Dec 262017
 
விபத்தில்லா ஓட்டுனர்

பேருந்தில் ஏறி அமர்ந்தும் நின்றும் பிதுங்கி வழியும் நெரிசலில் ஊர்ந்துக்கொண்டே படியிலும் பக்கவாட்டு கம்பியிலும் தொங்கிக் கொண்டிருக்கும் பயணக் குழந்தைகளை அவரவர் இடத்தில் பத்திரமாய் சேர்க்கும் போது சேகவனாய் கைக் காட்டியதும் நிற்பதில் கடமையைச் செய்யும் கர்மவீரனாய் ஒவ்வொருகொருவர் விட்டுக்கொடுத்தலே வாழ்க்கை என்பதை புரிந்து சாலையின் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கும் போது உயிர்காக்கும் கவசமாய் இவனே தாயுமானவனாய்.. ஆம் “விபத்தில்லா ஓட்டுனர்” – குடந்தை பிரேமி   Likes(1)Dislikes(0)Share on: WhatsApp

Share
Sep 302017
 
கடைக்குட்டியின் கண்ணீர்

மரத்தை கடக்கையில் போகிற போக்கில் ஒரு தளிர் இலையை ஒடித்துவிட்டு போவோர் கவனத்திற்கு…   நீங்கள் ஒடித்தது அந்த கிளையின் கடை குட்டியாக இருக்கலாம்   காற்றைக் கடிக்கப் பழகும் கிளையின் பால் பல்லாக இருக்கலாம்…   அந்த மரத்தின் ஒரு சொட்டு புன்னகையாக இருக்கலாம்…   கிளையின் காதுகளின் மரகத தோடாக இருக்கலாம்…   கைக்கு எட்டும் உயர்த்தில் வளர்த்த அந்த தாழ்ந்த கிளை மீது நீங்கள் நிகழ்த்திய ஆணவக் கொலையாக இருக்கலாம்…   அந்த […]

Share
Apr 142017
 
சித்திரைப் பாவையே வருக !

எத்திசையும் அமைதி நிலவ பங்குனித் தாய் பெற்றெடுத்த சித்திரைப் பாவையே சிறப்பான சிந்தனைகளை சுமந்துகொண்டு வருக முத்தான வரங்கள் தருக !   எல்லாரும் கொண்டாடும் எங்கள் சித்திரைப் பாவையே எம்மதம் சம்மதம் – உலகில் மனிதநேய மிக்க மக்கள் சமுதாயம் மலர வரம் தருக !   தன் மக்கள் நலம் மனதில் கொள்ளாமல் நாட்டு மக்கள் நலமே மனதில் கொள்ளும் அரசியல் தலைவர்கள் உருவாக வரம் தருக !   பொன் நகை வேண்டாம் […]

Share
Dec 072016
 
சிம்மாசனம் சிங்கத்திற்கே!

மோடியா இந்த லேடியா என சிம்மமாய் நீ கர்ஜித்தபோது, அமோக வெற்றி தந்து அழகு படுத்தியது எம் கூட்டம்! செய்வீர்களா செய்வீர்களா என ஒவ்வொரு முறையும் நீ சீறியபோது, சீரும் சிறப்பும் செய்து சிலிர்க்க வைத்தது எம் கூட்டம்! ஒற்றைப் பெண்ணாய் போர்க்களத்தில், ஒட்டு மொத்த கூட்டத்தை உன் ஒரு இரும்புக்கரம் எதிர்க்க, மற்றொரு கரமாய் துணை நின்றது எம் கூட்டம்! இத்தனை செய்தும், எம் கூட்டம் தந்த அழகு அரியணையை விட்டுவிட்டு ஏன் சென்றாய்? நீ […]

Share
Oct 142016
 
“மனிதனே முயன்று பார்”

மனிதா நாம் மண்ணில் பிறந்தது மடிவதற்காகவா! ஒரு முறை வீழ்ந்தால் என்ன, மறுமுறை எழுந்து வா ஒரு நாள் வாழும் பூ கூட, தேன் தந்து செல்கிறது, பல நாள் வாழும் நாம் பல தந்து செல்லலாமே?   வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று மூலையில் முடங்காதே முடியும் என்று முயன்று பார் உலகம் முழுவதும் உனதாகும் மண்ணுக்குள் புதைந்த விதை விருட்சமாக வெளிவருகிறது மனிதனாகிய நாம் விறகாக வீழ்வது ஏனோ !   நிலத்தில் விழும் வியர்வை […]

Share
Sep 142016
 
பெண்ணே  உயிரோட்டம் நீ…..

