Jun 142015
 
உணவே மருந்து!

பாம்பாட்டிகள் வாழும் தேசம், மூன்றாம் உலக நாடு என்றெல்லாம் பொதுவாக மேற்கத்திய நாட்டினரினால் எள்ளி நகையாடப்படும் நம் நாட்டை, கடந்த இரு வாரங்களாய் மேற்கத்திய சமூகம் சற்றே ஆச்சரியத்துடன் தான் பார்த்திருக்கக் கூடும். இந்தியர்களுக்கு உணவிலும், வாழ்க்கை முறையிலும் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்ச்சி கிடையாது, இந்தியர்களை எப்படியாவது ஏமாற்றி, தமது பொருட்களை விற்றுவிடலாம், தட்டிக்கேட்கும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், விலைக்கு வாங்கி, பல்லாயிர கோடிகளை ஈட்டிடலாம் என்று கொக்கரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் மலைத்திருக்கக் கூடும். மேகி நூடுல்ஸ் […]

Share
 Posted by at 12:09 am
Jun 142015
 
சூரிய ஆற்றல் - ஜப்பான் சொல்லும் நவீன பாடம் (Part 2)

(சென்ற இதழ் தொடர்ச்சி..) ஜப்பானின் நிலப் பரப்பு மிகவும் குறைந்த அளவு இருப்பதால் தன்னிடம் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் மிதவை சூரிய மின் சக்தி நிலையங்களை அமைக்கத் தொடங்கி உள்ளார்கள். சமீபத்தில் கதோ (Kato) நகரத்தில் உள்ள நிசிகிரா (Nishikara) மற்றும் கிகாசிகிரா (Kihashikara) ஏரியின் மீது பிரம்மாண்டமான மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையத்தினை கியோசிரா நிறுவனமும், தோக்கியோ லீசிங் நிறுவனமும் இணைந்து நிர்மானித்து உள்ளார்கள். இதனை கட்டுவதற்கு ஏழு மாதம் ஆகியிருக்கிறது. இந்த மின் […]

Share
Jun 142015
 
அப்பர்!

செய்யும் தொழிலே தெய்வம் என தனது தொழிலில் ஒருவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்துவிட்டால், எந்த இலக்கையும் அடையலாம், எத்தனை உயரத்தையும் எட்டலாம் என நிறுபித்து வருகிறார் சென்னை போரூரை சேர்ந்த திரு.அப்பர் லக்ஷ்மணன். தச்சுத் தொழில் செய்து வரும் இவர், தன் தொழில் மீது உள்ள பக்தியாலும், கற்பனை திறனாலும், யோசிக்க கூட முடியாத பல பொருட்களையும் வடிவமைத்து, தன்னை மிகவும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார். தன் குருவின் ஆசிர்வாதத்தால், திரு.அப்துல் கலாமை சந்தித்தது, தன் வாழ்வின் பெரும் […]

Share
Jun 142015
 
முன்கோபி

  கோபி ஒரு முன்கோபி.  கோபிக்கு  கோபம் வரும் போது, அவன் மூளையை விட அவன் நாக்கு வேகமாக வேலை செய்யும். அவனது அப்பா அவனை ஒரு நாள் கேட்டார். ”ஏன் கோபி, இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபப் படறியே? ஒரு வேளை, ரத்த கொதிப்பு, கித்த கொதிப்பு  இருக்குமோ? டாக்டரை வேணா பாரேன்?”.  “நானா? நானா? லூசாப்பா நீ? நானா கோபப்படறேன்?” “ஆமா கோபி! நீயேதான் ! நான் சொல்லலே ! உன் பிரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்களே! […]

Share
Jun 142015
 
எது உன்னதம்?

ஈரணுவாய் அவதரித்த திங்களிலிருந்து ஈரைந்து மாதங்கள் நீர் இருக்கையில் சுமந்து தொப்புள் கொடி வாயிலாய் ஊனை உணவாக்கி வருடலையும் குரலையும் வளர்ப்பினில் உணர்வாக்கி தன்னுயிரின் மற்றொரு உருவமாய் உருவாக்கி தரணிக்கு அறிமுகப்படுத்திய தாயே, தாய்மையே… காவியங்களும் புராணங்களும் உன் பெருமையை எக்காலத்திலும் கவிபாட மறந்ததில்லை…   தாயுடன் பகிர்ந்த காதலை மட்டுமே ஆதாரப்படுத்தி அக்காதலுக்குமுன் இந்த பாசமே மிஞ்சுமளவுக்கு பாசத்துடன் கரம் பிடித்து நடைபழக்கி வைக்கும் ஒவ்வொர் அடியிலும் அச்சத்துடன் பெருமைக்கண்டு பெருமிதத்துடன் கரம் பிடித்து எழுதுகோலையும் […]

Share
Jun 142015
 
போட்டி தேர்வு - 3

Indian Civil Service பரீட்சை பற்றி திரு.பூமிநாதன் அவர்கள் கூறியுள்ள விவரங்களை இந்த மாத காணலாம். உங்களுக்கு ஏதேனும் போட்டி தேர்வுகள் குறித்து கேள்விகள் இருந்தால்bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும் அல்லது KING MAKERS IAS ACADEMY ஐ தொடர்பு கொள்ளவும்)   ———————————————————————————————————————————————- UNION PUBLIC SERVICE COMMISSIONUPSC is India’s Central agency authorized to conduct Civil Services Examination (CSE), Engineering  Service Examination, Combined Defence Service (CDS) Examination, National Defence […]

Share
Jun 142015
 
பலூன் வியாபாரி

ஓரு ஊரில் பலூன் வியாபாரி வாழ்ந்து வந்தான். அவனிடம் பல வண்ணங்களில் பலூன்கள் கிடைக்கும். வியாபாரம் சரியாக நடக்காத தருணங்களில், ஹீலியம் வாயு நிரப்ப பட்ட ஒரு பலூனை காற்றிலே பறக்க விடுவான். அப்போது அதைப் பார்த்து  சிறுவர்கள் பலரும் தங்களுக்கு ஒரு பலூன் வேண்டும் என்று கேட்டு வாங்கி செல்வார்கள். ஒவ்வொரு முறையும் வியாபாரம் மந்தமாகும் பொழுதும் இந்த யுக்தியை பயன்படுத்து வியாபாரத்தை பெருக்குவது அவன் வாடிக்கை. ஒரு முறை காற்றில் ஹீலியம் பலூனை பறக்க […]

Share
Share
Share