Nov 252016
 

charge


சில விநாடியில் சார்ஜ் ஆகுமாம்… கண்டுபிடிச்சுட்டாங்க…

நியூயார்க்:
சில விநாடியில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாமாம்… அட ஆமாங்க… இதுக்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சுட்டாங்க…

இப்போ ஸ்மார்ட் போன் இல்லாதவங்களே இல்ல… ஆனால் பேட்டரி சார்ஜ் குறைந்து… எப்போதும் பேஷண்ட் போல சார்ஜ் ஏற்ற வேண்டும் நிலை. இந்த சார்ஜ் பிரச்னைக்கு இப்போ தீர்வு வந்திடுச்சாம்.

நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு ‘பிளக்சிபிள் சூப்பர் கெப்பாசிட்டரால் சில வினாடிகளில் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து விடலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சு இருக்காங்க… கோவ்… கோவ்… ஆனா உடனடியாக சந்தைக்கு வர வாய்ப்பில்லையாங்க…

நம்  நாடு பரவாயில்லைங்க.. பணமே இல்லாத நாடாகப் போகுதாம் ஸ்வீடன்!

பணப் புழக்கமே இல்லாமல், டிஜிட்டல் முறையிலேயே அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் செய்யும் வகையில் டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு உலகிலேயே முதல் நாடாக ஸ்வீடன் சாதனை படைக்க உள்ளது.

ஸ்வீடன் நாட்டின் பணத்தை எக்ரோன் என்று அழைப்பார்கள். தற்போது, ஸ்வீடன் நாட்டில் 80 சதவீத பணப் பரிவர்த்தனை இணையதளம் மூலமாகவும், செல்போன் ஆப்கள் மூலமாகவும் தான் நடக்கின்றன.

பாஸ்போர்ட்டை பறிக்கும் அதிகாரிகள்… எதிர்ப்பு கிளம்புது…

சீனா:
பொதுமக்களின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்வது அதிர்ச்சியை கிளப்பி இருக்காம்.

தொடர்ந்து அமைதியின்மை நிலவும் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள பொது மக்களின் பாஸ்போர்ட்டுகளைதான் அதிகாரிகள் பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளனர். இது திபெத்தியர்களுக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களுக்கு இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது தற்போது வெளியில் தெரிய வந்துள்ளது.
சமூக ஒழுங்கை பாதுகாப்பதுதான் இந்தக் கட்டுப்பாடுகளின் நோக்கம் என சொல்லியிருக்காங்க…

அவங்க ஆயுதம் அவங்களையே தாக்குதே… தாக்குதே…

மொசூல்:
ஆயுதத்திற்கு பஞ்சமில்லாம இருக்காங்க என்று தெரிய வந்திருக்குங்க… யாருக்கு தெரியுங்களா?

மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற ஈராக் ராணுவத்துடன் மோதிவரும்  ஐஎஸ் பயங்கரவாதிகளிடம்தான் ஆயுத பஞ்சம் இருப்பதாக தெரியவில்லைன்னு தெரிய வந்திருக்கு.

அமெரிக்காவும், சவுதியும் தாங்கள் ஆதரிக்கும் ஆயுதகுழுக்களுக்கு அனுப்ப அதை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றி இருக்காங்கன்னு தெரிய வந்திருக்கு. இப்ப அவங்க ஆயுதமே அவங்களுக்கு எதிரா திரும்புதுங்கோ…

ஒன்று வாங்கினால் இன்னொன்று ப்ரீ… ப்ரீ… ப்ரீ…

மணிலா:
ஒன்று வாங்கினால் ஒன்று ப்ரீ… ப்ரீ… இது ஆடி மாத ஜவுளி தள்ளுபடி இல்லீங்க… துப்பாக்கிக்காம்…

யார் இந்த சலுகையை கொடுத்து இருக்காங்கன்னு கேட்கறீங்களா? ஒரு துப்பாக்கி வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற சலுகையில் ரஷ்யா தங்கள் நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்குவதாக பிலிப்பைன்ஸ் அதிபர்தான் சொல்லியிருக்கார்.

அமெரிக்காவிடம் இருந்து பிலிப்பைன்சிடம் பிச்சுக்கிட்டு சீனாவுடன் நெருங்கிச்சு… இதை அதிபர் ரோட்ரிகோ வெளிப்படையாகவே அறிவித்தார். இப்போ… என்னன்னா… ஒரு துப்பாக்கி வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற சலுகையில் ரஷ்யா தங்கள் நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்குவதாக அதிபர் ரோட்ரிகோ சொல்லியிருக்காருங்க…

ஆட்டையை போட்டார் 594 கோடி ரூபாய்… எஸ்கேப் சாமியாருக்கு வலை

பாங்காக்:
அடப்பாவிங்க… இவருமா… என்னங்க… நடக்குது உலகத்துல என்று மக்கள் நொந்துக்கிறாங்க…

என்ன விஷயம்ன்னா… தாய்லாந்து நாட்டில் ரூ.594 கோடி மோசடி செய்து விட்டு எஸ்கேப் ஆன புத்த சாமியாரை இப்போ போலீஸ் தேடி வருவதுதான் செம ஹாட் டாபிக்கா மாறி இருக்கு.

தாய்லாந்தில் உள்ள தம்மஹாயா என்ற புகழ் பெற்ற புத்த மதம் இருக்கு. இந்த மடத்தில்தான் இம்மாம் பெரிய தகிடுதத்தத்தை செய்துவிட்டு 594 கோடி ரூபாய் சொத்து சேர்த்துக்கிட்டு எஸ்கேப் ஆகிட்டார் புத்த சாமியார். இவரு புத்த சாமியாரா? இல்ல சொத்து சாமியாரா?

வாங்க…ஸ்வைப் மிஷின் ரெடி… மணமக்கள் படம் செம வைரல்…

சண்டிகர்:
வாங்க… வாங்க… ஸ்வைப் மெஷினில் மொய் வைச்சுட்டு போங்க என்று
பஞ்சாப் மாநிலத்தில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்வைப் மெஷினுடன் அமர்ந்திருக்கும் படம்தான் தற்போது நெட்டில் வைரலாகி வருகிறது.

பழைய ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பிறகு மக்கள் தங்களின் அன்றாட செலவுகளுக்கு வங்கிக்கு சென்று காத்திருந்து பணம் எடுக்கும் நிலை உள்ளது.

சில திருமண நிகழ்ச்சியில் ஸ்வைப் மெஷின் மூலம் மொய் பணத்தை வசூல் செய்யும் நிகழ்ச்சியும் நடக்குது. அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த திருமண விழாவில் மணமக்கள் ஸ்வைப் மெஷினுடன் அமர்ந்திருக்கும் படம் இன்டர்நெட்டில் வைரலாக பரவி வருகிறது.

N.நாகராஜன்

Likes(0)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share