Dec 102016
 

VM

தமிழக மீனவர்களே… ஆந்திராவுக்கு மீன்பிடிக்க போகாதீங்க… புயல்.. புயல்…

சென்னை:
தமிழக மீனவர்கள் ஆந்திர கடற்கரை அருகே மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஏன் தெரியுங்களா? 12ம் தேதி இப்பகுதியில்தான் புயல் கரையை கடக்க போகுதாம்…

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் என்ன சொல்லியிருக்கார்ன்னா…

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் வர்தா புயல், விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 990 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது.

வரும் 2 நாட்களில், இந்த புயல் வடமேற்கு திசையில் நகரும். 12ம் தேதி மாலை நெல்லூருக்கும் காக்கி நாடாவுக்கும் இடையே கரையை கடக்கும். அப்போது சற்று வலுவிழக்கக்கூடும். எனவே தமிழக மீனவர்கள் ஆந்திர கடற்கரை அருகே மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

இயல்பை விட 66 சதவீதம் வடகிழக்கு பருவமழை குறைவாக உள்ளது. இப்படி சொல்லியிருக்காருங்க…

நம்ம கூட்டாளி… இந்தியா… அமெரிக்க செனட்டில் தீர்மானம்…

வாஷிங்டன்:
நம்ம கூட்டாளி… நம்ம பங்காளி என்று அமெரிக்க செனட்டில் மசோதாவே நிறைவேற்றி இருக்காங்களாம்… யாரை இப்படி சொல்லியிருக்காங்க தெரியுங்களா?

பாதுகாப்பு துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளி இந்தியா என்று அறிவித்து அமெரிக்க செனட்டில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதாங்க… இப்போ ஹாட் மேட்டரு…

ஒபாமா அரசின் நிர்வாகம் கடந்த ஜீன் மாதமே இதற்கான முடிவுகளை எடுத்தது. தற்போது சட்டப்பூர்வமாக நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் அஸ்டான் கர்டெர், இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த மசோதா அந்நாட்டு செனட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுது.

இந்தியா வந்துள்ள அஸ்டான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, பாதுகாப்புத் துறையில் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இந்த கூட்டத்தில் தீவிர ஆலோசனை செய்யப்பட்டது.

எழுதலாம்… எழுதலாம்… தமிழிலும் எழுதலாம்… மத்திய அரசு அனுமதி

புதுடில்லி:
எழுதலாம்… எழுதலாம்… தமிழிலும் எழுதலாம் என்ற அறிவிப்பால் செம சந்தோஷத்தில் உள்ளனர் மாணவர்கள்… என்னா விஷயம்ப்பா என்கிறீர்களா?

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை (நீட்) தமிழ் உட்பட 6 பிராந்திய மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு சொல்லிட்டாங்கப்பா…
இதுகுறித்து மத்திய சுகாதாராத்துறை அமைச்சர் அனுப்ரியா பட்டேல் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?

நீட் தேர்வை தமிழ் உட்பட 6 பிராந்திய மொழிகளில் எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவ படிப்பில் மாநில இட ஒதுக்கீடை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம்.

மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டு கொள்கை நீட் தேர்வால் பாதிக்காது என்று சொல்லியிருக்கார். இதனால் மருத்துவப்படிப்பு மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனராம்.

என் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்… விஜய் மல்லையா புலம்பல்

புதுடில்லி:
என் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்… என்று விஜய் மல்லையா புலம்பி உள்ளார். அடப்பாவி இதெல்லாம் ஒரு பிரச்னையா என்று கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆன தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ‘டுவிட்டர், இ – மெயில்’ கணக்குகள், மர்ம நபர்களால் முடக்கப்பட்டு உள்ளன.

மல்லையா இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன், ‘டுவிட்டர், இ – மெயில்’
கணக்குகளை, மர்ம நபர்கள் முடக்கியுள்ளதாக மல்லையா புலம்பி உள்ளார். இதுகுறித்து தன் டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

நான் பயன்படுத்தும், ‘டுவிட்டர், இ – மெயில்’ கணக்குகளை முடக்கியுள்ளனர். டுவிட்டரில், என் சொந்த விஷயங்கள், வங்கிக் கணக்கு விபரங்கள், அவற்றின் பாஸ்வேர்டுகள், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

உடனே நிறுத்துங்க… சிரியாவில் போரை உடனே நிறுத்துங்க

வாஷிங்டன்:
உடனே நிறுத்துங்க… சிரியாவில் போரை உடனே நிறுத்துங்க என்று ஐ.நா.வில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ நகரை முழுமையாக விடுவிப்பதற்காக அதிபர் ஆதரவு படையினர் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அலெப்போ நகரில் பெரும்பாலான இடங்களை இழந்துள்ள நிலையில், 5 நாள் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்து இருந்தனர்.

இருப்பினும், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள அலெப்போ நகரில் மேலும் சில பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் சிரிய ராணுவம் முன்னேறி வருகிறது.

