Dec 272016
 

5

நாற்பத்து ஒன்பதே நாள்… உலகை சுற்றி வந்து சாதனை

பாரீஸ்:

நாற்பத்து ஒன்பதே நாள்… நாற்பத்து ஒன்பதே நாள்… படகு மூலம் உலகை சுற்றி வந்து பிரான்சை சேர்ந்த தாமஸ் கோவில்லே சாதனை படைத்துள்ளார்.

பிரான்சை சேர்ந்தவர் தாமஸ் கோவில்லே (48). இவர் கடல் பயணம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் படகு மூலம் உலகை சுற்றி வர திட்டமிட்டார். அதற்காக 31 மீட்டர் நீள படகில் தனி ஆளாக பயணம் மேற்கொண்டார்.

தனது பயணத்தை முடித்த அவர் 49 நாட்களில் மேற்கு பிரான்சில் உள்ள பிரெஸ்ட் துறைமுகத்துக்கு மீண்டும் திரும்பினார்.

இவர் 49 நாட்கள், 3 மணி 7 நிமிடம் மற்றும் 38 வினாடிகளில் உலகை சுற்றி முடித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2008-ம் ஆண்டு பிரான்சிஸ் ஜோயன் என்ற பிரெஞ்சுக்காரர் 57 நாட்கள் மற்றும் 13 மணி நேரத்தில் படகில் உலகை சுற்றி வந்துள்ளார். இதனால் கோவில்லே புதிய சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இச்சாதனை படைக்க நான் 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன் என்றார்.

ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்… படகு ஏரியில் கவிழ்ந்து 30 பேர் பலி

கம்பாலா:
கிறிஸ்துமஸ் தினத்தன்று உகாண்டா நாட்டில் ஏற்பட்டட சோகம் மக்களை வெகுவாக கவலையில் ஆழ்த்தியுள்ளது. என்ன தெரியுங்களா? கிறிஸ்துமஸ் தினவிழாவில் கால்பந்து வீரர்கள் உள்பட 30 பேர் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம்தான் அது.

உகாண்டா – காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டிற்கிடையிலான எல்லையில் ஓடும் ஏரி அல்பெர்ட். ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மிகச்சிறந்த ஏரிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

160 கிலோ மீட்டர் நீளமும், 30 கி.மீட்டர் அகலமும் கொண்டது இந்த ஏரி. புலிசா மாவட்டத்தின் கவெய்பாண்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு கால்பந்து அணியினர் மற்றும் அவர்களின் ரசிகர்கள் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நடந்த ஒரு போட்டியில் பங்கேற்க இந்த ஏரியின் வழியாக படகில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் டிரம்ஸ் போன்ற இசைக்கருவியால் இசைத்து ஆடி பாடி சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இதில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காங்கோவின் இன மோதல்… 13 பேர் பலியான சோகம்…

காங்கோ:
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் இரு இனத்தவர்கிடையே நடந்த மோதலில் 13 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

காங்கோ நதட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் நந்தே என்ற இனத்திற்கும், ஹது என்ற இனத்திற்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. கிறிஸ்துமஸ் அன்று இந்த இரண்டு இனத்தவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இதில் நந்தே குழுவினரைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர்.
பின்னர் ராணுவம் அந்த இடத்திற்கு விரைந்து சண்டையை முடிவுக்கு வந்ததாக உள்ளூர் அதிகாரி அல்போன்ஸ் மஹோனோ தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கொண்டு வாங்க… முடிவுக்கு கொண்டு வாங்க… போப் வேண்டுகோள்

வாடிகன்:
கொண்டு வாங்க… முடிவுக்கு கொண்டுவாங்க… சிரியாவின் உள்நாட்டு போரை என்று போப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் இப்படி ஒரு வேண்டுகோளை போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

வாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது போப் பேசுகையில்,  சிரியாவில் பல ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வருகிறது. சர்வதேச நாடுகள் தலையிட்டு பேச்சு வார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் ஒன்றினைந்து புதிய வரலாறு எழுத வேண்டும். உலக அளவில் பல நாடுகள் மற்றும் நகரங்களில் தீவிரவாதம் தலையெடுத்துள்ளது. அங்கு வாழும் மக்கள் மனதில் அச்சமும், மரண பயமும் விதைக்கப்பட்டுள்ளது. அது கண்டிக்கத்தக்கது என்றார்.

ஆப்பு வைக்கிறது ஓகே… ஆனால் அதுபோல் “ஆப்” ரெடி பண்ணுங்க…

புதுடில்லி:
ஆப்பு… வைக்கிறதுக்கு முன்னாடி நீங்க… அதுபோல “ஆப்” ரெடி செய்யுங்க என்று எஸ்.பி.ஐக்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதற்காக தெரியுங்களா?

பேடிஎம் மூலம் பண பரிவர்த்தனை செய்ய எஸ்.பி.ஐ தடைவிதித்துள்ள சம்பவம்தான் தற்போது மக்களை செம டென்ஷன் ஆக்கியுள்ளது.
எஸ்.பி.ஐ வங்கி, பேடிஎம் வாயிலாக பண பரிவர்த்தனை செய்ய தடைவிதித்துள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டரில், பேடிஎம் மூலம் பண பரிவர்த்தனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக State Bank Buddy என்ற மொபைல் ஆப்பை பயன்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளது.

ரூபாய் நோட்டுகள் முடக்கத்திற்கு பின், பொதுமக்கள் அதிகளவில் பேடிஎம் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி.ஐயின் இந்த செயல்பாடு வாடிக்கையாளர்களை வெகுவாக பாதித்துள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள், பேடிஎம்க்கு இணையாக உங்கள் ஆப்பை தயார் செய்துவிட்டு பின் இந்த நடவடிக்கையை எடுங்கள் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அள்ளிக்கோ… அள்ளிக்கோ… தாராளமாய் அள்ளிக்கோ… தவறால் வந்த வினை

ஐதராபாத்:
அள்ளிக்கோ… அள்ளிக்கோ… தாராளமாய் அள்ளிக்கோ… என்று ஒரு தவறால் நடந்த சம்பவம் வங்கி அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஐதராபாத்தின் சம்ஷாகாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கொடாக் மகேந்திரா வங்கி ஏடிஎம்-ல் 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வர… க்யூவில் நின்று மக்கள் அள்ளிச் சென்றுள்ளனர். இப்போது வங்கி அதிகாரிகள் வாயை பிளந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த விமான நிலையத்தில் ரூ.100க்கு பதிலாக ரூ.500 கிடைப்பதை அறிந்த விமானப் பயணி ஒருவர் இதை அப்படியே மற்றவர்களிடம் பரப்ப… அப்புறம் என்ன கிடைத்தவரை லாபம் என்று மக்கள் க்யூ., கட்டி அள்ளிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த வங்கி அதிகாரிகள் உடன் விமான நிலையத்தில் உள்ள குறிப்பிட்ட ஏடிஎம் இயந்திரத்தின் சேவையை நிறுத்திவிட்டனர். அதற்குள் ரூ.8 லட்சம் தொகையை எடுக்கப்பட்டதுதான் சோகம். 100 ரூபாய்க்கு உரிய இடத்தில் 500 ரூபாய் வைக்கப்பட்ட தவறால்தான் இப்படி நேர்ந்துள்ளது.

இவரு… பாதுகாப்பு அமைச்சரா? நெட்டிசன்கள் கலாய்ப்போ… கலாய்ப்பு

இஸ்லாமாபாத்:
இவரு… பாதுகாப்பு அமைச்சரா? என்று நெட்டிசன்கள் செம கலாய்ப்பு கலாய்த்து வருகின்றனர். யாரை? எதற்காக தெரியுங்களா?

இணையதளத்தில் வெளியான போலி செய்தியை உண்மை என்று நம்பி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், இஸ்ரேலுக்கு ராணுவத்திற்கு விடுத்த மிரட்டல்தான் தற்போது பெரும் சர்ச்சை கிளப்பி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள இணையதளம் ஒன்றில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறியதாக போலி தலைப்புச் செய்தி ஒன்று வெளியானது.

அதில், எந்த ஒரு முன் அனுமானத்திலும் சிரியாவுக்கு பாகிஸ்தான் தனது தரைப்படைகளை அனுப்பினால், நாங்கள் பாகிஸ்தான் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் பெயர் தவறாக வெளியாக, இது உண்மையா என்று கூட ஆராயாமல் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கொதித்து போய்… தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடு என்பதை இஸ்ரேல் மறந்து விட்டது என்று பதிவிட்டார். (உண்மையை சொல்லிட்டாருய்யா… சொல்லிட்டாரு… அய்யா… உலக அண்ணனே… நோட் திஸ் பாய்ண்ட்)

இதையடுத்து இத்தகைய செய்தியை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பதில் அளிக்கவில்லை.

இதனால் டுவிட்டரில் பகுதியில் அவரது ஆராயாமல் பதிவிட்ட ஆவேசமான கருத்துக்கு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

N.நாகராஜன்

Likes(2)Dislikes(0)
Share
Dec 212016
 

us

செம அட்டகாசம்ப்பா… அசத்தல்பா… பேஸ்புக்வாசிகள் கொண்டாட்டம்

சான்பிரான்சிஸ்கோ:
செம அட்டகாசம்ப்பா… அசத்தல்பா… என்று பேஸ்புக்வாசிகள் கொண்டாடுகின்றனர். எதற்காக தெரியுங்களா?

பேஸ்புக் மெசேஞ்சர் செயலியில் ஒரே சமயத்தில் பலருடன் வீடியோ சாட் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதற்கு காரணம்.
ஒரே சமயத்தில் 50 பேருடன் வீடியோ சாட் செய்யலாமாம். என்னன்னு பார்ப்போமா!

ஒரே நேரத்தில் ஆறு பேர் வரை க்ரூப் வீடியோ சாட் ஆப்ஷனில் பார்க்க முடியும். 50 பேர் வரை க்ரூப் சாட் மூலம் குரல்களை கேட்க முடியும். 6 பேர் மற்றும் அதற்கும் அதிகமானோர் சாட் செய்யும் போது மற்றவர்களுக்கு ஸ்பீக்கர் ஆப்ஷன் மட்டுமே தெரியும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இதற்கு அப்டேட் செய்யப்பட்ட புதிய மெசேஞ்சர் செயலியை இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். வீடியோ க்ரூப் சாட் செய்ய ஏற்கனவே இருக்கும் க்ரூப் அல்லது புதிய க்ரூப் ஒன்றை உருவாக்கி வீடியோ சாட் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தா வைச்சுக்கோ… கைப்பற்றியதை மீண்டும் கொடுத்தது சீனா!

பீஜிங்:
இந்தா வைச்சுக்கோ… என்று 5 நாட்களுக்கு பிறகு திரும்ப ஒப்படைச்சிருக்காம்… சீனா… என்ன விஷயம் தெரியுங்களா?

தென்சீனக் கடலில் தான் கைப்பற்றிய அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை 5 நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது சீனா.

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் கடல்சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தது. “கடல் மிதவை” எனப்படும் இந்த ஆளில்லாத நீழ்மூழ்கி கப்பல் நீரின் உப்பு தன்மையையும், வெப்பநிலையையும் சோதிக்கப் பயன்படுகிறது.

கடந்த 15-ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் தண்ணீருக்கு அடியில் ஆய்வில் இருந்த இந்த ஆளில்லா நீர்மூழ்கியை சீனக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இதனால் பெரும் பதற்றம் உருவானது. இதற்கு அமெரிக்கா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் நீர் மூழ்கியை பறிமுதல் செய்ததாக விளக்கம் அளித்த சீனா, உரிய நடைமுறைக்குப் பிறகு கப்பலை திருப்பி தருவதாகவும் உறுதி அளித்தது.

ஆனால் உடனடியாக பதிலடி கொடுத்த டிரம்ப், “திருடப்பட்ட கப்பல் எங்களுக்கு வேண்டாம். அதனை அவர்களே வைத்துக் கொள்ளட்டும்” என்று தெரிவிக்க மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. நீர்மூழ்கியை திருடியதாக கூறிய டொனால்டு டிரம்பின் குற்றச்சாட்டிற்கு சீனா மறுப்பு தெரிவித்தது.

பின்னர் 5 நாட்களுக்கு பின்னர் அந்த நீர்மூழ்கியை சீனா மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது.

டுவிட் போட்டு கவனம் பெற்ற “சிரியா” சிறுமி குடும்பத்துடன் மீட்பு!

அலெப்போ:
டுவிட் போட்டு உலக நாடுகளை தன் பக்கம் திருப்பிய சிரியாவின் அலெப்போ நகரில் இருந்த ஏழு வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

சிரியாவில் உள்நாட்டுப்போர் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த போரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில்.

இந்நிலையில் ஏழு வயது குழந்தையான பனா அலாபெத் தனது தாய் பாத்திமா உதவியுடன் ட்வீட் செய்து அலெப்போ நகரில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

வார இறுதியில் அலெப்போ நகரை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட 2700 குழந்தைகளில் பனா அலாபெத் இடம் பெற்றிருக்கிறார். தனது தாயின் உதவியுடன் அலாபெத், அலெப்போவின் சூழ்நிலைகளை மிகவும் உருக்கமாக ட்விட்டரில் பதிவு செய்து உலக நாடுகளின் பார்வையை தன் மீது திருப்பினார்.

தொடர்ந்து ட்வீட் செய்து வந்த அலாபெத் 24 மணி நேரத்திற்கு ட்வீட் செய்யாததால் அவரது பாலோயர்கள் புதிய ஹேஷ் டேக் “Where Is Bana” ஒன்றை உருவாக்கி அதனை ட்ரெண்ட் செய்தனர்.

பின் அலாபெத் செய்த ட்வீட்டில் “தாக்குதலில் சிக்கியுள்ளோம், எங்கும் செல்ல இயலவில்லை, ஒவ்வொரு நிமிடமும் மரண பீதியை உணர்கிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். குட்பை – பாத்திமா.” என குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர் அப்பகுதியை சுற்றி வளைத்திருந்த அரசு படையினர் அப்பகுதியில் உள்ள பொது மக்களை வெளியேற்றினர். அதில் அலாபெத் குடும்பத்தினரும் இடம் பெற்றிருந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டென்னிஸ் வீராங்கனைக்கு கத்திக்குத்து… பதற்றம்… பரபரப்பு

பிராக்:
விம்பிள்டன் முன்னாள் சாம்பியன் செக் குடியரசு வீராங்கனை கிவிடோவாவின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

செக்குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவா (26).  விம்பிள்டன் டென்னிசில் 2011 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கிறார். இவர் புரோஸ்டெஜோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கிவிடோவாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிவிடோவாவின் வீட்டுக்குள் நுழைந்தவர் யார்? என்ன நோக்கத்துக்காக அங்கு வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருக்கு… இருக்கு… போதுமான அளவுக்கு இருக்கு… மத்திய அமைச்சர் சொல்றாரு…

புதுடில்லி:
இருக்கு… இருக்கு… போதுமான அளவுக்கு வங்கிகளிடம் ரூபாய் நோட்டுக்கள் கையிருப்பில் இருக்கு என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சொல்லியிருக்கார். (அப்புறம் ஏன்ங்க… சாமி… எல்லா ஏடிஎம்மும் அவுட் ஆப் சர்வீசில் இருக்கு)

மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பு பின்னர் நாட்டில் பணத்தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி முழுமையான தயார் நிலையில் இருந்தது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பணம் வினியோகம் செய்யாத நாளே இல்லை. ரிசர்வ் வங்கியிடம் குறிப்பிட்ட அளவுக்கு ரூபாய் நோட்டுகள் கையிருப்பு இருந்தது. வங்கிகளிடம் போதுமான அளவிற்கு ரூபாய் நோட்டுக்கள் கையிருப்பில் உள்ளன.

