May 142014
 
ஒளிமயமான சமுதாயத்தை படைப்போம்

வணக்கம் நண்பர்களே! ஒரு வாரத்திற்கு முன்னர் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரிடம் B+ இதழைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், என் முயற்சிகளைப் பாராட்டிவிட்டு எதேச்சையாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டுச் சென்றார் “இப்பொழுதெல்லாம் மக்களின் கவனத்தை ஈர்ப்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. செய்தித்தாள்களில் கூட பத்து சினிமா செய்திகளுக்கு மத்தியில் தான் ஒரு நல்ல செய்தியை வெளியிடுகின்றனர். இதில் அவர்களை குறை சொல்வதற்கில்லை. மக்களும் சினிமா விளையாட்டு போன்ற பொழுதுப்போக்கு விஷயங்களில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே தான் மக்களைப் […]

Share
May 142014
 
டாக்டர் H. V. ஹண்டே

இந்த மாத சாதனையாளர் பக்கத்தில் மருத்துவம், அரசியல், இலக்கியம், சமூக சேவை என பலதரப்பட்ட களத்தில், தன் திறமையாலும் கடிண உழைப்பாலும், ஆழமாக முத்திரையைப் பதித்த டாக்டர் H. V. ஹண்டேவை பற்றிக் காண்போம் http://www.handehospital.org/hvhande.htm. 86 வயதாகும் இவர், சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஹண்டே மருத்துவமனையில், தொடர்ச்சியாக 60 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவ பயிற்சி செய்துக்கொண்டு வருகிறார். பல நோயாளிகளுக்கு நான்கு தலைமுறைகளாக ஒரு குடும்ப மருத்துவராக இருந்து வரும் இவர், இன்றும் சமுகத் […]

Share
May 142014
 
V. V. S.அய்யர்

சில மாதத்திற்கு முன்பு வேலை விஷயமாக திருச்சிக்கு காலை ரயிலில் போக வேண்டியிருந்தது. அப்போ உடன் இருந்த சக பயணி ஒருவர் சொன்ன நல்ல விஷயத்தை இப்போ படிக்க போறீங்க. எல்லா ஊரிலேயும் லட்சக்கணக்கான மக்கள் இருந்தாலும் சில நபர்கள் தான் அந்த ஊருக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கிறார்கள். பாளையம்கோட்டைனா கட்டபொம்மன், போர்பந்தர்னா காந்தி, எட்டயபுரம்னா பாரதி, திருப்பூர்னா குமரன் இப்படி சொல்லிட்டே போகலாம். அது மாதிரி வரகனேரினா  வேங்கடேச சுப்பிரமணிய அய்யர். இந்த பெயரை புதுசா […]

Share
 Posted by at 1:10 am
May 142014
 
லட்சியத்தை அடை

இரை எந்தக் கண்டத்தில் இருந்தாலென்ன இறக்கையாய் உன் உந்துசக்தி இருக்கையில்! இலக்கு எத்தனை தொலைவில் இருந்தாலென்ன ஈட்டியாய் பாயும் உன் நம்பிக்கை இருக்கையில்!   போராட்டம் எத்தனை வந்தாலென்ன, எரிமலையாய் துணிவு இருக்கையில்! சவால்கள் எத்தனை வந்தாலென்ன, சாதிக்க நீ வெறியுடன் துடிக்கையில்!   பயணம் எத்தனை தூரம் இருப்பின் என்ன, சூறாவளியாய் உன் வேகம் இருக்கையில்! பிரச்சினைகள் எத்தனை இருப்பின் என்ன, சுட்டெரிக்கும் விவேகம் உன் வசம் இருக்கையில்!   சோகம் பல சூழ்ந்து வந்தாலென்ன அக்கினி […]

Share
May 142014
 
பாராட்டு

உலகில் மனிதர்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களும், பார்வைகளும், செயல்களும்,  இடத்திற்கு இடம் வேறுபட்டுக்கொண்டே இருக்கின்றது. மனிதர்கள் அனைவருக்குமே பிடித்த பொதுவான விஷயங்கள் என்று பார்க்கப்போனால், ஒரு சில விஷயங்கள் மட்டுமே. அவற்றில் ஒன்றே இந்தப் பாராட்டு. புகழ்ச்சி பிடிக்காத மனிதர்கள் என்று எவருமே கிடையாது. முகத்திற்கு நேராக மறுத்தாலும் உள்ளுக்குள் மனது மற்றவர்கள் நம்மைப் புகழ்வதை விரும்புகிறது. மற்றவர்கள் செய்யும் செயல் மிகச்சிறியதாக இருப்பினும் அதனை உணர்ந்து பாராட்டும் பண்பு அனைவருக்கும் இருப்பதில்லை. “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” […]

Share
May 142014
 
மூன்று பெட்டிகள்

தமிழகத்தில் அது ஒரு நல்ல பள்ளி என பெயர் பெற்று இருந்தது. வழக்கமாக பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் மட்டும் மாணவர்களுக்கு போதாது, எதிர்காலத்தில் அன்றாடம் காணும் பிரச்சினைகளை தீர்க்கும் அறிவும் வளர வேண்டும் என விரும்பி, பள்ளி நிர்வாகம் வித்தியாசமான ஒரு முயற்சி செய்தது. அதன்படி ஒரே ஒரு பாடத்தில் மட்டும் 25% மதிப்பெண்களை, வித்தியாசமாக சிந்தித்து பிரச்சினைகளை அனுகக்கூடிய திறமைக்கு (lateral thinking) ஒரு புதிர் வைத்தது. புதிர் போட்டிக்கு பின், பள்ளி நிர்வாகத்திற்கோ […]

Share
May 142014
 
வேலையில் இறங்கு

பிறரைப் பற்றி அவதூறு கூறாமலும், வதந்திகளை பேசாமலும் இருந்தால், உங்கள் வாழ்க்கை எத்தனை அழகாக இருக்கும்? இன்றே ஏன் அதை முயற்சிக்கக் கூடாது? அடுத்தவர்களைப் பற்றி நல்ல விஷயங்களை மட்டுமே பேசி, உங்களை சுற்றி உள்ளோரையும் அதேப் போல் செய்ய ஊக்கமளியுங்கள்!!!     தனிமையில் இருக்கும்போது உங்கள் எண்ணங்களையும், கூட்டத்தில் இருக்கும்போது உங்கள் வார்த்தைகளையும், கவணமாக நல்ல முறையில் பாதுகாத்து உபயோகிங்கள்!     அடுத்தவர்கள் வாழ்வில் நடக்கும் செய்திகளை தெரிந்துக் கொள்வதை தவிர்த்து, உங்களது […]

Share
Share
Share