Mar 212017
 
வெற்றிப் பெறுவது எப்படி..

  CIT கல்லூரி நிறுவனர் திரு.P.ஸ்ரீராமுடன் பேட்டி.. Part -1: https://www.youtube.com/watch?v=NGi_puCVHiA   Part -2: https://www.youtube.com/watch?v=nbFkxjOnkTw   Part -3: https://www.youtube.com/watch?v=EL3w015ioKY       Likes(0)Dislikes(0)Share on: WhatsApp

Share
Nov 112016
 
மலர்ச்சி – பரமன் பச்சைமுத்து!

திரு.பரமன், மலர்ச்சி என்ற நிறுவனத்தின் மூலம் வாழ்வியல் பயிற்சி கொடுத்து பல மனிதர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் இருந்து வருகிறார். மேலும் வளர்ச்சி என்ற மாதாந்திர புத்தகத்தின் மூலம் பலரை ஊக்குவித்தும் வருகிறார். சிதம்பரம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து, பாலிடெக்னிக் படித்து,  கணினித்துறையில் ஆழமாக முத்திரைப் பதித்தவுடன், ஜப்பான் அமேரிக்கா போன்ற நாடுகளில் வேலை செய்துள்ளார். ஆனாலும் மக்கள் பணியில் ஈடுபாடு அதிகம் இருக்கவே, வாழ்வியல் துறையில் ஈடுபட்டு பல மக்களின் வளர்ச்சிக்கு ஒரு கருவியாக இருந்து […]

Share
Oct 142016
 
Hydroponics - Future Farms

சென்னையில் 2009ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு, யு.கே நாட்டில் MBA, பின் 9 வருடங்கள் ஐடி துறையில் பிசினஸ் இதெல்லாம் முடித்து விவசாயத்தில் நுழைந்து உள்ளார் திரு.ஸ்ரீராம் அவர்கள். Future Farms என்ற நிறுவனத்தை தொடங்கி, Hydroponics  என்ற நவீன தொழில்நுட்ப  விவசாயம் செய்து, அதன் மூலம் நல்ல உணவு அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என விரும்புகிறார். இவரை சென்னை பெருங்குடியில் உள்ள இவரது தோட்டத்திற்குச் சென்று நமது B+ இதழின் சாதனையாளர்கள் பக்கத்திற்காக சந்தித்து […]

Share
Aug 142016
 
எண்ணங்களின் சங்கமம் ஜே.பிரபாகர்

திரு.ஜே.பி என்ற ஜே.பிரபாகர் செய்து வரும் சமுதாய தொண்டுகள் நம்மை வியப்பில் ஆழ்த்த கூடியவை. எண்ணங்களின் சங்கமம் என்ற அமைப்பின் மூலம் 1100 சமுதாய தொண்டு புரிபவர்களையும், தன்னார்வ நிறுவனங்களையும் இணைத்து வைத்துள்ளார். வருடாவருடம் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, பல நல் எண்ணங்களின் சங்கமத்தை  கடந்த பதினொரு வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தற்போது இருளர் சமுதாயததிற்காக கடுமையாக உழைத்து, அவர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். இருளர்களின் வாழ்க்கையையும் அவர்களின் […]

Share
Jul 142016
 
சுஜித் குமார்!

மாற்றம் அறக்கட்டளையின் Managing Trustee, Infosys நிறுவனத்தின் சென்னை HR Head, தேசிய மனித வள மேம்பாட்டுக் குழுவின் (NHRD) சென்னை பகுதி தலைவர், சிறந்த மேடைப் பேச்சாளர் என்று திரு.சுஜித் குமார் அவர்களுக்கு பல முகங்கள். நம் B+ இதழுக்கான சாதனையாளர்கள் பகுதிக்கு இவரை பேட்டி எடுக்க சென்றபோது, “எப்படி இத்தனை வேலைகளையும் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல், பிடித்த வேலைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு செய்கிறேன், அது தான் காரணம்” என்கிறார். பேட்டியின் நடுவே […]

Share
May 142016
 
தோசாமேடிக்

தென் இந்தியாவின் சிறந்த உணவான தோசையை பல ஊர்களில் பிரபலமாக்கிக் கொண்டிருக்கிறது இவர்களது குழு. அப்படி என்ன செய்கிறார்கள் இவர்கள்? “தோசாமேடிக்” (http://www.dosamatic.com/) என்ற நிறுவனத்தை தொடக்கி, அதன் மூலம் தோசை செய்யும் மெஷின்களை உலகெங்கும் விற்று வருகிறார்கள் அந்த நிறுவனத்தை தொடக்கிய திரு.ஈஸ்வர் விகாஸ் மற்றும் திரு.சுதீப் சபத் அவர்கள். 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இரண்டே ஆண்டுகளில் சுமார் ஆறு கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதித்துள்ளது. அவர்களது மெஷின்களை இப்போது […]

