Dec 032016
 

4
சில மாடல் செல்போன்களில் வாட்ஸ் அப்… உஷாரய்யா… உஷாரு…

நியூயார்க்:
சில மாடல் செல்போன்களில் வாட்ஸ் அப் சேவை இந்த ஆண்டுடன் “கட்” செய்யப்படுகிறது என்று தகவல் பயனாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகெங்கும் அதிகம் பேர் பயன்படுத்தும் “ஆப்” என்றால் அது வாட்ஸ் அப் ஆகதான் இருக்கும். அந்தளவிற்கு மக்களுடன் மக்களாக பின்னி பிணைந்து விட்டது.

ஸ்மார்ட்போன்களில் பிரபலமான குறுந்தகவல் அனுப்ப வசாயாக இருக்கும் வாட்ஸ்அப் சில நாட்களுக்கு முன் தன் ஏழு வயதை கடந்தது.

இனி வரும் மாதங்களில் வாட்ஸ் அப்பில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவன இணைய பக்கத்தில் தெரிவிச்சு இருக்காங்க…

வாட்ஸ்அப் தொடங்கப்பட்ட 2009 ஆண்டில் மக்கள் பயன்படுத்திய கருவிகளில் சுமார் 70 சதவிகித இயங்குதளங்கள் பிளாக்பெரி மற்றும் நோக்கியா நிறுவனங்களுடையதாக இருந்தது.

இன்றைய மொபைல் போன்களில் கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் இயங்குதளங்கள் சுமார் 99.5 சதவீதம் இருக்கிறது. இதனால் இனி வரும் ஆண்டுகளில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இயங்குதளங்களுக்கு ஏற்ப வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவையானது பின்வரும் இயங்குதளங்களில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாக்பெரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெரி 10
நோக்கியா S40
நோக்கியா சிம்பயான் S60
ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2
விண்டோஸ் போன் 7
ஐபோன் 3GS / ஐஓஎஸ் 6. எனவே சீக்கிரம் வேறு போனுக்கு மாறுங்க… வாட்ஸ் அப் சேவையை யூஸ் பண்ணிக்கோங்க…

அனுமதி கொடுங்க… கஞ்சா பயிரிட… 400 விவசாயிகள் காத்திருப்பு… இது கனடாவில்…

டொரான்ட்டோ:
அனுமதி கொடுங்க என்று 400 பண்ணை விவசாயிகள் அரசிடம் கேட்டு இருக்காங்களாம். எதற்காக தெரியுங்களா?

கனடா நாட்டின் பெரும்பான்மை மலர் தோட்ட விவசாயிகள் தற்போது கஞ்சா பயிர் வளர்ப்பதில் செமத்தியாக ஆர்வம்காட்டி வருகின்றனர். என்னாது என்று ஆச்சரியம் படாதீங்க…

கனடா நாட்டில் மருத்துவ தேவைக்காக மட்டும் கஞ்சாவை பயன்படுத்த அனுமதிச்சாங்க… இப்போ… கேளிக்கைக்காகவும் அனுமதி கொடுக்க இருக்காங்க… இதனால் அரசு வருமானம் கிடுகிடுவென்று உயரும்.

இந்த புதிய சட்டத்திருத்தம் வந்தால் இரண்டே ஆண்டுகளில் சுமார் 6 லட்சம் கிலோவாக தேவை உயரலாம் என்பதால் ஒன்ட்டாரியோலா, பிரின்ஸ் எட்வர்ட் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பண்ணை விவசாயிகள் லாவெண்டர் போன்ற நறுமண மலர்களை பயிரிடுவதற்கு பதிலாக இப்போதே கஞ்சா விளைவிக்க தொடங்கி விட்டனர்.

ஒவ்வொரு பண்ணையில் இருந்தும் சுமார் 100 முதல் 10 ஆயிரம் கிலோ கஞ்சா பயிரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமா.. சுமார் 400 பண்ணை விவசாயிகள் தங்களது நிலங்களில் கஞ்சா பயிரிட அனுமதி கேட்டு அரசை அணுகியுள்ளனர்.

