Nov 302016
 

domi

வியாபாரத்தை பெருக்க… மான் மூலம் டெலிவரி…. யோசிப்பு எப்படி போகுது…

ஜப்பான்:
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க… மக்களை கவர்ந்து வியாபாரத்தை பெருக்கி கொள்ள… என்ன விஷயம் தெரியுங்களா?

ஜப்பானில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு மான்கள் மூலம் பீட்சா வினியோகம் செய்ய போறாங்களாம்… இது எப்படி இருக்கு?

ஜப்பானில் இந்த ஆண்டு கடும் குளிர் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பனிப்பொழிவு அதிகளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு பீட்சா வினிநோயகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க பிரபல நிறுவனமான டோமினோஸ் பீட்சா நிறுவனம் பனிச்சறுக்கு வண்டியை இழுக்கும் பெரியகொம்புகள் கொண்ட கலைமான்கள் மூலம் பீட்சா வினியோகிக்க திட்டம் போட்டு இருக்காம். இதற்காக மான்களுக்கு பயிற்சி அளிக்கிறாங்களாம்… மிருக பயிற்றுனர்கள்….

கானாவில் கலக்கல்… கண்பார்வையற்ற பெண்களுக்கு பேஷன் ஷோ

கானா:
மனதில் உறுதி வேண்டும்… அது இருந்தால் போதும்… என்பது போல் கானாவில் கண்பார்வையற்ற பெண் மாற்றுத்திறனாளிகளுக்காக பேஷன் ஷோ நடந்தது.

உடற்குறைபாடுகளைவிட மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான மனப் போக்கே அவர்களின் எண்ணத்திற்கு எதிரான முக்கிய தடையாக சில நேரங்களில் அமையலாம். அதை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கானாவில் கண்பார்வையற்ற பெண்களை ஊக்குவிக்க சிறப்பு பேஷன் ஷோவை வடிவமைப்பாளர்கள் நடத்தி உள்ளனர்.

இப்போட்டிக்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது என்பதுதான் மிகப்பெரிய வெற்றியாகும்.

அவருக்கு ஓய்வு… இப்போ… இவருக்கு பதவி…

பாகிஸ்தான்:
இப்போ… இவரு… இவருதான் என்று பாகிஸ்தான் அரசு இவரை நியமனம் செய்திருக்குங்க…

பாகிஸ்தானின் புதிய தலைமை ராணுவதளபதியாக கமர் ஜாவித் பாஜ்வா பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு இந்த பதவியில் இருந்த ரஹீல் ஷெரிப் ஓய்வு பெற்றதை அடுத்து ஜாவித் பாஜிவா தலைமை ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவரிடம் பாரம்பரிய கோலினை ரஹீல் ஷெரிப் வழங்கினார்.

பாகிஸ்தானின் தலைமை ராணுவ தளபதியாக பணியாற்ற தயார் செய்யப்பட்ட 5 பெயர்கள் அடங்கிய சிறுபட்டியலில் இருந்து இப்பதவிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், பாஜ்வாவைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவங்க எல்லாரும் பின்னாடி… பிரதமர் மோடிதான் முன்னாடி 

நியூயார்க்:
அவங்க எல்லாரும் பின்னாடி… இந்திய பிரதமர் மோடிதான் முன்னாடி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்ன விஷயம் என்று கேட்கிறீர்களா?

2016ம் ஆண்டின் செல்வாக்கான நபர் பட்டியலில் இந்திய பிரதர் மோடி, அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னிலையில் இருக்கிறார்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிரபலமான டைம் பத்திரிக்கை, இந்த கருத்துக்கணிப்பை நடத்தி உள்ளது. இணையதளம் வழியாக ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு வாக்களித்துள்னர்.

அதில் 21 சதவீத பேரின்  ஆதரவை பெற்று பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜீலியன் அசாஞ்ஜே 10 சதவீத வாக்குகள் பெற்று 2ம் இடத்திலும்,  7 சதவீத வாக்குகளைப் பெற்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 3ம் இடத்திலும் உள்ளனர்.

6 சதவீத வாக்குகள் பெற்று அமெரிக்காவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் 4ம் இடத்திலும் உள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பின் இறுதி முடிவு, டிசம்பர் 4ம் தேதிதான் வெளியாகுமாம். அதுவரை மோடி முன்னிலையில் இருப்பாரா என்பது அன்றுதான் தெரியும்.

நாய் அரவணைப்பில் வளரும் புலிக்குட்டிகள்… வைரலாகும் வீடியோ…

ஜெர்மனி:
தாய்மை… தாய்மைக்கு ஏது வேற்றுமை என்றுதான் சொல்ல வேண்டும். எதற்காக இந்த பில்டப் என்கிறீர்களா? இது பில்டப் இல்லீங்க. மேட்டரை பாருங்க…

இரண்டு புலிக்குட்டிகளை ஒரு நாய், தாய் போல் பாதுகாத்து வளர்த்து வரும் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய செய்கிறது.

