Jul 142015
 
மக்கள் சக்தி!

    ஆங்கஸ் மாடிஸன் – இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார மேதையான இவர்,  “உலக பொருளாதாரம்: வரலாற்றுப் புள்ளிவிவரங்கள்” என்ற தனது புத்தகத்தின் மூலம் கடந்த 2000 வருடங்களாக உலக பொருளாதாரம் எவ்வாறு இருந்துள்ளது என்பதை ஒரு தொகுப்பாக வழங்கியுள்ளார். மேலுள்ள வரைப்படமும் (நன்றி: விக்கிபீடியா) புள்ளிவிவரங்களும் உலகிற்கு இவர் விட்டுச்சென்ற தொகுப்புகளில் ஒன்று. கிட்டத்தட்ட 1600 வருடங்களுக்கு மேலாக உலக பொருளாதாரத்தில் பாதிக்கு மேல் தங்கள் கைவசம் வைத்திருந்து, பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளாய் வீரநடை […]

Share
Jul 142015
 
“வானமே எல்லை”

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மிக உயரிய பதவி, நீச்சல் போட்டிகளில் பல முறை தேசிய சாம்பியன் விருதுகள், கூடைப்பந்து மற்றும் நீச்சல் சங்கங்களில் முக்கிய பொறுப்பு, தொண்டு நிறுவனம் என ஏகப்பட்ட முகங்கள் அவருக்கு. இயற்கை அவருக்கு இரண்டு கைகள் மட்டுமே சரியாக கொடுத்தது, ஆனால் அதை பொருட்படுத்தாமல் “இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை, அடைவதற்கு இந்த உலகமே உண்டு” என்ற வரிக்கு ஏற்றார் போல், தன்னையும் தன்னைப் போல் உள்ள பலரின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி […]

Share
Jul 142015
 
உழைப்பின் சுவை

“அம்மாடி முத்துலட்சுமி, அந்த முறுக்கு மாவை சீக்கிரம் எடுத்து வந்து நல்லா பிசைந்து கொடு. முறுக்கை இப்போ பிழிந்தால் தான் நாளைக்கு சப்ளை கொடுக்க முடியும். டேய் முனியா, அந்த அதிரசத்தை பெட்டியில் எடுத்து அடுக்கி வைக்கலாம், வா” என்று கூறியபடி அடுக்கியிருந்த லட்டை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள் அம்சவேணி அம்மாள். இரண்டு கால்களிலும் சக்கரம் கட்டிவிட்டது போல் ஓடிக்கொண்டிருந்தாள். 50வயதிலும் தேனீயை போல் சுறுசுறுப்பு. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் அம்சவேணியின் மகன் ராமன். மருத்துவம் இரண்டாம் […]

Share
Jul 142015
 
டிரான்சிஸ்டர் ஒரு நினைவூட்டல்

நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான டிரான்சிஸ்டர் ஒரு நினைவூட்டல் இரண்டாம் உலகப் போர் 1945 ஆம் ஆண்டில் முடிவுற்ற பிறகு, மிகச் சரியாக அறுபத்து ஏழு ஆண்டுகளுக்கு முன்பு (July 01, 1948) இதே நாளில்தான் அமெரிக்காவில் உள்ள உலகப்புகழ் பெற்ற பெல் நிறுவனம் திரிதடையம் (Transistor) பற்றிய தங்கள் வடிவமைப்பினை உலகிற்கு அதிகார பூர்வமாக அறிவித்தனர். மிகச் சிறந்த இயற்பியலாளர்கள், வேதியலாளர்கள் பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு  திண்ம நிலை எலக்ட்ரானியல் (Solid State Electronics)  ஆராய்ச்சிக்கு என்று […]

Share
Jul 142015
 
என் நம்பிக்கை..

  பொறுமையிழந்த ஒரு காலைப் பொழுதில்.. என் வீட்டின் சாளரத்தின் கம்பிகளை வளைத்தது என் நம்பிக்கை.. பரந்த வானத்தின் பறவைகளை பார்த்து உயர எழும்பி அது செல்வதை தடுக்க விருப்பமில்லாமல் அதை .. அனுப்பி வைத்து விட்டு அது திரும்பும் வழி பார்த்திருந்தேன்.. இதோ.. என் நம்பிக்கை இன்னும் பெரிதாக வளர்ந்து.. என்னை நோக்கி வருகிறதே.. கையில் கனி ஒன்றை ஏந்தியபடி.. இனி … நிரந்தரமாய் சாளரத்தின் கதவுகளை திறந்து வைப்பேன் என்று நம்பியது ..நம்பிக்கை! அதன் […]

Share
Jul 142015
 
இரு பகடைகள்

உங்களிடம் 6பக்கங்கள் உள்ள இரண்டு பகடைக் காய்கள் (DICE) உள்ளன. அவற்றில் ஒவ்வொரு பக்கமும் 0 முதல் 9 வரையில் உள்ள எண்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் நிரந்தரமாக எழுதிக்கொள்ள வேண்டும். இவற்றை வைத்து, அனைத்து மாதங்களின் தேதிகளையும் காண்பிக்க வேண்டும். உதாரணம்1: பகடை காய் ஒன்றில் “2” என்ற எண்ணும், பகடை காய் இரண்டில் “8” என்ற எண்ணும் இருந்தால் – அன்றைய தேதி 28. உதாரணம்2: பகடை காய் ஒன்றில் “0” என்ற எண்ணும், […]

Share
Share
Share