Jan 152015
 
நம்மால் முடியும்!

“நீண்ட இரவு முடிவுறுகிறது, கடும் துன்பம் விலகுகிறது, பிணம் போல் கிடந்த உடல் விழிக்கிறது. வரலாறும் மரபுகளும் கூட எட்டிப்பார்க்க முடியாத காலத்திலிருந்து புறப்பட்ட, நம் தாய்நாட்டின் குரல் கம்பீரமாக, இந்நேரத்தில் நம்மை நோக்கி வருகிறது. நாளுக்கு நாள் அதன் ஒலி அதிகரித்துக் கொண்டே வந்து தூங்கிக் கொண்டிருப்பவர்களை தட்டி எழுப்புகிறது. தூங்கியவன் விழிக்கிறான்! அந்த குரல் உயிரிழந்த நிலையில் இருக்கும் எலும்புகளுக்கும் தசைகளுக்கும் உயிர்துடிப்பை தருகிறது. சோம்பல் நீங்க தொடங்குகிறது. நம் பாரதத்தாய் நீண்ட ஆழ்ந்த […]

Share
Jan 152015
 
VISION IAS !

உடல் ஊனம் ஒரு தடை அல்ல, உள்ளத்தின் ஊனமே தடை என்பதை தன் வாழ்க்கையில் நிருபித்துக் காட்டியிருக்கிறார், சென்னையை சேர்ந்த 24வயது செல்வி பெனோசஃபைன். இரண்டு கண்களும் 100% பார்வையற்று இருந்தாலும், கடின உழைப்பின் மூலம் IAS ஆக உயர்ந்து நிற்கும் இவரை, B+ இதழின் இந்த மாத சாதனையாளராய் அறிமுகப் படுத்துவதில் மற்றற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இவரைப் போன்ற சாதனையாளர்கள், உடல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி, நம்பிக்கை இழந்த சாமானியர்களுக்கும் பெரிய எழுச்சி தரும் […]

Share
Jan 152015
 
மாற்றம் எங்கே?

    கோபாலனுக்கு 60 வயது நிரம்புவதை கொண்டாட வெளியூரில் வசிக்கும் அவரது மகனும் , இரண்டு மகள்களும் ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையில் வளசரவாக்கத்தில் ஒரு சிறிய குளிரூட்டப்பட்ட சத்திரம். கோபாலனும் அவரது மனைவியும், மனையில் அமர்ந்திருக்கின்றனர், சஷ்டியப்தபூர்த்தி சடங்குகளுக்காக. அக்னி குண்டத்தில் நெய்யை ஊற்றிக்கொண்டே, புரோகிதர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார். கூடவே , கோபாலனை பார்த்து “ சொல்லுங்கோ,”! என்று ஆணை வேறு. கோபாலனும் , மண்டையை மண்டையை ஆட்டிக்கொண்டு குருக்கள் சொல்வதை , தப்பு […]

Share
 Posted by at 12:26 am
Jan 152015
 
காலம் கவனிக்கிறது!!

போர்க்களமா வாழ்க்கை? பார்க்கலாமே ஒரு கை! உன்னிடம் உள்ள தன்னம்பிக்கை உன்னை விட்டு அகலும் வரை சோர்ந்து விடாதே! இதுதானா வாழ்க்கை என்று நீயும் கோழைகளின் பட்டியலில் சேர்ந்து விடாதே! இல்லையென்பார் ஒரு கூட்டம், உதவி என்று இன்னொரு கூட்டம் கருணையில் நீயும் இருப்பதைக் கொடுப்பாய்; இன்னமும் வேண்டும் என்பார்கள் இதுதான் முடியும் என்பாய்! மறுகணமே கஞ்சப் பிரபு என புறம் கூறிவிட்டு செல்வார்கள்! கொடுத்ததை திரும்பக் கேட்டால் கோமாளி என்பார்கள்; இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ ஏமாளி என்பார்கள்! […]

Share
Jan 152015
 
சமூக வலைதளம் – எதற்கு?

இன்று விடுமுறை தினம். எனது மடிக்கணினியை எடுத்து ஈமெயில்களை பார்க்கத் தொடங்கினேன். எனது நண்பனிடமிருந்து ஒரு ஈமெயில். அதில் ஒரு கடவுளின் புகைப்படம். அதை ஒட்டி ஒரு ஆண்மீக கருத்து. கடைசியில் ஒரு செய்தி. “உங்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டுமா, இதை உடனே 25 நண்பர்களுக்கு அனுப்புங்கள்”. அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது, அந்த மெயிலை DELETE செய்துவிட்டு, முகப்புத்தகத்தில் வலம் வரத் தொடங்கினேன். அதில் ஒரு பதிவு “இந்த புகைப்படத்தை அடுத்த 10வினாடிகளுக்குள் ஷேர் செய்யாவிடில் துரதிர்ஷ்டம் வந்தடையும்” […]

Share
Jan 152015
 
செயல்பட்டால் தான் வெற்றி!

ஒரு ஊரில் பரம ஏழை ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அந்த ஊர் கோவிலை கடந்து செல்லும்போது, “கடவுளே, நான் உன்னை நினைக்காத நாள் இல்லை, இருந்தும் என்னை ஏன் இப்படி வறுமையில் வாட்டுகிறாய்?” என்று கதறி அழ, இறைவன் அவன் முன் தோன்றி, “நீ செல்வந்தன் ஆவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். “எனக்கு லாட்டரியில் பரிசு கிடைக்க வேண்டும்” என்று வேண்டினான். இறைவனும் அவனுக்கு வரம் அருளி மறைந்தார். இறைவனிடம் வரம் […]

Share
 Posted by at 12:04 am
Jan 152015
 
பருந்தும் ரயிலும்

ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிர் திசையில் வந்து கொண்டிருக்கின்றன. இரண்டு ரயிலிற்கும் நடுவில் 180கிலோமீட்டர் தொலைவு உள்ளது. முதல் ரயில் மணிக்கு 100கிமீ வேகத்திலும், இரண்டாம் ரயில் மணிக்கு 80கிமீ வேகத்திலும் ஒன்றை ஒன்று நோக்கி வருகின்றன. அப்போது முதல் ரயிலின் மேல் இருந்த ஒரு பருந்து, இரண்டாவது ரயிலை நோக்கி மணிக்கு 140கிமீ வேகத்தில் பறந்து செல்கிறது. இரண்டாவது ரயிலை அடைந்தவுடன், திரும்பவும் முதல் ரயிலை நோக்கி பறந்து செல்கிறது. இவ்வாறு இரண்டு ரயில்களும் […]

Share
Share
Share