ரொக்கமில்லா டிஜிட்டல் பண பரிமாற்றம், கிரெடிட் அட்டைகள், டெபிட் அட்டைகள் பண பரிமாற்றம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. சிலவற்றில் 300 சதவீத அளவுக்கு ஏற்றம் இருக்கிறது என்று சொல்லியிருக்காருங்க…

ஐயா சாமி மத்திய அமைச்சரே! ஒரு நாளாவது நீங்க ஏடிஎம்மில் நின்று பாருங்க… என்கின்றனர் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள்.

N.நாகராஜன்

Likes(2)Dislikes(0)
Share
Dec 182016
 

vedikkai

சகாதேவன் :

யாருக்காவது உடனடியா ரத்தம் தேவையா ? சகாதேவனுக்கு சொல்லிவிட்டால் போதும், உடனே ஆட்டோ பிடிச்சி, அவனே வந்து, ரத்த தானம் கொடுப்பான். கூடவே, முக நூலில், அவனது நண்பர்கள் இரண்டாயிரத்து சொச்சம் பேருக்கும் ஸ்டேடஸ் போட்டு தெரியப் படுத்துவான். உதவி பண்ணுங்க, ரத்த தானம் பண்ணுங்கன்னு !.  வாட்ஸ் அப்பிலே அவன் நண்பர்களுக்கு மெசேஜ் போட்டு , ஷேர் பண்ணுங்கன்னு கெஞ்சுவான்.

இது மட்டும் இல்லை, எங்கேயாவது விபத்துன்னா, சகா, தன் கை வேலையெல்லாம் விட்டுட்டு அங்கே ஓடிப்போவான். அவன்கிட்டே இருக்கிற காசிலே , அங்கே உதவி செய்கிறவர்களுக்கு, டீ வாங்கிக் கொடுப்பான், ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுப்பான். 

சுமங்கலமோ அமங்கலமோ இல்லை சோகமான பேரிடரோ , சகாவின் உதவிக் கரம் எப்போதுமே நீளும்.

சொல்லப்போனால், சகாதேவனின்  மொபைல் ரிங் டோனே தர்மம் தலை காக்கும்! தக்க சமயத்தில் உயிர் காக்கும்!எம்ஜிஆரின் பாட்டு தான்.

இத்தனைக்கும் அவன் வேலை வெட்டி இல்லாதவன் இல்லேங்க. அவனுக்கு ஒரு கம்பனியிலே நல்ல  மெகானிக் வேலை .  

***

நகுலன்

இவனுக்கு நேர் மாறு  இவன் உடன் பிறந்த நகுலன் . சகாதேவனுக்கு இரண்டு நிமிடம் முன்பு பிறந்தவன் . ஒரே  நேரத்தில், ஒரே வயிற்றில் ஜனித்த இரட்டைபிறவிகள். பிறப்பு, வளர்ப்பு, படிப்பு எல்லாம் ஒன்று தான். ஆனால், குணத்தில் தான் எவ்வளவு வித்தியாசம்?

நகுலனுக்கு வெட்டியா வேடிக்கை பாக்கிறதுன்னா, வேர்க்கடலை உருண்டை சாப்பிடறா மாதிரி. அவ்வளவு இஷ்டம்! எங்கே கூட்டம் சேர்ந்தாலும், கைவேலையை அப்படியே விட்டுட்டு, தன்னோட ஸ்கூட்டரை, பக்கத்திலேயே எங்காவது பார்க்பண்ணிட்டு, வேடிக்கை பார்க்க நின்றுவிடுவான்.

ரோட்லே எவனாவது மேன் ஹோலை திறந்து வேலை பார்த்தால் போதும், நகுலனும் அங்கே தலையை நீட்டி, எட்டிப் பார்ப்பான். சிக்னல்லே, எதாவது மோட்டார் பைக் கார் மேலே இடித்து, சண்டை வந்தாலோ, அங்கே இவன் ஆஜர். முடிஞ்சா உசுப்பேத்தி விடுவான்.

நகுலன் போகும் வழியில், ஏதாவது ஆள் பேரிலே பஸ் மோதி, அந்த ஆள் பரிதாபகமாக கீழே விழுந்துட்டால், அங்கே நகுலன் கூட்டத்தோடு கூட்டமாக , ஜோதியில் கலந்து நிற்பதை பார்க்கலாம்.  இல்லே தெரு சாக்கடையில் ஒரு குடிகாரன் உருண்டு கொண்டிருந்தாலோ,வெயில் தாங்காமல் எவனாவது மயக்கம் போட்டாலோ, நகுலன் உள்ளேன் ஐயா!என்று அவன் பக்கத்தில் அட்டண்டன்ஸ் போட்டு விடுவான்.

ஒண்ணுமே வேண்டாம் சார்ரோட்லே போற பையன் தன் கையிலே வெச்சிருந்த மட்டன் பிரியாணி பார்சல் தவறி கீழே போட்டால் கூட, அதை வேடிக்கை பார்க்க கும்பல் கூடுமே, அதுலே நகுலன் முதல் ஆளா இருப்பான்.

சார், சார், அவசரப்பட்டு, தப்பா நினைச்சிடாதீங்க!  நகுலன் தப்பி தவறி கூட உதவியெல்லாம் செய்துட மாட்டான். அந்த வழக்கமெல்லாம் அவனுக்கு கிடையவே கிடையாது. சுட்டுப் போட்டாலும், அந்த மாதிரி தப்பெல்லாம் அவன் பண்ணவேமாட்டான். பண்ண விருப்பமும் கிடையாது !

வேறே என்னய்யா பண்ணுவான்னு தானே கேக்கிறீங்க? நகுலன் , நல்ல வக்கனையா கம்மென்ட் அடிப்பான். அதிலே கில்லி.சில்லி சிக்கன் கொட்டிப்  போச்சேன்னு வருத்தப்படற பையனை பார்த்து ஏன் தம்பி, பார்த்து போகக் கூடாது? கடையிலேயே துன்னுட்டு போயிருக்கலாமில்லே?” என்று நக்கலாக கேட்டு, பையன் வயித்தெரிச்சலை கொட்டிகொள்வான்.

நகுலனுக்கு நக்கலன் என்ற பெயர் இன்னும் பொருத்தம் !

சாலையில் விபத்து நடந்து, ரத்த வெள்ளத்திலே துடிக்கிற ஆளை வேடிக்கை பார்த்துக்கொண்டே விபத்துக்கு யார் காரணம்?” என்பது பற்றி, சுற்றி இருக்கிறவர்கள் கிட்டே விவாதம் பண்ணுவான். அதுக்காக ஆம்புலன்ஸ்க்கு எல்லாம் போன் பண்ணமாட்டான்.

நான் பார்த்தேன் சார், நடந்து போறவன் பேரிலே தான் தப்பு. வண்டிக்கு குறுக்காலே போனான், அடிபட்டான். நல்லா வேணும் சார் இவங்களுக்கு. அப்பதான் புத்தி வரும் ! என்ன நான் சொல்றது?“.என்று ஹை கோர்ட் தீர்ப்பு வேறு கொடுப்பான்.

நகுலனுக்கு சாலையில் நடக்கும் நிகழ்வு பெரிதா சிறிதா என்பது முக்கியமல்ல. அது அவனுக்கு ஒரு டைம் பாஸ். அவ்வளவே.! 

****

நகுலன் அன்று ஒரு வாடிக்கையாளரை பார்த்துவிட்டு, சென்னை கிண்டி பக்கத்தில் வந்து கொண்டிருந்தான். சாலையில் ஒரு ஆட்டோ குடை சாய்ந்து இரண்டு பேருக்கு பலமான காயம். கூட்டம் சேர்ந்து விட்டது. நகுலன் தன் ஸ்கூட்டரை அவசரஅவசரமாக நிறுத்தினான். கூட்டத்தோடு  ஐக்கியமாகி விட்டான்.

பக்கத்தில் நின்றிருந்த ஒரு தாடிக்காரரிடம் கேட்டான். என்ன ஆச்சு சார் ?”.

நகுலனை திரும்பி பார்த்து விட்டு அந்த தாடிக்காரர் சொன்னார் ஆட்டோ டிரைவர் பேரிலே தாம்பா மிஷ்டேக்கு! வேகமா லெப்ட் சைடுலே ஓவர்டேக் பண்ணான். திடீர்னு எதிர்க்க தண்ணீ லாரி வந்துடிச்சுபா. ஆட்டோ காரன் அடிச்சான் பாரு ப்ரேக்! ஆட்டோ அப்பிடியே மல்லாக்க கவுந்திடுச்சு. பாவம், உள்ளே இருந்த சவாரிக்கும் அடி பலம்பா. ரெண்டு பெரும் பொழைக்கிறது கஷ்டம்

அட பாவமே!கேட்டுக்கொண்டேயிருந்தபோது, நகுலனின் கூரிய பார்வை அங்கே அடிபட்டு விழுந்திருப்பவர்களை பார்த்தது.  அங்கே பாருங்க ! டிரைவர் கால் லேசா ஆடுது பாருங்க. உயிரு இன்னும் இருக்கு போலிருக்கு. சீக்கிரம்ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போகலைன்னா, அந்த ஆளு மேலே போக டிக்கெட் வாங்கிடுவாரு. போலீஸ், ஆம்புலன்ஸ் இன்னும் வரலியா?”.

அவனுங்க எங்கே நேரத்துக்கு வந்திருக்கானுங்க? எல்லாம் முடிஞ்சப்புறம் மெதுவா வருவானுங்க! சினிமா மாதிரி! தாடிக்காரர் சிரித்தார். அந்த  மொக்கைக்கு பதில் கடி கொடுக்க நகுலன் தீவிரமா யோசிக்கஆரம்பிக்கும் போது, அவன் அலைபேசி அழைத்தது. நான்கு மிஸ் கால் ! 

நகுலா! எங்கே இருக்கே?”. மறுமுனையில் கொஞ்சம் கவலை தோய்ந்த குரலில் அவனது  சேல்ஸ் சூப்பர் வைசர். 

இங்கே தான் சார், தாம்பரம் பக்கத்திலே! இன்னும் ஒரு மணி நேரத்திலே வந்திருவேன் சார்!”.

சரி, சீக்கிரம் வா, உன் தம்பி சகாதேவனை அமிஞ்சிகரை பில்ராத் ஹாஸ்பிடல்லே அட்மிட் பண்ணியிருக்காங்க. நீ உடனே அங்கே வா!

சார், என்ன சார் ஆச்சு என் தம்பிக்கு? காலைலே கூட நான் அவன் கூட போன்லே பேசினேனே!நகுலனின் குரலில் பதற்றம்.

என்னமோ, சரியா தெரியலே நகுலன். உங்க அம்மா தான் போன் பண்ணாங்க. உன் தம்பி அமிஞ்சி கரை பக்கம் வந்துக்கிட்டுருந்தான் போலிருக்கு. அங்கே ஏதோ ஜாதி கலவரமாம். அது நடுவிலே இவன் மாட்டிகிட்டான். எல்லாரும் ஓடியிருக்காங்க. இவன் பாவம், கூட்டத்திலே சிக்கி, கீழே விழுந்திருக்கான். எல்லோரும் இவனை மிதிச்சிகிட்டே ஒடியிருக்காங்க. வயிற்றிலே ஒரு உடைந்த கண்ணாடி கிழிச்சி, அங்கேயே மயக்கமாயிட்டான். நல்லவேளை, அவன் பிரெண்ட் பார்த்து உடனே பில்ராத்லே அட்மிட் பண்ணிட்டான். ரத்தம் கொஞ்சம் போயிருக்கு.ஆபேரஷன் பண்ணனுமாம். வேறே பயப்பட ஒன்னுமில்லையாம்.

சரி சார், நான் உடனே போய் பார்கிறேன். தேங்க்ஸ் சார்

இப்போ தான் உன்னை கேட்டு உங்க அம்மா கிட்டேயிருந்து போன் வந்தது. ரொம்ப நேரமா உனக்கு ட்ரை பண்ணாங்களாம். நீ எடுக்கலேன்னு எனக்கு பண்ணாங்க! ஏன் எடுக்கலே ? ”

வண்டி ஒட்டிகிட்டிருந்தேன் சார்

சரி, முதல்லே உங்கம்மாக்கு போன் பண்ணி பேசு !

****

நகுலன் பில் ரோத் ஹாஸ்பிடல் போகும் போது, சகாதேவன் படுக்கைக்கருகில் அவனது நண்பர் இருபது பேர் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அத்தனை பேரும், சகாதேவனுக்காக ரத்தம் கொடுக்க முன் வந்தவர்கள் . ரத்தம் தேவைப் படலாம் என டாக்டர் சொன்னவுடன், ரத்த தானம் செய்ய நான் நீ என நண்பர் பட்டாளம் சேர்ந்து விட்டது. 

ஒரு நண்பன் கேட்டான் தலை, நீ பிழைச்சது பெரிய விஷயம்பா. நேரத்திலே உன்னை இங்கே சேர்க்கலைன்னா கொஞ்சம் பிரச்சனையாயிருந்திருக்குமாம். டாக்டர் சொன்னாரு. ஆமா! உன்னை இங்கே யாரு அட்மிட் பண்ணது?”

சகா சொன்னான் தெரியலே இஸ்மாயில். நான் மயக்கத்திலே இருந்தேன். தாமஸ்னு அட்மிட் கார்ட்லே பேர் போட்டிருந்தது. டாக்டர் சொன்னாரு

யாரு தாமஸ்?”

அதான் யாருன்னு சரியா எனக்கு நினைவுக்கு வரல்லே”. சரி, இஸ்மாயில், உனக்கு எப்படி நான் இங்கேயிருக்கறது தெரியும்?”

கேசவன் தான்ம்பா எனக்கு போன் பண்ணி உனக்கு ரத்தம் தேவைப் படும்னு சொன்னான்

கேசவன் எங்கே ? “

இங்கே தான் இருக்கேன் மச்சான். வயித்திலே அடி பட்டு நீ மயக்கமா இருந்தே. ரத்தம் வேறே !சட்டை எல்லாம் நனைஞ்சு. பாக்க கொடுமையா இருந்திச்சி மச்சி ! நல்ல வேளை, நானும் தாமசும் உன்னை சமயத்திலே பார்த்தோம். அதை விடு! . நீ பிழைத்ததே பெரிய விஷயம் . உனக்கு இப்போ எப்படியிருக்கு? அதை சொல்லு . பரவாயில்லையா?” –கேசவன் ஆதுரமாக கேட்டான். 

சகாதேவன் எனக்கு ஒண்ணுமில்லேடா! டாக்டர் சொல்லிட்டார், நல்ல நேரத்திலே என்னை அட்மிட் பண்ணிட்டாங்களாம். நாலு யூனிட் போதுமாம். ரொம்ப தேங்க்ஸ் எல்லாருக்கும் ! டாக்டர், இவங்க எல்லாரும் என் நண்பர்கள். உங்களுக்கு எப்போ தேவையோ, இவங்களுக்கு போன் பண்ணினா, இவங்க குரூப் ரத்தம் உங்களுக்கு கிடைக்கும். என்னடா, உங்க எல்லோருக்கும் ஓகே தானே?”

டபுள் ஓகேகூட்டத்தில் அனைவரும் கோரஸ் பாடினார்கள்.

கூட்டத்தோடு நின்று கேட்டுகொண்டிருந்த நகுலன், முணுமுணுத்தான். வேறே வேலையில்லை இந்த சகாவுக்கு, எப்ப பாரு தானம் பண்ணு, தர்மம் பண்ணுன்னு சொல்லிக்கிட்டு”.

அப்போது நகுலனுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தவன் சிரித்தான். நீங்க சொல்றது சரிதான்! ” .

