Apr 142016
 
ஐஸ்கிரீம் பந்துகள்

அந்த கடையில் ஐஸ்கிரீமை பிளாஸ்டிக் பந்தில் வைத்து விற்கின்றனர். ஒரு ரூபாய்க்கு மூன்று ஐஸ்கிரீம் பந்துகள் கிடைக்கும். உள்ளே உள்ள ஐஸ்கிரீமை சாப்பிட்டுவிட்டு, மூன்று வெறும் பந்தை திரும்ப கடையில் கொடுத்தால், இன்னொரு ஐஸ்கிரீம் பந்து இலவசமாக கிடைக்கும். நீங்கள் 15 ரூபாய் எடுத்துக்கொண்டு கடைக்குச் செல்கின்றீர். உங்களிடம் மொத்தம் எத்தனை ஐஸ்கிரீம் கிடைத்திருக்கும்? சரியான பதில் என்ன? சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான […]

Share
Dec 142015
 
வங்கி

சுதீர் தனது அக்கவுன்டிலிருந்து சிறிது பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு செல்கிறான். வங்கியில் X ரூபாயும் Y பைசாக்களும் எடுக்க எண்ணினான். ஆனால் வங்கியில் கேஷியர், தவறுதலாக சுதீருக்கு Y ரூபாயும் X பைசாக்களும் கொடுத்துவிடுகிறார். இரண்டு பேருமே, அந்த சமயத்தில் அதை கவனிக்க தவறிவிடுகின்றனர். சிறிது நேரம் கழித்து, வங்கியில் வாங்கிய பணத்தில், 20 பைசாக்களை ஒரு கடையில் செலவு செய்த சுதீர், தன்னிடம் இருக்கும் பணத்தை எண்ணிப் பார்க்கிறான். அப்போது அவனிடம் சரியாக அவன் எடுக்க […]

Share
Oct 142015
 
துப்பாக்கி

  இரண்டு உயரமான மலைக்கு நடுவே ஒரு சின்ன நடைப் பாலம் இருக்கிறது. அந்த இடத்தில் ராமு, ஒரு இளம் திருடன், ஒரு வயதான திருடன் என மூன்று பேர் வந்து மாட்டிக் கொள்கின்றனர். மூன்று பேரிடமும் மூன்று துப்பாக்கிகள் உள்ளன. மூவருள் யாரேனும் ஒருவர் மட்டும் தான் உயிருடன் திரும்பி செல்ல முடியும். அதனால் ஒவ்வொருவரும் மற்ற இரண்டு பேரை சுட்டுவிட்டு கீழே செல்ல துடிக்கின்றனர். ராமு மூன்று முறை சுட்டால், ஏதாவது ஒரு முறை […]

Share
Aug 152015
 
மேஜர் முகுந்த்

  நம் நாட்டு சிறந்த விஞ்ஞானி ஒருவரை 5 தீவிரவாதிகள் கடத்திச் சென்று காஷ்மீரில் ஒரு வீட்டினுள் அடைத்து வைக்கின்றனர். ஒரே ஒரு ராணுவ வீரர் வந்து அவரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என நம் அரசிடம் தெரிவிக்கின்றனர். வீரமும் விவேகமும் நிறைந்த மேஜர் முகுந்த் அங்கு சென்று தீவிரவாதிகளைக் கொன்று, விஞ்ஞானி இருக்கும் அறையை அடைந்து விடுகிறார். விஞ்ஞானி இருக்கும் அறை ஒரு வித்தியாசமான பூட்டுடன் மூடப்பட்டிருக்கிறது. ஒரு ஐந்து இலக்க எண்ணின் மூலம் தான் அந்த […]

Share
Jul 142015
 
இரு பகடைகள்

உங்களிடம் 6பக்கங்கள் உள்ள இரண்டு பகடைக் காய்கள் (DICE) உள்ளன. அவற்றில் ஒவ்வொரு பக்கமும் 0 முதல் 9 வரையில் உள்ள எண்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் நிரந்தரமாக எழுதிக்கொள்ள வேண்டும். இவற்றை வைத்து, அனைத்து மாதங்களின் தேதிகளையும் காண்பிக்க வேண்டும். உதாரணம்1: பகடை காய் ஒன்றில் “2” என்ற எண்ணும், பகடை காய் இரண்டில் “8” என்ற எண்ணும் இருந்தால் – அன்றைய தேதி 28. உதாரணம்2: பகடை காய் ஒன்றில் “0” என்ற எண்ணும், […]

Share
May 142015
 
நான்கு மாத்திரைகள்!

