Dec 162016
 

isro

காப்பாற்றியது… யாரு… இஸ்ரோ செயற்கை கோளு… அதிகாரிகள் தகவல்

மும்பை:
காப்பாற்றியது… யாரு… இஸ்ரோ செயற்கை கோள் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

சென்னையை வர்தா புயல் சின்னாபின்னாமாக்குவதற்கு முன்பே இஸ்ரோ செயற்கைகோள் அளித்த எச்சரிக்கை அலார்ட் தகவல் மூலம் 10 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று சொல்லியிருக்காங்க… அதிகாரிகள்…

வங்கக்கடலில் உருவான வர்தா புயல் கடந்த திங்கட்கிழமை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை பதம் பார்த்து சின்னாபின்னமாக்கி விட்டு கரையை கடந்தது.

மரங்கள் வேரோடு சாய, மின்சார கம்பங்கள் சேதமடைய தொடர்ந்து நிவாரணப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், மழை வெள்ளத்திற்கு முன்னர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதற்கு இஸ்ரோ ஏவிய இன்சாட் 3 டிஆர் ஸ்காட்சேட் -1 செயற்கை கோள்கள் அளித்த தகவலே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த செயற்கைகோள்கள், புயல் நகர்ந்து சென்ற திசை குறித்து தகவல் அளித்தது.

இதன் அடிப்படையில் அதிகாரிகள், புயல் தாக்கக்கூடிய பகுதிகளில் வசித்த மக்களை மீட்டு பத்திரமான இடங்களில் தங்க வைத்துள்ளனர். ஆந்திர கடற்கரை பகுதியிலும் மக்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபாஷ் இஸ்ரோ…

கலிபோர்னியாவில் கண்ணீர்… முதல்வர் மறைவுக்கு அஞ்சலி…

ப்ரீமாண்ட்:
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலலிதாவுக்கு அமெரிக்காவில் இயங்கும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக பிரிவு சார்பில் சிலிக்கான்வேலியின் ப்ரீமாண்ட் நகரில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜெயலலலிதாவின் தீவிர விசுவாசியாகவும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயல் வீரராகவும் அறியப்பட்ட, அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் அபுகான் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

இந்திய தூதரக ஜெனரல் வெங்கடேசன் அசோக், இந்தியன் அமெரிக்கன் கவுன்சில் நிறுவனத் தலைவர் டாக்டர் ரொமேஷ் ஜப்ரா, ப்ரீமாண்ட் முன்னாள் துணை மேயர் அனு நடராஜன், கலிபோர்னியா முன்னாள் அமைச்சர் செ.மாதவனின் மகள் வெற்றிச் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு மொழி பேசும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

செம்ம்மமமம என்று வாட்ஸ் அப் பிரியர்களுக்கு ஒரு விஷயம்! 

கலிபோர்னியா:
செம்ம்மமமம என்று வாட்ஸ் அப் பிரியர்களுக்கு ஒரு விஷயம் இருக்குங்க… இனி நீங்கள் வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெற்று, அவற்றை அழிக்கும் வசதிகள் வரபோகுதாம்…

உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக அறியப்படும் வாட்ஸ்அப்பில் சில ஜிமெயில் வசதிகள் வழங்கப்பட இருக்காம். இதுகுறித்த தகவல் ட்விட்டர் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறும் வசதி வழங்கப்பட இருக்காம். இனிவரும் அப்டேட்களில் நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறுவது, அதை எடிட் செய்வது மற்றும் முழுமையாக அழித்து விடுவது போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கு என்று சொல்லியிருக்காங்க…

அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது என்றாலும், இந்த வசதி மெசேஜ் அனுப்பிய எத்தனை நொடிகளுக்கு வேலை செய்யும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

பேஸ்புக் மட்டுமா செய்யும் நாங்களும் செய்வோம்ல… டுவிட்டரும் களத்தில் குதிப்பு

நியூயார்க்:
பேஸ்புக் மட்டுமா செய்யும் நாங்களும் செய்வோம்ல… என்று டுவிட்டரும் களத்தில் குதித்து லைவ் வீடியோ சேவையை அறிமுகம் செய்துள்ளது.

