Dec 142016
 

bur

உள்ளே போ… சிறை உள்ளே போ… புர்கா அணியாமல் படம்…

சவுதிஅரேபியா:
புர்கா அணியாமல் புகைப்படமா? உள்ளே போ… சிறை உள்ளே போ என்று ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் புர்கா அணியாமல் முகம் தெரியும்படி புகைப்படம் எடுத்து அதை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கடந்த மாதம் சவுதி அரேபியா ரியாத்தில் உள்ள ஒரு தெருவில் முகத்திரை அணியாமல் ஒரு பெண் புகைப்படம் எடுத்துள்ளார். அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட, இப்போது அதுவே அவருக்கு வினையாகி விட்டது.

அந்த பெண்ணை போலீசார் பொது ஒழுக்க மீறல்கள் அடிப்படையில் கைது செய்தனர். சவுதியில் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது தலை முதல் கால்வரை மறைக்கக்கூடிய புர்கா என்ற உடையை அணிய வேண்டும் என்பது அந்நாட்டு சட்டம். இதை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.

இரண்டே நிமிடம்… இரண்டே நிமிடம்தான்… விமான சேவை சாதனை

ஸ்காட்லாந்த்:
இரண்டே நிமிடம்… இரண்டே நிமிடம்தான்… ஏறி அமர்வதும் தெரியாது… இறங்குவதும் தெரியாது… சாதனை சேவை இது. என்ன தெரியுங்களா?

ஸ்காட்லாந்தின் வடகிழக்குக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் இரு தீவுகள் இடையே, வெறும் இரண்டு நிமிடங்களுக்குப் பறக்கும் விமான சேவை இருக்கிறது.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பயண நேரம்தான் 2 நிமிடம். காற்று வீச்சு சாதகமாக இருந்தால், ஐஸ்ட் 47 வினாடிகளில் பயணம் முடிந்துவிடும். பயண தூரம் 1.7 மைல்தான்.

1967-ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட இவ்விமான சேவை, இன்று வரை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த விமான சேவை புகழ்பெற்றிருப்பதையும் விட, இத்தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு இது உயிர்நாடியாக உள்ளது என்பதுதான் முக்கியமானது.

நம்ம ஊருல டவுன் பஸ்சுக்காகவே பல மணிநேரம் காத்து கிடக்க வேண்டி உள்ளது. இந்த விமான சேவை கின்னசில் இடம் பிடித்துள்ளது.

வரும் காலங்களில் வலுவான புயல்தான்… ஜாக்கிரதை… ஜாக்கிரதை…

அலகாபாத்:
ஜாக்கிரதையாக இருங்கோ… முன்னெச்சரிக்கையாக இருங்கோ என்று மக்களை எச்சரிக்கை படுத்தி உள்ளனர் விஞ்ஞானிகள். எதற்கு என்கிறீர்களா?

இனி வரும் காலங்களில் வங்கக்கடலில் அதிகளவில் புயல்கள் உருவாகி தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களை தாக்கும் என்ற எச்சரிக்கையை தான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வர்தா புயலால் சென்னை அடைந்த சேதம் அனைவரும் அறிந்தது. ஒரே நாளில் அதிகபட்சமாக 192 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. மரங்கள் அடியோடு சாய்ந்தன. மின்சார கம்பங்கள் சாய்ந்து சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இனி வரும் காலங்களில் வங்கக்கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகி தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை தாக்கும் என்று ஆய்வில் தெரியவந்து மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.

அலகாபாத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அசுதோஸ் மிஸ்ரா தலைமையிலான குழுவினர் 2014-ம் ஆண்டு இதுதொடர்பாக ஆய்வு நடத்தி எர்த் சயின்ஸ் அறிவியல் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டனர்.

அதில், தொழிற்சாலைகளால் கடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வங்கக்கடல் பகுதியில் இனி வெப்ப மண்டல புயல்கள் அதிகளவில் உருவாகும். இனி வரும் காலங்களில் உருவாகும் புயல்களின் சக்தி அதிகரிக்கும் என்று சொல்லியிருக்காங்க…

உலகின் மெல்லிய யோகா புக் 2 இன் 1 லேப்டாப்… லெனோவோ அறிமுகம்

நியூயார்க்:
உலகின் மெல்லிய யோகா புக் 2 இன் 1 லேப்டாப் சாதனத்தை லெனோவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்காங்க… செய்திருக்காங்க…

இந்த லேப்டாப் இந்த ஆண்டு நடைபெற்ற ஐஎப்ஏ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கு. உலகின் மெல்லிய 2 இன் 1 சாதனமாக அறியப்படும் லெனோவோ யோகா புக் விலை ரூ.49,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப்பில் உலகின் முதல் ஹாலோ வகை கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது.  லெனோவோ யோகா புக் 2 இன் 1 சாதனத்தின் ஹைப்ரிட் மாடல் கார்பன் பிளாக் மற்றும் ரியல் பென் இன்புட் போன்ற சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. விண்டோஸ் இயங்குதளம் உள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் லெனோவோ யோகா புக் இந்தியாவில் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலோ கீபோர்ட் ஆனது முழுமையான டச் ஸ்கிரீன் கொண்ட பேக்லிட் கீபோர்டு அமைப்பு கொண்டுள்ளது. கேபாசிட்டிவ் கீபோர்டு என்பதால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உங்களின் டைப்பிங் முறையை பதிவு செய்து கொண்டு அவற்றை கணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டரா… நாங்களா… புதிய ஸ்மார்ட் போன்கள் களத்துக்கு வருது…

