Nov 252017
 
வாழ்வை மாற்றிய இரு கேள்விகள்!

முரளி ஒரு பேச்சளார். சகஜமாக பழகக்கூடியவர். உற்சாகமான மனிதர். நிறைய புத்தகங்கள் வாசித்து, பல விஷயங்களை தெரிந்து வைத்துள்ளவர். பாசிட்டிவான மனிதர். அனால்.. சுமார் பத்து வருடங்களுக்கு முன் ஹோசூர் பகுதியில் நடந்த ஒரு சோக சம்பவம் அவரது வாழ்வை புரட்டிப் போட்டு, அவரை நிலைக்குலைய வைத்தது. 21/4/2007 அன்று முரளி இரு சக்கர வண்டியில் தனது குடும்பத்துடன் சென்றுக் கொண்டிருந்தார். வண்டியின் முன் புறத்தில் அவரது பத்து வயது பெண் குழந்தை நின்றுக்கொள்ள, அவரது துணைவியார் […]

Share
Nov 162017
 
இலை உதிர்வதைப் போல..

முப்பத்தேழு வயது அவருக்கு. கும்பகோணத்துக்காரர். திருமணமாகி ஒரு குழந்தை. மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறது. மென்பொருள் துறையில்தான் வேலை. பிடிஎம் லே-அவுட்டில் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கிறார். எப்பொழுதோ பேருந்துப் பயணத்தில் அறிமுகம். அதன் பிறகு நிறைய முறை சந்தித்திருக்கிறோம். பெங்களூரில் சில கூட்டங்களுக்கும் வந்திருக்கிறார். அலைபேசியில் பேசிக் கொள்வோம். ‘சாகற வரைக்கும் வீட்டுக்கடன் கட்டுவேன்’ என்று ஒரு முறை சொன்னது நினைவில் இருக்கிறது. கடன் முடிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் செத்துவிட்டார். நேற்றிரவு அலுவலகம் முடித்து அதிகாலை […]

Share
Nov 122017
 
நண்பேண்டா!

மணி! மணி !” மணியை தேடிக்கொண்டு, அவனது நண்பன் கோபி, மணியின் அறைக்கே வந்து விட்டான். அப்போது மாலை மணி சுமாராக ஆறு முப்பது இருக்கும். மணி, இருட்டில் விளக்கு கூட போடாமல், கட்டிலில் பான்ட் சட்டையுடன் படுத்திருந்தான். “வா கோபி ! என்ன விஷயம்?” மணி சுரத்தில்லாமல் முனகினான். “மணி, நீ இங்கேயிருக்கியா? உன்னை எங்கேயெல்லாம் தேடறது? கிளம்பு, கிளம்பு. ரவியோட பார்ட்டிக்கு நேரமாச்சு பார் ! இங்கே தனியா, கவுந்தடிச்சி, எந்த கோட்டைய பிடிக்க திட்டம் போடறே?” […]

Share
Share
Share