Mar 142015
 
சாதனை சகோதரர்கள்!

சுயதொழில் தொடங்கவதற்கெல்லாம் நல்ல அனுபவமும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் முடியுமென நிறைய பேர் சொல்லி கேள்விபட்டிருப்போம். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆர்வமும் உழைப்பும் இருந்தால் போதும், வயதும், அனுபவமும் பெரிய தடையில்லை என நிறுபித்து, வெற்றி பெற்று வருகின்றனர் இந்த சகோதரர்கள். மூத்தவர் 15வயதாகும் ஷ்ரவண் குமரன், இளையவர் 13 வயதாகும் சஞ்சய் குமரன். பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சிறு வயதிலேயே, கைப்பேசியில் உள்ள மென்பொருள் உருவாக்கத்  துறையில் […]

Share
Feb 142015
 
ரோபோ பாலாஜி!!!

இன்றைய காலத்து இளைஞர்களை அவர்கள் கைப்பேசியில் அழைத்தால் பொதுவாக என்ன மாதிரி பாடல்கள் “CALLER TUNE” ஆக நமக்கு கேட்கும் என நாம் அனைவரும் அறிவோம். ஆனால் 25 வயதே ஆகியுள்ள திரு.பாலாஜியை அழைத்தால், “சிட்டி, தி ரோபாட், ஸ்பீடு ஒன் டெர்ராஹெர்ட்ஸ், மெமரி ஒன் ஜெட்டாபைட்” என எந்திரன் பட வசனம் தெரித்து விழுகிறது. இதை வைத்தே ரோபோடிக்ஸ் துறையில் இவரின் ஆர்வம் தெளிவாக புரிந்தது. B+ இதழின் சாதனையாளர்கள் பக்கதிற்காக சந்திக்கலாமா என்றவுடன் மகிழ்ச்சியுடன் […]

Share
Jan 152015
 
VISION IAS !

உடல் ஊனம் ஒரு தடை அல்ல, உள்ளத்தின் ஊனமே தடை என்பதை தன் வாழ்க்கையில் நிருபித்துக் காட்டியிருக்கிறார், சென்னையை சேர்ந்த 24வயது செல்வி பெனோசஃபைன். இரண்டு கண்களும் 100% பார்வையற்று இருந்தாலும், கடின உழைப்பின் மூலம் IAS ஆக உயர்ந்து நிற்கும் இவரை, B+ இதழின் இந்த மாத சாதனையாளராய் அறிமுகப் படுத்துவதில் மற்றற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இவரைப் போன்ற சாதனையாளர்கள், உடல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி, நம்பிக்கை இழந்த சாமானியர்களுக்கும் பெரிய எழுச்சி தரும் […]

Share
Dec 132014
 
சூப்பர் தோட்டம்!

பல தலைமுறைகளாக விவசாயத்தை மட்டுமே சார்ந்து இருந்த பல விவசாயிகள் கூட தங்களது நிலத்தை விற்று விடக்கூடிய இன்றைய சூழ்நிலையில், விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பி கிட்டத்தட்ட 150 ஏக்கரில் மகத்தான  சாதனை புரிந்துள்ளார் லியோ ஆர்கானிக் பண்ணையின் உரிமையாளர் திரு.பாரதி. வியப்பாக இருக்கிறதல்லவா? அதுவும், முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் ஒருவர் மகசூலில் பல சாதனைகள் புரிந்து வருகிறார் என்றவுடன் அவரையும், அவர் தோட்டத்தையும் காண மிக ஆவலுடன் சென்றேன். B+ இதழின் இந்த மாத […]

Share
Nov 142014
 
எல்லோரும் சாதிக்கலாம் – பகுதி 2

  (சென்ற இதழ் பேட்டியின் தொடர்ச்சி…) 12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்து எடுத்தாலும் பிரச்சினை இல்லை என்கிறீர்களா? கண்டிப்பாக, எங்கள் மாணவர்களுக்கு நாங்கள் சொல்வது, நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்தாலும் கவலை இல்ல, உங்களுக்கு பள்ளிக்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்று தான். மதிப்பெண் தான் வாழ்க்கை என்றுகூறி, மாணவர்களுக்கு நம் சமுதாயம் மிகுந்த மன அழுத்தத்தை கொடுத்துவிடுகிறது. அவர்களுக்கு விளையாட்டு கிடையாது, பொழுதுபோக்கு கிடையாது, எப்போதும் படிப்பு படிப்பு என்று அதிக அழுத்தத்தை […]

Share
 Posted by at 12:22 am
Oct 152014
 
எல்லோரும் சாதிக்கலாம்!

