Dec 022016
 

FB

பேஸ்புக் நிறுவனம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க முடிவு

நியூயார்க்:
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க பேஸ்புக் நிறுவனம் எப்.பி. ஸ்டார்ட் (FbStart) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த திட்டத்தின் படி இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘கவுட்லூட்’ எனும் வர்த்தக இணையத்தளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தளத்தின் வியாபாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனம் சுமார் 40,000 டாலர் அதாவது இந்திய ரூபாயில் ரூ.27,34,798.00 மதிப்புடைய சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட எப்.பி. ஸ்டார்ட் (FbStart) திட்டத்தின் மூலம் கவுட்லூட் தளமானது பேஸ்புக்கின் நேரடி உதவி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பேஸ்புக் டெவலப்பர் மற்றும் உலகத்தர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் கவுட்லூட் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“நீ ஆணழகனா… இல்லவே இல்ல…” நெட்டிசன்கள் வறுத்தெடுப்பு

ஏதென்ஸ்:
நீ ஆணழகனே இல்ல… அசிங்க அழகன் என்றுதான் நெட்டிசன்கள் செம கடுப்பாகி வருகின்றனர். எதற்காக தெரியுங்களா?

ஏதென்ஸ் நகரில் நடந்த ஆணழகன் போட்டியில் கியான்னிஸ் மேகோஸ் என்பவர், தன்னை நடுவர் நம்பர் 1 ஆக அறிவிக்காத காரணத்தினால் அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்குதான் இப்படி நெட்டிசன்கள் எபெக்ட் கொடுத்துள்ளனர்.

கிரேக்கம் ஏதென்ஸ் நகரில் இந்த ஆண்டிற்கான வைர கிண்ணம் ஆணழகன் போட்டி நடந்தது. கிரேக்கத்தை சேர்ந்த பிரபல பாடிபில்டர்களில் ஒருவரான கியான்னிஸ் மேகோஸ் என்பவர் இதில் கலந்துக் கொண்டார்.

ஆனால் நடுவர்களின் கணிப்பு மேறுமாதிரி அமைய வேறு ஒருவர் சாம்பியன் ஆனார். இதனால் ஆத்திரம் அடைந்த கியான்னிஸ் நடுவர்களை தாக்கத் தொடங்கினார். அர்மாண்டோ மார்க்வெஸ் என்ற நடுவரை தூக்கி வீசிய சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த இந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சொகுசு வாங்கினியா… வந்து அரசுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி கட்டு!

பீஜிங்:
வா… வா… சொகுசு கார் வாங்கினியா… வந்து அரசுக்கு 10 சதவீதம் கூடுதல் வரியை கட்டு என்று சீனா கெடுபிடி காட்டியுள்ளது. ஆமாங்க… விஷயம் இதுதான்.

இறக்குமதி செய்யப்படும் விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கு சீன அரசு கூடுதலாக 10 சதவீதம் வரியை விதித்துள்ளது. இந்த வரிவிதிப்பு அந்நாட்டில் அமலுக்கு வந்துள்ளது.

சீனாவில் காற்று மாசுபாடு என்பது பெரும் பிரச்னையாகவே இருந்து வருகிறது. இதை சரி செய்ய முடியாமல் சீனா மூச்சு திணறி வருகிறது. இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் விலையுயர்ந்த சொகுசுக் கார்களுக்குக் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கும் நடைமுறையை, சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

அனந்னாக்கில் பயங்கரவாதி சுட்டுக் கொலை… ராணுவ வீரர்கள் அதிரடி

அனந்னாக்:
அனந்னாக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

பாகிஸ்தானில் இருந்து இருநாட்டு எல்லை வழியாக இந்தியாவின் ஜம்மு- காஷ்மீருக்குள் நுழையும் தீவிரவாதிகள் இந்திய ராணுவ முகாம் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நக்ரோட்டாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.  இதையடுத்து அந்த மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் என்பதன் மூலம் ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர்.

இந்நிலையில் அனந்னாக் மாவட்டம் டூரு பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வர  அங்கு விரைந்து சென்ற வீரர்கள் பயங்கரவாதி ஒருவனை சுட்டுக் கொன்றனர்.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share