திரும்பிய நகுலனுக்கு ஆச்சரியம். கொஞ்ச நேரம் முன்பு கிண்டி பக்கத்தில் பார்த்த தாடிக்காரர். அட நீங்களா ! இப்போதானே கிண்டி பக்கத்திலே பார்த்தோம். அதுக்குள்ளே நீங்க எப்படி இங்கே?  நீங்க சகாதேவன் நண்பரா?”.

தலையை மட்டும் ஆட்டி விட்டு அந்த தாடிக்காரர் , அவனை விட்டு நகர்ந்து விட்டார்.

தம்பியுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, நகுலன் ஆஸ்பிடல் வாசலுக்கு வந்து தன் வண்டியை எடுத்தான்.

***

அடுத்த நாள்.

நகுலனுக்கு  அன்று ரொம்ப  வருத்தமான நாள்.

பின்னே என்ன, தெருவில் ஒரு விபத்து கூட கண்ணில் மாட்டவில்லை. ஒரு ஆர்பாட்டம், சண்டை ஒன்னும் நடக்கவில்லை. மோடி மஸ்தான், மூலிகை விக்கறவங்க, குடிமகன் இப்படி ஒருத்தர் கூட டைம் பாசுக்கு அகப்பட வில்லை.

அங்கும் இங்கும் பார்த்து கொண்டே ஸ்கூட்டரில் வந்த நகுலன், எதிரில் வந்த லாரியை பார்க்கவில்லை. லாரி டிரைவரும் மப்பில் இருந்ததால், நகுலனை பார்க்கவில்லை.

லாரியும் ஸ்கூட்டரும் நீண்ட நாள் பிரிந்த காதலர் போல சந்தித்துக் கொண்டன. ரொம்ப நெருக்கம். டமால்”. இடையில் மாட்டிய நகுலன், அப்பளம் போல உடைந்தான். மண்டையில் பலமான காயம். அவனை சுற்றி ஒரே ரத்தம். கண்கள் இருட்டிக் கொண்டே வர, மயக்கமானான்.

நேரம் போய்க்கொண்டிருந்தது. எவ்வளவு போனது என்றே தெரியவில்லை. மெதுவாக கண்ணை விழித்தான். அவனை சுற்றி ஒரு இருபது பேர்,அவனையே பார்த்துக் கொண்டிருந்தது போல மங்கலாக தெரிந்தது. உடலை அசைக்க முடியவில்லை. வாய் திறக்க முடியவில்லை. நா குழறியது. தண்ணீ! தண்ணீ!”. ஈனமாக முனகினான்.

கூட்டத்திலிருந்த ஒருவன், “டே மச்சி, ஆள் க்ளோஸ்டா. பாரு, எவ்வளவு ரத்தம்? மண்டைலே அடி. இவன் நிச்சயம் பொழைக்க மாட்டான் !

இன்னொருத்தன் சொன்னான் கஷ்டம்பா! அடிபட்டு சாவருத்துக்கின்னே வரானுங்கோ !.ரோட்டை பார்த்து வரவே மாட்டனுங்கபா” .

நேரம் போய்க்கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்து யாரும் உதவிக்கு வருவதாக இல்லை. ஒவ்வொருவரும் இவ்வளவு பேர் இருக்காங்களே,நமக்கென்ன வந்தது?” என நினைத்தார்களோ என்னவோசில கார் ஓட்டிகள், போகிற போக்கில், தங்கள் ராஜ பார்வையை நகுலன் பக்கம் திருப்பி விட்டு த்சோ த்த்சோபோட்டு விட்டு சென்றனர்.

நேரம் போய்க்கொண்டிருந்தது. நகுலனுக்கு வலி பிராணன் போய்க்கொண்டிருந்தது. சிலர், தங்கள் ஸ்கூட்டரை நிறுத்தி நகுலனை பார்த்து விட்டு ஐயோ பாவம்! யாரு பெத்தபிள்ளையோ?” சொல்லிவிட்டு தங்கள் வழியே சென்றனர். கொஞ்சம் பேர், நமக்கெதுக்கு வம்பு என்று, கொஞ்சம் தள்ளியே வண்டியை ஒட்டிக் கொண்டு சென்றனர்.

நேரம் போய்க்கொண்டிருந்தது. இங்கே நகுலனுக்கு உயிர் போய்க் கொண்டிருந்தது. ஹெல்ப்! ஹெல்ப்! நகுலன் கதறினான். வாய் எழும்பவில்லை. சுற்றி நின்ற யாரும் உதவிக்கு வரவில்லை. வேடிக்கை பார்த்ததோட சரி.  கூட்டத்தில் யாரோ சொன்னார்கள் அந்த ஆள் உதடு அசையிது பாரு.கூட இருந்தவன் சொன்னான், “மச்சி, நீ போய் அவனை தொட்டுடாதே, பின்னாடி பிரச்னையாயிடும். அவன் பொழைக்க சான்சே இல்லை!

நேரம் போய்க்கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தை கிழித்து கொண்டு ஒரு தாடிக்கார ஆள் வேகமாக வந்தார். நேராக விழுந்து கிடந்த நகுலனிடம் போனார். கையை கொடு. எழுந்துக்கோ!என்றார். அட என்னை காப்பாற்ற கூட ஒருத்தன் வரானே!”. ஆச்சரியத்துடன் நகுலன் கையை நீட்டினான். கூட்டம் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது.

தாடிக்காரர் நகுலனை தூக்கினார். அவரை பிடித்து கொண்டு நகுலன் எழுந்தான். எப்படி என்னால் எழுந்துக்க முடிந்தது? கண் இப்போ நல்லா தெரியுதே! அட நீங்களா? நேத்தி பில்ராத்லே பார்த்தோமே ? இப்போ  இங்க எப்படி ?”

தாடிக்காரர் சொன்னார் உங்க பின்னாடி தான் வந்து கிட்டிருந்தேன். சரி வாங்க போகலாம்! “ .

கூட்டம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. தூரத்தில் ஆம்புலன்ஸ் வரும் சத்தம் கேட்டது. நகுலன் தற்செயலாக கீழே குனிந்தான். தரையில் ரத்த வெள்ளத்தில் , அசைவற்று ஒரு உடல். தன்னைப்  போலவே ஒருவன். உற்றுப் பார்த்தான். அவனே தான் !   ”நானா அது? நானா கீழே கிடப்பது ? அப்போ நீங்க யாரு?.” ஆச்சரியம் அவனுக்கு !

சிரித்தார் தாடிக்காரர் . நாந்தான் யமதூதன் !. நேத்தி உன் தம்பியை தூக்க வந்தேன். அவன் கிட்டே நெருங்க முடியலே. அவன் ஆயுசு கெட்டி. இன்னிக்கு உன்னை தூக்கிட்டேன். சரி, வா, நாம போகலாம்.

****முற்றும்

விவேகானந்தர் சொன்னது :

உன்னுடைய ஒவ்வொரு நல்ல எண்ணமும் , செயலும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை நிரந்திரமாக பாதுகாக்க தயராக இருக்கிறது என்பதை நீ எப்போதும் நினைவில் வைக்க வேண்டும். பிரதிபலன் கருதாமல் , நாம் உலகிற்கு செலுத்தும் ஒவ்வோர் நல்ல எண்ணமும் நமக்குள் சேகரித்து வைக்கபடுகிறது அத்தகைய நல்ல எண்ணம் நமது கர்ம சங்கிலியை ( கர்ம வினையை ) இணைக்கும் வளையம் ஒன்றை உடைத்தெறிகிறது

S.முரளிதரன்

Likes(1)Dislikes(0)
Share
Dec 162016
 

isro

காப்பாற்றியது… யாரு… இஸ்ரோ செயற்கை கோளு… அதிகாரிகள் தகவல்

மும்பை:
காப்பாற்றியது… யாரு… இஸ்ரோ செயற்கை கோள் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

சென்னையை வர்தா புயல் சின்னாபின்னாமாக்குவதற்கு முன்பே இஸ்ரோ செயற்கைகோள் அளித்த எச்சரிக்கை அலார்ட் தகவல் மூலம் 10 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று சொல்லியிருக்காங்க… அதிகாரிகள்…

வங்கக்கடலில் உருவான வர்தா புயல் கடந்த திங்கட்கிழமை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை பதம் பார்த்து சின்னாபின்னமாக்கி விட்டு கரையை கடந்தது.

மரங்கள் வேரோடு சாய, மின்சார கம்பங்கள் சேதமடைய தொடர்ந்து நிவாரணப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், மழை வெள்ளத்திற்கு முன்னர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதற்கு இஸ்ரோ ஏவிய இன்சாட் 3 டிஆர் ஸ்காட்சேட் -1 செயற்கை கோள்கள் அளித்த தகவலே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த செயற்கைகோள்கள், புயல் நகர்ந்து சென்ற திசை குறித்து தகவல் அளித்தது.

இதன் அடிப்படையில் அதிகாரிகள், புயல் தாக்கக்கூடிய பகுதிகளில் வசித்த மக்களை மீட்டு பத்திரமான இடங்களில் தங்க வைத்துள்ளனர். ஆந்திர கடற்கரை பகுதியிலும் மக்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபாஷ் இஸ்ரோ…

கலிபோர்னியாவில் கண்ணீர்… முதல்வர் மறைவுக்கு அஞ்சலி…

ப்ரீமாண்ட்:
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலலிதாவுக்கு அமெரிக்காவில் இயங்கும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக பிரிவு சார்பில் சிலிக்கான்வேலியின் ப்ரீமாண்ட் நகரில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜெயலலலிதாவின் தீவிர விசுவாசியாகவும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயல் வீரராகவும் அறியப்பட்ட, அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் அபுகான் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

இந்திய தூதரக ஜெனரல் வெங்கடேசன் அசோக், இந்தியன் அமெரிக்கன் கவுன்சில் நிறுவனத் தலைவர் டாக்டர் ரொமேஷ் ஜப்ரா, ப்ரீமாண்ட் முன்னாள் துணை மேயர் அனு நடராஜன், கலிபோர்னியா முன்னாள் அமைச்சர் செ.மாதவனின் மகள் வெற்றிச் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு மொழி பேசும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

செம்ம்மமமம என்று வாட்ஸ் அப் பிரியர்களுக்கு ஒரு விஷயம்! 

கலிபோர்னியா:
செம்ம்மமமம என்று வாட்ஸ் அப் பிரியர்களுக்கு ஒரு விஷயம் இருக்குங்க… இனி நீங்கள் வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெற்று, அவற்றை அழிக்கும் வசதிகள் வரபோகுதாம்…

உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக அறியப்படும் வாட்ஸ்அப்பில் சில ஜிமெயில் வசதிகள் வழங்கப்பட இருக்காம். இதுகுறித்த தகவல் ட்விட்டர் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறும் வசதி வழங்கப்பட இருக்காம். இனிவரும் அப்டேட்களில் நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறுவது, அதை எடிட் செய்வது மற்றும் முழுமையாக அழித்து விடுவது போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கு என்று சொல்லியிருக்காங்க…

அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது என்றாலும், இந்த வசதி மெசேஜ் அனுப்பிய எத்தனை நொடிகளுக்கு வேலை செய்யும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

பேஸ்புக் மட்டுமா செய்யும் நாங்களும் செய்வோம்ல… டுவிட்டரும் களத்தில் குதிப்பு

நியூயார்க்:
பேஸ்புக் மட்டுமா செய்யும் நாங்களும் செய்வோம்ல… என்று டுவிட்டரும் களத்தில் குதித்து லைவ் வீடியோ சேவையை அறிமுகம் செய்துள்ளது.

டுவிட்டர் என்றாலே பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைதளமாக இருந்து வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் முதன் முதலில் லைவ் வீடியோ சேவையை அறிமுகம் செய்தது.

இந்த சேவையை பயனாளர்கள் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனம் லைவ் வீடியோ சேவை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் iOS பயனர்கள் என அனைவரும் இந்த சேவையை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை சிம்முங்கோ… இரட்டை சிம்மு… அடுத்தாண்டு ஐபோனில் இருக்குமாம்!

சான்பிரான்சிஸ்கோ:
இரட்டை சிம்முங்கோ… இரட்டை சிம்மு இருக்கும் போலிருக்கே… என்று தகவல்கள் லீக் ஆகி உள்ளது. என்ன விஷயம் தெரியுங்கா?

ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வரும் 2017 ஐபோனில் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும் என்பதுதான் அது. டூயல் சிம் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே மொபைலில் இரு வேறு ஆன்டெனாக்களை இயக்குவதற்கான உரிமத்தை அமெரிக்க காப்புரிமை அலுவலகம் ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது.

இதனால் இனிவரும் ஐபோனில் இரண்டு சிம் கார்டு ஸ்லாட் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

டூயல் சிம் கார்டுகளில் ஒன்றிற்கு வாய்ஸ் கால் மற்றொன்றிற்கு இண்டர்நெட் டேட்டா என முக்கியத்துவம் வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது. இத்துடன் இரண்டு ஸ்லாட்களிலும் 4G எல்டிஇ தொழில்நுட்பம் வழங்கப்படும். ஐபோன் 8’இல் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுமா என்பது தற்சமயம் வரை உறுதி செய்யப்படாத ஒன்றாகவே உள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யுங்க… பரிசுகளை அள்ளுங்க…

டில்லி:
டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யுங்க… பரிசுகளை அள்ளுங்க… அள்ளுங்க… என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாம்… என்ன விஷயம் தெரியுங்களா?

புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனைகளைக் குறைத்து, கிரெடிட், டெபிட் கார்டு (டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதன்படி மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்கிவிக்க நுகர்வோர்களுக்கு “லக்கி கிரஹக் யோஜனா திட்டம்” மற்றும் வணிகர்களுக்கு “டிஜி தன் வியாபார் யோஜனா” திட்டம் ஆகிய பரிசளிப்புத் திட்டங்களை நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் அறிவித்துள்ளார்.

இதன்படி சுமார் ரூ.340 கோடிக்கு பரிசுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கிறிஸ்துமஸ் முதல் 2017 ஏப்ரல் 14ம் தேதி வரை தினமும் 15 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1000 பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், வாரந்தோறும் 7 ஆயிரம் பேருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பரிசு வழங்கப்படும். பின்னர் 2017 ஏப்ரல் 14ம் தேதி மெகா பரிசு அறிவிக்கப்படும். முதல் பரிசாக ரூ.1 கோடியும், இரண்டாம் பரிசாக ரூ.50 லட்சமும், 3வது பரிசாக ரூ.25 லட்சமும் அறிவிக்கப்படும்.