பெண்ணே …  .. நீ வீட்டிலே அடைந்து கிடக்கும் கூண்டுக் கிளியல்ல நாட்டையே ஆளும் சுதந்திரப் பறவை !   நீ நிற்கும் நெடுமரம் அல்ல நீரில் மிதக்கும் மரக்கலம் !   நீ அலங்காரப் பதுமையல்ல அணி வகுக்கும் புதுமைப் பெண் !   நீ பயனில்லாக் காட்டுப் பூ அல்ல மக்கள் விரும்பும் மல்லிகைப் பூ !   நீ பாலியல் தொந்தரவு கண்டும் கேட்டும் பதுங்கும் பூனையல்ல பாயும் புலி !   […]

Share
Aug 142016
 
என் அறியாமையை அழகாக்கும் குட்டி தேவதை

  இறுக மூடிய உள்ளங்கையைக் காட்டி அப்பா உள்ளே உள்ளது என்னவென்று கண்டுபிடி என்கிறாய்…   பதில் எதிர்ப்பார்த்து ஆர்வத்தில் படபடக்கும் உன் இமைகளின் மேலமர்ந்து ஒரு ஆனந்த ஊஞ்சலாடுகிறது என் மனம்…   பதிலாய் … தெரியலையே என்கிறேன் …   வானளவு வியாபித்திருக்கும் என் அறியாமையை ஒரு பெருஞ்சிரிப்பால் அழகாக்கி, “சும்மா … “ என்று சொல்லிய வண்ணம் பொத்திய வெறுங்கையை திறக்கிறாய்…   பெருவெளியும், ஆகாயமும் பெயரறியா ஒளிக்கீற்றும் உலகங்கள் உண்டாக்கிய முதல் […]

Share
Nov 142015
 
உன்னோடு மட்டும்

உன்னோடு மட்டும் பேசுவதற்கு ஓராயிரம் அந்தரங்கத் தகவல்களை என்னிடத்தில் தேக்கியிருக்கிறேன்!   நாம் சந்திக்காத இடைவெளியில் கிடைத்த பயண அனுபவங்களை உணர்வு மாறாமல் பகிர வேண்டும்!   நான் பெற்ற பெருமித கணங்களை ஒரு துளியும் விடாமல் ஒப்புவித்து உன்னையும் குதூகலமாக்க வேண்டும்!   நாமிருவரும் பழகிய நண்பர்களையும் அறிமுகமில்லாத புதிய முகங்களையும் ஒன்றாய் சேர்ந்து அலசிட வேண்டும்!   நீ அருகில் இல்லாத பொழுதுகளில் பட்ட துயரம் அத்தனையும் சொல்லி உன் தோளில் சாய்ந்திட வேண்டும்! […]

Share
Aug 152015
 
காலம் வென்ற கலாம்!!

  பாவம் நீக்கி புண்ணியம் சேர்க்கும் பூமியில் உதித்தவரே, ராமணால் அரியப்படும் ராமேஸ்வரம் இனி உம்மால் உயர்வு பெரும்   காலம் உம்மை காயப்படுத்தலாம் காலத்தையே திரும்பி நின்று காலை மாற்றி கலாமாய் நின்று காட்டியவரே எங்கே போனீர்?!   பிற நாட்டு தொழில்நுட்பத்தை எதிர்பாராமல், ஏவுவூர்தியில் தாய்நாட்டை தூக்கி நிறுத்தியவரே பொக்ரானில் பாரதத்தை பாதுகாத்து, எம் மண்ணின் தலைக்குடிமகனாய் பாரே நமை புகழ நிமிர்ந்து நிற்கச்செய்தவரே   மத மாச்சர்யங்களைக் களைந்து யாதும் ஊரே யாவரும் […]

Share
Jul 142015
 
என் நம்பிக்கை..