“தரமான கல்வி தான் நாம் நாட்டிற்கு இன்று அத்தியவசமான தேவை. அது கிடைத்தால் நம் நாட்டில் உள்ள பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். ஒவ்வொரு மாணவனிடமும் ஒரு தனி சிறப்புண்டு. எந்த ஒரு தேர்வும் ஒரு மாணவனின் அறிவு திறமையை துல்லியமாக எடை போட்டு விட முடியாது. ஒரு மாணவனின் நியாபக சக்தியை எந்த ஒரு மூன்று நேர பரீட்சையும் கணித்து விட முடியாயது..” மதிப்பென் குறைவாக எடுத்த மாணவர்களுக்கு, மேல்கூறியது போல் பல நச்சென்ற வரிகள், […]

Share
 Posted by at 1:07 am
Sep 182014
 
பாக்ஸர் மனோகரன்

சென்ற மாதம் ஷிரிடி சாய் பாபாவின் தரிசனத்திற்காக சென்ற நானும் என் அலுவலக நண்பரும் கோயில் வரிசையில் நெடுநேரமாக நின்றுகொண்டிருந்தோம். வரிசையில் எங்களருகில் படு கேஷுவலாக நின்றிருந்தவருடன் எதேயச்சையாக பேசும்போது தான் தெரியவந்தது அவர்தான் இந்திய பாக்ஸிங் (குத்துச்சண்டை) டீமின் பயிற்சியாளர் என்று. அவுரங்காபாத் கேம்பிலிருந்து மாணவர்களுடன் கோவிலிற்கு வந்திருப்பதாக கூறி பின்னாலிருந்து 19 மாணவர்களை அறிமுகம் செய்தார். இந்திய அளவில் 5முறை சாம்பியன் பட்டம், இந்திய வீரர்களுக்கும் தற்போதைய பயிற்சியாளர் என்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான […]

Share
 Posted by at 10:51 pm
Aug 152014
 
வீட்டுத் தோட்டம் - பசுமைப் புரட்சி!!

இந்த மாத B+ சாதனையாளர் பக்கத்தில், சென்னை பெசன்ட் நகரில் வசிக்கும் திரு. S.S.ராதாகிருஷ்ணன் அவர்களை பற்றி பார்ப்போம். இந்திய வருவாய் துறையில், துணை இயக்குனராகப் பணி புரிந்த இவர், விருப்ப ஓய்வு பெற்று இயற்கை விவசாயத்திலும், வீட்டு தோட்டம் (KITCHEN GARDEN) அமைப்பதிலும் தனது முழு நேரத்தையும் செலவிட்டு வரும் பயணம் நம்மை சற்று வியப்படையவே செய்கிறது. “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” – இவர் அலுவலகத்தில் தொங்கி கொண்டிருந்த போர்டில் […]

Share
 Posted by at 1:06 am
Jul 142014
 
தண்ணீர் தொட்டி கல்வி

  ஒரு முறை மீயாப்பூரில் [ஐதராபாத்] உள்ள எனது நண்பர் இல்லத்திற்கு சென்று இருந்தேன். அவர் வீட்டு அருகில் உள்ள மூன்று மாடி நீர் சேமிப்புத் தொட்டி அருகில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். விசாரித்ததில், திரு.ஸ்ரீநிவாசன் என்பவர், “பொட்டுக்குச்சி சோமசுந்தர சாஸ்திரி ட்ரஸ்ட்” என்ற தொண்டு நிறுவனத்தை அங்கு நடத்தி வருகிறார் என்றும், அந்நீர் தொட்டி, வறுமை கோட்டிற்கு கீழிருக்கும் மாணவர்களுக்கு ஓர் டியுஷன் சென்டராக பயன் படுகிறது என்றும் தெரியவந்தது. அது மட்டுமில்லாமல், […]

Share
Jun 142014
 
பழுப்பு புரட்சி (BROWN REVOLUTION)

17 மாநில அவார்டுகள், 3 தேசிய அவார்டுகள்!! மதுரை கரைசநேந்தல் பகுதியில், தேன் வளர்ப்புத் துறையில், தான் சாதித்துக் கொண்டிருப்பதன் மூலம் இவைகளை சொந்தமாக்கியுள்ள திருமதி.ஜோசஃபின் அவர்களை இந்த மாத சாதனையாளர்கள் பக்கத்தில் காண்போம். “இவர் வளர்க்கும் தேனீக்களைக் கூடப் பிடித்துவிடலாம், இவரைப் பிடிப்பது சற்றுக் கடினம் தான்” என்று கேள்விப்பட்டதைப் போல், மிகவும் பரபரப்பாக வேலை செய்து சுற்றிக் கொண்டிருந்தவரை இரண்டு மணி நேர காத்திருப்பிற்கு பின் பேட்டி எடுத்தோம். தேனில் ஊறவைத்த நெல்லிக்காய்களை சாப்பிடக் […]

