Dec 092016
 

2

வேண்டாம் நிறுத்துங்க… பாக்.,கிற்கு அமெரிக்கா கண்டிப்பு

வாஷிங்டன்:
வேண்டாம்… நிறுத்துங்க என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்பு காட்டியுள்ளது. எதற்காக என்று தெரியுங்களா?

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆஷ்டன் கார்ட்டர் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். அப்போது அவர் விமானத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானை நிலைகுலைய வைத்ததுடன், அங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பயங்கரவாதிகளுக்கும்,
இந்தியாவைக் குறித்துவைத்துக் தாக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கும் புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் தொடரக் கூடாது.

இந்த உண்மையை பாகிஸ்தான் அங்கீகரிப்பது முக்கியமாகும். பாகிஸ்தான் இவ்வாறு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

சாலமன் தீவை ஆட்டிய நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை

ஹோனைரா:
சுனாமி ஏற்படும் என்ற அறிவிப்பாலும், நடுக்கி எடுத்த நிலநடுக்கத்தாலும் சாலமன் தீவுகளை சேர்ந்து மக்கள் வெகுவாக அச்சத்தில் உள்ளனர்.

சாலமன்தீவுகளில் உள்ளூர் நேரப்படி இன்று (9ம் தேதி) காலை 9.38 மணிக்கு (இந்தியா நேரத்தில் நேற்று 8ம் தேதி இரவு 11.30
மணியளவில்) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின.

சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

தெற்குபசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான சாலன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது கிராகிரா பகுதியில் கடலுக்கு அடியில் தென்மேற்கே 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.0 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து அடுத்த 3 மணி நேரத்தில் சுனாமி தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து உயிர் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

கிராகிரா பகுதி முழுவதும் கட்டடங்கள் குலுங்கியதாகவும், சாலைகளில் பெரும் பள்ளங்கள் தோன்றியதாகவும் இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெகுவாக அச்சத்தில் உள்ளனர்.

மீட்காமல் விடமாட்டோம்… சிரிய ராணுவம் கிடுகிடு முன்னேற்றம்

டமாஸ்கஸ்:
மீட்காமல் விடமாட்டோம்… விடமாட்டோம் என்று அலெப்போ நகரை முழுமையாக மீட்கும் முனைப்பில் சிரிய ராணுவம் கிடுகிடுவென்று முன்னேறி வருகிறது.

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போர் 6-வது ஆண்டாக நீடித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ நகரை முழுமையாக மீட்க அதிபர் ஆதரவு படையினர், கடந்த மாதம் மத்தியில் இருந்து அங்கு கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சண்டையில், அலெப்போ நகரில் உள்ள பழைய நகரம் உட்பட நான்கில் மூன்று பகுதியை சிரிய ராணுவத்திடம் கிளர்ச்சியாளர்கள் இழந்துவிட்டனர். அலெப்போ நகரில் மேலும் சில பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் சிரிய ராணுவம் முன்னேறி வருகிறது.

செல்லாது… நாளை முதல் பஸ், ரயில்களிலும் பழைய நோட்டு செல்லாது

புதுடில்லி:
செல்லாது… செல்லாது… நாளை முதல் இங்கேயும் செல்லாது என்று அறிவிச்சுட்டாங்க… (இப்ப மட்டும் வாங்குறாங்களா என்ன?)

பஸ்கள், ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் நாளை 10ம் தேதிக்கு பிறகு பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் என்று மத்திய அரசு அதிரடித்தது. மக்கள் தங்களிடமுள்ள பணத்தை வங்கியில் டிபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என்றது.

இருந்தாலும் மருத்துவமனை, பஸ் போக்குவரத்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயில் பயணங்களுக்கு விமான பயணத்திற்கான கட்டணங்கள் செலுத்த, டிச.15 வரை பழைய ரூ.500 நோட்டை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு வங்கியில் பழைய ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை மாற்றுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பஸ்கள், மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் பயணத்திற்கு வரும் பயணிகள் கொடுக்கும் பழைய ரூ.500 நோட்டுக்கள் நாளை 10ம் தேதிக்கு பிறகு ஏற்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆஹா… இம்புட்டு வசதியா என்று ஸ்மார்ட் போன் ரசிகர்கள் கொண்டாட்டம்

ஆஸ்டின்:
ஆஹா… இம்புட்டு வசதியா என்று ஸ்மார்ட் போன் ரசிகர்கள் கூத்தாடுகின்றனர் இந்த தகவலை கேள்விப்பட்டு… என்ன விஷயம் என்றால்…

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A3 (2017) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி மக்களை லுக் விட செய்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இணையத்தில் பலமுறை கசிந்திருக்கிறது. அக்டோபர் மாதத்தில் A5 (2017)ம், இம்முறை A3 (2017) ஸ்மார்ட்போன் பற்றிய தகவலும் லீக்காகி உள்ளது.

கேலக்ஸி A3 (2017) ஸ்மார்ட்போனில் வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கைரேகை ஸ்கேனர் ஹோம் பட்டனில் பொருத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்துள்து. ரியர் பேனல் கிளாஸ் மூலம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறாதாம்.

1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 சிப்செட் கொண்டிருக்கும். மெமரியை பொருத்த வரை 2 GB ரேம், 8GB / 16GB இன்டர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, கேமரா 13 எம்பி பிரைமரி கேமராம், 8 எம்பி செல்பி கேமரா, 4G LTE, 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் GPS போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் இருக்கும் என்று சொல்றாங்க…

N.நாகராஜன்

Likes(0)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share