May 142015
 
உயர்ந்த உள்ளம்!

ஒரு கதை. அது ஒரு அடர்ந்த காடு, அதில் தனியாக வசித்து வரும் அந்த வயதான துறவியை காண ஒருநாள் இளம் சீடன் ஒருவன் வந்தான். “குருவே, எனக்கு அமைதியும், பக்தியும் வேண்டும், அதற்காக தான் உங்களைத் தேடி வந்தேன்” என்றான். துறவியும், “சரி தம்பி, என்னை காண இத்தனை தூரம் எவ்வாறு வந்தாய்?” என்று கேட்டார். சீடனோ, “ஒரு குதிரையில் தான் இங்கு வந்தேன் குருவே” என்றான். துறவி சற்று யோசித்துவிட்டு, “சரி தம்பி, நாளை […]

Share
May 142015
 
சூரிய ஆற்றல் - ஜப்பான் சொல்லும் நவீன பாடம் (Part 1)

பரப்பளவில் இந்திய தேசத்தினை ஒப்பிடும் பொழுது 8.6 மடங்கு சிறிய நாடு ஜப்பான். மேலும் ஒரு வருடத்திற்கான சூரிய ஒளி கதிர் வீச்சினை (solar irradiation) பெறுவதை ஒப்பிடும் பொழுது ஜப்பானை விட பல மடங்கு அதிகமாக இந்தியாவில் பெறப்படுகிறது. ஆனால் சூரிய ஒளியின் மூலம் தங்களது சுய தேவையினை பூர்த்தி செய்வதில் ஜப்பான் மிக குறைவான கால கட்டத்தில் இந்தியாவை விஞ்சி நிற்கிறது. இது எப்படி சாத்தியமானது, இந்தியா இந்த அனுபவத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை […]

Share
May 142015
 
நம்பிக்கையால் சாதித்தவர்!

“ஒன்றை இழந்தால், மற்றொன்றை பெற முடியும். கையிருந்தால் தான் எதுவும் செய்ய முடியும் என்று முடங்கிவிடாமல், எழுந்து வெறியுடன் ஓட ஆரம்பித்ததின் விளைவுகள் தான் இவைகள் அனைத்தும்!!” – நம்பிக்கை தெரிக்க பேசும் திரு.வெங்கடேசனை இந்த மாத சாதனையாளராய் அறிமுகப் படுத்துவதில் B+ இதழ் பெருமை அடைகிறது. கை கால்கள் நன்றாக இருந்தும், உழைக்காது வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை என கூறி வருத்தப்படும் சிலர், திரு.வெங்கடேசனின் உழைப்பிலும் வெற்றியிலும் சமூக அக்கறையிலும் பலவற்றை கற்றுக்கொள்ளலாம். சென்னை கீழ்ப்பாக்கம் […]

Share
 Posted by at 12:07 am
May 142015
 
நன்றே செய், அதுவும் இன்றே செய் !

”இதோ பாருங்களேன், உங்க பையனை! பிறந்து இன்னும் ஒரு வருஷம் கூட  ஆகலை. அதுக்குள்ளே, எப்படி , கொடுக்கற சாமானையெல்லாம் தூக்கி தூக்கி போடறான் பாருங்க. எவ்வளவு ஸ்மார்ட் இல்லே நம்ம கண்ணன்?” – அம்மா பாருவுக்கு பெருமிதம் தாங்கலை. “பின்னே அவன் யாரு? என் பிள்ளையாச்சே! பின்னாடி விளயாட்டுலே பெரிய ஆளா வருவான் பாரு! ஷாட் புட், டிஸ்கஸ் த்ரோ அப்படின்னு நம்ப கண்ணன் நாட்டையே கலக்கப் போறான், பாரு!”  பையனை சுற்றி கும்மி அடித்தார் வங்கியில் வேலை செய்யும் […]

Share
May 142015
 
தமிழின் புகழ்

பண்டு முதல் இன்றுவரை உயர்ந்த மொழி தமிழ் கண்டுபலர் சிரம்தாழ்த்தி விண்டுரைத்தார் புகழ் கண்டவரும் கேட்டவரும் மகிழ்கின்றார் காண் பண்டவரும் பல்லவரும் சிறப்படைந்தார் தமிழால்தான் நித்தம் நித்தம் விண்டுரைப் போம் தமிழின் புகழை சித்தமதில் மகிழ்ந்திடுவோம் அத்தமிழின் எழிலை பசுந்தமிழ் செந்தமிழ் பைந்தமிழ் தீந்தமிழ் இசையுரு பொருளெல்லாம் குறிப்பது தமிழையே சிறந்த புலவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா நிறைந்தபொருள் கொண்டவர் தம்கவிதை வியப்பிலடங்கா பசுந்தமிழ் உலகினில் பலகலை உயரவே பழியறப் படித்திடு பாங்குடன் வாழவே செந்தமிழ் நாட்டினில் செயல்படு […]

Share
May 142015
 
போட்டி தேர்வு - 2

  Indian Forest Service பரீட்சை பற்றி திரு.பூமிநாதன் அவர்கள் கூறியுள்ள விவரங்களை இந்த மாத காணலாம். உங்களுக்கு ஏதேனும் போட்டி தேர்வுகள் குறித்து கேள்விகள் இருந்தால்  bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும் அல்லது KING MAKERS IAS ACADEMY ஐ தொடர்பு கொள்ளவும்)                                       Indian Forest Service Exam Indian Forest Service Exam is the Forestry service of India. It is one of the Three All India Services of […]

Share
 Posted by at 12:04 am
May 142015
 
அன்னையர் தினம்

பிரபலமான MGR பாடல் ஒன்று FM-இல் ஒலித்தது எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே அருகில் இருந்த நண்பர் எந்த அம்மாவது தன் பிள்ளை கெட்டவனாக வளரணும்னு நினைப்பாளா அப்புறம் எப்படி நல்லவன் ஆவதும் கேட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலேனு கவிஞர் பாடினார் என்றார் நண்பர். கரெக்ட் சார். ஆனால் ஒரு தாயால் ஓர் மகனை பண்பில் சிறந்தவனாக வளர்க்க முடியும் என்றேன் ஏதாவது […]

Share
May 142015
 
நான்கு மாத்திரைகள்!

ஒரு பாலைவனத்திற்குள் உங்களை ஒரு கடத்தல்காரன் விட்டு செல்கிறான். போகும்போது, உங்கள் கண்களை இறுக்கி கட்டிவிட்டு, ஒரு மயக்க ஊசியையும் செலுத்திவிட்டு செல்கிறான். காவலுக்கு துப்பாக்கி ஏந்தி ஒருவன் நிற்கிறான். கண்கட்டை நீங்கள் அவிழ்த்தால் அவன் சுட்டுவிடுவான். மயக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு ஒரே ஒரு வழி மட்டும் உங்களுக்கு தருகிறான். ஒரே வடிவமுள்ள 2 வெள்ளை மாத்திரைகள், 2 கருப்பு மாத்திரைகளை உங்களிடம் கொடுத்து செல்கிறான். நீங்கள் சரியாக ஒரு வெள்ளை, ஒரு கருப்பு மாத்திரையை (அந்த நான்கிலிருந்து)  […]

Share
Share
Share