டிஜி தன் வியாபார் யோஜனா திட்டத்தின் கீழ், கிறிஸ்துமஸ் முதல் 2017 ஏப்ரல் 14 வரை வாரந்தோறும் 7 ஆயிரம் வணிகர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். ஏப்ரல் 14ம் தேதிக்கு நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு மெகா பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நொந்து கிடக்க… ஆக்சிஸ் வங்கி செய்யுது அட்டூழியம்…

நொய்டா:
பணத்தட்டுப்பாட்டால் ஏடிஎம்களில் நாட்டு மக்கள் நொந்து போய் காத்துகிடக்க… ஆக்சிஸ் வங்கி செய்யும் அட்டூழியம் கோபத்தை கிளறி உள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் நொய்டாவில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் 20 போலி கணக்குகள் மூலம் கணக்கில் வராத ரூ.60 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு வாபசிற்கான காலக்கெடு முடிவடைய இன்னும் 16 நாட்கள் உள்ள நிலையில், கணக்கில் வராத பணத்தை வெளிக்கொண்டு வர வருமான வரித்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டில்லி அருகே நொய்டாவி்ல் ஆக்சிஸ் வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் அந்த வங்கியில் 20 போலி வங்கிக்கணக்குகளில் கணக்கில் வராத ரூ.60 கோடி டிபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 25ம் தேதி டில்லியில் உள்ள காஷ்மீரே கேட் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.3.5 கோடி கணக்கில் வராத பணத்தையும், சாந்தினி சவுக் பகுதியிலும் உள்ள இதே வங்கி கிளையிலும் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த மற்றொரு சோதனையில் ரூ.35 லட்சம் அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இப்படி தொடர்ந்து இதுபோன்ற முறைகேடுகளில் ஆக்சிஸ் வங்கி ஊழியர்கள் ஈடுபடுவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

போச்சே… போச்சே… நல்ல முட்டை போச்சே… வதந்தியால் மக்கள் அவதி

சேலம்:
போச்சே… போச்சே… வதந்தியால நல்ல முட்டைகளை தூக்கி போட்டு உடைச்சுட்டோமேன்னு சேலம் மக்கள் நொந்துக்கிறாங்க… ஆராயாமல் செய்தால் இப்படிதாங்கோ…

சேலம் மாவட்டத்தில் செயற்கை முட்டைகள் விற்பனைக்கு வந்திருப்பதாக கிடுகிடுவென ஒரு வதந்தி பரவ… பொது மக்கள் பீதியடைந்தனர். தாங்கள் வாங்கி வைத்திருந்த முட்டைகளை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது பாலிதீன் பேப்பர் போல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அனைத்து முட்டைகளையும் உடைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை, தாதகாப்பட்டி உட்பட பல பகுதிகளில் உள்ள கடைகளில் செயற்கை முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களிடையே வதந்தி பரவியது.  உடனே வீடுகளுக்கு விரைந்த அவர்கள் தாங்கள் வாங்கி வைத்திருந்த முட்டைகளை சாலையில் போட்டு உடைத்தனர்.

முட்டையின் உள்புறம் உள்ள அடுக்கில் பாலிதீன் பொருள் போன்ற படிமம் உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்க… விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முட்டை கிடங்குகளில் சோதனை மேற்கொண்டனர்.

முட்டைகளை அவர்கள் உடைத்தும், வேக வைத்தும் சோதனை செய்தனர்.  இதில் செயற்கையான முட்டைகள் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்க… இப்போது மக்கள் ஐயோ… போச்சே… முட்டை போச்சே என்று புலம்புகின்றனர்.

மீண்டும் பெட்ரோல் விலை உயரும்… மக்கள் டென்ஷன்…

புதுடில்லி:
மீண்டும் பெட்ரோல் விலை உயரும் என்ற தகவல் மக்களை செம டென்ஷனில் ஆழ்த்தியுள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை குறைக்க ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ரஷ்ய நாடும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாக 50 டாலருக்கும் குறைவாகவே இருந்து வந்த கச்சா எண்ணெய் பேரல் விலை தற்போது 55 டாலரை கடந்துள்ளது. அதன்படி கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் நாடுகள் விலையை அதற்கேற்ப நிர்ணயித்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் விலை ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத்தகவல் பொதுமக்களை மிகவும் டென்ஷனாக்கி இருக்கிறது. இப்படி விலை உயர்ந்துகொண்டே சென்றால் என்ன செய்வது என்று புரியாமல் நடுத்தர மக்கள் கவலையடைந்துள்ளனர்.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Dec 142016
 

bur

உள்ளே போ… சிறை உள்ளே போ… புர்கா அணியாமல் படம்…

சவுதிஅரேபியா:
புர்கா அணியாமல் புகைப்படமா? உள்ளே போ… சிறை உள்ளே போ என்று ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் புர்கா அணியாமல் முகம் தெரியும்படி புகைப்படம் எடுத்து அதை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கடந்த மாதம் சவுதி அரேபியா ரியாத்தில் உள்ள ஒரு தெருவில் முகத்திரை அணியாமல் ஒரு பெண் புகைப்படம் எடுத்துள்ளார். அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட, இப்போது அதுவே அவருக்கு வினையாகி விட்டது.

அந்த பெண்ணை போலீசார் பொது ஒழுக்க மீறல்கள் அடிப்படையில் கைது செய்தனர். சவுதியில் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது தலை முதல் கால்வரை மறைக்கக்கூடிய புர்கா என்ற உடையை அணிய வேண்டும் என்பது அந்நாட்டு சட்டம். இதை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.

இரண்டே நிமிடம்… இரண்டே நிமிடம்தான்… விமான சேவை சாதனை

ஸ்காட்லாந்த்:
இரண்டே நிமிடம்… இரண்டே நிமிடம்தான்… ஏறி அமர்வதும் தெரியாது… இறங்குவதும் தெரியாது… சாதனை சேவை இது. என்ன தெரியுங்களா?

ஸ்காட்லாந்தின் வடகிழக்குக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் இரு தீவுகள் இடையே, வெறும் இரண்டு நிமிடங்களுக்குப் பறக்கும் விமான சேவை இருக்கிறது.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பயண நேரம்தான் 2 நிமிடம். காற்று வீச்சு சாதகமாக இருந்தால், ஐஸ்ட் 47 வினாடிகளில் பயணம் முடிந்துவிடும். பயண தூரம் 1.7 மைல்தான்.

1967-ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட இவ்விமான சேவை, இன்று வரை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த விமான சேவை புகழ்பெற்றிருப்பதையும் விட, இத்தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு இது உயிர்நாடியாக உள்ளது என்பதுதான் முக்கியமானது.

நம்ம ஊருல டவுன் பஸ்சுக்காகவே பல மணிநேரம் காத்து கிடக்க வேண்டி உள்ளது. இந்த விமான சேவை கின்னசில் இடம் பிடித்துள்ளது.

வரும் காலங்களில் வலுவான புயல்தான்… ஜாக்கிரதை… ஜாக்கிரதை…

அலகாபாத்:
ஜாக்கிரதையாக இருங்கோ… முன்னெச்சரிக்கையாக இருங்கோ என்று மக்களை எச்சரிக்கை படுத்தி உள்ளனர் விஞ்ஞானிகள். எதற்கு என்கிறீர்களா?

இனி வரும் காலங்களில் வங்கக்கடலில் அதிகளவில் புயல்கள் உருவாகி தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களை தாக்கும் என்ற எச்சரிக்கையை தான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வர்தா புயலால் சென்னை அடைந்த சேதம் அனைவரும் அறிந்தது. ஒரே நாளில் அதிகபட்சமாக 192 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. மரங்கள் அடியோடு சாய்ந்தன. மின்சார கம்பங்கள் சாய்ந்து சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இனி வரும் காலங்களில் வங்கக்கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகி தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை தாக்கும் என்று ஆய்வில் தெரியவந்து மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.

அலகாபாத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அசுதோஸ் மிஸ்ரா தலைமையிலான குழுவினர் 2014-ம் ஆண்டு இதுதொடர்பாக ஆய்வு நடத்தி எர்த் சயின்ஸ் அறிவியல் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டனர்.

அதில், தொழிற்சாலைகளால் கடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வங்கக்கடல் பகுதியில் இனி வெப்ப மண்டல புயல்கள் அதிகளவில் உருவாகும். இனி வரும் காலங்களில் உருவாகும் புயல்களின் சக்தி அதிகரிக்கும் என்று சொல்லியிருக்காங்க…

உலகின் மெல்லிய யோகா புக் 2 இன் 1 லேப்டாப்… லெனோவோ அறிமுகம்

நியூயார்க்:
உலகின் மெல்லிய யோகா புக் 2 இன் 1 லேப்டாப் சாதனத்தை லெனோவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்காங்க… செய்திருக்காங்க…

இந்த லேப்டாப் இந்த ஆண்டு நடைபெற்ற ஐஎப்ஏ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கு. உலகின் மெல்லிய 2 இன் 1 சாதனமாக அறியப்படும் லெனோவோ யோகா புக் விலை ரூ.49,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப்பில் உலகின் முதல் ஹாலோ வகை கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது.  லெனோவோ யோகா புக் 2 இன் 1 சாதனத்தின் ஹைப்ரிட் மாடல் கார்பன் பிளாக் மற்றும் ரியல் பென் இன்புட் போன்ற சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. விண்டோஸ் இயங்குதளம் உள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் லெனோவோ யோகா புக் இந்தியாவில் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலோ கீபோர்ட் ஆனது முழுமையான டச் ஸ்கிரீன் கொண்ட பேக்லிட் கீபோர்டு அமைப்பு கொண்டுள்ளது. கேபாசிட்டிவ் கீபோர்டு என்பதால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உங்களின் டைப்பிங் முறையை பதிவு செய்து கொண்டு அவற்றை கணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டரா… நாங்களா… புதிய ஸ்மார்ட் போன்கள் களத்துக்கு வருது…

வாஷிங்டன்:
கம்ப்யூட்டரா… நாங்களா என்று பார்த்துவிடுவோம் என்ற ரீதியில் ஸ்மார்ட் போன் ஒன்று அடுத்த ஆண்டு களத்தில் இறங்கி வலு காட்ட உள்ளதாம்.

என்ன விஷயம் தெரியுங்களா? அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கம்ப்யூட்டருக்கு நிகரான வேகத்தில் இயங்கும் என்று சொல்றாங்க…

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 2017 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் லீக் ஆகி மக்களை ஏங்க வைத்துள்ளது. எனினும் இது சர்பேஸ் போன் தானா அல்லது வேறு ஏதேனும் மாடல் போனா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

இது ஒரு ஹைப்ரிட் போனாக இருக்கும் என்று தெரிகிறது. மைக்ரோசாப்ட் தயாரித்து வரும் உயர் ரக ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐபோன்களுக்கு போட்டியளிக்கும் விதமாக அமையும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய இயங்குதளம் என்பதால் இந்த ஸ்மார்ட்போன் அதிக சக்தி வாய்ந்ததாக இருப்பதோடு அதிநவீன சர்பேஸ் போனாகவும் இருக்கும். கம்ப்யூட்டருக்கு இணையான வேகத்தில் இவை இருக்கும் என்று சொல்றாங்க… சொல்றாங்க…

குளியலறைக்குள் பதுக்கல் அறை… அதுக்குள்ளே… கோடி கோடியாய் பணம்…

பெங்களூர்:
அடப்பாவி… பதுக்கி வைக்கறதுக்காகவே தனியாக ரூம் கட்டியிருப்பாங்க போலிருக்கே… என்கின்றனர் மக்கள். என்னா சங்கதின்னா…

பெங்களூரில் ரூ.5.7 கோடி புதிய ரூபாய் நோட்டுகளை குளியலறையில் ரகசியமாக மறைத்து வைத்திருந்த மேட்டரில் ரிசர்வ் வங்கி அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்த சங்கதிதான் இப்போ செம ஹாட்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பல்வேறு விதிமுறைகளை விதித்தது. இருந்தாலும் தில்லாங்கடி வேலைகள் நடந்து பணப் பரிமாற்றம் ஆகுது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹவாலா டீலர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த அங்கு அவங்களுக்கு அதிர்ச்சியோ… அதிர்ச்சி.

குளியலறைக்குள் ரகசிய அறையே கட்டியிருக்காங்க… அதுல பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார். அதில் ரிசர்வ் வங்கி அதிகாரி மைக்கேல் என்பவரும் சிக்க… இப்ப அவருக்கும் காப்பு மாட்டிட்டாங்க… சிபிஐ அதிகாரிகள்.

வர்தா புயலால் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் மழை பெய்யுமாம்!

சென்னை:
வர்தா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தருமபுரி அருகே நகர்ந்து 40 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் நேற்றுமுன்தினம் சென்னையை சூறையாடியது. புயல் காற்றால் கட்டங்களின் மேற்கூரைகள் அலேக்காக பறந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் குப்பை காதிகங்கள் போல் தூக்கி வீசப்பட்டன.

புயல் கரையைக் கடந்தபோது வீசிய பேய்க்காற்றால் பல கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள், விளம்பர பலகைகள், பெட்ரோல் பங்க் மேற்கூரை, ரயில்வே பிளாட்பார கூரைகள் எங்கு சென்றது என்றே தெரியாத நிலை.

இந்த வர்தா புயல் திருவண்ணாமலை மாவட்டம் வழியாக செல்லும் போது வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இவை தற்போது, தருமபுரி அருகே நகர்ந்து 40 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்தா புரட்டி போட்ட சென்னை… அரசு அதிவிரைவு மீட்பு பணி…

சென்னை:
புரட்டி போடப்பட்ட சென்னையில் அரசின் அதிவிரைவு மீட்புப்பணிகளால் மக்களின் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

வர்தா புயல் திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. மேலும் பல இடங்களில் கனமழையும் பெய்தது.

இந்த புயலால் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே தமிழக அரசு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. விழுந்து கிடக்கும் மரங்கள், மின் கம்பங்களை அகற்றும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு விரைவாக பணிகள் நடந்தது.

சென்னையில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடத் துவங்கியுள்ளன. சீரமைப்பு பணிகளில் பிற மாவட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

N.நாகராஜன்

Likes(0)Dislikes(0)
Share
Dec 132016
 

Vardha__1

பணம், பதவி, பேர், புகழ் போன்ற மாயைகளுக்காக எத்தனை தவறுகளை அறிந்தும் அறியாமலும் தினமும் செய்துக்கொண்டிருக்கிறோம்? இந்த மாயைகளின் அடிப்படையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரிவினங்களை ஏற்படுத்தி வாழும் காலம் முழுதும் நெருங்கிய மக்களிடம் கூட சண்டையிட்டு அடித்துக்கொள்கிறோம்.

ஆனால் நாம் செய்யும் பாவ புண்ணிய செயல்களுக்கு, தனக்கு ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை பேரிடர்களின் மூலம், நம்மை அவ்வப்போது  ஓங்கி அறைந்து, உணர்த்திச் செல்கிறது இயற்கை!

நமக்குத் தான் ஆறறிவு உள்ளதே? ஆறாவது அறிவின் மூலம் நாம் செய்யும் பாவச் செயல்களுக்கு பொருத்தமான விளக்கங்கள் கொடுத்து ஊரையும், நம்மையும் எளிதாக ஏமாற்றி விடுகிறோம். எத்தனை அறியாமை!!!

இந்த டிசம்பர் மாதமும் வழக்கம் போலவே இயற்கையின் மற்றொரு ருத்ர தாண்டவம் ஆடி, தமிழக மக்களை குறிப்பாக சென்னையை மீண்டும் தத்தளிக்க வைத்தது.

ஒவ்வொரு வருடமும், நிறுவனங்கள் ஆண்டு இறுதி கணக்குகளை (year-end accounts) செட்டில் செய்வதைப் போலவே, இந்த வருடமும் டிசம்பரில் மக்களை உலுக்கி எடுத்து, தான் மட்டுமே மனிதர்களுக்கெல்லாம் தலைவன் என மீண்டும் ஒரு முறை பறைசாற்றி நிருபித்துள்ளது இயற்கை.

வர்தா புயல் காற்றின் அசுர வேகத்தில் மரங்கள் அல்லோலப் பட, பல வாகனங்களையே தூக்கி அடித்தும், பல வீடுகளில் சேதாரம் ஏற்படுத்தியும் இயற்கை தனது சக்தியை மக்களிடம் மிக ஆழமாக உணர்த்திச் சென்றது.

சில ஆயிரம் மரங்கள் சென்னை சாலைகளில் வீழ்ந்து சிதறி போக்குவரத்துகளை ஸ்தம்பிக்க வைத்தன. நாங்கள் வசிக்கும் பகுதிகளில் சராசரியாக ஒரு தெருவிற்கு இரு மரங்கள் வீழ்ந்தன. இத்தனை மரங்கள் நாசமாகியதே என்ற பெரும் துயரம் ஒரு புறம், இத்தனை மரங்கள் நம் பகுதிகளில் உள்ளனவா என்ற ஆச்சரியம் மறுபுறம்.