Share
Apr 142016
 
TEAM EVEREST - கார்த்தி வித்யா

ஐடி நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்தை துறந்து விட்டு விவசாயம் பக்கம் திரும்பியவர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அத்தகைய வேலையை விட்டுவிட்டு முழுநேர சமுதாயப் பணி பக்கம் திரும்பியவரைப் பற்றி இந்த மாதம் நமது B+ இதழின் சாதனையாளர்கள் பக்கத்தில் காண்போம். தனது மனைவியின் பெயரை தனது பெயருக்கு பின்னால் சேர்த்ததே இவரின் தனித்துவத்தை காட்டுகிறது. டீம் எவரெஸ்ட்டை (TEAM EVEREST) என்ற சமுதாயப் பணிகள் நிறுவனத்தை தொடங்கி, சுமார் 9500 volunteer (தன்னார்வ நபர்களின்) மூலம் […]

Share
Mar 142016
 
பூமி (BHUMI)

“நல்ல சிந்தனையும் உருதியும் கொண்ட ஒரு சிறு குழுவால் இந்த உலகத்தை எப்படி மாற்றிவிட  முடியும் என நினைக்கிறீர்களா, உண்மையில் அத்தகைய மனிதர்கள் தான் இதுவரை சமூக மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்”. “இன்றைய சிறு மாற்றமே நாளைய பெரிய மாற்றத்தின் தொடக்கம்” நம்பிக்கை தெறிக்கும் இந்த இரு வரிகளைக் கொண்டு நம்மை வரவேற்கிறது “பூமி” என்ற தன்னார்வ நிறுவனம். பல இளைஞர்களை சிறப்பாக வழிநடத்தி, அவர்களின் மூலம் பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை வழங்கி […]

Share
Jan 142016
 
“LETS MAKE ENGINEERING SIMPLE” - Part 2

(சென்ற இதழின் தொடர்ச்சி….) இதுவரை எத்தனை வீடியோக்கள் எடுத்துள்ளீர்கள்? உங்களை போல் யூ-டியுபில் வகுப்பு எடுப்பவர்கள் சந்தித்த சவால்களைப் பற்றி ஏதேனும்? இதுவரை 40 வீடியோக்களை வெளியிட்டுள்ளேன். Logarithm வீடியோ எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அளித்த வீடியோ என்று சொல்வேன். அது போல் ஒரு வீடியோ எடுக்க சுமார் மூன்று வார காலம் வரை உழைக்க வேண்டும். அதன் பின்னணியில் உள்ள உழைப்பை நன்கு அறிந்த, கல்வித்துறைக்காக ஏற்கனவே வீடியோக்கள் வெளியிட்டு வகுப்பெடுத்த நான்கு நபர்களிடம்  பேசியபோது, […]

Share
Dec 172015
 
“LETS MAKE ENGINEERING SIMPLE”

அமெரிக்காவில் சுண்டல் விக்கிற வேலை கிடைத்தாலும் பரவாயில்லை, அங்கே கிரீன் கார்டு வாங்கி தலைமுறையினராய் செட்டிலாகிவிடலாம் என்பது நம் நாட்டின் பல இளைஞர்களின் எண்ணம். ஆனால் அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தில்  வேலை கிடைத்தும், பிறந்த நாட்டிற்காக எதாவது செய்ய வேண்டும், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று தீவிரமாக உழைத்து வருகிறார் ராமனாதபுரத்தைச் சேர்ந்த திரு.பிரேமானந்த் சேதுராஜன். நமது நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, தொழில்நுட்பம் பெரியளவில் கைகொடுக்கும் என ஆழமாக நம்பும் இவர், அத்தகைய தொழில்நுட்பத்தைக் […]

Share
Nov 142015
 
நல்லக்கீரை

விவசாயமா!!! ஆளை விடுங்கள், நான் கஷ்ட்டப்பட்டது போதும், எனக்குப் பின் வரும் தலைமுறையினராவது, ஏதாவது பெரிய நிறுவனத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த இடத்தில் சம்பாதிக்கட்டும் என்று பல விவசாயிகள் வலியினால் புலம்பும் காலம் இது. ஆனால், அப்படிப்பட்ட நல்ல  வேலையை விட்டுவிட்டு, விவசாயம் என்றால் என்ன என்றே தெரியாத ஒரு இளைஞர், விவசாயத்தில் இறங்கி பல சாதனைகளை செய்து வருகின்றார் என்றால் எத்தனை வியப்பான விஷயம்?! சென்னை திருநின்றவூரை அடுத்துள்ள பாக்கம் என்ற சிறு […]