இந்நிலையில், சிரியாவில் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

கனடா சார்பில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆதரவாக 122 பேர் வாக்களித்தனர். ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

லெபனான், ஈராக், தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. எனவே சிரியாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போங்க… போங்க… அதிபர் பதவியில் இருந்து போங்க

சியோல்:
போங்க… போங்க… அதிபர் பதவியில் இருந்து போங்க என்று குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேறியதை அடுத்து தென்கொரிய அதிபர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்

தென்கொரியாவில் செனூரி கட்சி சார்பில் அதிபராக பதவி வகித்து வந்தார் பார்க் ஜியுன் ஹைக்கு எதிராக சமீப காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்தது.

இதையடுத்து மக்களின் போராட்டங்கள் அதிகரிக்க… அவரை பதவியில் இருந்து நீக்க வழிசெய்யும் குற்ற விசாரணை தீர்மானத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன.

இந்த தீர்மானம் மீது பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஆளும் செனூரி கட்சியை சேர்ந்த கணிசமான உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். தொடர்ந்து அதிபர் பார்க் ஜியுன் ஹை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

பார்க் ஜியுன் ஹை அதிபர் பதவியில் தொடர வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் இனி அரசியல் சாசன கோர்ட்டுக்கே உண்டு. இந்த விசாரணையிலும் பார்க்குக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவர் நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

தேன் கூட்டில் கல்வீசாதீங்க… டிரம்பிற்கு தொழிலதிபர்கள் கண்டனம்

வாஷிங்டன்:
தேன் கூட்டில் கல்வீசி கொட்டு வாங்கிக்காதீங்க என்பதுபோல் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு, அந்நாட்டு தொழிலதிபர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதற்காக தெரியுமா?

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் ஜன.20-ம் தேதி புதிய அதிபராக பதவி ஏற்கிறார். பிரசாரத்தின் போது வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து அங்கிருந்து இறக்குமதி செய்யும் கம்பெனிகளுக்கு 35 சதவீதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்து இருந்தார்.

தற்போது வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார். வெளிநாட்டு தொழிலாளர்களை பெரிய அளவில் வெளியேற்றும் டிரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்க தொழிலபதிபர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இப்போவே புகைச்சல் ஆரம்பிச்சுடுச்சு…

இம்புட்டா… அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைவு… 800 கிலோ போதைப்பொருள்

கொழும்பு:
இம்புட்டா… அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துதான் போய் உள்ளனர். எதற்காக தெரியுங்களா?

கொழும்பு துறைமுகத்தில் கன்டெய்னருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 கிலோ ‘கோகைன்’ போதைப்பொருள் கண்டுபிடித்தபோதுதான் அதிகாரிகளின் ரியாக்சன் இப்படி இருந்தது. இதன் மதிப்பு ரூ.1,200 கோடியாம்.

ஈகுவடார் நாட்டில் இருந்து கடந்த அக்டோபர் 2-ந் தேதி புறப்பட்ட ஒரு கப்பல், இந்தியாவுக்கு வரும் வழியில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகத்தை அடைந்தது.

இந்த கப்பலில் போதைப்பொருள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க இலங்கை போலீசின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையிட்டனர்.

அப்போது ஒரு கன்டெய்னருக்குள் 800 கிலோ ‘கோகைன்’ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1,200 கோடி ஆகும்.

இதை பறிமுதல் செய்த போலீசார், ஈகுவடார், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உளவுத்துறை உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

என்னப்பா… இப்படி செய்யறீங்களேப்பா… போதையில் சிக்கி தவிக்குது அமெரிக்கா

நியூயார்க்:
என்னப்பா… இப்படி செய்யறீங்களேப்பா… என்று உலக அண்ணன் அமெரிக்கா கையை பிசைஞ்சுக்கிட்டு இருக்காம்… என்ன விஷயம் தெரியுங்களா?

மிதமிஞ்சிய போதை மருந்து காரணமாக ஆண்டுக்கு 50,000 அமெரிக்கர்கள் இறப்பதாக வெளியான புள்ளி விவரங்கள் தான் இப்போ செம பரபரப்பை கிளப்பி உள்ளன.

வல்லரசு நாடாகத் திகழ்ந்தாலும் போதை மருந்துகளை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்து திணறிக்கிட்டுதான் இருக்கு. இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரம்தான் செம ஹாட் மேட்டருங்க…

கார் விபத்து, துப்பாக்கி சூடு ஆகியவற்றால் ஓராண்டில் இறக்கும் அமெரிக்கர்களை விட போதை மருந்து பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்காம். ஆண்டுக்கு சுமார் 50,000 அமெரிக்கர்கள் போதை மருந்து பழக்கத்தால் இறக்கின்றனர் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

ஹெராயின் என்ற போதை மருந்தால் 12,989 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக ஹெராயின் உட்கொள்ளுவதால் தினசரி 44 பேர் இறப்பதாக கூறப்படுகிறது. இதை என்ன செய்ய போறீங்க… டிரம்ப்…

N.நாகராஜன்

Likes(0)Dislikes(0)
Share
 Posted by at 6:51 pm

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share