உண்மையில் மரங்கள் விழுந்திருந்த சாலைகளில் பயணம் செய்து முடித்தப்பின், ஏதோ காட்டுக்குள் வந்து விட்டோமோ என்ற உணர்வு வந்தது. காடுகளாய் இருந்த பகுதிகளைத் தானே நாம் ஆக்கிரமித்து நகரங்களாய் மாற்றியுள்ளோம் என்பதும்  புரிந்தது.

உண்மை தான்! சுமார் மூன்று லட்சம் கோடி மரங்கள் பூமியில் உள்ளது. அவற்றில் மனிதன், பல வித தேவைகளுக்காக ஒவ்வொரு வருடமும், 1500 கோடி மரங்களை வெட்டிச் சாய்க்கிறான் எனவும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது ஒரு மனிதனுக்கு சுமார் 400 மரங்கள் என இருந்த விகிதம் வேகமாக குறைந்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலைகளில் சில நல்ல விஷயங்களும் நடக்காமல் இல்லை.

உதாரணமாக, நேற்று மதியம் சுமார் மூன்றரை மணி அளவில் புயல் காற்று நின்றது. அப்போது சென்ற ஆண்டு பெருவெள்ளத்தின்போது, நற்செயல்கள் செய்ததைப் போன்றே நேற்றும் பொது மக்களே களத்தில் குதித்தனர்.

சாலையில் வீழ்ந்து ஆக்கிரமித்துள்ள மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் வந்து தான் அப்புறப்படுத்த வேண்டுமென அவர்கள் காத்திருக்கவில்லை. பல சாலைகளில் அரிவாள், கடப்பாறையுடன் சாலைகளில் இறங்கி கீழே விழுந்த மரங்களை வெட்டிச் சாலையை சீர் படுத்தினர்.

என்ன தான் அரசும் அதிகாரிகளும் தங்களது பணிகளைச் சிறப்பாகச் செய்தாலும்,  பொது மக்களே பிரச்சினையை உணர்ந்து, எந்தப் பணிகளில் களமிறங்கி வேலை செய்கிறார்களோ, அந்த பணிகளின் வெற்றி பெரிதளவில் நிலையானதாகவும் உறுதியானதாகவும் இருக்கிறது.

ஜப்பான் போன்ற நாடுகளில், மக்கள், பொது நல அக்கறையில் மிகுந்த ஆர்வம் காட்டியதுடன், கடின உழைப்பின் மூலமும், நாட்டின் சட்ட திட்டங்களை மதிப்பதன் மூலமும் தழைத்து ஓங்கியுள்ளனர்.

சுயநலம் களைந்து சமுதாயக் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நம் நாடும் உள்ளது. இந்தியாவின் முன்னேற்றம் ஒவ்வொரு குடிமகனின் கைகளிலும் உள்ளது என்பதை உணர்ந்து செயல் படுவோம்.

அணைத்து மக்களுக்கும் வரும் புத்தாண்டு இனியதாகவும், ஆனந்தமாகவும் இருக்க வாழ்த்துக்கள்!!!

விமல் தியாகராஜன் & B+ TEAM

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(1)Dislikes(0)
Share
Dec 132016
 

chick

ஐ.நா. புதிய பொதுச்செயலாளர் ஆனார் அந்தோனியோ குத்தேரஸ்

வாஷிங்டன்:
ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்றுள்ளார்.

பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க கடந்த ஜீலை முதல் பல்வேறு கட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 13 வேட்பாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர். இறுதியில் 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் போர்ச்சுகலின் முன்னாள் பிரதமரும் ஐ.நா.வின் அகதிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான அந்தோனியோ குத்தேரஸ் ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக பதவியேற்றார்.

193 உறுப்பினர்கள் முன்னிலையில் ஐ.நா. சாசனத்தின் நகல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேண்டாமே… வேகாத கோழிக்கறி… அப்புறம் பக்கவாதம்தானாம்…

வாஷிங்டன்:
“வேகாத கோழிக்கறி உணவை சாப்பிட்ட்டால்… அம்புட்டுதான்…  பக்கவாதங்க” என்று அமெரிக்காவின் மிக்சிகன் மாகாண பல்கலைக்கழக நிபுணர் லிண்டா மேன்ஸ்பீல்டு எச்சரித்துள்ளார்.

‘சிக்கன்’ என அழைக்கப்படும் கோழிக்கறி மக்களின் உணவில் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கோழிக்கறியை பலவித உணவாக சமைத்து சாப்பிடுகின்றனர்.

இதை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். மாறாக அரை வேக்காடு நிலையில் அதாவது அரைகுறையாக வேகாமல் சமைத்து சாப்பிட்டால் உடல்நிலையில் கடும் பாதிப்பு ஏற்படும்.

அதாவது பக்கவாதம் நோய் ஏற்படும். காரணம் கோழிக்கறியில் ‘ஜி.பி.எஸ்.’ எனப்படும் ‘குயிலன் பேர் சின்ட்ரோம்’ பாக்டீரியா உருவாகிறது. அவை நரம்பு செல்களில் புகுந்து நரம்பு மண்டலத்தை பாதித்து பக்கவாதம் நோய் ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் மிக்சிகன் மாகாண பல்கலைக்கழக நிபுணர் லிண்டா மேன்ஸ்பீல்டு தெரிவித்துள்ளார்.

வந்துட்டாரு… பாக்., உளவுத்துறைக்கு புதிய தலைவர் வந்துட்டாரு

இஸ்லாமாபாத்:
வந்துட்டாரு… பாக்., உளவுத்துறைக்கு புதிய தலைவர் வந்துட்டாரு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ். அமைப்பின் புதிய தலைவராக நவீத் முக்தார் என்பவரை ராணுவ தளபதி குவாமர் ஜாவெத் பாஜ்வா நியமித்துள்ளார்.

பாகிஸ்தானின் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப்பின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, புதிய தளபதியாக குவாமர் ஜாவெத் பாஜ்வா சமீபத்தில் பொறுப்பேற்று கொண்டார்.

இவர் பதவி ஏற்றதில் இருந்து ராணுவத்துறை பணியிடங்களில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ். அமைப்பு புதிய தலைவராக நவீத் முக்தார் என்பவரை குவாமர் ஜாவெத் பாஜ்வா நியமித்துள்ளார்.

உளவுத்துறை ரகசியத்தை ஊடகத்துக்கு தெரிவித்ததால் ரிஸ்வான் அக்தரின் பதவி பறிக்கப்பட்டதாக தெரியவந்துள்ள நிலையில், அவரை அந்நாட்டின் தேசிய ராணுவ பல்கலைக்கழகத்தின் தலைவராக நியமித்து பாஜ்வா உத்தரவிட்டுள்ளார்.

தற்போது, புதிய ஐ.எஸ். தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவீத் முக்தார், குவெட்டாவில் உள்ள ராணுவ கல்லூரியில் பயின்று, பின்னர் அமெரிக்காவில் போர்க்கலையில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரு ராஜினமா செய்ய.. நிதி மந்திரி பிரதம மந்திரி ஆகிட்டாரு…

வெலிங்டன்:
ஜான் கே ராஜினாமா செய்ய இப்போ நியூசிலாந்து புதிய பிரதமராக பில் இங்கிலீஷ் பதவி ஏற்றுக்கிட்டாருங்க… ஏற்றுக்கிட்டாரு…

நியூசிலாந்து பிரதமராக தேசிய கட்சி தலைவர் ஜான் கே கடந்த 8 ஆண்டுகளாக பதவி வகித்தார். இந்நிலையில் கடந்த வாரம் அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது நியூசிலாந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த பிரதமர் யார்…? யார்? என்று கேள்வி எழ… தலைநகர் வெலிங்டனில் உள்ள அரசு இல்லத்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேசிய கட்சி கூட்டம் நடந்தது.

இதில் நிதி மந்திரியாக இருந்த பில் இங்கிலீஷ் (54) புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து புதிய பிரதமராக  அவர் பதவியேற்றார். துணை பிரதமராக மந்திரி பவுலா பென்னெட் அறிவிக்கப்பட்டார்.

பணத்தட்டுப்பாடு… திருமணத்தில் விருந்து ஒன்லி “டீ” மட்டுமே!

நொய்டா:
நோ… நோ… விருந்து… ஒன்லி… டீ மட்டும் என்று பணத்தட்டுப்பாட்டால் தவித்த குடும்பத்தினர் இப்படி ஒரு விருந்து கொடுத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம், கிரேட் நொய்டாவை அடுத்த நட்டோகி மதியா கிராமத்தை சேர்ந்தவர் மகவீர் சிங். இவரது மனைவி கியானோ.

தங்கள் மகளின் திருமணத்தை இவர்கள் மிகவும் எளிமையான முறையில் நடத்தி உள்ளனர். மகாவீர் மற்றும் அவரது மனைவி இருவருமே மாற்றுத் திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து தம்பதிகள் மிகவும் கவலை அடைந்தனர். திருமணம் நடத்த அவர்களிடம் பணம் இல்லை. பின்னர் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்து விருந்தினர்களுக்கு வெறும் டீ மட்டுமே வழங்கி திருமணத்தை நடத்தி உள்ளனர்.

இவர்களின் நிலைமையை பார்த்து கிராமத்தின் சில இளைஞர்கள் தங்கள் செலவில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். யாரிடமாவது கடன் வாங்கியாவது திருமணத்தை நடத்த இருந்தனர். ஆனால் பணத்தட்டுப்பாடால் அந்த கடனும் கிடைக்காமல் இப்படி திருமணத்தை சிம்பிளாக நடத்தி உள்ளனர்.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Dec 122016
 

aero

இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் கோயில் கட்ட நிலம் ஒதுக்கீடு

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் கோயில் கட்டவும், சுடுகாடு அமைக்க வும் நிலம் ஒதுக்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் இந்துக்கள் மைனாரிட்டிகளாக உள்ளனர். இதனால் இங்கு இந்து கோயில்கள் அதிகளவில் இல்லை. இருக்கும் சில கோயில்களும் தீவிரவாதிகளால் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் 800 இந்துக்கள் வாழ்கின்றனர். அங்கு ஒரு பெரிய கிருஷ்ணர் கோயில் மட்டுமே உள்ளது. சமுதாய கூடம் மற்றும் சுடுகாடு போன்ற தனிப்பட்ட அடிப்படை வசதிகளும் கிடையாது. எனவே புதிதாக கோயில் கட்டவும், சுடுகாடு மற்றும் சமுதாய கூடம் கட்ட நிலம் ஒதுக்கும்படி பாகிஸ்தான் அரசிடம் இந்துக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

அக்கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் வளர்ச்சி குழுமம் பொதுமக்களின் அடிப்படை வசதியை மேம்படுத்தும் வகையில் இந்துக்களின் கோரிக்கையை ஏற்று கோவில் கட்டவும், சுடுகாடு அமைக்கவும் நிலம் ஒதுக்கியுள்ளது.

வேண்டாம்… வேண்டாம்… உங்கக்கிட்ட நிலக்கரியே வேண்டாம்…

பீஜிங்:
வேண்டாம்… வேண்டாம்… உங்கக்கிட்ட இருந்து எங்களுக்கு இனிமே நிலக்கரி வேண்டாம் என்று சீனா தெரிவித்துள்ளது. யாரிடம இருந்து என்கிறீர்களா?

ஐ.நா.சபையால் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்ட வடகொரியா நாட்டில் இருந்து இனி நிரந்தரமாக நிலக்கரி இறக்குமதி செய்ய மாட்டோம் என சீன அரசு அறிவித்துள்ளது.

ஏவுகணை சோதனைகளின் மூலம் உலக நாடுகளை மிரட்டிவரும் வடகொரியா மீது 15 உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கடந்த வாரம் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

வடகொரியாவின் ஒரே கனிமவளம் நிலக்கரிதான். நிலக்கரியை ஏற்றுமதி செய்வதன் மூலமாக மட்டும் ஆண்டுதோறும் சுமார் 400 கோடி டாலர்கள் அந்நாட்டின் கருவூலத்தை நிரப்பி வருவதும், இந்த தொகையில் பெரும்பகுதியை ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை மேம்படுத்தும் திட்டத்துக்காக வடகொரியா அதிபர் செலவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் ‘எரிவதை பிடுங்கினால், கொதிப்பது அடங்கும்’ என்பதற்கு ஏற்ப வடகொரியாவிடம் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வடகொரியாவிடம் இருந்து இனி நிலக்கரி இறக்குமதி செய்ய மாட்டோம் என நிரந்தரமாக தீர்மானித்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.

வடகொரியாவின் அண்டைநாடுகளில் ஒன்றான சீனா ஆண்டுதோறும் சுமார் 70 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்துவந்தது குறிப்பிடத்தக்கது. இது வடகொரியாவுக்கு சரியான சம்மட்டி அடியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நிற்கலை… நிற்கலை… எங்கேயும் நிற்கலை… விரைவில்… அறிமுகம்…

லண்டன்:
நிற்கலை… நிற்கலை… எங்கேயும் நிற்கலை என்று பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருடன் இணைக்கும் வகையில் 17 மணிநேர இடைநில்லா விமானச் சேவையை குவாண்டாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கு… இருக்கு…

லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை இணைக்கும் விமான சேவையை குவாண்டாஸ் நிறுவனம் துவங்க இருக்காம். அதுவும் எப்படி கிட்டத்தட்ட 14,498 கிமீ தூரத்தை கடந்து செல்லும் இடைநில்லா விமானச் சேவையாம். நீண்ட காலமாக பல்வேறு நிறுவனங்களும் அறிவித்து பின் அவற்றை கைவிட்டன.

இப்போது இடைநில்லா விமான சேவையை மார்ச் 2018 முதல் வழங்குவதாக குவாண்டாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
லண்டன் – ஆஸ்திரேலியா வரை இருக்கும் 14,498 கிமீ தூரத்தை இடைநில்லாமல் கடக்க சுமார் 17 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெரியலையேப்பா… தெரியலையே… சாம்சங்… தடுமாற்றம்

சியோல்:
தெரியலையேப்பா… தெரியலையே… என்று சாம்சங் நிறுவனமே தலையை பிய்த்துக் கொள்கிறதாம்… எதற்காக என்று தெரியுங்களா?

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 7 செல்போன்கள் சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதற ஆரம்பித்தன. இதனால் பெரும் குற்றச்சாட்டுக்கள் எழ விற்பனை செய்த அந்த போன்களை சாம்சங் திரும்ப வாங்கியது.

கேலக்ஸி நோட் 7 போனில் நிர்ணயம் செய்யப்பட்டதை விட பெரியளவு பேட்டரி வழங்கப்பட்டதால்தான் பேட்டரிகள் வெடித்ததாக அமெரிக்க நுகர்வோர் பொருட்களின் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.