  பொறுமையிழந்த ஒரு காலைப் பொழுதில்.. என் வீட்டின் சாளரத்தின் கம்பிகளை வளைத்தது என் நம்பிக்கை.. பரந்த வானத்தின் பறவைகளை பார்த்து உயர எழும்பி அது செல்வதை தடுக்க விருப்பமில்லாமல் அதை .. அனுப்பி வைத்து விட்டு அது திரும்பும் வழி பார்த்திருந்தேன்.. இதோ.. என் நம்பிக்கை இன்னும் பெரிதாக வளர்ந்து.. என்னை நோக்கி வருகிறதே.. கையில் கனி ஒன்றை ஏந்தியபடி.. இனி … நிரந்தரமாய் சாளரத்தின் கதவுகளை திறந்து வைப்பேன் என்று நம்பியது ..நம்பிக்கை! அதன் […]

Share
Jun 142015
 
எது உன்னதம்?

ஈரணுவாய் அவதரித்த திங்களிலிருந்து ஈரைந்து மாதங்கள் நீர் இருக்கையில் சுமந்து தொப்புள் கொடி வாயிலாய் ஊனை உணவாக்கி வருடலையும் குரலையும் வளர்ப்பினில் உணர்வாக்கி தன்னுயிரின் மற்றொரு உருவமாய் உருவாக்கி தரணிக்கு அறிமுகப்படுத்திய தாயே, தாய்மையே… காவியங்களும் புராணங்களும் உன் பெருமையை எக்காலத்திலும் கவிபாட மறந்ததில்லை…   தாயுடன் பகிர்ந்த காதலை மட்டுமே ஆதாரப்படுத்தி அக்காதலுக்குமுன் இந்த பாசமே மிஞ்சுமளவுக்கு பாசத்துடன் கரம் பிடித்து நடைபழக்கி வைக்கும் ஒவ்வொர் அடியிலும் அச்சத்துடன் பெருமைக்கண்டு பெருமிதத்துடன் கரம் பிடித்து எழுதுகோலையும் […]

Share
May 142015
 
தமிழின் புகழ்

பண்டு முதல் இன்றுவரை உயர்ந்த மொழி தமிழ் கண்டுபலர் சிரம்தாழ்த்தி விண்டுரைத்தார் புகழ் கண்டவரும் கேட்டவரும் மகிழ்கின்றார் காண் பண்டவரும் பல்லவரும் சிறப்படைந்தார் தமிழால்தான் நித்தம் நித்தம் விண்டுரைப் போம் தமிழின் புகழை சித்தமதில் மகிழ்ந்திடுவோம் அத்தமிழின் எழிலை பசுந்தமிழ் செந்தமிழ் பைந்தமிழ் தீந்தமிழ் இசையுரு பொருளெல்லாம் குறிப்பது தமிழையே சிறந்த புலவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா நிறைந்தபொருள் கொண்டவர் தம்கவிதை வியப்பிலடங்கா பசுந்தமிழ் உலகினில் பலகலை உயரவே பழியறப் படித்திடு பாங்குடன் வாழவே செந்தமிழ் நாட்டினில் செயல்படு […]

Share
Apr 142015
 
நேர்மையே பார்வையாக

வானொலியில் பிடிபடாத அலைவரிசையில் ஒலிக்கும் பழைய பாடல் போல இருந்தது அந்த குரல்… வசீகரம் ஏதுமில்லை வர்ணம் ஏதுமில்லை அந்த பாடல் முறையே பாடப்பட்ட ராகத்தின் சாயல் எப்போதேனும் தென்பட்டது அந்த குரலில்… இசையின் இலக்கணங்களைக் கண்டுகொள்ளாமல் தன்னகத்தே ஒரு நேர்த்தியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது அந்த பாடல்… துணைக் கருவிகள் ஏதுமில்லாதது அந்த குரலைத் தனிமை படித்தியிருந்தது ஆயினும்… சட்டைப்பையில் சில்லரைகளைத் தேடவைத்தது விழி இழந்த அந்த பாடகனின் நம்பிக்கையும் பாடி பிழைக்க வேண்டும் என்கிற நேர்மையும் […]