டுவிட்டர் என்றாலே பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைதளமாக இருந்து வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் முதன் முதலில் லைவ் வீடியோ சேவையை அறிமுகம் செய்தது.

இந்த சேவையை பயனாளர்கள் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனம் லைவ் வீடியோ சேவை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் iOS பயனர்கள் என அனைவரும் இந்த சேவையை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை சிம்முங்கோ… இரட்டை சிம்மு… அடுத்தாண்டு ஐபோனில் இருக்குமாம்!

சான்பிரான்சிஸ்கோ:
இரட்டை சிம்முங்கோ… இரட்டை சிம்மு இருக்கும் போலிருக்கே… என்று தகவல்கள் லீக் ஆகி உள்ளது. என்ன விஷயம் தெரியுங்கா?

ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வரும் 2017 ஐபோனில் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும் என்பதுதான் அது. டூயல் சிம் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே மொபைலில் இரு வேறு ஆன்டெனாக்களை இயக்குவதற்கான உரிமத்தை அமெரிக்க காப்புரிமை அலுவலகம் ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது.

இதனால் இனிவரும் ஐபோனில் இரண்டு சிம் கார்டு ஸ்லாட் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

டூயல் சிம் கார்டுகளில் ஒன்றிற்கு வாய்ஸ் கால் மற்றொன்றிற்கு இண்டர்நெட் டேட்டா என முக்கியத்துவம் வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது. இத்துடன் இரண்டு ஸ்லாட்களிலும் 4G எல்டிஇ தொழில்நுட்பம் வழங்கப்படும். ஐபோன் 8’இல் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுமா என்பது தற்சமயம் வரை உறுதி செய்யப்படாத ஒன்றாகவே உள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யுங்க… பரிசுகளை அள்ளுங்க…

டில்லி:
டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யுங்க… பரிசுகளை அள்ளுங்க… அள்ளுங்க… என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாம்… என்ன விஷயம் தெரியுங்களா?

புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனைகளைக் குறைத்து, கிரெடிட், டெபிட் கார்டு (டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதன்படி மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்கிவிக்க நுகர்வோர்களுக்கு “லக்கி கிரஹக் யோஜனா திட்டம்” மற்றும் வணிகர்களுக்கு “டிஜி தன் வியாபார் யோஜனா” திட்டம் ஆகிய பரிசளிப்புத் திட்டங்களை நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் அறிவித்துள்ளார்.

இதன்படி சுமார் ரூ.340 கோடிக்கு பரிசுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கிறிஸ்துமஸ் முதல் 2017 ஏப்ரல் 14ம் தேதி வரை தினமும் 15 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1000 பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், வாரந்தோறும் 7 ஆயிரம் பேருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பரிசு வழங்கப்படும். பின்னர் 2017 ஏப்ரல் 14ம் தேதி மெகா பரிசு அறிவிக்கப்படும். முதல் பரிசாக ரூ.1 கோடியும், இரண்டாம் பரிசாக ரூ.50 லட்சமும், 3வது பரிசாக ரூ.25 லட்சமும் அறிவிக்கப்படும்.

டிஜி தன் வியாபார் யோஜனா திட்டத்தின் கீழ், கிறிஸ்துமஸ் முதல் 2017 ஏப்ரல் 14 வரை வாரந்தோறும் 7 ஆயிரம் வணிகர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். ஏப்ரல் 14ம் தேதிக்கு நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு மெகா பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நொந்து கிடக்க… ஆக்சிஸ் வங்கி செய்யுது அட்டூழியம்…