இதற்கு சாம்சங் அளித்த பதிலில் பேட்டரிகள் வெடித்ததன் காரணம் கண்டறியப்பட்டு விட்டது. வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் பாதுகாப்பான போன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் நோட் 7 போன்கள் வெடித்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் சாம்சங் ஆய்வாளர்களால் இன்னமும் கண்டறிய முடியவில்லை என்பதுதான் உண்மையாம். வெடித்ததற்கான காரணங்களும் தொடர்ந்து மர்மமாக இருப்பது சாம்சங் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து கவலை எழுப்புவதாக அமைந்துள்ளது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Dec 112016
 

game

ரஷ்யாவா… ரஷ்யாவா உதவியது… விசாரிக்க ஒபாமா அதிரடி உத்தரவு

வாஷிங்டன்:

ரஷ்யாவா… ரஷ்யாவா உதவியது… உடனே விசாரணை நடத்துங்க என்ற ஒபாமா உத்தரவிட்டுள்ளது அமெரிக்க அரசியல் அரங்கில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவியது என்று அந்த நாட்டின் மத்திய உளவு அமைப்பு சி.ஐ.ஏ. குற்றம் சாட்ட… ஓகே… விசாரணை நடத்துங்க என்று ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. கடும் போட்டி நிலவிய நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்றார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது ஆதரவாளரான டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா உதவி இருக்கிறது என்று மத்திய உளவு அமைப்பு போட்டுச்சு பாருங்க ஒரு அணுகுண்டை… அதன் குற்றச்சாட்டுகளை பாருங்க…

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசு, டிரம்ப் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முயற்சி செய்ய தீர்மானித்தது. ரஷ்ய அரசுடன் தொடர்புடைய தனி நபர்கள், ஹிலாரியின் ஜனநாயக கட்சி தேசிய குழு, ஹிலாரி பிரசார குழு தலைவர் பிரசாரம் தொடர்பான ஆயிரக்கணக்கான இ-மெயில்களை இணையதளத்தில் தினந்தோறும் திருட்டுத்தனமாக புகுந்து திருடி, விக்கி லீக்ஸ் இணையதளத்தின்மூலம் கசிய விட்டனர்.

ஹிலாரி தோற்பதற்காகவும், டிரம்ப் வெற்றி பெறுவதற்காகவும் இதை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. அப்புறம் என்ன? இதுகுறித:து விசாரணை நடத்துமாறு அதிபர் ஒபாமா அதிரடியாக உத்தரவிட்டார். இதை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. ரஷ்ய அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சைலண்ட்… சைலண்ட்… பேஸ்புக் சைலண்டா… கொடுக்குது புது வசதி

சான்பிரான்சிஸ்கோ:
சைலண்ட்… சைலண்ட்… அமைதியா செய்து அதிரடிக்கணும் என்று பேஸ்புக் முடிவு செய்துடுச்சு தெரியுங்களா?

பேஸ்புக் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய வசதி ஒன்றை அந்நிறுவனம் சத்தமில்லாமல் வழங்கி உள்ளது என்று  தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக் ஆண்ட்ராய்டு செயலியில் எச்டி தரத்தில் இருக்கும் வீடியோக்களை நேரடியாக பதிவேற்றம் செய்யும் வசதியினை அந்நிறுவனம் சத்தமில்லாமல் வழங்கியிருக்கிறது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆண்ட்ராய்டு செயலியில் இந்த அம்சம் செட்டிங்ஸ் மூலம் சென்று இயக்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஆப் பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறதாம். இந்தியாவிலும் இந்த அம்சம் பலருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்றாரு… வர்றாரு… பிப்ரவரி மாதம் வர்றாரு… ஹசீனா வர்றாரு…

டாக்கா:
வர்றாரு… வர்றாரு… பிப்ரவரி மாதம் வர்றாரு… ஹசீனா என்று அந்நாட்டு அரசு தகவல் தெரிவிச்சு இருக்குங்க…

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்காராம்.  இடம் பெயர்தல் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் அக்பர் 2 நாள் பயணமாக நேற்று வங்கதேசம் சென்றுள்ளார்.

அப்போது அவர் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று சந்தித்தார். அப்போது இரு நாடுகளிடையே உள்ள உறவுகள் குறித்து பேசப்பட்டது.

அப்போது இந்தியாவிற்கு வரும்படி ஷேக் ஹசீனாவுக்கு அக்பர் அழைப்பு விடுத்தார். பின்னர் ஷேக் ஹசீனாவின் செய்தித் தொடர்பு செயலாளர் நிருபர்களிடம் கூறுகையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஷேக் ஹசீனா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், இதுதொடர்பான பயணத்திட்டத்தை இருநாட்டு அதிகாரிகளும் தயார் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். வாங்க… வாங்க…

முடியாதா… முடியாதா… கேம்பிரியர்கள் வேதனை…சூப்பர் மேரியோ ரன் கேம்மால்…

டோக்கியோ:
முடியாதா… முடியாதா… சூப்பர் மேரியோ ரன் கேம் விளையாட முடியாதா என்று கேம் பிரியர்கள் நொந்து போய் உள்ளனர். என்ன காரணம் என்கிறீர்களா?

சூப்பர் மேரியோ ரன் கேம் விளையாட நிச்சயம் இண்டர்நெட் இணைப்பு பெற்றிருக்க வேண்டும் என்று கேம் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளதுதான் காரணம்…

அடுத்த வாரம் உலகெங்கும் வெளியாக இருக்கும் ‘சூப்பர் மேரியோ ரன்’ கேம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இந்த கேம் விளையாட இண்டர்நெட் கட்டாயம் தேவைப்படும் என இந்த கேமை உருவாக்கிய ஷிகரு மியாமோடோ தெரிவித்துள்ளார். கேமினை யாரும் திருடாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் கேம்பிரியர்கள் நொந்து போய் உள்ளனர்.

“அம்மா” காலில் விழுந்த அமைச்சர்கள்… இப்போ… சின்ன “அம்மா” காலில் விழுந்து அதிரடி

சென்னை:
மாறாத கலாச்சாரம் எங்களுடையது என்று இந்த அரசியல்வாதிகள் மீண்டும்… மீண்டும்… நிரூபிக்கின்றனர். என்ன விஷயம் என்கிறீர்களா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தாலும் அவரது காலில் விழும் கலாச்சாரத்தை தற்போது சசிகலாவிடமும் தற்போதைய அமைச்சர்கள் தொடர்கின்றனர். இவர் அதிமுக பொதுச்செயலாளர் ஆனால் என்ன செய்வது என்பதாலோ என்னவோ… விஷயத்தை பாருங்க…

சென்னை மெரினாவில் உள்ள ஜெ., நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது சசிகலாவும் வந்திருந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெ., உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்திய அமைச்சர்கள் சிலர் அருகே நின்றிருந்த சசிகலா காலில் திடீரென படீரென்று விழுந்து வணங்கினர்.

இது டி.வி.,களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாற்ற முடியுமா… விழுந்து வணங்கியே பழகிட்டோம்… என்று சொல்லாமல் சொல்கின்றனர் போல் உள்ளது.

பாதுகாப்பு எல்லாம் அப்புறமா? முதலில் எங்க அம்மா…. மோடி அதிரடி

குஜராத்:
பாதுகாப்பு எல்லாம் அப்புறமா? முதலில் எங்க அம்மா என்று சட்டென்று புறப்பட்டு பட்டென்று தன் தாயை சந்தித்துள்ளார் பிரதமர் மோடி.

குஜராத் தலைநகர் காந்திநகரில் நடைபெற இருந்த பாஜ கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற மோடி திடீரென தனது தாயை பார்க்க பயணத்திட்டத்தை மாற்றினார்.

ஹெலிகாப்டரில் சுமார் 2 மணிக்கு குஜராத் தலைநகருக்கு வந்த மோடி தனது அண்ணன் வீட்டில் தங்கியிருக்கும் தனது தாயை பார்க்கச் சென்றார். பாதுகாப்பு ஏற்பாடுகளை புறக்கணித்து தன் தாயை பார்க்க சென்ற அவரை மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

20 நிமிடங்கள் தன் தாயாருடன் இருந்த பிரதமர் மோடி ஆசி வாங்கியப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு பொதுக்க்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

போ… போ… சி.பி.ஐ. காவலுக்கு போ… மாஜி தளபதிக்கு காவல்

புதுடில்லி:
போ… போ… முன்னாள் தளபதியாக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்லப்பட்டுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

அகஸ்டா வெஸ்டா லேண்ட் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகி தற்போது சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து, நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கும் வகையில் ஒப்பந்தம் செய்தர். இதில் ரூ.3,600 கோடி ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பின் மெக்கானிக்காவின் தலைமை அதிகாரி கைது செய்யப்பட்டார். இருப்பினும், முதல்கட்டமாக 3 ஹெலிகாப்டர்களை அப்போதைய அரசு வாங்கியது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 2014ம் ஆண்டு தேர்தலில், பாஜ வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்ததை அடுத்து இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றை நேற்று கொண்டுவந்தார். இந்த ஊழலில் தொடர்புடைய அனைவரையும் சிபிஐ கைது செய்யும் என்றார்.

இத்தகைய சூழலில், விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி, சஞ்சீவ் என்ற ஜீலி தியாகி மற்றும் டெல்லியை சேர்ந்த வக்கீல் கவுதம் கைதான் ஆகிய 3 பேரையும் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இவர்களை 14ம் தேதி வரை சி.பி.ஐ போலீஸ் காவலில் வைக்க டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாதனை மேல் சாதனை… கலக்கல்… விராட் கோலி…

மும்பை:
சாதனை மேல் சாதனை… இன்றும் வேண்டுமய்யா… கோலி… அடிச்சு விளாசுப்பா… என்று கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

என்ன விஷயம் தெரியுங்களா? இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி 2016ம் ஆண்டில் 1000 ரன்களை கடந்து சாதித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.

இதன் 3வது நாளில் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி ஒரு ஆண்டில் (2016) 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

2011ம் ஆண்டு ராகுல் டிராவிட் இந்த  சாதனையை செய்திருந்தார். தற்போது இந்த சாதனைப் பட்டியலில் விராட்கோலியும் இணைந்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டியில் 4000 ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

N.நாகராஜன்

Likes(0)Dislikes(0)
Share
Dec 102016
 

VM

தமிழக மீனவர்களே… ஆந்திராவுக்கு மீன்பிடிக்க போகாதீங்க… புயல்.. புயல்…

சென்னை:
தமிழக மீனவர்கள் ஆந்திர கடற்கரை அருகே மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஏன் தெரியுங்களா? 12ம் தேதி இப்பகுதியில்தான் புயல் கரையை கடக்க போகுதாம்…

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் என்ன சொல்லியிருக்கார்ன்னா…

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் வர்தா புயல், விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 990 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது.

வரும் 2 நாட்களில், இந்த புயல் வடமேற்கு திசையில் நகரும். 12ம் தேதி மாலை நெல்லூருக்கும் காக்கி நாடாவுக்கும் இடையே கரையை கடக்கும். அப்போது சற்று வலுவிழக்கக்கூடும். எனவே தமிழக மீனவர்கள் ஆந்திர கடற்கரை அருகே மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

இயல்பை விட 66 சதவீதம் வடகிழக்கு பருவமழை குறைவாக உள்ளது. இப்படி சொல்லியிருக்காருங்க…

நம்ம கூட்டாளி… இந்தியா… அமெரிக்க செனட்டில் தீர்மானம்…

வாஷிங்டன்:
நம்ம கூட்டாளி… நம்ம பங்காளி என்று அமெரிக்க செனட்டில் மசோதாவே நிறைவேற்றி இருக்காங்களாம்… யாரை இப்படி சொல்லியிருக்காங்க தெரியுங்களா?

பாதுகாப்பு துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளி இந்தியா என்று அறிவித்து அமெரிக்க செனட்டில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதாங்க… இப்போ ஹாட் மேட்டரு…

ஒபாமா அரசின் நிர்வாகம் கடந்த ஜீன் மாதமே இதற்கான முடிவுகளை எடுத்தது. தற்போது சட்டப்பூர்வமாக நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் அஸ்டான் கர்டெர், இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த மசோதா அந்நாட்டு செனட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுது.

இந்தியா வந்துள்ள அஸ்டான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, பாதுகாப்புத் துறையில் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இந்த கூட்டத்தில் தீவிர ஆலோசனை செய்யப்பட்டது.

எழுதலாம்… எழுதலாம்… தமிழிலும் எழுதலாம்… மத்திய அரசு அனுமதி

புதுடில்லி:
எழுதலாம்… எழுதலாம்… தமிழிலும் எழுதலாம் என்ற அறிவிப்பால் செம சந்தோஷத்தில் உள்ளனர் மாணவர்கள்… என்னா விஷயம்ப்பா என்கிறீர்களா?

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை (நீட்) தமிழ் உட்பட 6 பிராந்திய மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு சொல்லிட்டாங்கப்பா…
இதுகுறித்து மத்திய சுகாதாராத்துறை அமைச்சர் அனுப்ரியா பட்டேல் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?

நீட் தேர்வை தமிழ் உட்பட 6 பிராந்திய மொழிகளில் எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவ படிப்பில் மாநில இட ஒதுக்கீடை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம்.

மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டு கொள்கை நீட் தேர்வால் பாதிக்காது என்று சொல்லியிருக்கார். இதனால் மருத்துவப்படிப்பு மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனராம்.

என் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்… விஜய் மல்லையா புலம்பல்

புதுடில்லி:
என் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்… என்று விஜய் மல்லையா புலம்பி உள்ளார். அடப்பாவி இதெல்லாம் ஒரு பிரச்னையா என்று கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆன தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ‘டுவிட்டர், இ – மெயில்’ கணக்குகள், மர்ம நபர்களால் முடக்கப்பட்டு உள்ளன.

மல்லையா இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன், ‘டுவிட்டர், இ – மெயில்’
கணக்குகளை, மர்ம நபர்கள் முடக்கியுள்ளதாக மல்லையா புலம்பி உள்ளார். இதுகுறித்து தன் டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

நான் பயன்படுத்தும், ‘டுவிட்டர், இ – மெயில்’ கணக்குகளை முடக்கியுள்ளனர். டுவிட்டரில், என் சொந்த விஷயங்கள், வங்கிக் கணக்கு விபரங்கள், அவற்றின் பாஸ்வேர்டுகள், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

உடனே நிறுத்துங்க… சிரியாவில் போரை உடனே நிறுத்துங்க

வாஷிங்டன்:
உடனே நிறுத்துங்க… சிரியாவில் போரை உடனே நிறுத்துங்க என்று ஐ.நா.வில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ நகரை முழுமையாக விடுவிப்பதற்காக அதிபர் ஆதரவு படையினர் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அலெப்போ நகரில் பெரும்பாலான இடங்களை இழந்துள்ள நிலையில், 5 நாள் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்து இருந்தனர்.

இருப்பினும், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள அலெப்போ நகரில் மேலும் சில பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் சிரிய ராணுவம் முன்னேறி வருகிறது.

இந்நிலையில், சிரியாவில் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

கனடா சார்பில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆதரவாக 122 பேர் வாக்களித்தனர். ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

லெபனான், ஈராக், தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. எனவே சிரியாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போங்க… போங்க… அதிபர் பதவியில் இருந்து போங்க

சியோல்:
போங்க… போங்க… அதிபர் பதவியில் இருந்து போங்க என்று குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேறியதை அடுத்து தென்கொரிய அதிபர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்

தென்கொரியாவில் செனூரி கட்சி சார்பில் அதிபராக பதவி வகித்து வந்தார் பார்க் ஜியுன் ஹைக்கு எதிராக சமீப காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்தது.

இதையடுத்து மக்களின் போராட்டங்கள் அதிகரிக்க… அவரை பதவியில் இருந்து நீக்க வழிசெய்யும் குற்ற விசாரணை தீர்மானத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன.

இந்த தீர்மானம் மீது பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஆளும் செனூரி கட்சியை சேர்ந்த கணிசமான உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். தொடர்ந்து அதிபர் பார்க் ஜியுன் ஹை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

பார்க் ஜியுன் ஹை அதிபர் பதவியில் தொடர வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் இனி அரசியல் சாசன கோர்ட்டுக்கே உண்டு. இந்த விசாரணையிலும் பார்க்குக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவர் நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

தேன் கூட்டில் கல்வீசாதீங்க… டிரம்பிற்கு தொழிலதிபர்கள் கண்டனம்

வாஷிங்டன்:
தேன் கூட்டில் கல்வீசி கொட்டு வாங்கிக்காதீங்க என்பதுபோல் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு, அந்நாட்டு தொழிலதிபர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதற்காக தெரியுமா?