Share
Mar 142015
 
மனித வீரன்

சுடும் வெயிலில் சுருங்கிய கண்களுடன் கொதிக்கும் ரத்தம் அனல் குடிக்க உடலெங்கும் காய்ந்த குருதி நரம்பாக சிதறிய உடல் எல்லாம் படிக்கட்டாக வீரக்கடமை எனும் இருள் மறைக்க மரண ஓலத்தின் மர்ம ரசிகனாக எல்லாம் இழந்தும் எதையோ சாதிக்க தாய் நாடே வந்தால் வருவேன் இல்லை எதிரியின் படிக்கட்டாவேன் – கவிஞர்.ஞ     இரவுக் கடமை கதவோட்டை வழி குழந்தை போல் தவழ்ந்து வந்தது ஒளி கருவிழி கதிரொளிக்கு சலனப்பட்டு ஓவென்று அழுதது மனித கூப்பாட்டின் […]

Share
 Posted by at 12:29 am
Feb 142015
 
உன் லட்சியம்

  நண்பா வா… நல்லதொரு காலம் கணிந்திருக்கிறது; நாம் சேர்ந்து உழைப்போம். உன்னதங்களின் உறைவிடமாய் இருந்த பாரதம் – இன்று உருமாறிக் கிடக்கிறது! உலகக் கயவர்களின் சூழ்ச்சிகளில் சிக்கி – நம் உயரியப் பண்பாட்டை உதறித் தள்ளியதால் உச்சியில் இருந்து வீழ்ச்சி அடைந்தோம் இனி வரும் காலம் இந்தியாவின் காலம்; இன்னல்கள் மாய்க்க உழைத்திடுவோம் நாளும்…! உற்றார் ஊரார் உளருவதைத் தள்ளு; உன் நாட்டுக்கு உழைப்பதை உயர்வாய்க் கொள்ளு… பிழைக்கத்தெரியாதவன் என்று பிழை சொல்வார்கள்; பெரிதுபடுத்தாதே! பிழைப்பு […]

Share
Jan 152015
 
காலம் கவனிக்கிறது!!

போர்க்களமா வாழ்க்கை? பார்க்கலாமே ஒரு கை! உன்னிடம் உள்ள தன்னம்பிக்கை உன்னை விட்டு அகலும் வரை சோர்ந்து விடாதே! இதுதானா வாழ்க்கை என்று நீயும் கோழைகளின் பட்டியலில் சேர்ந்து விடாதே! இல்லையென்பார் ஒரு கூட்டம், உதவி என்று இன்னொரு கூட்டம் கருணையில் நீயும் இருப்பதைக் கொடுப்பாய்; இன்னமும் வேண்டும் என்பார்கள் இதுதான் முடியும் என்பாய்! மறுகணமே கஞ்சப் பிரபு என புறம் கூறிவிட்டு செல்வார்கள்! கொடுத்ததை திரும்பக் கேட்டால் கோமாளி என்பார்கள்; இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ ஏமாளி என்பார்கள்! […]

Share
Dec 132014
 
பழகு

  ஆயுள் நீளும் இரகசியம் சிரிக்கப் பழகு பிடித்துத் தள்ளும் தோல்வி செரிக்கப் பழகு உலுக்கி எடுக்கும் துரோகம் சகிக்கப் பழகு இடறச் செய்யும் தடைகள் உடைக்கப் பழகு எங்கும் மாறுவேடப் புருசர்கள் நடிக்கப் பழகு கோபம் தூண்டும் சொற்கள் அடக்கப் பழகு அன்பைத் தேடும் இதயம் அணைக்கப் பழகு உன்னைப் பிணிக்கும் புன்மை புதைக்கப் பழகு எங்கும் முளைக்கும் சவால் போராடப் பழகு நீளும் ஏழைக் கைகள் கொடுக்கப் பழகு வழியில் தடுக்கும் எருமைகள் கடக்கப் […]

