Jun 302017
 

Coffee-Time-520x390

வெற்றி ஓர் இரவில் வந்துவிடுவதில்லை, அதற்கு கடின உழைப்பு, தியாகம், கட்டுப்பாடு மட்டுமல்ல வேறு சில முக்கிய காரணங்களும் தேவைப்படுகின்றன. நம்மைச் சுற்றியுள்ள சாதனையாளர்களை உற்று நோக்கினால், அவர்களின் சில குணங்கள் சிறிதளவேனும் சாமானியர்களை விட மாறுபட்டிருக்கும். அவை என்ன என இங்கே காண்போம்.

பாசிடிவாக தங்களது நாளை ஆரம்பிக்கின்றனர்

சமீபத்தில் “99KM Coffee Shop” உரிமையாளர் திரு.மனோ சாலமன் அவர்களை சந்திக்க நேர்ந்தது. தினமும் எழுந்திருக்கையில் “இந்த அருமையான, வெற்றி மிகுந்த நாளை தந்ததற்கு நன்றி” என கடவுளிடம் சொல்லிவிட்டுத் தான் அந்த நாளை துவக்குவாராம். இதுபோன்று பல சாதனையாளர்கள் தங்கள் நாளை உடற்பயிற்சி, யோகா, இசை என நேர்மறையான விஷயங்களுடன் தான் துவக்குகின்றனர்.

தங்களது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர்

வெற்றிக்கு தேவையான கடின உழைப்பிற்கு, மூளையுடன் சேர்ந்து உடலும் சோர்வடைகின்றது. அதனால் போதுமான உடற்பயிற்சிகளின் மூலம் வெற்றியாளர்கள் தங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்கின்றனர். APPLE நிறுவனத்தின் “டிம் குக்” தினமும் அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து, ஜிம்மிற்கு சரியாக சென்று விடுவதுண்டாம்.

தங்களது நட்பு வட்டாரத்தை சரியாக தேர்ந்தெடுக்கின்றனர்

வெற்றியாளர்கள் தங்களை சுற்றி உற்சாகம் அளிக்கக்கூடிய நேர்மறை சிந்தனையுடன் இருக்கும் மனிதர்களை மட்டுமே வைத்துக்கொள்கின்றனர். நண்பர்களையும் அது போன்றே தேர்ந்தெடுக்கின்றனர்.

தவறான முடிவுகளுக்காக பயப்படுவதில்லை

வெற்றியாளர்கள் முடிவெடுக்கவும், ரிஸ்க் எடுக்கவும் என்றுமே பயப்படுவதில்லை. தங்களது முடிவுகள் ஒருவேளை தவறானது என தெரிந்துவிட்டால் அதை நேர்மையாக ஒத்துக்கொள்கின்றனர். வெற்றிகளுக்குமுன் பல தோல்விகளை கடக்க வேண்டியுள்ளது என்பதை தெளிவாக தெரிந்து வைத்துள்ளனர்.

போதுமான ஓய்வை எடுப்பது

கடுமையாக உழைத்துக் கொண்டே இருப்பது மனதையும், உடலையும் பாதிக்கும் என்பதை தெரிந்துள்ள வெற்றியாளர்கள், தேவைப்படும்போது தங்களை ரிலாக்ஸ் செய்துக்கொள்கின்றனர். சுற்றுலா செல்வது, தங்களுக்கு பிடித்த வேலைகளில் ஈடுபடுவது, நண்பர்களுடன் இருப்பது என ஏதாவது சிலவற்றை செய்கின்றனர்.

கற்றுக்கொண்டே இருப்பது

“வாழ்க்கையே ஒரு பள்ளி, அதை படித்தவர் பெரும்புள்ளி” என்பதைப் போல் வெற்றியாளர்கள் புது புதிதாக ஏதாவது கற்றுக்கொண்டே இருக்கின்றனர். கற்பதற்கான புதிய வாய்ப்புகளை வரவேற்கின்றனர். சக மனிதர்களிடம் இருந்தும் பலவற்றை கற்றுக்கொள்கின்றனர். கற்றது கைமண் அளவு கூட இல்லை, கற்க வேண்டியது உலகளவு உள்ளது என்று நம்புகின்றனர்.

வேலைகளை தனியாகவும் செய்கின்றனர்

தங்களது வேலைகளை வேறொருவர் தான் செய்ய முடியும் என வெற்றியாளர்கள் காத்துக் கொண்டிருப்பதில்லை. எப்படி செய்ய வேண்டும் என கற்றுக்கொண்டு,  தக்க சமயங்களில் அவர்களே இறங்கி, அதை முடித்தும் விடுகின்றனர். தனிமையில் இருப்பது, தனியாக சுற்றுலா செல்வது என சில சமயங்களில் தங்களுக்காக நேரம் ஒதுக்குவதற்கும் தயங்குவதில்லை.

 விமல் தியாகராஜன்

 

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(7)Dislikes(0)
Share

  3 Responses to “வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்”

 1. It's really a nice and useful piece of information. I
  am satisfied that you simply shared this useful
  info with us. Please stay us up to date like this.
  Thanks for sharing. - Erik

  Likes(0)Dislikes(0)
 2. A very useful interview and information .

  Likes(2)Dislikes(0)
 3. பயனுள்ள அணுகுமுறைகள்

  Likes(1)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share