Nov 122017
 
நண்பேண்டா!

மணி! மணி !” மணியை தேடிக்கொண்டு, அவனது நண்பன் கோபி, மணியின் அறைக்கே வந்து விட்டான். அப்போது மாலை மணி சுமாராக ஆறு முப்பது இருக்கும். மணி, இருட்டில் விளக்கு கூட போடாமல், கட்டிலில் பான்ட் சட்டையுடன் படுத்திருந்தான். “வா கோபி ! என்ன விஷயம்?” மணி சுரத்தில்லாமல் முனகினான். “மணி, நீ இங்கேயிருக்கியா? உன்னை எங்கேயெல்லாம் தேடறது? கிளம்பு, கிளம்பு. ரவியோட பார்ட்டிக்கு நேரமாச்சு பார் ! இங்கே தனியா, கவுந்தடிச்சி, எந்த கோட்டைய பிடிக்க திட்டம் போடறே?” […]

Share
Oct 082017
 
“நடைமுறை அறிவு” (Practical Intelligence)

    மிடில் கிளாஸ் சங்கரன்:  15 ஜூன் 1964 மதியம் 3.30 சதய நட்சத்திரம், சங்கரன் ஜனனம். அப்பா சாஸ்திரி , அம்மா ராதை. சங்கரன் பிறந்தது , சென்னையில் அமிஞ்சிக்கரையில் . சங்கரன் மூன்றாவது குழந்தை, இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு. ! சாஸ்திரி புரசை வாக்கத்தில் ஒரு சைவ ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்தார். நடுத்தர வர்க்க குடும்பம்ஏற்ற இறக்கமான வாழ்க்கை. “அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்குமாமே?’சாஸ்திரியின் ராசி அந்த வகை.  அப்பர் கிளாஸ் ராமன்: […]

Share
Dec 182016
 
வேடிக்கை!

சகாதேவன் : யாருக்காவது உடனடியா ரத்தம் தேவையா ? சகாதேவனுக்கு சொல்லிவிட்டால் போதும், உடனே ஆட்டோ பிடிச்சி, அவனே வந்து, ரத்த தானம் கொடுப்பான். கூடவே, முக நூலில், அவனது நண்பர்கள் இரண்டாயிரத்து சொச்சம் பேருக்கும் ஸ்டேடஸ் போட்டு தெரியப் படுத்துவான். உதவி பண்ணுங்க, ரத்த தானம் பண்ணுங்கன்னு !.  வாட்ஸ் அப்பிலே அவன் நண்பர்களுக்கு மெசேஜ் போட்டு , ஷேர் பண்ணுங்கன்னு கெஞ்சுவான். இது மட்டும் இல்லை, எங்கேயாவது விபத்துன்னா, சகா, தன் கை வேலையெல்லாம் […]

Share
Nov 242016
 
அன்புதான் இன்ப ஊற்று!

அசோகச் சக்கரவர்த்தி நாடு பிடிக்கும் போர்  வெறியில் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து   விட்டான்.  அவனிடம் ஆன்றோர் பலர், அறிவுசார்ந்த அமைச்சர்  பெருமக்கள், அவன் கொண்ட போர் வெறியை போக்குமாறு, எடுத்துக்  கூறியபோதும், அவன் செவிமடுக்கவில்லை. புத்தசாமியார்களும்  அவனுக்கு உயிர்க்கொலைபுரியும் போர் வேண்டாம்,  உயிர்களிடத்தில் அன்பு கொள்ள வேண்டும். அன்பு வடிவான புத்த பகவானும்  அன்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கூறியதையும், அதனைக்   கடைபிடித்தால்,  நாட்டில் அமைதிநிலை ஏற்படும் என்றும்  கூறினார்கள்.  அவர் கூறியதெல்லாம் அசோக […]

Share
Nov 112016
 
ஊதாரி!

கணேஷ் , சென்னையில்  ஒரு வளர்ந்து வரும்  தொழில் அதிபர். அண்ணா நகரில் ஐ .சி. யு வங்கியில் ஐந்து கோடி கடனில் கட்டிய அட்டகாசமான வீடு.    அம்பத்தூர் தொழில் வளாகத்தில், அரசு வங்கியில் வாங்கிய நான்கு கோடி கடனில், ரெடி மேட் துணி தயாரிக்கும் பாக்டரி .  “டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ்” . கணேஷ் 45 வயது இளைஞன். வருஷம் ஒரு தடவை வெளிநாடு சுற்றுலா. அவனிடம் இரண்டு சொகுசு கார், மாதமிருமுறை  ஐந்து நட்சத்திர ஹோட்டல் கேளிக்கை, […]

Share
Oct 142016
 
அவள் அப்படித்தான் !