வாஷிங்டன்:
கம்ப்யூட்டரா… நாங்களா என்று பார்த்துவிடுவோம் என்ற ரீதியில் ஸ்மார்ட் போன் ஒன்று அடுத்த ஆண்டு களத்தில் இறங்கி வலு காட்ட உள்ளதாம்.

என்ன விஷயம் தெரியுங்களா? அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கம்ப்யூட்டருக்கு நிகரான வேகத்தில் இயங்கும் என்று சொல்றாங்க…

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 2017 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் லீக் ஆகி மக்களை ஏங்க வைத்துள்ளது. எனினும் இது சர்பேஸ் போன் தானா அல்லது வேறு ஏதேனும் மாடல் போனா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

இது ஒரு ஹைப்ரிட் போனாக இருக்கும் என்று தெரிகிறது. மைக்ரோசாப்ட் தயாரித்து வரும் உயர் ரக ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐபோன்களுக்கு போட்டியளிக்கும் விதமாக அமையும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய இயங்குதளம் என்பதால் இந்த ஸ்மார்ட்போன் அதிக சக்தி வாய்ந்ததாக இருப்பதோடு அதிநவீன சர்பேஸ் போனாகவும் இருக்கும். கம்ப்யூட்டருக்கு இணையான வேகத்தில் இவை இருக்கும் என்று சொல்றாங்க… சொல்றாங்க…

குளியலறைக்குள் பதுக்கல் அறை… அதுக்குள்ளே… கோடி கோடியாய் பணம்…

பெங்களூர்:
அடப்பாவி… பதுக்கி வைக்கறதுக்காகவே தனியாக ரூம் கட்டியிருப்பாங்க போலிருக்கே… என்கின்றனர் மக்கள். என்னா சங்கதின்னா…

பெங்களூரில் ரூ.5.7 கோடி புதிய ரூபாய் நோட்டுகளை குளியலறையில் ரகசியமாக மறைத்து வைத்திருந்த மேட்டரில் ரிசர்வ் வங்கி அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்த சங்கதிதான் இப்போ செம ஹாட்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பல்வேறு விதிமுறைகளை விதித்தது. இருந்தாலும் தில்லாங்கடி வேலைகள் நடந்து பணப் பரிமாற்றம் ஆகுது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹவாலா டீலர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த அங்கு அவங்களுக்கு அதிர்ச்சியோ… அதிர்ச்சி.

குளியலறைக்குள் ரகசிய அறையே கட்டியிருக்காங்க… அதுல பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார். அதில் ரிசர்வ் வங்கி அதிகாரி மைக்கேல் என்பவரும் சிக்க… இப்ப அவருக்கும் காப்பு மாட்டிட்டாங்க… சிபிஐ அதிகாரிகள்.

வர்தா புயலால் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் மழை பெய்யுமாம்!

சென்னை:
வர்தா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தருமபுரி அருகே நகர்ந்து 40 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் நேற்றுமுன்தினம் சென்னையை சூறையாடியது. புயல் காற்றால் கட்டங்களின் மேற்கூரைகள் அலேக்காக பறந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் குப்பை காதிகங்கள் போல் தூக்கி வீசப்பட்டன.

புயல் கரையைக் கடந்தபோது வீசிய பேய்க்காற்றால் பல கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள், விளம்பர பலகைகள், பெட்ரோல் பங்க் மேற்கூரை, ரயில்வே பிளாட்பார கூரைகள் எங்கு சென்றது என்றே தெரியாத நிலை.

இந்த வர்தா புயல் திருவண்ணாமலை மாவட்டம் வழியாக செல்லும் போது வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இவை தற்போது, தருமபுரி அருகே நகர்ந்து 40 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்தா புரட்டி போட்ட சென்னை… அரசு அதிவிரைவு மீட்பு பணி…

சென்னை:
புரட்டி போடப்பட்ட சென்னையில் அரசின் அதிவிரைவு மீட்புப்பணிகளால் மக்களின் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

வர்தா புயல் திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. மேலும் பல இடங்களில் கனமழையும் பெய்தது.

இந்த புயலால் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே தமிழக அரசு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. விழுந்து கிடக்கும் மரங்கள், மின் கம்பங்களை அகற்றும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு விரைவாக பணிகள் நடந்தது.

சென்னையில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடத் துவங்கியுள்ளன. சீரமைப்பு பணிகளில் பிற மாவட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

N.நாகராஜன்

Likes(0)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share