நவம்பர் மாத சண்டையில் 1950 ராணுவ வீரர்கள் பலி…

மொசூல்:
ஒரே மாதத்தில் 1950 ராணுவ வீரர்கள் பலி என்ற தகவல் பெரும் வேதனையை கிளப்பினார்… 926 பொதுமக்களும் பலியாகி உள்ளனர் என்றும் சொல்றாங்க… இது எங்க என்று கேட்கிறீர்களா?

ஈராக்கில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்ற மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக உள்ளது ஈராக் ராணுவம்.

இதற்காக நடந்த சண்டையில் மொசூலின் பெரும்பாலான பகுதிகள் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சண்டையில் 1959 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனராம். இதேபோல் 926 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 930 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

அழகான ஆண் அழகனாம் ராக்… கருத்துகணிப்பில் பெற்றார் முதலிடம்

வாஷிங்டன்:
இவரா… இவரா என்று ஹாலிவுட்டே வியந்து போய் பார்க்கிறது இந்த சர்வே முடிவுகளை கண்டு. என்ன விஷயம் என்கிறீர்களா?

ஹாலிவுட்டில் பல முக்கிய பிரபலமான நடிகர், நடிகைகள் உண்டு. உலக அளவில் நிறைய ரசிகர்களை தங்கள் பக்கம் தானாக வரவைத்துள்ளனர். அந்த வரிசையில் பிரபல குத்து சண்டை வீரராக இருந்த அமெரிக்காவை சேர்ந்த ட்வெய்ன் ஜான்சன் ஹாலிவுட் படங்களில் நிறைய நடிதுள்ளார். அதாங்க… ரெஸ்லிங் வீரர் “ராக்”தான்.

முழு நடிகராக மாறியிருக்கும் இவர் சில படங்களில் குழந்தைகளோடு காமெடியும் செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று உலகின் கவர்ச்சிகரமான ஆண் பற்றிய கருத்து கணிப்பை நடத்த அதில் ராக்கை ரசிகர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்க…

புதிய இசை ஆல்பம்… ப்ரோமோஷனுக்காக மொட்டை மாடியில் பாடிய “லேடி காகா”

லண்டன்:
பாட்டு தொகுப்பை பிரபலமாக்கணும்ன்னா… தெருவுக்கு மட்டும் இல்ல… மொட்டைமாடிக்கும் போகலாம்ன்னு புது ரூட்டை போட்டுள்ளார் பிரபல பாப் இசைப் பாடகி லேடி காகா.

பாப் இசை உலகில் மிகப்பிரபலமான பாடகி என்றால் அது லேடி காகா தான். இவர் “ஜோவன்” என்று பெயரிடப்பட்டுள்ள தனது புதிய இசை ஆல்பத்தை பிரபலப்படுத்த முடிவு செய்தார்.

இதற்காக லண்டன் நகரில் உள்ள வெஸ்ட் பீல்ட் மால் என்ற வணிக வளாக மொட்டை மாடியில் அவர் தனது ரசிகர்களுக்காக பிரத்யேக ‘ப்ரமோ’ நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்ட லேடி காகா, தனது ‘சூப்பர் ஹிட்’ பாடல்களை வெகு உற்சாகமாக பாடி அசத்தினார் பாருங்க… ரசிகர்களும் உற்சாகமடைந்துவிட்டனர்.

ஏலம் கேட்கலையோ… ஏலம்… கையுறை… சுருட்டு ஏலம்… ஏலம்…

நியூயார்க்:
ஏலம் கேட்கலையோ… ஏலம்… ஏலம்ங்க… குத்துச்சண்டை வீரர் முகமது அலி கையுறை, கியூபாவின் மறைந்த அதிபரின் கையொப்பமிட்ட சுருட்டு ஆகியவை ஏலமுங்க… ஏலம்…

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஜீலியன்ஸ் என்ற பிரபல ஏல நிறுவனம் உள்ளது. மறைந்த பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடுவதில் இந்த நிறுவனம் நம்பர் 1.