Share
Nov 142014
 
அப்பா

  அன்பு என்ற மூன்றெழுத்தில்வந்தார் தந்தையாக ! அறிவு என்ற மூன்றெழுத்தைதந்தார் ஆசானாக ! பாசம் என்ற மூன்றெழுத்தைதந்தார் தாயாக ! இறப்பு என்ற நான்கெழுத்தில் மட்டும்விட்டுச்சென்றார் தனியாக ! தனிமை என்ற மூன்றெழுத்தில்விட்டுச்சென்றார் கொடுமையாக ! நினைவு என்ற மூன்றெழுத்தில்வாழ்ந்தார் என்றும் என் அன்புள்ள அப்பாவாக !   – S.நித்தியலக்ஷ்மி,   தஞ்சாவூர் Likes(6)Dislikes(0)Share on: WhatsApp

Share
Aug 152014
 
சுதந்திர தேசத்தில் சுதந்திரம் எங்கே???

  நேற்று…… அன்னியவன் கையில் பாரத தேசம் இருந்த போது, நம் மக்கள் அவலவாழ்க்கை வாழ்ந்தார்கள். விலை மாடுகள் போல நாடு கடத்தப்பட்டார்கள். எல்லாத் துயரங்களையும் நெஞ்சில் தாங்கியபடி தினம் தினம் கண்ணீர் வடித்துக்கொண்டே வாழ்ந்தார்கள். எங்கே எம் தேசம் விடியாதா? எங்கே எம்தேசம் விடியாதா.? சுதந்திர தாகம் மலராதா என்ற ஏக்கம்..   சுதந்திர வேள்வித் தீயில், ஆயிரம் ஆயிரம் வீரர்கள் மார்பில் குண்டுகள் பட்டு வழிந்த இரத்தத்தில் பிறந்தது பாரதக் கொடி, அதுவே எங்கள் தேசத்தின் அசோகக் கொடி..   இன்று……. அரும்பாடுபட்டுப் பெற்ற சுதந்திரம் எங்கே? அன்றாடம் பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இளம் பெண்களை பாலியல் வண்கொடுமை என்ற சொற்றொடர் தாங்கியபடி தினம் தினம் செய்திகள்.. பெற்ற சுதந்திரம் எங்கே பெற்ற சுதந்திரம் எங்கே?   மீன் பிடிக்க கடலுக்கு போன மீனவன் வரும்வரை, மனைவி கரையில் கண்ணீர் சிந்துகிறாள் சுதந்திர நாளில் செங்கோட்டையில் சிகப்புக் கம்பளம் விரித்து கொடி ஏற்ற, உப்புக்கடலில் மீனவன் இரத்தம் சிகப்பாகிறது எங்கே சுதந்திரம் புதைந்தது?   நாளை…… பட்டொளி வீசும் பாரதக்கொடி ஏறட்டும் பாரத மாந்தர்கள் மகிழட்டும் நெஞ்சினில் இனிப்பு திகட்டட்டும் சத்திய தர்மம் நிலைக்கட்டும் சமாதானம் நிலவட்டும்!   பாரத தேசத்தில் வாழ்வோருக்கும் வாழ்த்துக்கள்.. சுதந்திர […]

Share
Jul 142014
 
அம்மா!!!!

ஈரைந்து மாதங்கள் எனை சுமந்து மூவைந்து மாதங்கள் பாலூட்டி சீராட்டி நாலைந்து மாதங்கள் நடைபயிற்று ஐந்தைந்து மாதங்கள் பிணி நீக்கி பேணி காத்து ஆறைந்து மாதங்கள் பசி மறந்து ஏழைந்து மாதங்கள் பள்ளி அனுப்பி எனை மேதையாக்க பேதையாய் நீ இருந்து என் கனவுகளை நீ சுமந்து நிசங்களை எனக்களித்து நிதர்சனமற்று  போனாலும் நெறிகெட்டு நான் போகா வண்ணம் காத்திட்ட என் தாயே மீண்டும் ஒரு முறை  எனை சுமப்பாயா கல்லறை சென்றிடும் முன் கருவறை கண்டிட […]

Share
Share
Share