Apr 282017
 

1

சென்னையில் சமீபத்தில் சிவில் சர்வீஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மாணவர்களுக்காக ஒரு நிகழ்ச்சி நடந்தது. சிவில் சர்வீஸ் தேர்வுகளைப் பற்றியும் அதற்குப் பின் உள்ள வாய்ப்புகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் சில அதிகாரிகளும் அந்த நிகழ்ச்சியில் கலந்த்துக்கொண்டனர். பெருந்திரளான மாணவர்களும் வந்திருந்தனர்.

மாணவர்களுக்காக கூட்டத்தில் பேச வந்த அதிகாரிகள் அனைவரும், பல சோதனைகளையும் சவால்களையும் தமது வாழ்வில் வெற்றிகரமாக சமாளித்து, வெற்றிப்பெற்று, தங்களது துறையில் சாதித்துக் கொண்டு இருப்பவர்கள்.

நிகழ்ச்சி முடிந்து அதிகாரிகள் ஒவ்வொருவராக கிளம்புகையில், மாணவர்கள் சிலர் முண்டியடித்து அவர்களை சூழ்ந்துக்கொண்டு அவர்களுடன் நின்று செல்பிக்களை எடுக்க ஆரமபித்தனர்.

குறிப்பாக ஒரு அதிகாரி நம்மூரில் சற்று பிரபலம். அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். சில மாணவர்களின் செல்பிக்கள் எடுத்துக்கொள்ளும் ஆர்வத்தைக் கண்டு, சும்மாயிருந்த மற்ற சில மாணவர்களும் ஓடிச்சென்று தங்கள் பங்கிற்கு செல்பி எடுத்துக்கொண்டனர்.

அந்த அதிகாரி மேடையை விட்டு இறங்கி தனது வாகனம் இருக்கும் இடத்திற்குச்  சென்றடைய சுமார் முந்நூறு மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்திருக்கும். ஆனால் மாணவர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டு போட்டோக்கள் எடுத்துக்கொள்ள கூட்டம் கூட்டமாய் வர, அவர் வாகனத்திற்குள் நுழையவே சுமார் ஒரு மணி நேரமானது.

ஒரு மாணவருடன் அன்று தனியாகப் பேசுகையில், அவர்கள் ஏன் அதுபோல் செல்பி எடுத்துக்கொல்கின்றனர் என்ற காரணம் புரிந்தது. பிரபலங்களுடன் நின்று போட்டோ எடுத்து, அதை தங்களது முகநூலில் வெளியிட, அதற்கு லைக்குகள் நிறைய வருமாம். அதனால் தான் அவ்வாறு எடுத்துக்கொள்வதாக சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

மக்களின் கவனத்தை தங்கள் மீது ஈர்க்க என்ன மாதிரியான லெவலுக்கும் செல்லும் சில வேடிக்கை மனிதர்களை அன்று காணமுடிந்தது.

ஒரு விஷயத்தை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரபலங்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான்.

அந்த பிரபலங்களுக்கு “இந்த மாணவர்கள் முகநூலில் லைக்குகள் வாங்குவதற்கு நம்மையும் நமது புகழையும் பயன்படுத்துகிறார்களே?” என வருத்தம் இருக்குமல்லவா?

அந்த VIP மனிதர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறோம் என எண்ணி அவர்களை disturb செய்வது எந்த விதத்தில் நியாயம்?

பிரபலத்துடன் போட்டோ எடுக்க அத்தனை விரும்பும் நாம், ஏதாவது துறையில் சாதித்து ஒரு பிரபலமாக நாமே மாறலாமா என ஏன் எண்ணகூடாது?

தொண்டர்களாகவும், “ஆமாம்”சாமிகளாகவும், கண்மூடித்தனமான followersஆகவும் இருக்கும் மனநிலை சென்ற தலைமுறையுடன் முடியட்டும்.