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் ஜன.20-ம் தேதி புதிய அதிபராக பதவி ஏற்கிறார். பிரசாரத்தின் போது வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து அங்கிருந்து இறக்குமதி செய்யும் கம்பெனிகளுக்கு 35 சதவீதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்து இருந்தார்.

தற்போது வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார். வெளிநாட்டு தொழிலாளர்களை பெரிய அளவில் வெளியேற்றும் டிரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்க தொழிலபதிபர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இப்போவே புகைச்சல் ஆரம்பிச்சுடுச்சு…

இம்புட்டா… அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைவு… 800 கிலோ போதைப்பொருள்

கொழும்பு:
இம்புட்டா… அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துதான் போய் உள்ளனர். எதற்காக தெரியுங்களா?

கொழும்பு துறைமுகத்தில் கன்டெய்னருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 கிலோ ‘கோகைன்’ போதைப்பொருள் கண்டுபிடித்தபோதுதான் அதிகாரிகளின் ரியாக்சன் இப்படி இருந்தது. இதன் மதிப்பு ரூ.1,200 கோடியாம்.

ஈகுவடார் நாட்டில் இருந்து கடந்த அக்டோபர் 2-ந் தேதி புறப்பட்ட ஒரு கப்பல், இந்தியாவுக்கு வரும் வழியில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகத்தை அடைந்தது.

இந்த கப்பலில் போதைப்பொருள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க இலங்கை போலீசின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையிட்டனர்.

அப்போது ஒரு கன்டெய்னருக்குள் 800 கிலோ ‘கோகைன்’ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1,200 கோடி ஆகும்.

இதை பறிமுதல் செய்த போலீசார், ஈகுவடார், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உளவுத்துறை உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

என்னப்பா… இப்படி செய்யறீங்களேப்பா… போதையில் சிக்கி தவிக்குது அமெரிக்கா

நியூயார்க்:
என்னப்பா… இப்படி செய்யறீங்களேப்பா… என்று உலக அண்ணன் அமெரிக்கா கையை பிசைஞ்சுக்கிட்டு இருக்காம்… என்ன விஷயம் தெரியுங்களா?

மிதமிஞ்சிய போதை மருந்து காரணமாக ஆண்டுக்கு 50,000 அமெரிக்கர்கள் இறப்பதாக வெளியான புள்ளி விவரங்கள் தான் இப்போ செம பரபரப்பை கிளப்பி உள்ளன.

வல்லரசு நாடாகத் திகழ்ந்தாலும் போதை மருந்துகளை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்து திணறிக்கிட்டுதான் இருக்கு. இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரம்தான் செம ஹாட் மேட்டருங்க…

கார் விபத்து, துப்பாக்கி சூடு ஆகியவற்றால் ஓராண்டில் இறக்கும் அமெரிக்கர்களை விட போதை மருந்து பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்காம். ஆண்டுக்கு சுமார் 50,000 அமெரிக்கர்கள் போதை மருந்து பழக்கத்தால் இறக்கின்றனர் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

ஹெராயின் என்ற போதை மருந்தால் 12,989 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக ஹெராயின் உட்கொள்ளுவதால் தினசரி 44 பேர் இறப்பதாக கூறப்படுகிறது. இதை என்ன செய்ய போறீங்க… டிரம்ப்…

N.நாகராஜன்

Likes(0)Dislikes(0)
Share
 Posted by at 6:51 pm
Dec 092016
 

2

வேண்டாம் நிறுத்துங்க… பாக்.,கிற்கு அமெரிக்கா கண்டிப்பு

வாஷிங்டன்:
வேண்டாம்… நிறுத்துங்க என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்பு காட்டியுள்ளது. எதற்காக என்று தெரியுங்களா?

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆஷ்டன் கார்ட்டர் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். அப்போது அவர் விமானத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானை நிலைகுலைய வைத்ததுடன், அங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பயங்கரவாதிகளுக்கும்,
இந்தியாவைக் குறித்துவைத்துக் தாக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கும் புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் தொடரக் கூடாது.

இந்த உண்மையை பாகிஸ்தான் அங்கீகரிப்பது முக்கியமாகும். பாகிஸ்தான் இவ்வாறு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

சாலமன் தீவை ஆட்டிய நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை

ஹோனைரா:
சுனாமி ஏற்படும் என்ற அறிவிப்பாலும், நடுக்கி எடுத்த நிலநடுக்கத்தாலும் சாலமன் தீவுகளை சேர்ந்து மக்கள் வெகுவாக அச்சத்தில் உள்ளனர்.

சாலமன்தீவுகளில் உள்ளூர் நேரப்படி இன்று (9ம் தேதி) காலை 9.38 மணிக்கு (இந்தியா நேரத்தில் நேற்று 8ம் தேதி இரவு 11.30
மணியளவில்) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின.

சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

தெற்குபசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான சாலன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது கிராகிரா பகுதியில் கடலுக்கு அடியில் தென்மேற்கே 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.0 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து அடுத்த 3 மணி நேரத்தில் சுனாமி தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து உயிர் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

கிராகிரா பகுதி முழுவதும் கட்டடங்கள் குலுங்கியதாகவும், சாலைகளில் பெரும் பள்ளங்கள் தோன்றியதாகவும் இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெகுவாக அச்சத்தில் உள்ளனர்.

மீட்காமல் விடமாட்டோம்… சிரிய ராணுவம் கிடுகிடு முன்னேற்றம்

டமாஸ்கஸ்:
மீட்காமல் விடமாட்டோம்… விடமாட்டோம் என்று அலெப்போ நகரை முழுமையாக மீட்கும் முனைப்பில் சிரிய ராணுவம் கிடுகிடுவென்று முன்னேறி வருகிறது.

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போர் 6-வது ஆண்டாக நீடித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ நகரை முழுமையாக மீட்க அதிபர் ஆதரவு படையினர், கடந்த மாதம் மத்தியில் இருந்து அங்கு கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சண்டையில், அலெப்போ நகரில் உள்ள பழைய நகரம் உட்பட நான்கில் மூன்று பகுதியை சிரிய ராணுவத்திடம் கிளர்ச்சியாளர்கள் இழந்துவிட்டனர். அலெப்போ நகரில் மேலும் சில பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் சிரிய ராணுவம் முன்னேறி வருகிறது.

செல்லாது… நாளை முதல் பஸ், ரயில்களிலும் பழைய நோட்டு செல்லாது

புதுடில்லி:
செல்லாது… செல்லாது… நாளை முதல் இங்கேயும் செல்லாது என்று அறிவிச்சுட்டாங்க… (இப்ப மட்டும் வாங்குறாங்களா என்ன?)

பஸ்கள், ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் நாளை 10ம் தேதிக்கு பிறகு பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் என்று மத்திய அரசு அதிரடித்தது. மக்கள் தங்களிடமுள்ள பணத்தை வங்கியில் டிபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என்றது.

இருந்தாலும் மருத்துவமனை, பஸ் போக்குவரத்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயில் பயணங்களுக்கு விமான பயணத்திற்கான கட்டணங்கள் செலுத்த, டிச.15 வரை பழைய ரூ.500 நோட்டை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு வங்கியில் பழைய ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை மாற்றுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பஸ்கள், மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் பயணத்திற்கு வரும் பயணிகள் கொடுக்கும் பழைய ரூ.500 நோட்டுக்கள் நாளை 10ம் தேதிக்கு பிறகு ஏற்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆஹா… இம்புட்டு வசதியா என்று ஸ்மார்ட் போன் ரசிகர்கள் கொண்டாட்டம்

ஆஸ்டின்:
ஆஹா… இம்புட்டு வசதியா என்று ஸ்மார்ட் போன் ரசிகர்கள் கூத்தாடுகின்றனர் இந்த தகவலை கேள்விப்பட்டு… என்ன விஷயம் என்றால்…

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A3 (2017) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி மக்களை லுக் விட செய்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இணையத்தில் பலமுறை கசிந்திருக்கிறது. அக்டோபர் மாதத்தில் A5 (2017)ம், இம்முறை A3 (2017) ஸ்மார்ட்போன் பற்றிய தகவலும் லீக்காகி உள்ளது.

கேலக்ஸி A3 (2017) ஸ்மார்ட்போனில் வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கைரேகை ஸ்கேனர் ஹோம் பட்டனில் பொருத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்துள்து. ரியர் பேனல் கிளாஸ் மூலம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறாதாம்.

1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 சிப்செட் கொண்டிருக்கும். மெமரியை பொருத்த வரை 2 GB ரேம், 8GB / 16GB இன்டர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, கேமரா 13 எம்பி பிரைமரி கேமராம், 8 எம்பி செல்பி கேமரா, 4G LTE, 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் GPS போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் இருக்கும் என்று சொல்றாங்க…

N.நாகராஜன்

Likes(0)Dislikes(0)
Share
Dec 082016
 

PIA

5 கோடி சேல்ஸ்ங்கோ… காலர் தூக்கி விட்டுக்குது சோனி…

டோக்கியோ:
அம்புட்டு சேல்ஸ்சா… அட… என்று புருவம் உயர்கிறது மக்களுக்கு இந்த தகவலை கேட்டு… என்ன விஷயம் தெரியுங்களா?

சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கன்சோல்கள் உலகம் முழுக்க சுமார் 5 கோடி அளவிற்கு விற்று தீர்த்துள்ளதாம். இதைதான் அந்த நிறுவனம் பெருமையாக சொல்ல…. மக்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

கேமிங் உலகில் பல்வேறு சாதனங்களை வெளியிடுவதில் டாப் லிஸ்டில் இருக்குது சோனி நிறுவனம். தனது பிளே ஸ்டேஷன் 4 கன்சோல்களின் விற்பனையில் புதிய மைல் கல் சாதனை புரிந்திருக்கிறது.

உலகம் முழுக்க சுமார் 5 கோடி பிளே ஸ்டேஷன் 4 கன்சோல்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. 2013-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிளே ஸ்டேஷன் 4 இது வரை இம்புட்டு விற்பனையாகி பெரிய சாதனை படைத்துள்ளதாம்.

பேட்டரி நிக்கலையே… சார்ஜ் நிக்கலையே… வாடிக்கையாளர்கள் புலம்பல்

சான்பிரான்சிஸ்கோ:
அய்யா… தாங்க முடியலை… ஏன் இப்படி என்று வாங்கியவர்கள் நொந்து போய் கிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எதற்காக இந்த புலம்பல் என்கிறீர்களா?

ஆப்பிளின் மேக்புக் ப்ரோ 2016 பதிப்புகளில் பேட்டரியால் அதிகம் கோளாறுகள் ஏற்படுவதாக அதை வாங்கியவர்கள் குற்றம் சாட்டி உள்ளதுதான் இதற்கு காரணம்.

ஆப்பிள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் மேக்புக் ப்ரோ 2016 பதிப்புகளில் கிராபிக்ஸ் கார்டு பிரச்சனை காரணமாக பேட்டரி பேக்கப் சார்ந்த பிரச்சனை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். இப்பிரச்சனை காரணமாக 10 மணி நேரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்ட பேட்டரி பேக்கப், மிக குறைந்த நேரத்திற்குள்ளாகவே தீர்ந்து விடுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பறந்த விமானம் விழுந்து நொறுங்கியது… 47 பேர் பலியான சோகம்…

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 47 பேரும் பலியான அதிர்ச்சி சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று, கைபர் பாக்துன்க்வா மாகாணம் சிட்ரல் பகுதியில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டது. இதில் 47 பேர் பயணம் செய்தனர். அவர் நினைத்திருப்பார்களா? இதுபோன்ற வேதனையை…

புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டது.  இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காணாமல் போன விமானம் பிப்பிலியன் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதில் பயணம் செய்த 47 பேரும் பலியாகிவிட்டனர். இதில் 2 குழந்தைகள், 9 பெண்கள் அடங்குவர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

ஏமனில் கடலில் சென்ற படகு மாயம்… 60 பேர் கதி என்ன?

சனா:
உள்நாட்டு போர் நடந்து வரும் ஏமனில் படகு ஒன்று திடீரென மாயமானது. இதனால் அதில் பயணம் செய்த 60 பேர் நிலை தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு போர் நடந்து வரும் ஏமனில் ஹட்ராமாவ்த் பகுதியை சேர்ந்தவர்கள் படகு மூலம் கடலில் பயணம் மேற்கொண்டனர். சொகோட்ரா தீவு அருகே அந்த படகு திடீரென மாயமானது.

தேடுதல் பணி தீவிரமானாலும் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லாததால் அதில் பயணம் செய்த 60 பேர் என்னவானார்கள் என்பது தெரியாத நிலை நீடிக்கிறது.

படகு கடலில் மூழ்கி அவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குண்டு வீச்சில் போயிடுச்சு… முழுசா என்வீடு அழிஞ்சிடுச்சு…

டமாஸ்க்ஸ்:
போயிடுச்சு… குண்டுவீச்சில் என் வீடு சுத்தமாக அழிஞ்சு போயிடுச்சு என்று சிரியா போர் கொடூரம் பற்றி 7 வயது சிறுமி சோகத்துடன் கூறிய சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அடங்கும்ங்க. 5 லட்சம் பேர் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்க…

இருந்தாலும் இன்னும் சண்டை நடந்து வருது. இந்நிலையில் போரின் கொடூரம் குறித்து கிழக்கு அலைப்போ நகரில் வசிக்கும் பானா அல்-அபெத் என்ற 7 வயது சிறுமி டுவிட்டரில் படத்துடன் சொல்லியிருக்கா பாருங்க… அதுதான் செம வேதனை.

குண்டு சத்தம் கேட்டபடி உள்ளது. இதனால் அச்சத்தில் வாழ்கிறோம். குண்டு வீச்சில் எனது வீடு இடிந்து தரைமட்டமாகிவிட்டது. எனவே வேறு பகுதியில் தங்கியிருக்கிறோம்’ என உருக்கமாக தெரிவித்து இருக்கிறாள்.

7 வயது சிறுமியின் இந்த தகவல் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
 Posted by at 2:11 pm
Dec 072016
 

CM

மோடியா இந்த லேடியா என
சிம்மமாய் நீ கர்ஜித்தபோது,
அமோக வெற்றி தந்து
அழகு படுத்தியது எம் கூட்டம்!

செய்வீர்களா செய்வீர்களா என
ஒவ்வொரு முறையும் நீ சீறியபோது,
சீரும் சிறப்பும் செய்து
சிலிர்க்க வைத்தது எம் கூட்டம்!

ஒற்றைப் பெண்ணாய் போர்க்களத்தில்,

ஒட்டு மொத்த கூட்டத்தை

உன் ஒரு இரும்புக்கரம் எதிர்க்க,

மற்றொரு கரமாய் துணை நின்றது எம் கூட்டம்!

இத்தனை செய்தும்,
எம் கூட்டம் தந்த அழகு அரியணையை
விட்டுவிட்டு ஏன் சென்றாய்?

நீ விட்டுச் சென்றாலும்
நாங்கள் விடுவதாயில்லை…

சிம்மாசனம் சிங்கத்திற்கே!
ஆம், எங்கள் மனதில்
என்றுமே நீ வாழ்ந்துக் கொண்டிருப்பாய்!

ஏனெனில்…
மரணம் மனிதர்களுக்குத் தான்
அவதாரங்களுக்கல்ல..!!