சென்னை. திருவல்லிக்கேணி.  வசதிகள் நிறைந்த, லேடீஸ் ஹாஸ்டல். வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி. தனமும் மஞ்சுளாவும் கடந்த 15 நாட்களாக, விடுதியின் அறை தோழிகள். கொஞ்சம் கட்டை குட்டை தனத்திற்கு , இரண்டு வருடங்களாக இதே திருவல்லிக்கேணி ஹாஸ்டல் வாழ்க்கை தான். மஞ்சுளா இப்போதுதான் கோவையிலிருந்து வந்த, தனத்தின் புது ரூம் மேட். பார்க்க சுமாரான அழகுள்ள யுவதி. இருவருக்கும் கிட்ட தட்ட 27 – 28 வயது. மணமாகாத குமரிகள் . ஒரு ஞாயிறு. பிற்பகல் […]

Share
Sep 142016
 
பார்க்காமை

” இதோ பாருங்க! உங்களுக்கு வயசாயிண்டே போறது. ரத்த கொதிப்பு, சர்க்கரை, இதோட சேர்ந்து போனஸா கொலஸ்ட்ரால் வேற! . இப்படி தூங்கிகிட்டே இருந்தால் விளங்கினால் போலதான் ! எழுந்துக் கொள்ளுங்க ! முதல்லே எழுந்து வாக்கிங் கிளம்பற வழியை பாருங்க ! .” மனைவியின் அதட்டல். ஒரு நாளைப் போல இதே தொந்திரவுதான். நிம்மதியாக என்னை இரவிலும் தூங்க விட மாட்டேங்கிறாங்க. வேறே வழியில்லை. கிளம்பிட்டேன். காலை 6.30 மணி. பார்க்லே கொஞ்சம் கூட்டம். பார்க் […]

Share
Aug 142016
 
வேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல !

விநாயகர் படத்தின் முன்பாக வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் விக்னேஷ் நின்று, வணங்கி விட்டு,  தன இருக்கையில் அமர்ந்து கொண்டு அலுவலகக் கோப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். “ அய்யா! வணக்கம்.  என் பெயர் தூங்கத் தேவர். என தன்னை அறிமுகப்படுத்தி விட்டு, “என்னை அய்யா நேரில் பார்த்து பேசணுமுன்னு சொன்னேங்கலாம்”  என்ற தூங்கத் தேவரின் பணிவான குரல் கேட்டு மாவட்ட ஆட்சியர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். தும்பைப்பூ போன்று வெண்மையான வேஷ்டி, இடுப்பில் கட்டிய வெண்மையான சிறு […]

Share
Jul 142016
 
மனிதனாக இரு !

  சுடர் விளக்காக இரு, அது முடியாவிடில் பரவாயில்லை. இரவில் சுடர் விடும் மின் மினி பூச்சிகளை கொன்று குவிக்காதே !   பள்ளி செல்ல மனமில்லையா ? பாதகமில்லை பள்ளி செல்லும் குழந்தைகளின் பாடப் புத்தகங்களை மறைத்து வைக்காதே !   உண்மை பேச மனமில்லையா ?  அது குற்றமில்லை அரிச்சந்திரன் வரலாற்றை குற்றம் கூறி பொய்யின் உதட்டிற்கு சாயம் பூசி அழகு பார்க்காதே !   கொடுமை கண்டு குமுறவில்லையா ?  பரவாயில்லை ! […]

Share
Jul 142016
 
தூண்டிலில் சிக்கிய மீன்கள்

தங்கமணி : வயது 61  தங்கமணி ஒரு தனியார் கம்பனி வேலையிலிருந்து ஒய்வு பெற்றவர். பென்ஷன் இல்லை. “என்னங்க! இப்படி இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்திருக்கீங்களே? வயசு வந்த ரெண்டு பெண்களை கரை எத்தறதை பத்தி ஏதாவது யோசனை பண்ணீங்களா?” – மனைவி வனஜாவின் அலம்பல். கொஞ்ச நாளாக, தினமும் காலையில் தங்கமணி பேப்பர் படிக்க உட்காரும்போது இதுதான் நடக்கிறது. “கவலைப் படாதே வனஜா. பாக்கலாம், என் பி. எப் பணத்தை வெச்சு, இந்த வீட்டை அடமானம் […]

