Dec 212016
 

us

செம அட்டகாசம்ப்பா… அசத்தல்பா… பேஸ்புக்வாசிகள் கொண்டாட்டம்

சான்பிரான்சிஸ்கோ:
செம அட்டகாசம்ப்பா… அசத்தல்பா… என்று பேஸ்புக்வாசிகள் கொண்டாடுகின்றனர். எதற்காக தெரியுங்களா?

பேஸ்புக் மெசேஞ்சர் செயலியில் ஒரே சமயத்தில் பலருடன் வீடியோ சாட் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதற்கு காரணம்.
ஒரே சமயத்தில் 50 பேருடன் வீடியோ சாட் செய்யலாமாம். என்னன்னு பார்ப்போமா!

ஒரே நேரத்தில் ஆறு பேர் வரை க்ரூப் வீடியோ சாட் ஆப்ஷனில் பார்க்க முடியும். 50 பேர் வரை க்ரூப் சாட் மூலம் குரல்களை கேட்க முடியும். 6 பேர் மற்றும் அதற்கும் அதிகமானோர் சாட் செய்யும் போது மற்றவர்களுக்கு ஸ்பீக்கர் ஆப்ஷன் மட்டுமே தெரியும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இதற்கு அப்டேட் செய்யப்பட்ட புதிய மெசேஞ்சர் செயலியை இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். வீடியோ க்ரூப் சாட் செய்ய ஏற்கனவே இருக்கும் க்ரூப் அல்லது புதிய க்ரூப் ஒன்றை உருவாக்கி வீடியோ சாட் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தா வைச்சுக்கோ… கைப்பற்றியதை மீண்டும் கொடுத்தது சீனா!

பீஜிங்:
இந்தா வைச்சுக்கோ… என்று 5 நாட்களுக்கு பிறகு திரும்ப ஒப்படைச்சிருக்காம்… சீனா… என்ன விஷயம் தெரியுங்களா?

தென்சீனக் கடலில் தான் கைப்பற்றிய அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை 5 நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது சீனா.

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் கடல்சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தது. “கடல் மிதவை” எனப்படும் இந்த ஆளில்லாத நீழ்மூழ்கி கப்பல் நீரின் உப்பு தன்மையையும், வெப்பநிலையையும் சோதிக்கப் பயன்படுகிறது.

கடந்த 15-ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் தண்ணீருக்கு அடியில் ஆய்வில் இருந்த இந்த ஆளில்லா நீர்மூழ்கியை சீனக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இதனால் பெரும் பதற்றம் உருவானது. இதற்கு அமெரிக்கா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் நீர் மூழ்கியை பறிமுதல் செய்ததாக விளக்கம் அளித்த சீனா, உரிய நடைமுறைக்குப் பிறகு கப்பலை திருப்பி தருவதாகவும் உறுதி அளித்தது.

ஆனால் உடனடியாக பதிலடி கொடுத்த டிரம்ப், “திருடப்பட்ட கப்பல் எங்களுக்கு வேண்டாம். அதனை அவர்களே வைத்துக் கொள்ளட்டும்” என்று தெரிவிக்க மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. நீர்மூழ்கியை திருடியதாக கூறிய டொனால்டு டிரம்பின் குற்றச்சாட்டிற்கு சீனா மறுப்பு தெரிவித்தது.

பின்னர் 5 நாட்களுக்கு பின்னர் அந்த நீர்மூழ்கியை சீனா மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது.

டுவிட் போட்டு கவனம் பெற்ற “சிரியா” சிறுமி குடும்பத்துடன் மீட்பு!

அலெப்போ:
டுவிட் போட்டு உலக நாடுகளை தன் பக்கம் திருப்பிய சிரியாவின் அலெப்போ நகரில் இருந்த ஏழு வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

சிரியாவில் உள்நாட்டுப்போர் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த போரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில்.

இந்நிலையில் ஏழு வயது குழந்தையான பனா அலாபெத் தனது தாய் பாத்திமா உதவியுடன் ட்வீட் செய்து அலெப்போ நகரில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

வார இறுதியில் அலெப்போ நகரை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட 2700 குழந்தைகளில் பனா அலாபெத் இடம் பெற்றிருக்கிறார். தனது தாயின் உதவியுடன் அலாபெத், அலெப்போவின் சூழ்நிலைகளை மிகவும் உருக்கமாக ட்விட்டரில் பதிவு செய்து உலக நாடுகளின் பார்வையை தன் மீது திருப்பினார்.

தொடர்ந்து ட்வீட் செய்து வந்த அலாபெத் 24 மணி நேரத்திற்கு ட்வீட் செய்யாததால் அவரது பாலோயர்கள் புதிய ஹேஷ் டேக் “Where Is Bana” ஒன்றை உருவாக்கி அதனை ட்ரெண்ட் செய்தனர்.

பின் அலாபெத் செய்த ட்வீட்டில் “தாக்குதலில் சிக்கியுள்ளோம், எங்கும் செல்ல இயலவில்லை, ஒவ்வொரு நிமிடமும் மரண பீதியை உணர்கிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். குட்பை – பாத்திமா.” என குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர் அப்பகுதியை சுற்றி வளைத்திருந்த அரசு படையினர் அப்பகுதியில் உள்ள பொது மக்களை வெளியேற்றினர். அதில் அலாபெத் குடும்பத்தினரும் இடம் பெற்றிருந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டென்னிஸ் வீராங்கனைக்கு கத்திக்குத்து… பதற்றம்… பரபரப்பு

பிராக்:
விம்பிள்டன் முன்னாள் சாம்பியன் செக் குடியரசு வீராங்கனை கிவிடோவாவின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

செக்குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவா (26).  விம்பிள்டன் டென்னிசில் 2011 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கிறார். இவர் புரோஸ்டெஜோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கிவிடோவாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிவிடோவாவின் வீட்டுக்குள் நுழைந்தவர் யார்? என்ன நோக்கத்துக்காக அங்கு வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருக்கு… இருக்கு… போதுமான அளவுக்கு இருக்கு… மத்திய அமைச்சர் சொல்றாரு…

புதுடில்லி:
இருக்கு… இருக்கு… போதுமான அளவுக்கு வங்கிகளிடம் ரூபாய் நோட்டுக்கள் கையிருப்பில் இருக்கு என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சொல்லியிருக்கார். (அப்புறம் ஏன்ங்க… சாமி… எல்லா ஏடிஎம்மும் அவுட் ஆப் சர்வீசில் இருக்கு)

மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பு பின்னர் நாட்டில் பணத்தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி முழுமையான தயார் நிலையில் இருந்தது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பணம் வினியோகம் செய்யாத நாளே இல்லை. ரிசர்வ் வங்கியிடம் குறிப்பிட்ட அளவுக்கு ரூபாய் நோட்டுகள் கையிருப்பு இருந்தது. வங்கிகளிடம் போதுமான அளவிற்கு ரூபாய் நோட்டுக்கள் கையிருப்பில் உள்ளன.

ரொக்கமில்லா டிஜிட்டல் பண பரிமாற்றம், கிரெடிட் அட்டைகள், டெபிட் அட்டைகள் பண பரிமாற்றம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. சிலவற்றில் 300 சதவீத அளவுக்கு ஏற்றம் இருக்கிறது என்று சொல்லியிருக்காருங்க…

ஐயா சாமி மத்திய அமைச்சரே! ஒரு நாளாவது நீங்க ஏடிஎம்மில் நின்று பாருங்க… என்கின்றனர் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள்.

N.நாகராஜன்

Likes(2)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share