ஒரு பாலைவனத்திற்குள் உங்களை ஒரு கடத்தல்காரன் விட்டு செல்கிறான். போகும்போது, உங்கள் கண்களை இறுக்கி கட்டிவிட்டு, ஒரு மயக்க ஊசியையும் செலுத்திவிட்டு செல்கிறான். காவலுக்கு துப்பாக்கி ஏந்தி ஒருவன் நிற்கிறான். கண்கட்டை நீங்கள் அவிழ்த்தால் அவன் சுட்டுவிடுவான். மயக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு ஒரே ஒரு வழி மட்டும் உங்களுக்கு தருகிறான். ஒரே வடிவமுள்ள 2 வெள்ளை மாத்திரைகள், 2 கருப்பு மாத்திரைகளை உங்களிடம் கொடுத்து செல்கிறான். நீங்கள் சரியாக ஒரு வெள்ளை, ஒரு கருப்பு மாத்திரையை (அந்த நான்கிலிருந்து)  […]

Share
Mar 142015
 
தொப்பிகள்

ஒரு பூட்டிய அறையினுள் 20 நாற்காலிகள் உள்ளன. 20 நாற்காலிகளில் மீது பச்சை தொப்பிகள் உள்ளன. ஒவ்வொரு நாற்காலிக்கு கீழேயும் நீல தொப்பிகள் உள்ளன. 20 நண்பர்கள் அறைக்கு வெளியே இருக்கிறார்கள். வெளியிளிருக்கும் நண்பர்கள் ஒவ்வொருவராய் அறையினுள்ளே சென்று மேலிருக்கும் தொப்பிகளை கீழேயும், கீழ் உள்ள தொப்பிகளை மேலே என்று மாற்றி வைக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லாஜிக் தரப்பட்டுள்ளது உள்ளது, அந்த லாஜிக்படி குறிப்பிட்ட நாற்காலிகளிடம் மட்டும் தான் அவர்கள் சென்று தொப்பிகளை […]

Share
Feb 142015
 
மூன்று பந்துகள்!

உங்களிடம் 100 ரூபாய் இருக்கிறது. ஒரு கடைக்கு சென்று மூன்று நிற பந்துகளை வாங்க நினைக்கிறீர்கள். கடையில் விலை இவ்வாறு உள்ளது. 1)   ஒரு சிகப்பு நிற பந்தின் விலை – ஒரு ரூபாய் 2)   ஒரு மஞ்சள் நிற பந்தின் விலை – ஐந்து ரூபாய் 3)   ஐந்து நீல நிற பந்துகளின் விலை – ஒரு ரூபாய் புதிர் இது தான். மொத்தம் 100 பந்துகள் வாங்க வேண்டும், உங்களிடம் உள்ள 100 ரூபாயையும் […]

Share
Jan 152015
 
பருந்தும் ரயிலும்

ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிர் திசையில் வந்து கொண்டிருக்கின்றன. இரண்டு ரயிலிற்கும் நடுவில் 180கிலோமீட்டர் தொலைவு உள்ளது. முதல் ரயில் மணிக்கு 100கிமீ வேகத்திலும், இரண்டாம் ரயில் மணிக்கு 80கிமீ வேகத்திலும் ஒன்றை ஒன்று நோக்கி வருகின்றன. அப்போது முதல் ரயிலின் மேல் இருந்த ஒரு பருந்து, இரண்டாவது ரயிலை நோக்கி மணிக்கு 140கிமீ வேகத்தில் பறந்து செல்கிறது. இரண்டாவது ரயிலை அடைந்தவுடன், திரும்பவும் முதல் ரயிலை நோக்கி பறந்து செல்கிறது. இவ்வாறு இரண்டு ரயில்களும் […]

Share
Dec 132014
 
கல்லா வைரமா?

  ஒரு அறைக்குள் இருக்கிறீர்கள். அங்கு 10 சிறிய பைகள் உள்ளன. 9பைகளில் 10 கூழாங்கற்கள் உள்ளன. எஞ்சியுள்ள ஏதோ ஒரே ஒரு பையில் மட்டும் 10வைரகற்கள் உள்ளன. அனைத்து கூழாங்கற்களும், வைரகற்களும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும், பார்வையால் வித்தியாசத்தை கண்டுபிடிக்கவே முடியாது. ஒரு வைரகல்லின் எடை 1.1கிராமும், சாதா கல்லின் எடை 1கிராமுமாய் இருக்கும். உங்களருகில் ஒரு எடை போடும் மெஷினும் உள்ளது. ஒரே ஒரு முறை நீங்கள் எடை போட்டுக் கொள்ளலாம். எந்தப் […]

Share
Nov 142014
 
சதுரங்க வேட்டை!