ஜெர்மனியில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் சமீபத்தில் ஒரு வெள்ளை பெண் புலி 2 குட்டிகளை ஈன்றது. ஆனால், அந்த குட்டிகளை அது கை விட்டு விட, நான் இருக்கேன் என்ற என்ட்ரி கொடுத்துள்ளது நாய் ஒன்று.

பூங்கா பணியாளர் இந்த புலிக்குட்டிகளை தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்க்க முடிவு செய்ய அவரது வீட்டில் வளரும் ஒரு நாய், அந்த புலிக்குட்டிகளை அரவணைத்துக் கொண்டுள்ளது. இந்த நாய், புலிக்குட்டிகளுன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஊடுருவிய தீவிரவாதிகள் தாக்குதல்… 5 ராணுவத்தினர் பலியான சோகம்

பநீநகர்:
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் எங்கு தெரியுங்களா?

நக்ரோடா ராணுவ அதிகாரிகள் ஓய்வு விடுதியில் உள்ள மெஸ் வளாகத்தில்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில்  2 ராணுவ அதிகாரிகள் மற்றும் 5 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பு காரணமாக எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் அவ்வப்போது ஊடுருவலில் ஈடுபடும் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுபோல்தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது. ஜம்மு- உதம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நக்ரோடா என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இங்கு ராணுவ அதிகாரிகளுக்கான ஓய்வு விடுதி உள்ளது. அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் காவலுக்கு நின்றிருந்தனர். அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர். உடன் அங்கு கூடுதல் வீரர்கள் விரைந்தனர்.

தப்பி ஓடிய தீவிரவாதிகள் அந்த இடத்திலேயே பதுங்கி இருந்ததால் பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 ராணுவ அதிகாரிகள் உட்பட 5 வீரர்கள் பலியாகி உள்ளனனர் என்று பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் மணீஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சோகத்தில் ஒரு ஆறுதல்… விமான விபத்தில் 5 பேர் தப்பினர்

பொகோடா:
சோகத்திலும் ஒரு ஆறுதல் என்பது போல் கொலம்பியா அருகே நொறுங்கி விழுந்த விமானத்தில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர்.

தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு 81 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

இந்த விமானத்தில் பிரேசிலின் சர்பிசியோன்ஸ் ரியல் கால்பந்து அணியை சேர்ந்த வீரர்களும் பயணம் செய்தனர்.
இந்த விமானம் கொலம்பியாவின் மெடலின் அருகே வந்த போது அங்குள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த கால்பந்து வீரர்கள் உட்பட 76 பயணிகள் இறந்து விட்டனர் என்று தகவல்கள் வெளியானது.

மீட்புபணிகளின் போது 3 கால்பந்து வீரர்கள் உட்பட 5 பேர் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மனம் இருந்தால் இருந்தால் மார்க்கம் உண்டு… விமானியின் சாமர்த்தியம்

மெல்போர்ன்:
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வது போல் அச்சப்படாமல் ஒற்றை சக்கரத்துடன் ஹெலிகாப்டரை தரையில் இறக்கி அசத்தி உள்ளார் ஒரு பயிற்சி விமானி.

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பேன் நகரில் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான ‘பஸைர்‘ என்ற நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ‘பைப்பர் வாரியர்’ ரக ஹெலிகாப்டரில் வழக்கம்போல் பிரிஸ்பேன் விமான நிலையை ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பயிற்சி விமானி, வானத்தில் பறந்து கொண்டிருந்தார். இந்நிலையில்தான் ஒரு அதிர்ச்சி சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது. என்ன தெரியுங்களா?

ஓடுதளத்தில் இருந்து உயர கிளம்பிய பின்னர் அந்த ஹெலிகாப்டரின் இடதுப்புற சக்கரம் காணாமல் போயிருந்ததை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதனால் அங்கு பெரும் அதிர்ச்சி உருவானது.

தொடர்ந்து வானில் பறந்து கொண்டிருந்து பயிற்சி விமானிக்கும் தகவல் அளிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் உள்ள எரிபொருள் தீரும்வரை வானத்தில் வட்டமடித்து கொண்டிருந்த அந்த பயிற்சி விமானி, ஹெலிகாப்டரை இரண்டே சக்கரத்தின் உதவியுடன் சாதுர்யமாகவும், பத்திரமாகவும் தரை இறக்கினார். அந்த பயிற்சி விமானிக்கு அதிகாரிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share