Mar 142014
 

 

நாம் இவ்வுலகில் ஒரு சிறந்த காரணத்திற்காகவும் லட்சியத்திற்காகவும் உள்ளோம்,

அதனால் கடந்த காலத்தின் தவறுகளை எண்ணி வருந்திக்கொண்டே இருக்காமல்,

நமது எதிர் காலத்தின் நிர்ணையிக்கும் சிற்பியாக இருப்போம்..

 

ஒரு மனிதனுக்கும் மற்றொருவனுக்கும் சிறிதளவே வித்தியாசம் உள்ளது.

ஆனால் அச்சிறு வித்தியாசமே மிகப்பெரிய மாற்றத்தை அவரவருக்குள் தருகிறது.

அந்த சிறு வித்தியாசம் தான் அவரவர்களுக்கு உள்ளே இருக்கும் எண்ணங்கள்..

ஆம், நம் எண்ணங்களே, நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

 

பிரச்சினைகளில் மட்டுமே எண்ணிப் பார்க்கும் போது,

துன்பங்களே அதிகமாக நம் கண்களில் தெரிகிறது..

ஆனால், பிரச்சினைகளின் தீர்வுகளை எண்ணிப் பார்க்கும் போது,

வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் நமக்குப் புலப்படுகிறது..

 

 

மகிழ்ச்சிக்கான காரணம் வெற்றி அல்ல

மாறாக, வெற்றிக்கான காரணம் மகிழ்ச்சி ஆகும்,

நீ விரும்பிய செயலை செய்யும்போது, நீ வெற்றி வீரன் ஆகிறாய்

  

உன்னைப் பற்றி மற்றவர்கள்

என்ன நினைக்கிறார்கள் என்பதை விட

உன்னைப் பற்றி நீ

என்ன நினைக்கிறாய் என்பதே மிக மிக முக்கியமாகும்

 

ஒரு செயலைத் தொடங்குவதற்கு நோக்கம் தேவை,

ஆனால் அச்செயலைத் தொடர்ச்சியாக செய்ய ஊக்கமும், ஒழுக்கமும் தேவை.

 

ஒவ்வொரு முக்கியமான செயலைச் செய்தபின்னும்,

ஊக்கத்துடன், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்,

இதுவே ஒரு பெரிய இலக்கை அடைய உங்களுக்கு சக்தி அளிக்கும்.

 

எவனொருவன், கடமைக்கான சில வேலைகளை செய்துக்கொண்டே

தன் மனதிற்குப் பிடித்த வேலைகளையும் செய்து முடிக்கிறானோ,

அவன் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறான்

 

எப்போதாவது ஒருமுறை எடுக்கும் முயற்சி அல்ல,

நீங்கள் எடுக்கும் சீரான மற்றும் ஒழுங்கான தொடர் முயற்சிகளே

உங்கள் குணத்தையும் வாழ்வையும் செதுக்குகிறது

 

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்

உங்களிடம் என்ன சாதனங்கள் இருக்கிறது என்பதைக் காட்டிலும்

இருக்கும் சூழ்நிலையில் எத்தனைச் சிறப்பான செயலைச் செய்கிறீர் என்பதே உங்களை வித்தியாசப் படுத்திக்காட்டுகிறது..

 

நீ உனது முழு திறமையையும் வெளிப்படுத்தாமல்

இவ்வுலகத்தை விட்டுச் செல்வதைப் போல்,

ஒரு துன்பம் ஏதுமில்லை

 

ஒரு மனிதன் தனது பிறப்பால் இல்லாமல்

தனது செயல்களின் மூலமே

சிறந்தவனாகிறான்!

Likes(8)Dislikes(0)
Share

  3 Responses to “சிறந்த லட்சியம்”

  1. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது

    Likes(0)Dislikes(0)
  2. மிகவும் அருமையான இனிய வரிகள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை விட உன்னைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்பது முக்கியம் என்ற கருத்து மனதைத் தொட்டது. தற்காலத்தில் மற்றவர்கள் நினைப்பிர்காக வாழ்வபர்கள் அதிகம். கடமையை செய்து கொண்டே பிடித்த வேலை செய்தல் என்பது அருமையான சித்தாந்தம்.

    நன்றியுடன்
    வா. ஜோதிஇராமலிங்கம், பெங்களூர்.

    Likes(0)Dislikes(0)
  3. Arumaiyaana idhazh. Ungal kuzhuvinar anaivarukkum enadhu nenjarntha vazhthukkal - sudharsan bangalore

    Likes(0)Dislikes(0)

 Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Share
Share