நொய்டா:
பணத்தட்டுப்பாட்டால் ஏடிஎம்களில் நாட்டு மக்கள் நொந்து போய் காத்துகிடக்க… ஆக்சிஸ் வங்கி செய்யும் அட்டூழியம் கோபத்தை கிளறி உள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் நொய்டாவில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் 20 போலி கணக்குகள் மூலம் கணக்கில் வராத ரூ.60 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு வாபசிற்கான காலக்கெடு முடிவடைய இன்னும் 16 நாட்கள் உள்ள நிலையில், கணக்கில் வராத பணத்தை வெளிக்கொண்டு வர வருமான வரித்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டில்லி அருகே நொய்டாவி்ல் ஆக்சிஸ் வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் அந்த வங்கியில் 20 போலி வங்கிக்கணக்குகளில் கணக்கில் வராத ரூ.60 கோடி டிபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 25ம் தேதி டில்லியில் உள்ள காஷ்மீரே கேட் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.3.5 கோடி கணக்கில் வராத பணத்தையும், சாந்தினி சவுக் பகுதியிலும் உள்ள இதே வங்கி கிளையிலும் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த மற்றொரு சோதனையில் ரூ.35 லட்சம் அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இப்படி தொடர்ந்து இதுபோன்ற முறைகேடுகளில் ஆக்சிஸ் வங்கி ஊழியர்கள் ஈடுபடுவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

போச்சே… போச்சே… நல்ல முட்டை போச்சே… வதந்தியால் மக்கள் அவதி

சேலம்:
போச்சே… போச்சே… வதந்தியால நல்ல முட்டைகளை தூக்கி போட்டு உடைச்சுட்டோமேன்னு சேலம் மக்கள் நொந்துக்கிறாங்க… ஆராயாமல் செய்தால் இப்படிதாங்கோ…

சேலம் மாவட்டத்தில் செயற்கை முட்டைகள் விற்பனைக்கு வந்திருப்பதாக கிடுகிடுவென ஒரு வதந்தி பரவ… பொது மக்கள் பீதியடைந்தனர். தாங்கள் வாங்கி வைத்திருந்த முட்டைகளை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது பாலிதீன் பேப்பர் போல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அனைத்து முட்டைகளையும் உடைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை, தாதகாப்பட்டி உட்பட பல பகுதிகளில் உள்ள கடைகளில் செயற்கை முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களிடையே வதந்தி பரவியது.  உடனே வீடுகளுக்கு விரைந்த அவர்கள் தாங்கள் வாங்கி வைத்திருந்த முட்டைகளை சாலையில் போட்டு உடைத்தனர்.

முட்டையின் உள்புறம் உள்ள அடுக்கில் பாலிதீன் பொருள் போன்ற படிமம் உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்க… விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முட்டை கிடங்குகளில் சோதனை மேற்கொண்டனர்.

முட்டைகளை அவர்கள் உடைத்தும், வேக வைத்தும் சோதனை செய்தனர்.  இதில் செயற்கையான முட்டைகள் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்க… இப்போது மக்கள் ஐயோ… போச்சே… முட்டை போச்சே என்று புலம்புகின்றனர்.

மீண்டும் பெட்ரோல் விலை உயரும்… மக்கள் டென்ஷன்…

புதுடில்லி:
மீண்டும் பெட்ரோல் விலை உயரும் என்ற தகவல் மக்களை செம டென்ஷனில் ஆழ்த்தியுள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை குறைக்க ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ரஷ்ய நாடும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாக 50 டாலருக்கும் குறைவாகவே இருந்து வந்த கச்சா எண்ணெய் பேரல் விலை தற்போது 55 டாலரை கடந்துள்ளது. அதன்படி கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் நாடுகள் விலையை அதற்கேற்ப நிர்ணயித்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் விலை ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத்தகவல் பொதுமக்களை மிகவும் டென்ஷனாக்கி இருக்கிறது. இப்படி விலை உயர்ந்துகொண்டே சென்றால் என்ன செய்வது என்று புரியாமல் நடுத்தர மக்கள் கவலையடைந்துள்ளனர்.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share