Share
Jun 142016
 
மணிமாலா

மணியின் வீடு: மணிக்கு சென்னையில் ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் வேலை. நிறைய சம்பாதிக்கிறான். ஒரே பையன். பார்க்க லட்சணமாக இருப்பான். கல்யாணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருகிறார்கள். ஆனால், இப்போதெல்லாம் பெண் கிடைப்பதுதான் குதிரை கொம்பாக இருக்கிறதே! மணியின் அப்பா ஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியர். அவர் வேலையில் சேர்ந்ததும் மற்றும் ஒய்வு பெற்றதும் எழுத்தராக. கடைசி வரை உத்தியோக உயர்வு கிடைக்கவேயில்லை. எப்போதாவது மனுஷன் வருத்தப் பட்டாரா என்ன? நெவெர்.  அவருக்கு கொஞ்சம் தற்பெருமை அதிகம். […]

Share
May 142016
 
தண்ணீர்!

நான் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் இருந்து நான்டெட் ரயில் மூலம் பயணம் செய்துகொண்டு இருந்தேன். அது ஒரு கோடைகாலம். வெப்பநிலை 41 டிகிரி அளவில் இருந்தது. நான் ரயிலின் கதவு அருகில் நின்று காற்றை வாங்கிக்கொண்டு இருந்தேன். வறண்ட சூடான காற்று என் மூக்கையும் நுரையீரலையும் பதம் பார்த்தது.. இன்னும் என் பயணம் முடிந்து என் இலக்கை அடைய 4 மணித்துளிகள் இருந்தன. அது வரை இந்த வெப்பத்தை நான் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். என் […]

Share
Aug 152015
 
வேண்டாத வேலை

நேரம் காலை 7.30 மணி. முகேஷ் தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வயது ஒரு 30 இருக்கும். ஒரு கணிணி சம்பந்தபட்ட அலுவலகத்தில் மென்பொருள் எழுதும் வேலை. கேளம்பாக்கம், சென்னை. நடுத்தர வர்க்க மக்கள் கடனில் கட்டிய வீடுகள். ஒன்று அமரரான அவனது அப்பாவுடையது. அந்த வீட்டு மாடியை வாடகைக்கு விட்டிருந்தார்கள். கீழே முகேஷும் அவனது அம்மாவும் குடியிருந்தார்கள். மாடி வீட்டு அனு, அழகான  7 வயது பள்ளி சிறுமி.  ரொம்ப ஸ்மார்ட். அணில் […]

Share
Jul 142015
 
உழைப்பின் சுவை

“அம்மாடி முத்துலட்சுமி, அந்த முறுக்கு மாவை சீக்கிரம் எடுத்து வந்து நல்லா பிசைந்து கொடு. முறுக்கை இப்போ பிழிந்தால் தான் நாளைக்கு சப்ளை கொடுக்க முடியும். டேய் முனியா, அந்த அதிரசத்தை பெட்டியில் எடுத்து அடுக்கி வைக்கலாம், வா” என்று கூறியபடி அடுக்கியிருந்த லட்டை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள் அம்சவேணி அம்மாள். இரண்டு கால்களிலும் சக்கரம் கட்டிவிட்டது போல் ஓடிக்கொண்டிருந்தாள். 50வயதிலும் தேனீயை போல் சுறுசுறுப்பு. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் அம்சவேணியின் மகன் ராமன். மருத்துவம் இரண்டாம் […]

Share
Jun 142015
 
முன்கோபி

  கோபி ஒரு முன்கோபி.  கோபிக்கு  கோபம் வரும் போது, அவன் மூளையை விட அவன் நாக்கு வேகமாக வேலை செய்யும். அவனது அப்பா அவனை ஒரு நாள் கேட்டார். ”ஏன் கோபி, இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபப் படறியே? ஒரு வேளை, ரத்த கொதிப்பு, கித்த கொதிப்பு  இருக்குமோ? டாக்டரை வேணா பாரேன்?”.  “நானா? நானா? லூசாப்பா நீ? நானா கோபப்படறேன்?” “ஆமா கோபி! நீயேதான் ! நான் சொல்லலே ! உன் பிரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்களே! […]

Share
May 142015
 
நன்றே செய், அதுவும் இன்றே செய் !

