Nov 142015
 
நல்லக்கீரை

விவசாயமா!!! ஆளை விடுங்கள், நான் கஷ்ட்டப்பட்டது போதும், எனக்குப் பின் வரும் தலைமுறையினராவது, ஏதாவது பெரிய நிறுவனத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த இடத்தில் சம்பாதிக்கட்டும் என்று பல விவசாயிகள் வலியினால் புலம்பும் காலம் இது. ஆனால், அப்படிப்பட்ட நல்ல  வேலையை விட்டுவிட்டு, விவசாயம் என்றால் என்ன என்றே தெரியாத ஒரு இளைஞர், விவசாயத்தில் இறங்கி பல சாதனைகளை செய்து வருகின்றார் என்றால் எத்தனை வியப்பான விஷயம்?! சென்னை திருநின்றவூரை அடுத்துள்ள பாக்கம் என்ற சிறு […]

Share
Nov 142015
 
எது சவால்?

சில சந்திப்புகள், சில அனுபவங்கள் நம் ஒட்டுமொத்த எண்ண ஓட்டங்களையும் புரட்டிப்போடும் அளவு சக்திவாய்ந்தது. நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை மறக்க வைத்து, எதிர்கால சிந்தனையுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நம்மை, இதுபோன்ற சம்பவங்கள் நாம் வாழும்முறை சரிதானா என்று யோசிக்கவைக்கிறது. அது போன்ற ஒரு நிகழ்வு சென்ற ஞாயிற்று கிழமை நடந்தது. அன்று என் எழு வயது மகனுடன் வீட்டருகே இருக்கும் முடி திருத்தகத்திற்கு சென்றிருந்தேன். அங்குள்ள சோஃபாவில் இரண்டு நபர்கள் அமர்ந்திருந்தனர். ஒருவருக்கு சுமார் 50 வயது இருக்கும். […]

Share
Nov 142015
 
சாரதி பதில்கள் - 2

  மணி, சென்னை சாதிக்கத் தூண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஏதும் வருவதில்லையே? சாதிக்க விரும்புபவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லையே. மயுரி, நாகர்கோவில் கொச்சி விமான நிலையம் உலகின் முதல் சோலார் விமான நிலையம் என பெயரெடுத்து வெற்றிப்பெற்றது பற்றி? 45 ஏக்கரில் 46150 சூரியத் தகடுகள் (SOLAR PANELS) அமைத்து, ஒருநாளில் 60000 யூனிட்கள் வரை மின்சாரம் தயாரிக்க ஆரம்பித்துள்ளார்கள். இந்தியாவிற்கு மட்டுமல்லாது உலகத்திற்கே முன்னோடியாய் இருக்கும் கேரளாவின் இந்த செயல், பாராட்டப் படவேண்டியது மட்டுமல்ல பின்பற்ற […]

Share
Nov 142015
 
உன்னோடு மட்டும்

உன்னோடு மட்டும் பேசுவதற்கு ஓராயிரம் அந்தரங்கத் தகவல்களை என்னிடத்தில் தேக்கியிருக்கிறேன்!   நாம் சந்திக்காத இடைவெளியில் கிடைத்த பயண அனுபவங்களை உணர்வு மாறாமல் பகிர வேண்டும்!   நான் பெற்ற பெருமித கணங்களை ஒரு துளியும் விடாமல் ஒப்புவித்து உன்னையும் குதூகலமாக்க வேண்டும்!   நாமிருவரும் பழகிய நண்பர்களையும் அறிமுகமில்லாத புதிய முகங்களையும் ஒன்றாய் சேர்ந்து அலசிட வேண்டும்!   நீ அருகில் இல்லாத பொழுதுகளில் பட்ட துயரம் அத்தனையும் சொல்லி உன் தோளில் சாய்ந்திட வேண்டும்! […]

Share
Nov 142015
 
Sun Dog

நண்பர் 1: இன்று அமெரிக்காவில் இரண்டு சூரியன் உதித்துள்ளது, நான் அனுப்பிய அந்த வீடியோவைப் பாருங்கள். நண்பர் 2: இரண்டு சூரியனா, இது உண்மையான செய்தியா இல்லை ஃபேக்கா? நண்பர் 1: எனக்கு தெரியாது நண்பரே, எனக்கு வந்ததை அப்படியே ஃபார்வார்ட் செய்தேன். இந்த குழுவில் யாருக்காவது இது பற்றித் தெரிந்தால் தகவல் தரவும். நண்பர் 3: இது உண்மையில்லை. இது வதந்தி தான். நான் கூகுளில் தேடினேன், இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை. […]

Share
Share
Share