Share
Aug 152015
 
அகத்தூண்டுதல் - கர்னல் கனேசன்

இந்த மாத B+ இதழ் சுதந்திர தினத்தை ஒட்டி வருவதால், நாட்டு மக்களுக்காக தொண்டு செய்யும் எவரையேனும் பேட்டி எடுத்து வெளியிடலாமா என்று தேடியபோது, சென்னை அண்ணாநகரில் வசிக்கும் ஓய்வுப்பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் P.கனேசன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. ராணுவத்தில் பணிப்புரிந்த போது மட்டுமன்றி, ஓய்வு பெற்றப்பின்னும் பல அரும்பணிகளை செய்து வரும் திரு.கனேசன் அவர்களை இந்த மாத சாதனையாளர்கள் பக்கத்தில் காணலாம். வணக்கம் சார், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள். வணக்கம், நான் கர்னல் P.கனேசன். […]

Share
Jul 142015
 
“வானமே எல்லை”

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மிக உயரிய பதவி, நீச்சல் போட்டிகளில் பல முறை தேசிய சாம்பியன் விருதுகள், கூடைப்பந்து மற்றும் நீச்சல் சங்கங்களில் முக்கிய பொறுப்பு, தொண்டு நிறுவனம் என ஏகப்பட்ட முகங்கள் அவருக்கு. இயற்கை அவருக்கு இரண்டு கைகள் மட்டுமே சரியாக கொடுத்தது, ஆனால் அதை பொருட்படுத்தாமல் “இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை, அடைவதற்கு இந்த உலகமே உண்டு” என்ற வரிக்கு ஏற்றார் போல், தன்னையும் தன்னைப் போல் உள்ள பலரின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி […]

Share
Jun 142015
 
அப்பர்!

செய்யும் தொழிலே தெய்வம் என தனது தொழிலில் ஒருவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்துவிட்டால், எந்த இலக்கையும் அடையலாம், எத்தனை உயரத்தையும் எட்டலாம் என நிறுபித்து வருகிறார் சென்னை போரூரை சேர்ந்த திரு.அப்பர் லக்ஷ்மணன். தச்சுத் தொழில் செய்து வரும் இவர், தன் தொழில் மீது உள்ள பக்தியாலும், கற்பனை திறனாலும், யோசிக்க கூட முடியாத பல பொருட்களையும் வடிவமைத்து, தன்னை மிகவும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார். தன் குருவின் ஆசிர்வாதத்தால், திரு.அப்துல் கலாமை சந்தித்தது, தன் வாழ்வின் பெரும் […]

Share
May 142015
 
நம்பிக்கையால் சாதித்தவர்!

“ஒன்றை இழந்தால், மற்றொன்றை பெற முடியும். கையிருந்தால் தான் எதுவும் செய்ய முடியும் என்று முடங்கிவிடாமல், எழுந்து வெறியுடன் ஓட ஆரம்பித்ததின் விளைவுகள் தான் இவைகள் அனைத்தும்!!” – நம்பிக்கை தெரிக்க பேசும் திரு.வெங்கடேசனை இந்த மாத சாதனையாளராய் அறிமுகப் படுத்துவதில் B+ இதழ் பெருமை அடைகிறது. கை கால்கள் நன்றாக இருந்தும், உழைக்காது வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை என கூறி வருத்தப்படும் சிலர், திரு.வெங்கடேசனின் உழைப்பிலும் வெற்றியிலும் சமூக அக்கறையிலும் பலவற்றை கற்றுக்கொள்ளலாம். சென்னை கீழ்ப்பாக்கம் […]

Share
 Posted by at 12:07 am
Apr 142015
 
கிங்மேக்கர்

தான் இலக்கை அடைவது என்பது ஒரு வித சாதனை என்றால், தன் இலக்கை பல பேர்களை அடைய வைப்பது என்பது வேறு ஒரு வித சாதனை. அந்த அரும்பணியை KING MAKERS IAS ACADEMY என்ற நிறுவனம் மூலம் செய்து வரும் ஒரு தம்பதியினரை, நமது B+ இதழின் இந்த மாத சாதனையாளர் பக்கத்தில் பார்ப்போம். சென்னை அன்னாநகரில் உள்ள இந்த நிறுவனத்தை நடத்தி வரும் இவர்களின் முக்கிய லட்சியமே கிராமங்களுக்கு சென்று, பொருளாதார ரீதியில் பின் […]

Share
Mar 142015
 
சாதனை சகோதரர்கள்!

சுயதொழில் தொடங்கவதற்கெல்லாம் நல்ல அனுபவமும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் முடியுமென நிறைய பேர் சொல்லி கேள்விபட்டிருப்போம். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆர்வமும் உழைப்பும் இருந்தால் போதும், வயதும், அனுபவமும் பெரிய தடையில்லை என நிறுபித்து, வெற்றி பெற்று வருகின்றனர் இந்த சகோதரர்கள். மூத்தவர் 15வயதாகும் ஷ்ரவண் குமரன், இளையவர் 13 வயதாகும் சஞ்சய் குமரன். பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சிறு வயதிலேயே, கைப்பேசியில் உள்ள மென்பொருள் உருவாக்கத்  துறையில் […]

Share
Share
Share