மாற்றி யோசிக்கும் திறனும், கேள்வி கேட்கும் குணமும், சிந்தித்து செயலாற்றும் மனநிலையும் இன்றைய தலைமுறைக்கு கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.

நம் ஒவ்வொருவர் உள்ளும் ஒரு சாதனையாளர் ஒளிந்துள்ளார். அதை உணர்ந்து அவரை வெளிவரச் செய்வது நம் கையில் தான் உள்ளது.

விமல் தியாகராஜன் & B+ TEAM

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(2)Dislikes(0)
Share
Apr 142017
 

red-love-romantic-flowers

எத்திசையும் அமைதி நிலவ

பங்குனித் தாய் பெற்றெடுத்த

சித்திரைப் பாவையே

சிறப்பான சிந்தனைகளை

சுமந்துகொண்டு வருக

முத்தான வரங்கள் தருக !

 

எல்லாரும் கொண்டாடும்

எங்கள் சித்திரைப் பாவையே

எம்மதம் சம்மதம் – உலகில்

மனிதநேய மிக்க

மக்கள் சமுதாயம்

மலர வரம் தருக !

 

தன் மக்கள் நலம்

மனதில் கொள்ளாமல்

நாட்டு மக்கள் நலமே

மனதில் கொள்ளும்

அரசியல் தலைவர்கள்

உருவாக வரம் தருக !

 

பொன் நகை வேண்டாம்

புன்ன(ந)கையே போதும்

பாரதி பாடிய

புதுமைப் பெண்கள்

பெருக வரம் தருக !

 

புத்தன் ஏசு காந்தி

காட்டிய அன்பு வழியில்

சத்தியமாக நடக்கும்

நல்ல இதயங்கள்

நாட்டில் மலர வரம் தருக !

 

ஐவகை பழங்கள்

வண்ண மலர்களுடன்

வரங்கள் தரும்

சித்திரைப் பாவையை

நாம் அனைவரும்

வணங்கி வரவேற்போம் !

 

பூ. சுப்ரமணியன்,

பள்ளிக்கரணை, சென்னை

Likes(1)Dislikes(0)
Share
Apr 072017
 

 

imayam23

நேற்று ஒரு நண்பருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது, அவர் சொன்ன விஷயம் கேட்டு சந்தோஷப்பட்டாலும், மனதின் ஓரத்தில் வலித்தது.

அவருடைய நிறுவனம் நடத்தப்போகும் ஒரு விழாவில், தமிழை மட்டுமே படித்து பட்டம் பெற்ற 100 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரப்போகிறோம் என்றார். நிறைவாக இருந்தது.

தமிழ் படித்து பட்டம் பெற்றவர்களை சமூகம்,  உற்றார், உறவினர் கேட்பது..

‘வேற எந்த course ம் கிடைக்கவில்லையா?’

‘வாத்தியார் வேலை தான் கிடைக்கும்’.

விரும்பிப்படிக்க தேர்ந்தெடுக்க நினைத்தாலும் லேலை வாய்ப்பை நினைத்து, படிக்காமல் விட்டவர் பலர்.

தமிழாசிரியர்கள்   சிறு வயதில் நட்ட சிறு விதையும்  ஏற்படுத்திய தாக்கமும் தான் இன்று வள்ளுவனையும் கம்பனையும், மற்றும் பலரையும் சங்க இலக்கியத்தையும் தமிழ்நாட்டின் வரலாறு பற்றியும் ஏதோ லேசாக உரைத்துப்பார்க்கும் ஆவலை நம்முள் பலருக்கு தூண்டிவிட்டிருக்கிறது.

பள்ளியில் படிக்கும் போது, வேப்பமரத்தடியில் நடந்த தமிழ் வகுப்புகளில் மனம் லயித்து, மீண்டும் நிகழ் காலத்திற்கு வர சிறிது நேரம் ஆயிற்று!

அது ஒரு கனாக்காலம்!

– அகிலா, சென்னை

Likes(0)Dislikes(0)
Share
Share
Share