Nov 142014
 
அறிமுகம்

  சென்ற மாதம் நண்பர் ஒருவருடன் பேசி கொண்டிருந்தேன். நமது B+ இதழை பற்றி கேட்ட அவர், 10மாதமாக வெளி வந்து விட்டது, உங்களது டீமில் உள்ளவர்களையும் எழுதுபவர்களை பற்றியும் சில வரிகளில் அறிமுகம் செய்யலாமே என்றார். அருமையான யோசனையாய் தோன்றவே, அவருக்கு நன்றி தெரிவித்து, கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்லி வந்தேன். அதற்கு ஒரு வாய்ப்பு அமைந்தது போல், சென்ற மாதம் நடந்த எனது மகளின் முதலாம் வருடம் பிறந்த நாளில், B+ இதழில் பங்களித்தவர்களில்சிலர் […]

Share
 Posted by at 12:25 am
Nov 142014
 
அப்பா

  அன்பு என்ற மூன்றெழுத்தில்வந்தார் தந்தையாக ! அறிவு என்ற மூன்றெழுத்தைதந்தார் ஆசானாக ! பாசம் என்ற மூன்றெழுத்தைதந்தார் தாயாக ! இறப்பு என்ற நான்கெழுத்தில் மட்டும்விட்டுச்சென்றார் தனியாக ! தனிமை என்ற மூன்றெழுத்தில்விட்டுச்சென்றார் கொடுமையாக ! நினைவு என்ற மூன்றெழுத்தில்வாழ்ந்தார் என்றும் என் அன்புள்ள அப்பாவாக !   – S.நித்தியலக்ஷ்மி,   தஞ்சாவூர் Likes(6)Dislikes(0)Share on: WhatsApp

Share
Nov 142014
 
எல்லோரும் சாதிக்கலாம் – பகுதி 2

  (சென்ற இதழ் பேட்டியின் தொடர்ச்சி…) 12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்து எடுத்தாலும் பிரச்சினை இல்லை என்கிறீர்களா? கண்டிப்பாக, எங்கள் மாணவர்களுக்கு நாங்கள் சொல்வது, நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்தாலும் கவலை இல்ல, உங்களுக்கு பள்ளிக்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்று தான். மதிப்பெண் தான் வாழ்க்கை என்றுகூறி, மாணவர்களுக்கு நம் சமுதாயம் மிகுந்த மன அழுத்தத்தை கொடுத்துவிடுகிறது. அவர்களுக்கு விளையாட்டு கிடையாது, பொழுதுபோக்கு கிடையாது, எப்போதும் படிப்பு படிப்பு என்று அதிக அழுத்தத்தை […]

Share
 Posted by at 12:22 am
Nov 142014
 
கானல் நீர்

நாளை நடக்கப் போகும் நிகழ்வுகளை நினைத்து நினைத்து எவ்வளவு தான் இறுக்கமாக இமைகளை மூடினாலும் உறக்கம் விழிகளை தழுவவில்லை. மனதில் ஆயிரம் நினைவலைகள். பத்து ஆண்டுகளுக்கு முன் கடிகாரத்தை திருப்பினால் பட்டாம் பூச்சிகள் என்னுள் சிறகடிப்பதை உணர முடிந்தது. “தோற்றம் எப்படி இருக்கும்? நடை, உடை, பழக்க வழக்கம் ஏதாவது மாறி இருக்குமோ?” என கேள்வி கணைகள் தொடர்ந்து ஊடுருவின. ஒரு வழியாக இரவை கடத்தி விடியற்காலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். சாலையின் நெருக்கடியில் வாடகை […]

Share
 Posted by at 12:14 am
Nov 142014
 
நெய்சோறு

ஒரு ஊரில் ஒரு குருகுலம் இருந்தது. குருவின் இல்லத்திலேயே, அந்த குருகுலம் இயங்கி கொண்டிருந்தது. படிப்பதற்கு,  விளையாடுவதற்கு, பிறபயிற்சிகள் எடுப்பதற்கு என தனிதனி இடங்கள் மற்றும் அறைகள் இருந்தன.  அந்த குருகுலத்தில், அனைவரும் சேர்ந்து உணவு உன்ன வேண்டும் என்று ஒரு பழக்கம் இருந்தது. குருமாதா (குருவின்மனைவி) அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்து தான் சமைப்பார். குரு மற்றும் மாணவர்கள் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து உணவு உண்பார்கள். ஒருநாள், குரு ஓர் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்ததால் சிறிது […]

Share
 Posted by at 12:12 am
Nov 142014
 
நல்ல நேரம் எப்போது வரும்?

“நா மட்டும் அப்பவே ஒழுங்கா படிச்சிருந்தா இந்நேரம் ஒரு நல்ல வேலையில இருந்துருப்பேன்” “இந்த வேலைய நேத்தே செஞ்சிருந்தேன்னா இன்னிக்கு யாரும் என்ன திட்டிருக்க மாட்டாங்க” என்று பலர் புலம்புவதை நம் காதால் கேட்டிருக்கிறோம். இழந்த பிறகு இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என மனிதன் ஏங்கும் ஒருசில விஷயங்களில் இந்த நேரமும் ஒன்று. கடந்து போன பிறகே அதன் முக்கியத்துவத்தை மனிதனுக்குப் புரிய வைக்கிறது. எந்த ஒரு நடந்து முடிந்த செயலையும் நம்மால் மறுபடி நிகழ்த்திக் காட்ட […]

Share
Nov 142014
 
சதுரங்க வேட்டை!

    ரஷ்ஷியாவில் உள்ள சோச்சி எனும் இடத்தில் 2014ஆம் வருட உலக செஸ் சாம்பியன்ஷிப் விறுவிறுவென நடந்துக் கொண்டிருக்கிறது. 44 வயதானாலும் நம் விஷ்வநாத் ஆனந்த் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், செஸ்ஸை வைத்து ஒரு சவாலை இந்த மாதம் காணலாம். கேள்வி இதுதான். மேலே இருப்பதைப் போன்று ஒரு சூழ்நிலை, நீங்கள் விளையாடும் ஒரு ஆட்டத்தில் வந்துவிடுகிறது. நீங்கள் வெள்ளை நிற  காயின்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறீர். நீங்கள் நினைத்தால், அடுத்த இரண்டே நகர்த்தலில் கருப்பு காயின் […]

Share
Share
Share