    ரஷ்ஷியாவில் உள்ள சோச்சி எனும் இடத்தில் 2014ஆம் வருட உலக செஸ் சாம்பியன்ஷிப் விறுவிறுவென நடந்துக் கொண்டிருக்கிறது. 44 வயதானாலும் நம் விஷ்வநாத் ஆனந்த் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், செஸ்ஸை வைத்து ஒரு சவாலை இந்த மாதம் காணலாம். கேள்வி இதுதான். மேலே இருப்பதைப் போன்று ஒரு சூழ்நிலை, நீங்கள் விளையாடும் ஒரு ஆட்டத்தில் வந்துவிடுகிறது. நீங்கள் வெள்ளை நிற  காயின்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறீர். நீங்கள் நினைத்தால், அடுத்த இரண்டே நகர்த்தலில் கருப்பு காயின் […]

Share
Oct 152014
 
தண்ணீர் பலூன்!

இந்த மாத புதிர் அந்த பள்ளியின் பீடி மாஸ்டர் டேவிட் ஜெரால்ட் ஒரு வித்தியாசமான மனிதர். மாணவர்களின் விளையாட்டு நேரத்தில், அவர்களின் வயதிற்கேற்ப மூளைக்கும் வேலை கொடுத்து விடுவார். ஒரு நாள் 11ஆம் வகுப்பு மாணவர்களின் பீடி பீரியட் வந்த போது ஒரு புதிர் விளையாட்டு வைத்தார். ஒரு பெரிய ட்ரம்மை எடுத்து, அதில் நிறைய பலூன்களில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். அந்த ட்ரம்முக்கு அருகில், குட்டி வாளிகளும் இருந்தன. பசங்களை கூப்பிட்டு, அவர்களை இரு அணிகளாக பிரித்து,  விளையாட்டு விதிகளை […]

Share
 Posted by at 12:08 am
Sep 142014
 
மட்டைப்பந்து

அது ஒரு அழகான கிரிக்கெட் மைதானம். 20-20 போட்டி துவங்க உள்ளது. பார்வையாளர்களின் கூட்டத்தில் இரு நண்பர்கள் அமர்ந்திருந்தனர். முதல் நண்பன், இரண்டாமானவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறான். “நண்பா, ஒரு புதிர். இந்த போட்டியில், 20 ஓவர்களில், அதிகபட்சமாக ஒரு பேட்ஸ்மேன் எத்தனை ரன்கள் எடுக்க முடியும்? உபரி ரன்கள் (OVER THROW, NO-BALLS, WIDES) எதுவும் கிடையாது. சரியாக 120 பந்துகள் மட்டுமே வீசப்படும்.” சிறிது நிமிடங்கள் யோசித்துவிட்டு “நண்பா, இது மிக சுலபம். இது […]

Share
 Posted by at 9:48 pm
Aug 152014
 
பாட்டி கணக்கு!

  இந்த வருடம் சுதந்திரதினம் வெள்ளிக் கிழமை வருவதினால், மூன்று நாள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. செல்வம் தன் மகன் அர்ஜூனையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு கிராமத்திற்கு சென்று தனது பெற்றோர்களை சந்தித்து விட்டு வரலாம் என்று கிளம்பினார். அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன். இந்த காலத்து மாணவர்கள் போலவே எலெக்ட்ராநிக் உலகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவன். கிராமம் அவனுக்கு பிடிக்கவில்லை. வந்ததிலிருந்தே தனது டாப்லெட்டிலும், மொபைலிலும்  நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தான். அப்போது […]

Share
 Posted by at 12:04 am
Jul 142014
 
பழநிக்கு சவாலா?

  பழநி அந்த கல்லூரியில் வித்தியாசமாக சிந்திக்கும் சில மாணவர்களில் ஒருவன். புத்தகத்தில் உள்ளதை அப்படியே படித்து விட்டு பரிட்சையில் போய் கொட்டிவிடும் (வாந்தி எடுக்கும்) முறையை விரும்பாத மாணவன். சில ஆசிரியர்களுக்கு இதனால் அவனை புடிக்காது, அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தனர். ஒரு நாள் கணக்கு பரீட்சையின்போது, வீட்டில் ஒரு அசம்பாவிதம் ஆகியதால், பழநி சற்று கால தாமதமாய் பரீட்சை எழுத வந்தான். கணக்கு ஆசிரியர் அவனிடம் சிரித்துகொண்டே, “என்ன தம்பி மாடிகொண்டாயா? ஒரு […]

