    வாழ்கையில் வெற்றி என்பது என்ன? இதற்கு ரால்ப் வால்டோ எமர்ஸன் சொன்னதைக் கேளுங்கள்:

    "அடிக்கடி சிரிப்பது, அதிகம் சிரிப்பது, புத்திசாலிகளின் நேசத்தைப் பெறுவது, குழந்தைகளின் பாசத்தைப் பெறுவது , நேர்மையான விமர்சகர்களின் பாராட்டைப் பெறுவது, நண்பர்களின் துரோகத்தைத் தாங்கிக்கொள்வது, இயற்கையை ரசிப்பது, மற்றவர்களிடமுள்ள நல்ல அம்சங்களைப் பராட்டுவது,,ஒரு தோட்ட வெளியை உருவாக்கியது, , சமுதாயக் கேடு ஒன்றை சீர்படுத்தியது, உங்கள் வாழ்க்கையினால் யாராவது தங்கள் வாழ்வில் சற்றேனும் இன்பமடைந்தார்கள் என்று உணர்வது இது போல ஏதாவது ஒன்று இருந்தால் கூட நீங்கள் வாழ்க்கையில் வென்றவர்களே" ...

    வாழ்த்துக்கள். முரளி

    Likes(2)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share