– விமல் தியாகராஜன்

Likes(4)Dislikes(0)
Share
Dec 032016
 

4
சில மாடல் செல்போன்களில் வாட்ஸ் அப்… உஷாரய்யா… உஷாரு…

நியூயார்க்:
சில மாடல் செல்போன்களில் வாட்ஸ் அப் சேவை இந்த ஆண்டுடன் “கட்” செய்யப்படுகிறது என்று தகவல் பயனாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகெங்கும் அதிகம் பேர் பயன்படுத்தும் “ஆப்” என்றால் அது வாட்ஸ் அப் ஆகதான் இருக்கும். அந்தளவிற்கு மக்களுடன் மக்களாக பின்னி பிணைந்து விட்டது.

ஸ்மார்ட்போன்களில் பிரபலமான குறுந்தகவல் அனுப்ப வசாயாக இருக்கும் வாட்ஸ்அப் சில நாட்களுக்கு முன் தன் ஏழு வயதை கடந்தது.

இனி வரும் மாதங்களில் வாட்ஸ் அப்பில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவன இணைய பக்கத்தில் தெரிவிச்சு இருக்காங்க…

வாட்ஸ்அப் தொடங்கப்பட்ட 2009 ஆண்டில் மக்கள் பயன்படுத்திய கருவிகளில் சுமார் 70 சதவிகித இயங்குதளங்கள் பிளாக்பெரி மற்றும் நோக்கியா நிறுவனங்களுடையதாக இருந்தது.

இன்றைய மொபைல் போன்களில் கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் இயங்குதளங்கள் சுமார் 99.5 சதவீதம் இருக்கிறது. இதனால் இனி வரும் ஆண்டுகளில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இயங்குதளங்களுக்கு ஏற்ப வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவையானது பின்வரும் இயங்குதளங்களில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாக்பெரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெரி 10
நோக்கியா S40
நோக்கியா சிம்பயான் S60
ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2
விண்டோஸ் போன் 7
ஐபோன் 3GS / ஐஓஎஸ் 6. எனவே சீக்கிரம் வேறு போனுக்கு மாறுங்க… வாட்ஸ் அப் சேவையை யூஸ் பண்ணிக்கோங்க…

அனுமதி கொடுங்க… கஞ்சா பயிரிட… 400 விவசாயிகள் காத்திருப்பு… இது கனடாவில்…

டொரான்ட்டோ:
அனுமதி கொடுங்க என்று 400 பண்ணை விவசாயிகள் அரசிடம் கேட்டு இருக்காங்களாம். எதற்காக தெரியுங்களா?

கனடா நாட்டின் பெரும்பான்மை மலர் தோட்ட விவசாயிகள் தற்போது கஞ்சா பயிர் வளர்ப்பதில் செமத்தியாக ஆர்வம்காட்டி வருகின்றனர். என்னாது என்று ஆச்சரியம் படாதீங்க…

கனடா நாட்டில் மருத்துவ தேவைக்காக மட்டும் கஞ்சாவை பயன்படுத்த அனுமதிச்சாங்க… இப்போ… கேளிக்கைக்காகவும் அனுமதி கொடுக்க இருக்காங்க… இதனால் அரசு வருமானம் கிடுகிடுவென்று உயரும்.

இந்த புதிய சட்டத்திருத்தம் வந்தால் இரண்டே ஆண்டுகளில் சுமார் 6 லட்சம் கிலோவாக தேவை உயரலாம் என்பதால் ஒன்ட்டாரியோலா, பிரின்ஸ் எட்வர்ட் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பண்ணை விவசாயிகள் லாவெண்டர் போன்ற நறுமண மலர்களை பயிரிடுவதற்கு பதிலாக இப்போதே கஞ்சா விளைவிக்க தொடங்கி விட்டனர்.

ஒவ்வொரு பண்ணையில் இருந்தும் சுமார் 100 முதல் 10 ஆயிரம் கிலோ கஞ்சா பயிரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமா.. சுமார் 400 பண்ணை விவசாயிகள் தங்களது நிலங்களில் கஞ்சா பயிரிட அனுமதி கேட்டு அரசை அணுகியுள்ளனர்.

நவம்பர் மாத சண்டையில் 1950 ராணுவ வீரர்கள் பலி…

மொசூல்:
ஒரே மாதத்தில் 1950 ராணுவ வீரர்கள் பலி என்ற தகவல் பெரும் வேதனையை கிளப்பினார்… 926 பொதுமக்களும் பலியாகி உள்ளனர் என்றும் சொல்றாங்க… இது எங்க என்று கேட்கிறீர்களா?

ஈராக்கில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்ற மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக உள்ளது ஈராக் ராணுவம்.

இதற்காக நடந்த சண்டையில் மொசூலின் பெரும்பாலான பகுதிகள் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சண்டையில் 1959 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனராம். இதேபோல் 926 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 930 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

அழகான ஆண் அழகனாம் ராக்… கருத்துகணிப்பில் பெற்றார் முதலிடம்

வாஷிங்டன்:
இவரா… இவரா என்று ஹாலிவுட்டே வியந்து போய் பார்க்கிறது இந்த சர்வே முடிவுகளை கண்டு. என்ன விஷயம் என்கிறீர்களா?

ஹாலிவுட்டில் பல முக்கிய பிரபலமான நடிகர், நடிகைகள் உண்டு. உலக அளவில் நிறைய ரசிகர்களை தங்கள் பக்கம் தானாக வரவைத்துள்ளனர். அந்த வரிசையில் பிரபல குத்து சண்டை வீரராக இருந்த அமெரிக்காவை சேர்ந்த ட்வெய்ன் ஜான்சன் ஹாலிவுட் படங்களில் நிறைய நடிதுள்ளார். அதாங்க… ரெஸ்லிங் வீரர் “ராக்”தான்.

முழு நடிகராக மாறியிருக்கும் இவர் சில படங்களில் குழந்தைகளோடு காமெடியும் செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று உலகின் கவர்ச்சிகரமான ஆண் பற்றிய கருத்து கணிப்பை நடத்த அதில் ராக்கை ரசிகர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்க…

புதிய இசை ஆல்பம்… ப்ரோமோஷனுக்காக மொட்டை மாடியில் பாடிய “லேடி காகா”

லண்டன்:
பாட்டு தொகுப்பை பிரபலமாக்கணும்ன்னா… தெருவுக்கு மட்டும் இல்ல… மொட்டைமாடிக்கும் போகலாம்ன்னு புது ரூட்டை போட்டுள்ளார் பிரபல பாப் இசைப் பாடகி லேடி காகா.

பாப் இசை உலகில் மிகப்பிரபலமான பாடகி என்றால் அது லேடி காகா தான். இவர் “ஜோவன்” என்று பெயரிடப்பட்டுள்ள தனது புதிய இசை ஆல்பத்தை பிரபலப்படுத்த முடிவு செய்தார்.

இதற்காக லண்டன் நகரில் உள்ள வெஸ்ட் பீல்ட் மால் என்ற வணிக வளாக மொட்டை மாடியில் அவர் தனது ரசிகர்களுக்காக பிரத்யேக ‘ப்ரமோ’ நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்ட லேடி காகா, தனது ‘சூப்பர் ஹிட்’ பாடல்களை வெகு உற்சாகமாக பாடி அசத்தினார் பாருங்க… ரசிகர்களும் உற்சாகமடைந்துவிட்டனர்.

ஏலம் கேட்கலையோ… ஏலம்… கையுறை… சுருட்டு ஏலம்… ஏலம்…

நியூயார்க்:
ஏலம் கேட்கலையோ… ஏலம்… ஏலம்ங்க… குத்துச்சண்டை வீரர் முகமது அலி கையுறை, கியூபாவின் மறைந்த அதிபரின் கையொப்பமிட்ட சுருட்டு ஆகியவை ஏலமுங்க… ஏலம்…

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஜீலியன்ஸ் என்ற பிரபல ஏல நிறுவனம் உள்ளது. மறைந்த பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடுவதில் இந்த நிறுவனம் நம்பர் 1.

இந்நிறுவனம்தான் தற்போது குத்துச்சண்டை வீரர் முகமது அலி பயன்படுத்திய கையுறை, கியூபா முன்னாள் அதிபரின் கையொப்பமிட்ட சுருட்டு ஆகியவற்றை ஏலத்துக்கு வைச்சிருக்காங்க…

காலரா பரவியதை தடுக்க முடியலை… மன்னிச்சுங்கோங்க… மன்னிச்சுக்கோங்க…

நியூயார்க்:
மன்னிச்சுங்கங்க… மன்னிச்சுக்கங்க என்று தன் பதவி காலத்தில் முதல்முறையாக இப்போ மன்னிப்பு கேட்டுள்ளார் ஐ.நா. பொதுசெயலாளர் பான் கி மூன். எதற்காக தெரியுங்களா?

கரிபியன் கடற்பகுதியையொட்டி, வட அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டுவரை ‘காலரா’ எனப்படும் வாந்தி பேதியால் யாரும் பாதிக்கப்பட்டதில்லை.

ஆனால், அதன்பிறகு அங்கு சென்ற ஐக்கியநாடுகள் அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த நேபாள நாட்டு ராணுவ வீரர்கள் தாங்கள் பயன்படுத்திய குப்பைக் கழிவுகளை ஹைத்தி நாட்டில் ஓடும் பிரதான ஆற்றில் வீசியதால் கடந்த 2011-ம் ஆண்டு இங்கு காலரா நோய் வெகுவாக பரவ குறுகிய காலத்தில் சுமார் 80 ஆயிரம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

ஐ.நா.சபை அமைதிப்படையின் நற்பெயருக்கும் நோக்கத்துக்கும் களங்கம் கற்பித்துவிட்ட இந்நோயை கட்டுப்படுத்த தவறிய வேளையிலும், இந்நோயின் தாக்கத்துக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக சுமார் 20 கோடி அமெரிக்க டாலர்களை தொகுப்பு நிதியாக திரட்ட ஐக்கிய நாடுகள் சபை முனைப்பு காட்டி வருகிறது.

உரிய நேரத்தில் இந்த நோயை கட்டுப்படுத்த தவறியமைக்காக ஐக்கிய நாடுகள் சபை வருத்தம் தெரிவிப்பதாகவும், ஹைத்தி மக்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். இவர் தன் பதவிக்காலத்தில் எதற்காகவும் மன்னிப்பு கேட்டதில்லை. இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பரவி வரும் காட்டுத்தீ… 10 பேர் பலி…. 1200 ஏக்கர் சேதம்…

நியூயார்க்:
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாக… 1200 ஏக்கர் நிலம் சேதம் அடைந்துள்ளதாம்.

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் காட்டுத் தீ பரவியது. இதனால் காட்லின்பர்க், பிஜியின் போர்ஜ் ஆகிய நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 28-ந்தேதி காட்லின் பர்க் நகர காட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரால் ஏற்பட்ட இந்த தீயின் வேகம் அதிகமாகி கிடுகிடுவென்று பரவி வருகிறது.

இந்த தீயில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். 45 பேர் காயம் அடைந்துள்ளனர். 700 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.
1200 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன கப்பல்களை கண்காணித்து வர்றோம்… கடற்படை தளபதி தகவல்

புதுடில்லி:
சீனக் கடற்படையின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் நடமாட்டத்தை இந்தியப் பெருங்கடல் பகுதியில் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

தேசிய கடற்படை தினத்தையொட்டி, டில்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் தலைமைத் தளபதி சுனில் லாம்பா கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை சீனக் கடற்படை நிறுத்தி வைத்து அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படை நிறுத்தி வைத்துள்ளது. இது பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து வந்துள்ளது.

இப்போது வரையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையின் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் நிறுத்தப்பட்டு வருவது கவலையளிக்கும் செயலாக உள்ளது. இதன் இயக்கத்தையும் இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

கப்பல்களின் நடமாட்டத்தை விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Dec 022016
 

FB

பேஸ்புக் நிறுவனம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க முடிவு

நியூயார்க்:
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க பேஸ்புக் நிறுவனம் எப்.பி. ஸ்டார்ட் (FbStart) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த திட்டத்தின் படி இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘கவுட்லூட்’ எனும் வர்த்தக இணையத்தளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தளத்தின் வியாபாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனம் சுமார் 40,000 டாலர் அதாவது இந்திய ரூபாயில் ரூ.27,34,798.00 மதிப்புடைய சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட எப்.பி. ஸ்டார்ட் (FbStart) திட்டத்தின் மூலம் கவுட்லூட் தளமானது பேஸ்புக்கின் நேரடி உதவி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பேஸ்புக் டெவலப்பர் மற்றும் உலகத்தர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் கவுட்லூட் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“நீ ஆணழகனா… இல்லவே இல்ல…” நெட்டிசன்கள் வறுத்தெடுப்பு

ஏதென்ஸ்:
நீ ஆணழகனே இல்ல… அசிங்க அழகன் என்றுதான் நெட்டிசன்கள் செம கடுப்பாகி வருகின்றனர். எதற்காக தெரியுங்களா?

ஏதென்ஸ் நகரில் நடந்த ஆணழகன் போட்டியில் கியான்னிஸ் மேகோஸ் என்பவர், தன்னை நடுவர் நம்பர் 1 ஆக அறிவிக்காத காரணத்தினால் அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்குதான் இப்படி நெட்டிசன்கள் எபெக்ட் கொடுத்துள்ளனர்.

கிரேக்கம் ஏதென்ஸ் நகரில் இந்த ஆண்டிற்கான வைர கிண்ணம் ஆணழகன் போட்டி நடந்தது. கிரேக்கத்தை சேர்ந்த பிரபல பாடிபில்டர்களில் ஒருவரான கியான்னிஸ் மேகோஸ் என்பவர் இதில் கலந்துக் கொண்டார்.

ஆனால் நடுவர்களின் கணிப்பு மேறுமாதிரி அமைய வேறு ஒருவர் சாம்பியன் ஆனார். இதனால் ஆத்திரம் அடைந்த கியான்னிஸ் நடுவர்களை தாக்கத் தொடங்கினார். அர்மாண்டோ மார்க்வெஸ் என்ற நடுவரை தூக்கி வீசிய சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த இந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சொகுசு வாங்கினியா… வந்து அரசுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி கட்டு!

பீஜிங்:
வா… வா… சொகுசு கார் வாங்கினியா… வந்து அரசுக்கு 10 சதவீதம் கூடுதல் வரியை கட்டு என்று சீனா கெடுபிடி காட்டியுள்ளது. ஆமாங்க… விஷயம் இதுதான்.

இறக்குமதி செய்யப்படும் விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கு சீன அரசு கூடுதலாக 10 சதவீதம் வரியை விதித்துள்ளது. இந்த வரிவிதிப்பு அந்நாட்டில் அமலுக்கு வந்துள்ளது.

சீனாவில் காற்று மாசுபாடு என்பது பெரும் பிரச்னையாகவே இருந்து வருகிறது. இதை சரி செய்ய முடியாமல் சீனா மூச்சு திணறி வருகிறது. இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் விலையுயர்ந்த சொகுசுக் கார்களுக்குக் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கும் நடைமுறையை, சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

அனந்னாக்கில் பயங்கரவாதி சுட்டுக் கொலை… ராணுவ வீரர்கள் அதிரடி

அனந்னாக்:
அனந்னாக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

பாகிஸ்தானில் இருந்து இருநாட்டு எல்லை வழியாக இந்தியாவின் ஜம்மு- காஷ்மீருக்குள் நுழையும் தீவிரவாதிகள் இந்திய ராணுவ முகாம் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நக்ரோட்டாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.  இதையடுத்து அந்த மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் என்பதன் மூலம் ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர்.

இந்நிலையில் அனந்னாக் மாவட்டம் டூரு பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வர  அங்கு விரைந்து சென்ற வீரர்கள் பயங்கரவாதி ஒருவனை சுட்டுக் கொன்றனர்.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Share
Share