Share
May 142014
 
டாக்டர் H. V. ஹண்டே

இந்த மாத சாதனையாளர் பக்கத்தில் மருத்துவம், அரசியல், இலக்கியம், சமூக சேவை என பலதரப்பட்ட களத்தில், தன் திறமையாலும் கடிண உழைப்பாலும், ஆழமாக முத்திரையைப் பதித்த டாக்டர் H. V. ஹண்டேவை பற்றிக் காண்போம் http://www.handehospital.org/hvhande.htm. 86 வயதாகும் இவர், சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஹண்டே மருத்துவமனையில், தொடர்ச்சியாக 60 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவ பயிற்சி செய்துக்கொண்டு வருகிறார். பல நோயாளிகளுக்கு நான்கு தலைமுறைகளாக ஒரு குடும்ப மருத்துவராக இருந்து வரும் இவர், இன்றும் சமுகத் […]

Share
Apr 132014
 
பேராசிரியர் மா.சு.அண்ணாமலை

இந்த மாதம் சாதனையாளர்கள் பக்கத்தில் திரு.அண்ணாமலை அவர்களைப் பற்றி பார்ப்போம். இவரது சென்னை பெசன்ட்நகர் வீட்டிற்கு பேட்டி எடுக்கலாம் என்று சென்றிருந்தபோது, கன்னிமாரா நூலகத்திற்குள் நுழைந்துவிட்டோமோ என்ற உணர்வு உதிக்கிறது. காரணம், புத்தகங்கள்!! வீட்டின் பெரும் பகுதிகளை புத்தகங்களே ஆக்கிரமித்திருந்தது. இவரது சாதனைகள் என்னை மிகவும் வியக்கவைத்தது. இந்திய விடுதலை, சுதந்திரத் தியாகிகள், இந்திய தேசிய ராணுவம் (INA), INAவில் தமிழர்கள் பங்கு என நாம் சுதந்திரம் பெற்றதைப் பற்றி பல புத்தகங்களை படித்து ஆராய்ச்சி செய்து, […]

Share
Mar 142014
 

இந்த மாதம் சாதனையாளர்கள் பக்கத்தில், ஒரு வித்தியாசமான மனிதரைப் பற்றிக் காண்போம். அவர் வீட்டருகில் பேசிக் கொண்டிருந்த ஒரு  கூட்டத்தினரிடம், ஓய்வுப் பெற்ற எஸ்.பி.மாணிக்கம் வீடு எது என விசாரக்கையில்,  “பச்சைத்தண்ணீ மாணிக்கமா, அதோ அந்த வீடுதான்” எனக் கூறினர். வித்தியாசமான இந்த அடைமொழியைக் கேட்டவுடன் ஆர்வமும் ஆச்சரியமும் பிறந்தது. அவர்களிடமே ஐயத்தைக் கூறியவுடன், அந்த மக்களிடம் வந்த பதில்  இன்னும் வியப்பில் ஆழ்த்தியது. இவரது தனித்துவமே இது தான், மிகப் பெரிய அதிகாரியாக இருந்தும், தனக்கென்ற […]

Share
Mar 012014
 

நாம் பிறந்து வளர்ந்த இடத்திற்கும், வாழ்வில் நாம் அடைய இருக்கும் உயரத்திற்கும் சம்பந்தம் இல்லை, கடின உழைப்பும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் முன்னேரலாம் என்பதை நமக்கு உணர்த்தி கொண்டு இருக்கும் வக்கீல் திரு.கே.பாலு அவர்களைப் பற்றி இந்த மாத சாதனையாளர் பக்கத்தில் பார்ப்போம். இவர் பிறந்தது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி என்னும் கிராமம். இந்த ஊரை தமிழக வரைப்படத்தில் தேடினால், கிடைக்குமா என்று கூட தெரியாது, ஆனால் இன்று இவர் சாதனைகளையும், பேச்சுகளையும், பேட்டிகளையும் தொலைக்காட்சிகளிலும், […]

Share
Mar 012014
 
ஜுடோ மாஸ்டர்

சாதிப்பதற்கும், மக்களுக்காக வாழ்வதற்க்கும், வயது ஒரு தடை அல்ல, “மனமிருந்தால் மார்க்கமுண்டு” என்பதை நிருபித்துக் கொண்டிருக்கும், 75 வயது இளைஞர் திரு.C.S.Rajagopal அவர்கள் தான் அவர்கள் தான் B+ இன் இந்த மாத சாதனையாளர் பக்கத்தின் ஹீரோ. இவரது தொடரும் சேவைகளை பாராட்டி B+ இவரை பற்றி ஒரு தொகுப்பை மிகப் பெருமையுடன் வழங்குகிறது. சென்னை ஷெனாய் நகர் பகுதியில், திரு.வி.க பூங்கா அருகில் ஒரு உடற்பயிற்சி கூடம் அமைத்து அங்கே ஜுடோ மற்றும் ஜிஜிட்சு கலைகளை சனி […]

Share
 Posted by at 6:56 pm
Share
Share