Nov 292016
 

hackers

வரவு எட்டணா… செலவு ஆகுதே பத்தணா… நொந்து போய் உள்ள ஜப்பான்…

ஜப்பான்:
வரவு எட்டணா… செலவு ஆகுதே பத்தணா… என்று நொந்து போய் உள்ளது ஜப்பான்… எதற்காக தெரியுங்களா?

புக்குஷிமாவில் இருக்கும் கதிரியக்கப் பொருட்களை அகற்றுவது, சேதமடைந்த இந்த அணு உலைக்கு அருகில் வாழ்ந்த பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவற்றிற்கு ஆகும் செலவு இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்திருப்பதாக ஜப்பானிய அதிகாரிகள் மதிப்பிட்டு நொந்து போய் உள்ளனர்.

சுனாமியால் சேதமடைந்த அணு உலையை சுற்றியிருக்கும் நகரங்களையும், கிராமங்களையும் சுத்தம் செய்ய, 180 பில்லியன் டாலருக்கு மேலாக செலவாகும் என்பதால்தான் இந்த மலைப்பாம்…

சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவில் பெரும்பான்மையை அதிக மின் கட்டணம் மூலம் ஜப்பானின் பொது மக்கள்தான் தாங்க வேண்டும் என்று தெரவித்துள்ளதால் மக்களும் அதிர்ந்து போய் உள்ளனராம்.

பிடல் காஸ்ட்ரோ… அஸ்திக்கு ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சலி

கியூபா:
அஸ்திக்கு ஆயிரக்கணக்கானவர்கள் இறுதி அஞ்சலி செய்ததை கண்டு உலக நாடுகளே வியந்து தான் போய் உள்ளது.

கியூபாவின் புரட்சித்தலைவராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி கலசத்திற்கு தலைநகர் ஹவானாவில் ஆயிரக்கணக்கான கியூபா மக்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

21 குண்டுகள் முழுங்க ராணுவ மரியாதையுடன் ஹவானா மற்றும் சான்டியாகோவில் இந்த இறுதி அஞ்சலி தொடங்கியது.

வரும் புதன்கிழமை முதல், போர்களில் காஸ்ட்ரோவின் புரட்சியாளர்கள் பயணித்த பாதை வழியாக காஸ்ட்ரோவின் அஸ்தி எடுத்து செல்லப்பட உள்ளது. ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துவதை உலக நாடுகளே வியந்து போய் பார்க்கிறது.

இப்பவேவா… என்னப்பா இது… டிரம்பின் அதிரடியால் டென்ஷன்

நியூயார்க்:
இப்பவேவா… என்னப்பா இது… என்று அமெரிக்கர்கள் நொந்து போய் உள்ளனர். எதற்காக தெரியுங்களா?

வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கும் போது, அமெரிக்கா – கியூபா இடையேயான உறவை சீரமைக்கும் பராக் ஒபாமாவின் கொள்கைகளை திரும்பப்பெறப்போவதாக டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு ரியாக்சன் தான் அது.

அமெரிக்காவுக்கும், அமெரிக்கா வாழ் கியூபர்களுக்கும், கியூப மக்களுக்கும் ஏதுவான சிறந்த திட்டத்துடன் கம்யூனிஸ்ட் அரசாங்கமான கியூபா தயாராக இருப்பதை சார்ந்தே கியுபாவுடனான உறவுகள் மீண்டும் கட்டமைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அட போங்கப்பா… ஆரம்பிக்கும் போதே ஆர்ப்பாட்டத்தை கிளப்புவார் போலிருக்கே…

யாருய்யா… அது யாரு… அந்த ஹேக்கர்கள் யாரு… ஜெர்மனி கவலை

ஜெர்மனி:
யாருய்யா… அது யாரு… அந்த ஹேக்கர்கள் யாரு என்று ஜெர்மனியின் டோயிட்ச்சே டெலிகாம் நொந்து போய் கிடக்கிறது. என்ன விஷயம்ன்னா…

ஜெர்மனியில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களின்  இணைய தொடர்புகளை ஹேக்கர்கள் துண்டித்திருக்கலாம் என்று ஜெர்மனியின் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமான டோயிட்ச்சே டெலிகாம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய சேவையில் ஏற்பட்டிருக்கும் இந்த தடங்கல், வீடுகளுக்கு இணைய தொடர்புகளை வழங்கும் கருவிகளான ரவுட்டர்களை பாதித்துள்ளது. ஆனால் அரசு இதனால் பாதிக்கப்படவில்லையாம்…

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இணையவெளி தாக்குதல்கள் ஜெர்மனி நாடாளுமன்றத்தை இலக்கு வைத்தது. அதற்கு ரஷ்யர்களை ஜெர்மனிய பாதுகாப்பு துறை குற்றஞ்சாட்டியது நினைவிருக்கலாம்.

சேலம் உருக்காலை பங்குகளை விற்க மத்திய அரசு கொள்கை முடிவு

புதுடில்லி:
சரி… சரி ஒத்துக்கொள்கிறோம் என்று கொள்கை முடிவு எடுத்துள்ளதாம் மத்திய அரசு. எதற்காக தெரியுங்களா?

5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது என்பதுதான் விஷயமே. இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் சேலம் இரும்பாலையில் சுமார் 2,500 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆலை நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் இதன் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.

தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்வதற்கு கொள்கை ரீதியாக மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

இதை பாராளுமன்றத்தில் நேற்று மத்திய உருக்குத் துறை இணையமைச்சர் விஷ்ணு தியோ சாய், உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் மூலம் தெரிவித்தார்.

வா… வான்னா… வரமாட்டியா… பிடி பிடிவாரண்டை… முஷாரப்புக்குதான் இது!

இஸ்லாமாபாத்:
ஒன்று மாற்றி… ஒன்று இப்படி போட்டு தாக்கறாங்களே… என்று நொந்து போய் உள்ளாராம் முஷாரப்… முற்கால வினை இக்காலத்திலேயே தாக்குதே!

பலுசிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர் கொலை வழக்கில் நேரில் ஆஜராகாத பாக். முன்னாள் அதிபர் முஷாரப்பிற்கு ஐகோர்ட் பிடிவார்ண்ட் பிறப்பித்து அதிரடித்துள்ளதுதான் விஷயமே!

பாக். முன்னாள் அதிபர் முஷாரப் (73). கடந்த 2008-ம் ஆண்டு பதவி விலகியதுடன் தானாக நாட்டை விட்டு வெளியேறினார். இப்போது துபாயில் வசிக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு அதிபராக இருந்த போது பாக். ஆக்கிரமி்ப்பில் உள்ள பலுசிஸ்தானின் பலுஜ் தேசிய கட்சி தலைவர் நவாப் அக்பர்கான் பக்டி, முஷாரப் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கு பலுசிஸ்தான் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. முஷாரப்பிற்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் வரவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜமால் மான்டோகலி, ஜாகிருல்லாதீன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முஷாரப்பிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடித்துள்ளனர். இதனால் ஆடிப்போய் கிடக்கிறாராம் முஷாரப்.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share