இந்நிறுவனம்தான் தற்போது குத்துச்சண்டை வீரர் முகமது அலி பயன்படுத்திய கையுறை, கியூபா முன்னாள் அதிபரின் கையொப்பமிட்ட சுருட்டு ஆகியவற்றை ஏலத்துக்கு வைச்சிருக்காங்க…

காலரா பரவியதை தடுக்க முடியலை… மன்னிச்சுங்கோங்க… மன்னிச்சுக்கோங்க…

நியூயார்க்:
மன்னிச்சுங்கங்க… மன்னிச்சுக்கங்க என்று தன் பதவி காலத்தில் முதல்முறையாக இப்போ மன்னிப்பு கேட்டுள்ளார் ஐ.நா. பொதுசெயலாளர் பான் கி மூன். எதற்காக தெரியுங்களா?

கரிபியன் கடற்பகுதியையொட்டி, வட அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டுவரை ‘காலரா’ எனப்படும் வாந்தி பேதியால் யாரும் பாதிக்கப்பட்டதில்லை.

ஆனால், அதன்பிறகு அங்கு சென்ற ஐக்கியநாடுகள் அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த நேபாள நாட்டு ராணுவ வீரர்கள் தாங்கள் பயன்படுத்திய குப்பைக் கழிவுகளை ஹைத்தி நாட்டில் ஓடும் பிரதான ஆற்றில் வீசியதால் கடந்த 2011-ம் ஆண்டு இங்கு காலரா நோய் வெகுவாக பரவ குறுகிய காலத்தில் சுமார் 80 ஆயிரம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

ஐ.நா.சபை அமைதிப்படையின் நற்பெயருக்கும் நோக்கத்துக்கும் களங்கம் கற்பித்துவிட்ட இந்நோயை கட்டுப்படுத்த தவறிய வேளையிலும், இந்நோயின் தாக்கத்துக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக சுமார் 20 கோடி அமெரிக்க டாலர்களை தொகுப்பு நிதியாக திரட்ட ஐக்கிய நாடுகள் சபை முனைப்பு காட்டி வருகிறது.

உரிய நேரத்தில் இந்த நோயை கட்டுப்படுத்த தவறியமைக்காக ஐக்கிய நாடுகள் சபை வருத்தம் தெரிவிப்பதாகவும், ஹைத்தி மக்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். இவர் தன் பதவிக்காலத்தில் எதற்காகவும் மன்னிப்பு கேட்டதில்லை. இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பரவி வரும் காட்டுத்தீ… 10 பேர் பலி…. 1200 ஏக்கர் சேதம்…

நியூயார்க்:
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாக… 1200 ஏக்கர் நிலம் சேதம் அடைந்துள்ளதாம்.

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் காட்டுத் தீ பரவியது. இதனால் காட்லின்பர்க், பிஜியின் போர்ஜ் ஆகிய நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 28-ந்தேதி காட்லின் பர்க் நகர காட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரால் ஏற்பட்ட இந்த தீயின் வேகம் அதிகமாகி கிடுகிடுவென்று பரவி வருகிறது.

இந்த தீயில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். 45 பேர் காயம் அடைந்துள்ளனர். 700 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.
1200 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன கப்பல்களை கண்காணித்து வர்றோம்… கடற்படை தளபதி தகவல்

புதுடில்லி:
சீனக் கடற்படையின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் நடமாட்டத்தை இந்தியப் பெருங்கடல் பகுதியில் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

தேசிய கடற்படை தினத்தையொட்டி, டில்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் தலைமைத் தளபதி சுனில் லாம்பா கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை சீனக் கடற்படை நிறுத்தி வைத்து அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படை நிறுத்தி வைத்துள்ளது. இது பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து வந்துள்ளது.

இப்போது வரையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையின் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் நிறுத்தப்பட்டு வருவது கவலையளிக்கும் செயலாக உள்ளது. இதன் இயக்கத்தையும் இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

கப்பல்களின் நடமாட்டத்தை விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share