Nov 302016
 

broc

ஊட்டச்சத்து நிறைந்த பிராக்கோலியின் பயன்பாடு தற்போது தமிழகத்தில் சற்றே அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்களிக்கிறது என்பது தெரியுமா!

பிராக்கோலி… என்னது பிராய்லர் கோழியா என்று கேட்காதீர்கள். இது பிராக்கோலிங்க… வெளிநாட்டு வரவான இந்த காய் பற்றி நம்மவர்கள் அறிந்தது என்னவோ கொஞ்சம்தான். இதன் பயன்பாடு மக்களிடம் இன்னும் அதிகரிக்கவில்லை. நம்ம ஊரு காலிபிளவர் மாதிரியே இருக்கும் காய்தான் இது.

நம்மூருக்கு இந்த பிராக்கோலி வந்து ஆண்டுகள் பல ஆனாலும் இது காஸ்ட்லி காயாகத்தான் நம்மவர்களால் பார்க்கப்படுகிறது. இதன் பயன்பாடு இன்னும் பரவலாகவில்லை. காரணம் நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே சமைத்துப் பரிமாறப்படும் காஸ்ட்லியான காய் என்ற எண்ணம் நம் மக்கள் மனதில் இருப்பதுதான். ஆனால் தற்போது பல காய்கறி கடைகளில் பிராக்கோலி விற்பனைக்கு வந்துள்ளது. மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக இதை உணவில் சேர்க்க ஆரம்பித்து விடுகின்றனர். பார்வைக்கு நம்மூரு காலிபிளவர் மாதிரிதான். அது வெள்ளை என்றால் இது பச்சை நிறம் அவ்வளவுதான் மாறுபாடு.

சமீப காலங்களில் பிராக்கோலியின் பயன்பாடு சாமானிய மக்களுக்கும் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பிராக்கோலி என்பது ஒரு வகை காய் என்ற அளவில் மட்டுமே நிற்கிறதே தவிர, அதை எப்படி சமைப்பது என்கிற தகவல்கள் பலருக்கும் புரியாத புதிர்தான்!

‘‘பிராக்கோலி இத்தாலி நாட்டை சேர்ந்த காய். இது முதலில் அந்த நாட்டில்தான் பயன்படுத்தப்பட்டது. இந்தக் காயைப் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது. அறிமுகம் இல்லாத  இந்தக் காயில்  நிறைய ஆரோக்கிய சத்துக்கள் அடங்கி இருக்கிறது என்பது தெரியுமா?

இது ஊட்டச்சத்துகள் நிறைந்த காய். வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கரோடின் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்தது. இது நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை தெரிஞ்சுக்கோங்க…

பிராக்கோலியை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம் என்பது தெரியுமா. சாம்பாரில் போடலாம். பொரியலாகவோ செய்யலாம. சூப், சாலட் ஆகியவற்றில் சேர்த்து உண்ணலாம். இது ருசியும், சுவையும் மொறுமொறுப்புத் தன்மையும் கொண்டது.

எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்க பிராக்கோலியில் Sulforaphane என்ற ஒரு கலவை உள்ளது. மேலும் கால்சியம் மற்றும் வைட்டமின் கே  அளவு பிராக்கோலியில் அதிகளவில் உள்ளது. இதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பல… பல…

இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் நோய் வராமல் தடுக்க உதவுகிறது என்று விளக்கமாக சொல்கிறார் திருச்சியை சேர்ந்த டாக்டர் ராமகிருஷ்ணன்.

அவர் மேலும் கூறியதாவது: பிராக்கோலி வைட்டமின் டி  குறைப்பாட்டை தீர்க்கிறது. அதிகளவில்  உள்ள வைட்டமின் ஏ  மற்றும் வைட்டமின் கே, வைட்டமின் டியின் வளர்சிதையை சமநிலையில் வைக்க உதவுகிறது. வைட்டமின் டி மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு பிராக்கோலி சரியான மாற்று என்பதுதான் உண்மையிலும் உண்மை.

அதுமட்டுமா? புற்று நோயைத் தடுக்கும் சக்தி இதில் அதிகம் உள்ளது. புற்றுநோய்க்கு மட்டும் உதவாமல், கல்லீரல் செயல் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இது போன்ற பண்புகள் உள்ளதால் இது ஒரு தனித்தன்மை வாய்ந்த காய். இப்போது இதன் பயன்பாடு சற்றே அதிகரிக்க ஆரம்பித்துள்ளது என்றார்.

பிராக்கோலியில் நார்ச்சத்து நிறைந்ததாம். அது ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டது. பிராக்கோலியை வேக வைத்து உண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பிராக்கோலியை ஆவியில் சமைத்தால் அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பித்த அமிலங்கள் இணைகின்றன.

இந்த இணைப்பினால் பித்த அமிலங்கள் வெளியேற்றப்பட்டு, கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share