Jun 142014
 
கல்கி

  கண்ணைக் கவரும் கணிப்பொறி, கவனத்தை ஈர்க்கும் கைப்பேசி, விண்ணை அளக்கும் செயற்க்கைகோள், ஒன்றா இரண்டா! இதுபோல உலகமெங்கும் உபகரணங்கள் கண்ணுக்கு தெரியா கதிர்களை; கணம் தவறாமல் சுற்றிலும் வீசி மண்ணைக் காக்கும் மரங்களையும், மரங்கள் தாங்கும் பறவைகளையும், மனிதன் போற்றும் உடலினையும், ஊனமாக்கும் ஊமைக் காலனே! கலியுகத்தின் கல்கி நீ தானோ? -Dr. K. நந்தினி (லண்டனிலிருந்து)     Likes(5)Dislikes(0)Share on: WhatsApp

Share
May 142014
 
லட்சியத்தை அடை

இரை எந்தக் கண்டத்தில் இருந்தாலென்ன இறக்கையாய் உன் உந்துசக்தி இருக்கையில்! இலக்கு எத்தனை தொலைவில் இருந்தாலென்ன ஈட்டியாய் பாயும் உன் நம்பிக்கை இருக்கையில்!   போராட்டம் எத்தனை வந்தாலென்ன, எரிமலையாய் துணிவு இருக்கையில்! சவால்கள் எத்தனை வந்தாலென்ன, சாதிக்க நீ வெறியுடன் துடிக்கையில்!   பயணம் எத்தனை தூரம் இருப்பின் என்ன, சூறாவளியாய் உன் வேகம் இருக்கையில்! பிரச்சினைகள் எத்தனை இருப்பின் என்ன, சுட்டெரிக்கும் விவேகம் உன் வசம் இருக்கையில்!   சோகம் பல சூழ்ந்து வந்தாலென்ன அக்கினி […]

Share
Apr 132014
 
புது வருடம்!!!

(துபாயிலிருந்து ஒரு வாசகர் எழுதி அனுப்பியது)   பூ மொட்டா காத்திருக்கேன் புது வருஷம் பிறக்குமுன்னு !   சாணி தெளிக்கயிலே கோணி சிரிச்சவனே !   மேலோட்டம்   பார்த்துகிட்டே நீரோட்டம் இறச்சவனே !   அம்மியில நான் அரச்ச அரவைகளை ருசிச்சவனே !   காடு மேடு சுத்தி ரம்மியத்தை படிச்சவனே !   கும்மியாடும் குமரி என்னை கூப்பிட்டு கவுத்தவனே !   மாவட்டும் என் கைக்கு மருதாணி  வச்சவனே !   தயங்காம  காத்துருக்கேன் தல பொங்கல் தருவேன்னு !   […]

Share
Mar 142014
 

நண்பனே! நீ உலகின் கதாப்பாத்திரம் அல்ல உலகின் கதாநாயகனே நீ தான்..   நம்பிக்கையோடு வாழ்ந்திடு மனிதனே.. சிறு சிலந்திப் பூச்சிக்குக் கூட எவ்வளவு நம்பிக்கை! படைப்புகளின் சிறந்த நீ, நம்பிக்கை இல்லாமல் வாழ்வதா? ஆம், எழுந்திடு, சிகரம் தொடு…   வெற்றியின் முகவரி, நம்பிக்கை என்று தெரியாதா உனக்கு? பட்டாம் பூச்சியைப் பார், நீ பரந்துக் கொண்டே இரு, வானம் தாண்டி செல்   வாழ்க்கைத் தரம் உயரும் உனக்கு நீ செல்லும் இடமெல்லாம் வெற்றி […]

Share
Mar 012014
 
குடியரசு தினம்

சிறப்புக் கவிதைகள்       என் தேசம்  தேசமே! என் தேசமே! தேகத்தை கூச்செறியும் பசுமை, நாடியின் இரத்த வேகத்தை விட வீறு கொண்டு எழும் புனித நதிகள்,   தொண்மை தொட்டு தொடரும் பாரம்பரியம், ஒழுக்கம் என நின்ற வீரப் பெண்மையின் மரபு, துரோகம் தெரியா வீரம், அந்நிய ஈக்கள் மொய்த்த இனிப்பு,   உலகையே ஈரடியில் அளந்த வள்ளுவன், பெண்ணிற்கும்! ஏன், பறவைக்கும் கூட சுதந்திரம் கண்ட பாரதி அக்னிக்கே அஹிம்சை சொன்ன காந்தி! […]

Share
 Posted by at 7:00 pm
Mar 012014
 
பொங்கல்

பொங்கலைப்பற்றி பொங்கல் – ஒரு சுதந்திரம் தன்னை சி்றைப்படுத்தி வைத்திருந்த மண்ணிடமிருந்து கரும்புகளுக்கும், நான்கு நாட்கள் பொங்கல் விடுமுறை பெறும் மாணவர்களுக்கும். பொங்கல் – ஒரு குதூகலம் கும்மியடித்து காணம் பாடும் கன்னியருக்கும், பல தியாகம் புரிந்து அறுவடைக்கு தயாராகும் உழவர்களுக்கும். பொங்கல் – ஒரு வீரம் கொம்புகளுக்கு வர்ணமிட்டு பாய்ந்து ஓடும் காளைகளுக்கும், அந்த காளைகளோடு ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் சிங்கங்களுக்கும். பொங்கல் – ஒரு மறுமலர்ச்சி் ரப்பரையும் பாயையும் கொளுத்தி புகைமூட்டும் நாளல்ல, பழையன பறக்கவும் […]

Share
Share
Share