Dec 082016
 

PIA

5 கோடி சேல்ஸ்ங்கோ… காலர் தூக்கி விட்டுக்குது சோனி…

டோக்கியோ:
அம்புட்டு சேல்ஸ்சா… அட… என்று புருவம் உயர்கிறது மக்களுக்கு இந்த தகவலை கேட்டு… என்ன விஷயம் தெரியுங்களா?

சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கன்சோல்கள் உலகம் முழுக்க சுமார் 5 கோடி அளவிற்கு விற்று தீர்த்துள்ளதாம். இதைதான் அந்த நிறுவனம் பெருமையாக சொல்ல…. மக்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

கேமிங் உலகில் பல்வேறு சாதனங்களை வெளியிடுவதில் டாப் லிஸ்டில் இருக்குது சோனி நிறுவனம். தனது பிளே ஸ்டேஷன் 4 கன்சோல்களின் விற்பனையில் புதிய மைல் கல் சாதனை புரிந்திருக்கிறது.

உலகம் முழுக்க சுமார் 5 கோடி பிளே ஸ்டேஷன் 4 கன்சோல்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. 2013-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிளே ஸ்டேஷன் 4 இது வரை இம்புட்டு விற்பனையாகி பெரிய சாதனை படைத்துள்ளதாம்.

பேட்டரி நிக்கலையே… சார்ஜ் நிக்கலையே… வாடிக்கையாளர்கள் புலம்பல்

சான்பிரான்சிஸ்கோ:
அய்யா… தாங்க முடியலை… ஏன் இப்படி என்று வாங்கியவர்கள் நொந்து போய் கிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எதற்காக இந்த புலம்பல் என்கிறீர்களா?

ஆப்பிளின் மேக்புக் ப்ரோ 2016 பதிப்புகளில் பேட்டரியால் அதிகம் கோளாறுகள் ஏற்படுவதாக அதை வாங்கியவர்கள் குற்றம் சாட்டி உள்ளதுதான் இதற்கு காரணம்.

ஆப்பிள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் மேக்புக் ப்ரோ 2016 பதிப்புகளில் கிராபிக்ஸ் கார்டு பிரச்சனை காரணமாக பேட்டரி பேக்கப் சார்ந்த பிரச்சனை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். இப்பிரச்சனை காரணமாக 10 மணி நேரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்ட பேட்டரி பேக்கப், மிக குறைந்த நேரத்திற்குள்ளாகவே தீர்ந்து விடுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பறந்த விமானம் விழுந்து நொறுங்கியது… 47 பேர் பலியான சோகம்…

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 47 பேரும் பலியான அதிர்ச்சி சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று, கைபர் பாக்துன்க்வா மாகாணம் சிட்ரல் பகுதியில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டது. இதில் 47 பேர் பயணம் செய்தனர். அவர் நினைத்திருப்பார்களா? இதுபோன்ற வேதனையை…

புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டது.  இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காணாமல் போன விமானம் பிப்பிலியன் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதில் பயணம் செய்த 47 பேரும் பலியாகிவிட்டனர். இதில் 2 குழந்தைகள், 9 பெண்கள் அடங்குவர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

ஏமனில் கடலில் சென்ற படகு மாயம்… 60 பேர் கதி என்ன?

சனா:
உள்நாட்டு போர் நடந்து வரும் ஏமனில் படகு ஒன்று திடீரென மாயமானது. இதனால் அதில் பயணம் செய்த 60 பேர் நிலை தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு போர் நடந்து வரும் ஏமனில் ஹட்ராமாவ்த் பகுதியை சேர்ந்தவர்கள் படகு மூலம் கடலில் பயணம் மேற்கொண்டனர். சொகோட்ரா தீவு அருகே அந்த படகு திடீரென மாயமானது.

தேடுதல் பணி தீவிரமானாலும் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லாததால் அதில் பயணம் செய்த 60 பேர் என்னவானார்கள் என்பது தெரியாத நிலை நீடிக்கிறது.

படகு கடலில் மூழ்கி அவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குண்டு வீச்சில் போயிடுச்சு… முழுசா என்வீடு அழிஞ்சிடுச்சு…

டமாஸ்க்ஸ்:
போயிடுச்சு… குண்டுவீச்சில் என் வீடு சுத்தமாக அழிஞ்சு போயிடுச்சு என்று சிரியா போர் கொடூரம் பற்றி 7 வயது சிறுமி சோகத்துடன் கூறிய சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அடங்கும்ங்க. 5 லட்சம் பேர் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்க…

இருந்தாலும் இன்னும் சண்டை நடந்து வருது. இந்நிலையில் போரின் கொடூரம் குறித்து கிழக்கு அலைப்போ நகரில் வசிக்கும் பானா அல்-அபெத் என்ற 7 வயது சிறுமி டுவிட்டரில் படத்துடன் சொல்லியிருக்கா பாருங்க… அதுதான் செம வேதனை.

குண்டு சத்தம் கேட்டபடி உள்ளது. இதனால் அச்சத்தில் வாழ்கிறோம். குண்டு வீச்சில் எனது வீடு இடிந்து தரைமட்டமாகிவிட்டது. எனவே வேறு பகுதியில் தங்கியிருக்கிறோம்’ என உருக்கமாக தெரிவித்து இருக்கிறாள்.

7 வயது சிறுமியின் இந்த தகவல் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
 Posted by at 2:11 pm

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share