”இதோ பாருங்களேன், உங்க பையனை! பிறந்து இன்னும் ஒரு வருஷம் கூட  ஆகலை. அதுக்குள்ளே, எப்படி , கொடுக்கற சாமானையெல்லாம் தூக்கி தூக்கி போடறான் பாருங்க. எவ்வளவு ஸ்மார்ட் இல்லே நம்ம கண்ணன்?” – அம்மா பாருவுக்கு பெருமிதம் தாங்கலை. “பின்னே அவன் யாரு? என் பிள்ளையாச்சே! பின்னாடி விளயாட்டுலே பெரிய ஆளா வருவான் பாரு! ஷாட் புட், டிஸ்கஸ் த்ரோ அப்படின்னு நம்ப கண்ணன் நாட்டையே கலக்கப் போறான், பாரு!”  பையனை சுற்றி கும்மி அடித்தார் வங்கியில் வேலை செய்யும் […]

Share
Apr 142015
 
மாத்தி யோசி!

முத்து தன் நண்பன் குமாரிடம் புலம்பினான். “என்னன்னு தெரியலே குமார் ! . என் கடைகளிலே பிஸினெஸ் மந்தமா இருக்கு? இத்தனைக்கும்,  உயிரை விட்டு உழைக்கிறேன். ராத்திரி பதினொரு மணி வரைக்கும் தினமும் பாடு படறேன். ஒண்ணும் சரியா வரல்லே. ஒண்ணுமே புரியலடா மாப்பிளே! வெறுப்பாயிருக்கு! ”  முத்து , ஒரு முன்னேற விரும்பும் முப்பத்தைந்து வயது வியாபாரி. சென்னையில் ஐந்து சிறிய எழுது பொருள் மற்றும் பான்சி சாமான்கள் விற்பனை கடைகளின் சொந்தக்காரன். பெரம்பூர், மூலக்கடை, ஓட்டேரி, ஐயனாவரம், மற்றும் கொளத்தூரில் கடைகள் வைத்திருந்தான். குமார் ஒரு பெரிய கம்பனியில் மார்க்கெட்டிங் மேனேஜர்.  எம்பிஏ […]

Share
Mar 142015
 
கவலைப்படேல்! - பகுதி 2

  (சென்ற மாத தொடர்ச்சி….) ஹோட்டல்: வாசலில் விஷ்வா காத்துக் கொண்டிருந்தான். “வா சுந்தர், என்ன இது கோலம்! இப்படி சோகமா! நாலு நாள் தாடி! என்ன விஷயம்?” “அதை ஏன் கேக்கிறே விஷ்வா? நெறைய பிரச்னைகள்.” “சரி வா! உள்ளே போய் பேசலாம்!”. விஷ்வாவின் கரிசனம் என்னை உலுக்கியது. என்னுடைய பிரச்னைகள் எல்லாவற்றையும் அவனிடம் கொட்டிவிட்டேன். “சரி! சும்மா கவலைப் பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை. சுந்தர், இங்கே பாரு, உன் பிரச்சனை என்ன தெரியுமா? […]

Share
Feb 142015
 
கவலைப்படேல்!

  சென்னை, அம்பத்தூர் தொழிற் பேட்டை. நான் எனது சின்ன தொழிற்சாலைக்குள் நுழைந்தேன். நான்கு லேத்துகள், இரண்டு பிரஸ்ஸிங் மிஷின், மூன்று ட்ரில்லிங் மிஷின் இவ்வளவு தான் என் பட்டறை.. முன்னுக்கு வர முயன்று கொண்டிருக்கும் சிறிய தொழில் அதிபர் நான். என் பாக்டரியில் மொத்தமே 15 பேர்தான், என்னையும் சேர்த்து. ஆனால், சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க ! எனக்கு எக்கச்சக்க பிரச்னைகள்! என்னன்னு சொல்ல? தொழிலாளர்களின் தேவைகள் , என்னோட கஸ்டமர் டிமாண்ட்ஸ், அரசாங்க […]

Share
Jan 152015
 
மாற்றம் எங்கே?

    கோபாலனுக்கு 60 வயது நிரம்புவதை கொண்டாட வெளியூரில் வசிக்கும் அவரது மகனும் , இரண்டு மகள்களும் ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையில் வளசரவாக்கத்தில் ஒரு சிறிய குளிரூட்டப்பட்ட சத்திரம். கோபாலனும் அவரது மனைவியும், மனையில் அமர்ந்திருக்கின்றனர், சஷ்டியப்தபூர்த்தி சடங்குகளுக்காக. அக்னி குண்டத்தில் நெய்யை ஊற்றிக்கொண்டே, புரோகிதர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார். கூடவே , கோபாலனை பார்த்து “ சொல்லுங்கோ,”! என்று ஆணை வேறு. கோபாலனும் , மண்டையை மண்டையை ஆட்டிக்கொண்டு குருக்கள் சொல்வதை , தப்பு […]

Share
 Posted by at 12:26 am
Share
Share