Nov 262016
 

somalia

நடத்துங்க…நடத்துங்க… விசாரணை நடத்துங்க…

புதுடில்லி:
நடத்துங்க… நடத்துங்க… விசாரணை நடத்துங்க என்று பச்சைக்கொடி காட்டி அதிரடித்துள்ளது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்.

விஷயம் என்னன்னா? நாடு முழுவதும், மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் ஏற்பட்டுள்ள நிதி இழப்பு மற்றும் ஊழல் தொடர்பாக, மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை கொடுத்துள்ளது.

ஆனால் இந்த ஊழல் புகார்கள் மீது விசாரணை ஏதும் நடக்கலை. இப்போ இதுகுறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு துறைகளுக்கு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், அதிரடியாக உத்தரவு போட்டு இருக்கு.

சாரம் கவிழ்ந்து விழுந்த விபத்து… பலி எண்ணிக்கை 74 ஆனது

பீஜிங்:
சீனாவில் நடந்த சாரம் கவிழ்ந்து விழுந்த விபத்தில் பலியானவங்களோட எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துடுச்சு. இதனால் மக்கள் வெகுவாக சோகத்தில் உள்ளனர்.

சீனாவில் ஜியாங்சி மாகாணத்தில் பெங்சாங் நகரில் மின் உற்பத்தி நிலையத்தில் கட்டுமான பணிகளின் பிரம்மாண்ட கான்கிரீட் தளங்கள் பெயர்ந்து விழுந்த விபத்தில் 67 பேர் பலியான சம்பவம் மக்களை உலுக்கி எடுத்தது.

இந்நிலையில் மீட்புப்பணியின் போது மேலும் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளதுங்க… இதனால் மக்கள் வெகுவாக வேதனை அடைந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜின்ஜியாங் மக்களை மிரட்டிய நிலநடுக்கம்.. அச்சமோ… அச்சம்

பெய்ஜிங்:
ஜின்ஜியாங்கை ஒரு ஆட்டு ஆட்டி இருக்கிறது நிலநடுக்கம். இதனால் மக்கள் அச்சத்தின் உச்சத்தில் உள்ளனர்.

விஷயம் இதுதாங்க… சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. வடமேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில்தானில் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுக்கு இருக்கு.

புவிக்கடியில் 10 கி.மீ., ஆழத்தில் உண்டான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 என பதிவாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த தாக்கம் கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையிலும் உணரப்படடுள்ளது.

ஈரானில் ரயில்கள் மோதல்… 31 பேர் பலியான சோகம்

டெஹ்ரான்:
ஈரானில் இரண்டு ரயில்கள் மோதிக்கொள்ள இதில் 31 பயணிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்குங்க…

இதுகுறித்து செம்னான் மாகாண கவர்னர் என்ன சொல்லியிருக்கார்ன்னா…

ஈரானின் செம்னான் மாகாணத்தில், நின்று கொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மற்றொரு ரயில் மோத இதில் 31 பேர் பலியாகிட்டாங்க. இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 70 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று சொல்லியிருக்காருங்க.

ஊழல்… ஊழல்… சோமாலியா தேர்தலில் ஊழலாம்…

சோமாலியா:
எல்லா இடத்திலும் தன் கரத்தை நீட்டி இருக்கும் போல ஊழல் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கு. எதற்காக என்கிறீர்களா?

நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் நடக்குது என்று குற்றம் சாட்டியிருக்கார் சோமாலியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் நுர் பாரா.  என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா? மிகுந்த செல்வாக்கு வாய்ந்த 14 ஆயிரம் பேரிடம் மட்டுமே வாக்கெடுக்கும் வகையில் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

அரசின் இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தி ஊழல் நடக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்காருங்க…

ஜாக்கிரதை அகதிகளுக்கு எல்லைகளை திறந்து விட்டுடுவேன்…

துருக்கி:
ஜாக்கிரதை… அப்புறம் அகதிகளுக்கு எல்லைகளை திறந்து விட்டு விடுவேன் என்று எச்சரித்துள்ளார் அதிபர் ரெஜீப் தாயிப் எர்துவன். என்ன விஷயம்ன்னா…

ஐரோப்பிய ஒன்றியம் துருக்கிக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தால், ஐரோப்பாவுடனான துருக்கியின் எல்லைகளை பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்காக திறந்து விட்டு விடுவேன் என்று எச்சரித்துள்ளார்.

இந்த நாட்டில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைக்கும் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்க ஐரோப்பிய பாராளுமன்றம் முடிவு செய்யவே இந்த எச்சரிக்கையை துருக்கி அதிபர் வெளியிட்டுள்ளார்.

பணவீக்கத்தால் தள்ளாடும் தெற்கு சூடான்…

தெற்கு சூடான்:
பணவீக்கத்தால் தெற்கு சூடான் தள்ளாடுகிறது என்று அந்நாட்டின் தேசிய புள்ளிவிவரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த பணவீக்கத்தால் உணவு மற்றும் மது அல்லாத பானங்களின் விலை 10 மடங்கு அதிகரித்துள்ளது. எண்ணெய் ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ள நிலையில் 3 ஆண்டுகளாக சண்டை காரணமாக உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது என்று சொல்லியுள்ளது.

இதேபோல் 5 மில்லியன் மக்கள் போதுமான உணவின்றி தவித்து வருவதாக ஐ.நாவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடுகளை விட்டு வெளியேறிய ஈராக் கிறிஸ்தவர்கள் மீண்டும் திரும்புகின்றனர்

ஈராக்:
தீவிரவாதிகள் பிடித்த பெரும் பகுதிகளில் இருக்கும் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். தற்போது மீண்டும் அங்கு திரும்புகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

என்ன விஷயம் தெரியுங்களா? கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் பெரும்பகுதிகளை இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

இதனால் தற்போது ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வேறிடங்களுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அப்படிச் செல்ல முடியாதவர்கள் முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியேறிய கிறிஸ்தவர்களில் சிலர் அங்கு மீண்டும் திரும்பத் தொடங்கி உள்ளனராம்.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share