Share
Jun 142014
 
மன்னனின் தண்டனை

அந்த மன்னன், அவனது நாட்டில் யாராவது மரங்களை வெட்டினார்கள் என்று கேள்விபட்டான் என்றால், அவ்வாறு வெட்டியவர்களுக்கு, அவனது தோட்டத்தில் கடுமையான தண்டனை கொடுத்துவிடுவான். ஓருமுறை மன்னனது காவலாளிகள், இரண்டு பேரை இழுத்துவந்து, “மன்னா இவர்கள் இருவரும் ஊருக்கு எல்லையில், பெரிய மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தனர், இவர்களுக்கு என்ன தண்டனை?” எனக் கேட்டனர். மன்னன் அந்த இருவரையும் பார்த்து, “தோட்டத்தில் இரண்டு வாளிகள் (BUCKET) உள்ளது, ஒன்று 7லிட்டர் அளவுடையது, இன்னொன்று 5லிட்டர் அளவுடையது. அவைகளை வைத்து […]

Share
 Posted by at 5:38 pm
May 142014
 
மூன்று பெட்டிகள்

தமிழகத்தில் அது ஒரு நல்ல பள்ளி என பெயர் பெற்று இருந்தது. வழக்கமாக பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் மட்டும் மாணவர்களுக்கு போதாது, எதிர்காலத்தில் அன்றாடம் காணும் பிரச்சினைகளை தீர்க்கும் அறிவும் வளர வேண்டும் என விரும்பி, பள்ளி நிர்வாகம் வித்தியாசமான ஒரு முயற்சி செய்தது. அதன்படி ஒரே ஒரு பாடத்தில் மட்டும் 25% மதிப்பெண்களை, வித்தியாசமாக சிந்தித்து பிரச்சினைகளை அனுகக்கூடிய திறமைக்கு (lateral thinking) ஒரு புதிர் வைத்தது. புதிர் போட்டிக்கு பின், பள்ளி நிர்வாகத்திற்கோ […]

Share
Apr 132014
 
ராணுவத்தில் பணி

ஒரு மனிதருக்கு 22 மற்றும், 21 வயதுள்ள இரண்டு மகன்கள். இரு மகன்களும் பைக் பந்தையங்களில் சிறந்தவர்கள். தந்தை அவர்கள் விரும்பியவாறு, இரண்டு 200CC பைக்குகள் வாங்கி கொடுத்தார். அந்த இரு மகன்களுக்கும், தேசப்பக்தியும் மிக அதிகம். இருவரும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பினர். தந்தைக்கோ இருவரில் யாரேனும் ஒருவனை மட்டுமே அனுப்ப விருப்பம். அவர் “மகன்களே, நான் உங்களுக்கு பைக் போட்டி வைப்பேன், யார் அந்தப் போட்டியில் வெற்றி பெறுகின்றீரோ, அவர் மட்டும் நம் நாட்டிற்கு […]

Share
Mar 142014
 
நேர்முகத் தேர்வு

இந்த மாத புதிர் உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவர், நல்ல நிறுவனம் ஒன்றில் நேர்முகத்தேர்விற்கு (Interview) அழைப்பு வரவே, கலந்து கொள்ளச் செல்கிறார். அனைத்துக் கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் கூறி முடித்து விடுகிறார். கடைசியில் ஒரே ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கூறிவிட்டார் என்றால், வேலை கண்டிப்பாக அவருக்கு தான் என்று அந்த நிறுவனத்தின் முதலாளி உறுதி அளிக்கிறார். நண்பரும் சற்றே குஷியாகி சரி என்கிறார். முதலாளி, அவர்கள் இருவருக்கும் நடுவில் உள்ள மேசையின் […]

Share
Mar 012014
 
குற்றாலத்தில் நான்கு நண்பர்கள்

இந்த மாதப் புதிர் நண்பர்கள் நான்கு பேர், விடுமுறைக்கு குற்றாலம் செல்லலாம் என்று திட்டமிட்டு கிளம்புகின்றனர். வெகுநேரம் குற்றால அருவியில் குளித்துவிட்டு திரும்புகையில், மாலை ஆகிவிடுகிறது. பின் மெதுவாக நடந்து வந்துக் கொண்டிருந்தவர்களை கூர்மையான ஆயுதங்களுடன் ஒரு திருடர்கள் கூட்டம் கடத்திக் கொண்டு சென்று, அந்த கூட்டத்தின் தலைவனிடம் ஒப்படைக்கின்றனர். தலைவன் நண்பர்களை நோக்கி, ஒரு சிறிய விளையாட்டு. அதில் நீங்கள் குழுவாக இணைந்து யோசித்து விளையாடினால் தான் வெல்ல முடியும். வென்று விட்டால் உங்களை விட்டு […]

Share
Share
Share