Jun 142014
 
2042

அன்று காலை வெகு சீக்கிரமே எழுந்து புறப்பட வேண்டியிருந்தது. என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அதில் நேரம் காலை 8:40 எனவும், நாள் 14/06/2042 எனவும் காட்டிக்கொண்டிருந்தது. 10மணிக்கு, மருத்துவரிடம் எனக்கு அப்பாயின்மெண்ட். அந்த க்ளீனிக்கிற்குப் பயணம் செய்ய 32வது மாடியிலிருந்த என் வீட்டிலிருந்து லிஃப்டில் கீழே இறங்கி, சாலையை அடைந்தேன். “இந்த 2042 ஆம் ஆண்டு ஆரம்பித்த நாளிலிருந்தே, நமக்கு ஒரே அலைச்சல் தான், வெயில் வேறு கொல்லுகிறது” என்று புலம்பிக்கொண்டே பேருந்து நிறுத்ததிற்கு வந்தேன். நகரத்தில் […]

Share
Jun 142014
 
பழுப்பு புரட்சி (BROWN REVOLUTION)

17 மாநில அவார்டுகள், 3 தேசிய அவார்டுகள்!! மதுரை கரைசநேந்தல் பகுதியில், தேன் வளர்ப்புத் துறையில், தான் சாதித்துக் கொண்டிருப்பதன் மூலம் இவைகளை சொந்தமாக்கியுள்ள திருமதி.ஜோசஃபின் அவர்களை இந்த மாத சாதனையாளர்கள் பக்கத்தில் காண்போம். “இவர் வளர்க்கும் தேனீக்களைக் கூடப் பிடித்துவிடலாம், இவரைப் பிடிப்பது சற்றுக் கடினம் தான்” என்று கேள்விப்பட்டதைப் போல், மிகவும் பரபரப்பாக வேலை செய்து சுற்றிக் கொண்டிருந்தவரை இரண்டு மணி நேர காத்திருப்பிற்கு பின் பேட்டி எடுத்தோம். தேனில் ஊறவைத்த நெல்லிக்காய்களை சாப்பிடக் […]

Share
Jun 142014
 
மோளைக் காடு

  “சார், நம்ம நடிகர் விவேக் தனி ஆளா 20  லட்சத்துக்கு மேல் மரக்கன்று நட்டு இருக்கார். அவரோட இலக்கு கோடிக் கணக்கில் நடனுமாம், பெரிய விஷயம்ல” என்றபடி பேச்சைத் தொடங்கினார் என்னுடன் பணிபுரியும் அன்பர். “பெரிய விஷயம், சார். ரொம்ப நல்ல காரியம்” என்றேன் நான். “ரொம்ப பெரிய விஷயம் சார். நான் கூட இது மாதிரி பண்ணனும். இதுக்கு எல்லாம் எவ்வளோ செலவு ஆகும் சார்?” என்றார். இன்னொரு அன்பர் அதற்குள் “சார், அவரு ஒரு […]

Share
Jun 142014
 
கல்கி

  கண்ணைக் கவரும் கணிப்பொறி, கவனத்தை ஈர்க்கும் கைப்பேசி, விண்ணை அளக்கும் செயற்க்கைகோள், ஒன்றா இரண்டா! இதுபோல உலகமெங்கும் உபகரணங்கள் கண்ணுக்கு தெரியா கதிர்களை; கணம் தவறாமல் சுற்றிலும் வீசி மண்ணைக் காக்கும் மரங்களையும், மரங்கள் தாங்கும் பறவைகளையும், மனிதன் போற்றும் உடலினையும், ஊனமாக்கும் ஊமைக் காலனே! கலியுகத்தின் கல்கி நீ தானோ? -Dr. K. நந்தினி (லண்டனிலிருந்து)     Likes(5)Dislikes(0)Share on: WhatsApp

Share
Jun 142014
 
உலகை மாற்றியவர்கள்!!!

சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் வாழும் உலகமானது தட்டையான வடிவத்தில் இருக்கின்றது என மக்கள் நம்பினர். பலரும் அதையே தாங்களும் தங்களின் வழிவந்த மக்களுக்கும் பயிற்றுவித்தனர். ஒரே ஒருவரைத் தவிற. முதன் முதலாக ஒருவர், நாம் வாழும் பூமி தட்டையானது அல்ல. உருண்டையாக இருக்கின்றது என்றார். அனைவரும் அவரைப் பார்த்து சிரித்தனர். ஏளனப்படுத்தினர். மனநலம் சரியில்லாதவர் என அடித்தே கொன்றனர். சில நூறு ஆண்டுகள் கழித்தே தெரிந்தது அந்த மன நலம் சரியில்லாதவர் சொன்னதே சரி […]

Share
 Posted by at 5:49 pm
Jun 142014
 
மன்னனின் தண்டனை

அந்த மன்னன், அவனது நாட்டில் யாராவது மரங்களை வெட்டினார்கள் என்று கேள்விபட்டான் என்றால், அவ்வாறு வெட்டியவர்களுக்கு, அவனது தோட்டத்தில் கடுமையான தண்டனை கொடுத்துவிடுவான். ஓருமுறை மன்னனது காவலாளிகள், இரண்டு பேரை இழுத்துவந்து, “மன்னா இவர்கள் இருவரும் ஊருக்கு எல்லையில், பெரிய மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தனர், இவர்களுக்கு என்ன தண்டனை?” எனக் கேட்டனர். மன்னன் அந்த இருவரையும் பார்த்து, “தோட்டத்தில் இரண்டு வாளிகள் (BUCKET) உள்ளது, ஒன்று 7லிட்டர் அளவுடையது, இன்னொன்று 5லிட்டர் அளவுடையது. அவைகளை வைத்து […]

Share
 Posted by at 5:38 pm
Jun 142014
 

  கடவுள் உங்கள் பிரச்சினைகளை தீர்க்கும்போது, உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது, கடவுள் உங்கள் பிரச்சினைகளை தீர்க்காதபோது, கடவுளுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது,   இன்று நீ நிழலில் அமர்ந்து ஓய்வெடுக்கிறாய் என்றால், பல வருடங்களுக்கு முன் எவரோ ஒருவர் கஷ்டப்பட்டு மரத்தை வளர்த்தார் என்று அர்த்தம்   சுயநலத்தை மறந்து பிறரை விரும்பும் ஒரு சிலரே மரங்களை வளர்க்கின்றனர்.   நீங்கள் அவ்வப்போது தோல்வி அடைகின்றீர்கள் என்றால், நிறைய புதிய முயற்சி எடுக்கின்றீர்கள் […]

Share
Share
Share