Nov 242016
 

Nicky

எதிர்த்த இந்தியா வம்சாவளியை சேர்ந்தவருக்கு பதவியா… என்னா கணக்கு இது?

வாஷிங்டன்:
அட கொப்புரொட்டி உங்க கணக்கே புரியலையே… உங்களை விமர்சனம் செய்றவருக்கே பதவியான்னு திகைச்சு போய் நிக்கிறாங்களாம் அமெரிக்க மக்கள்

நிக்கி ஹாலேவால்…
இந்தியா வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே (44) தன்னை விமர்ச்சிப்பவராக இருந்தாலும் பரவாயில்லை என்று ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாராம். இவரது செயல்பாடுகள் சர்வதேச அரங்கில் பாராட்டப்பட வேண்டியவை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அட திருந்திட்டீங்களாய்யா…

நிக்கி ஹாலே குடியரசு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதும் முக்கியமானதுங்க…

இல்ல… இல்ல… விசாரிக்க மாட்டாரு… இவரு சொல்லிட்டாரு

வாஷிங்டன்:
இல்ல… இல்ல… விசாரணை இல்ல என்று டிரம்புக்கு நெருக்கமானவரு சொல்லியிருக்காரு ஹிலாரி பற்றி. இன்னா மேட்டரு என்கிறீர்களா?

அரசு பணிகளுக்கு தனியார் இ-மெயில் சர்வரை முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி பயன்படுத்தினார்… அதனால் நான் அதிபர் ஆனால் விசாரிப்பேன்னு சொன்னார் டிரம்ப்… இப்போ… இவருக்கு நெருக்கமானவரும், மூத்த ஆலோசகருமான கெல்லியானே கோன்வே இல்ல… இல்ல… அப்படி எல்லாம் விசாரணை இல்ல என்று சொல்லியிருக்கார்.

அட அதான் அவங்க மேல தப்பு இல்லன்னு விசாரணை அதிகாரிகளே சொல்லிட்டாங்களேப்பா…

வருது… வருது… தாக்க வருது… கோஸ்டா ரிகாவை சுற்றும் சூறாவளி

கோஸ்டாரிகா:
வருது… வருது… தாக்க வருது… பாதுகாப்பான இடத்துக்கு போங்க என்று மக்களை எச்சரிச்சு இருக்காங்க… என்ன விஷயம் தெரியுங்களா?

கோஸ்டா ரிகா நாட்டின் எல்லையில் உள்ள கரீபிய கடற்பகுதியை நோக்கி ஒரு சூறாவளி செம ஸ்பீடா நெருங்கி வருதாம். இதனால் அந்நாட்டில் தேசிய அளவில் அவசர நிலை அறிவிச்சு இருக்காங்க…

இதனால் 2 நாளைக்கு அரசு அலுவலகங்களை மூடுங்க… மக்களே பாதுகாப்பான இடங்களுக்கு போங்க என்று அதிபர் லூயிஸ் கீல்யார்மோ சாலீஸ் சொல்லியிருக்கார்… மக்களே பத்திரம்… இன்று, (வியாழக்கிழமை) இந்த சூறாவளி வடக்கு கோஸ்டா ரிகா மற்றும் தெற்கு நிகராகுவாவை தாக்கும் என்று எதிர்பார்க்கிறாங்களாம்…

சரிந்தது தற்காலிக சார மேடை… 40 பேர் பலி… சீனாவில் சோகம்

ஜியாங்ஷி:
சரிந்ததால்… மரணம்… சீனாவில் மக்கள் சோகம் என்று வேதனையான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

என்னன்னா? கிழக்கு சீனா  ஜியாங்ஷி மாகாணத்தில் உள்ள மின் நிலையத்தில் குளிர்விப்பு கோபுரத்தின் மீது கட்டப்பட்டிருந்த தற்காலிக சார மேடை கவிந்து விழ… இதில் சிக்கி 40க்கும் அதிகமான மக்கள் பலியான சோகம்தாங்க..

இன்னும் எத்தனை பேர் இந்த இடிபாடுகளில் சிக்கி உள்ளனர் என்று தெரியலையாம். ஊழல், தொழிற்சாலைகளில் உள்ள பாதுகாப்பு தர குறைபாடு மற்றும் தொழிலாளர்களுக்கு தரப்படும் அழுத்தம்தான் இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணம் என்று சொல்றாங்க…

எஞ்சிய வாழ்நாள் உனக்கு சிறைதான்… கொலையாளிக்கு தீர்ப்பு

பிரிட்டன்:
கொலை செஞ்சா… சும்மா வுடுவாங்களா… கிட சிறையிலேயே உன் வாழ்க்கை முடியும் வரைன்னு கோர்ட் சொல்லிடுச்சுங்க… யாருக்கு என்கிறீர்களா?

பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸை கொலை செய்த நபருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் அவருடைய தொகுதியில் வைத்து ஜோ காக்ஸை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்தபோது, “பிரிட்டன் தான் முதலில்” என்று சொல்லிக்கிட்டே குத்திய கொலையாளி தாமஸ் மயருக்குதான் இந்த தண்டனையை கொடுத்து இருக்காங்க…

தம்மாந்துண்டு செயற்கைக்கோள் விண்மீன்னாம்… வானத்து அதிசயம்

ஜப்பான்:
தம்மாந்துண்டு செயற்கைக்கோள் விண்மீன் ஒன்றை ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சு இருக்காங்க…

இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட செயற்கைக்கோள்களிலே மிகவும் சிறியது இதுதானாம். இதற்கு விர்கோ என்று பெயரிட்டுள்ளனர்.
இதுபோன்று பால் அண்டத்தில், 50 விண்மீன் செயற்கைக்கோள் இருக்காம்.

அதில் 40 மங்கலாகவும், மிகவும் சிறிய அளவில் உள்ள குட்டி விண்மீன்கள் என்று சொல்லியிருக்காங்க… இந்த விர்கோ சூரியனில் இருந்து 280,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்காம்.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share