Nov 282016
 

athithi

2 பட்டம் பெற்று சாதனை… இந்திய வீராங்கனையின் அட்டகாசம்

ஐரோப்பா:
இந்தியாவின் புகழ் கொடியை உயரே பறக்க விட்டுள்ளார் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக். என்ன விஷயம் தெரியுங்களா? அடுத்தடுத்து இரண்டு பட்டங்கள் வென்று சாதனை படைத்ததுதான்.

இந்திய கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் மகளிருக்கான ஐரோப்பிய ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் அடுத்தடுத்து இரண்டு பட்டங்கள் வென்ற சாதனையை நிகழ்த்தி அட்டகாசம் செய்துள்ளார். இதனால் இந்தியாவின் புகழ் கொடி உச்சத்தில் பறக்குது.

கதார் மகளிர் ஓபன் தொடரில் முதல் பட்டம், இப்போ… மகளிருக்கான ஐரோப்பிய ஓபனையும் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் மகளிருக்கான ஐரோப்பிய ஓபன் தொடரை வென்றை முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றையும் பதிவு செய்துட்டாருங்க…

டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க இருப்பதை அடுத்து உஷாராகிறது இந்திய மென்பொருள் நிறுவனங்கள் ..

இன்போஸில், விப்ரோ, tcs போன்ற இந்திய நிறுவனங்கள், H1-B விசாக்களின் மூலம்  2005 முதல் 2014 ஆண்டுகள் வரை சுமார் 86,000 இந்தியர்களை அமெரிக்காவிற்கு வேலை செல்ல அனுப்பியிருந்தது.

அனால் தற்போது டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க இருப்பதை அடுத்த, இந்த H1-B விசாக்கள் குறைக்கப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதனால் உஷாரான நமது IT நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும்  பயிலும் மாணவர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளன.

தனியா ரூம் போட்டு யோசிப்பாங்களோ! பேஸ்புக் கொடுக்குது புது வசதி

நியூயார்க்:
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க… இதுக்காக தனியா ரூம் போட்டு யோசிப்பாங்களே…! என்கின்றனர் பொதுமக்கள்.

என்ன விஷயம் தெரியுங்களா? பேஸ்புக் நிறுவனம் Wifi சேவையை தன் பயனாளர்களுக்கு வழங்க செமத்தியா ஒரு திட்டம் தீட்டியுள்ளதாக சொல்றாங்க…

‘Express Wifi’ என்ற அந்த புதிய திட்டத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாகளையும் பேஸ்புக் நிறுவனம் செயல்படுத்திக்கிட்டு இருக்காம். இன்டர்நெட் வசதி இல்லாத பகுதிகளுக்கு இன்டர்நெட் சேவையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்படுதாம. இதுக்காக சிறிய லேசர் பறக்கும் விமானங்களை பயன்படுத்துவதற்கும் சோதனை நடத்துறாங்களாம்.

கம்ப்யூட்டரை முடக்கும் “லாக்கி” ஹேக்கர்களின் புதிய மிரட்டல்

நியூயார்க்:
டெக்னாலஜி… புது டெக்னாலஜி என்று பேஸ்புக் புகைப்படங்கள் மூலம் கம்ப்யூட்டரை முடக்கும் வைரஸ் ஒன்றை ஹேக்கர்கள் இன்டெர்நெட்டில் பரவ விட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளனர்.

பேஸ்புக் மற்றும் லிங்க்ட் இன் சமூக வலைத்தளத்தளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களைக் கொண்டு கம்ப்யூட்டரை முடக்கும் லாக்கி (Locky) என்ற வைரஸ் மென்பொருட்களை ஹேக்கர்கள் இன்டர்நெட்டில் உலவ விட்டு அனைவருக்கும் பீதியை கிளப்பி உள்ளனர்.

இது பரவினால் கம்ப்யூட்டர் அப்புறம் வெறும் டப்பாதான். இதை சரிசெய்ய ஹேக்கர்களே வழியும் சொல்றாங்க… அவங்க கேட்கும் தொகையை கொடுத்த சரி செய்துடுவாங்களாம்… சரியான வைரஸ் மெயில் பண்ணுறாங்கப்பா…

வித்தைக்காட்டி செலவுக்கு பணம் சேர்த்த வெளிநாட்டு பயணிகள்

ஜெய்ப்பூர்:
நம்ம மக்கள் மட்டும் இல்ல… அவங்களும் திண்டாடிப்போய் தெருவுக்கு வந்துட்டாங்க… யாருன்னு கேட்கிறீங்களா?

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு இந்தியா வந்துள்ள வெளிநாட்டுப் பயணிகளும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

பணத்தேவையைச் சமாளிக்க ராஜஸ்தானில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் தெருவில் வித்தை காட்டி மக்களிடம் பணம் திரட்டினர். ஒட்டக திருவிழாவைக் காண வந்த வெளிநாட்டு பயணிகளுக்குதான் இந்த நிலை…நம் மக்களும் அவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்துள்ளனர்.

நாங்க அங்கீகரிக்கிறோம்… திருநங்கைகள் மூன்றாம் பாலினமாக அங்கீகரிப்பு

புதுடில்லி:
அங்கீகரிக்கிறோம்… நாங்க அங்கீகரிக்கிறோம் என்று ரயில்வே அமைச்சகம் சொல்லியிருக்காங்க…

எதற்காக… யாருக்கு என்கிறீர்களா? ரயில்வே முன்பதிவின் போது திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிப்பதாக ரயில்வே அமைச்சகம் சொல்லியிருப்பதுதான் அவர்களுக்கு கிடைத்த வெற்றியாக கவனிக்கப்படுகிறது.

ரயில்வே முன்பதிவு விண்ணப்பத்தில் திருநங்கைகள் மூன்றாவது பாலினமாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண், பெண் பாலினங்களைப் போல திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக குறிப்பிட விண்ணப்பத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் திருநங்கைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து இடங்களிலும் ஒதுக்கப்படும் அவர்களுக்கான சமூக அந்தஸ்து தற்போதுதான் கிடைத்து வருகிறது என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share