Aug 152014
 
அழகிய ஊர் எங்கே?

அன்று மும்பையில் கன மழை. மாலை 6மணி. அலுவலக விஷயமாக மும்பை சென்ற நானும் எனது அலுவலக சீனியர் நண்பரும், இரவு 9:40 க்கு சென்னை செல்லும் விமானத்தை பிடிப்பதற்காக மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு டாக்சியில் போய் கொண்டிருந்தோம். பொதுவாக உள்நாட்டு விமான பயணத்திற்கு, ஒரு மணி நேரம் முன்பாக செக்கின் (CHECK-IN) செய்தால் போதுமானதாக இருக்கும். அன்றைக்கு நாள் முழுதும் மழை இருந்ததனால், மும்பை ட்ராஃபிக்கில் மாட்டி, நேரமாகி விடும் என்று சீக்கிரமே […]

Share
Aug 152014
 
வீட்டுத் தோட்டம் - பசுமைப் புரட்சி!!

இந்த மாத B+ சாதனையாளர் பக்கத்தில், சென்னை பெசன்ட் நகரில் வசிக்கும் திரு. S.S.ராதாகிருஷ்ணன் அவர்களை பற்றி பார்ப்போம். இந்திய வருவாய் துறையில், துணை இயக்குனராகப் பணி புரிந்த இவர், விருப்ப ஓய்வு பெற்று இயற்கை விவசாயத்திலும், வீட்டு தோட்டம் (KITCHEN GARDEN) அமைப்பதிலும் தனது முழு நேரத்தையும் செலவிட்டு வரும் பயணம் நம்மை சற்று வியப்படையவே செய்கிறது. “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” – இவர் அலுவலகத்தில் தொங்கி கொண்டிருந்த போர்டில் […]

Share
 Posted by at 1:06 am
Aug 152014
 
வேகமா, விவேகமா?

திலீபன் ஒரு பி.பி.ஏ. வேலையில்லா பட்டதாரி. விவசாயக் குடும்பம். வேலை தேடி முயற்சி செய்து கொண்டிருந்தான். ஒரு நிறுவனம் கூட இவனை நேர்முக தேர்வுக்கு கூப்பிடவில்லை. ஆரம்ப நிலை பயிலாளர், எழுத்தர் வேலைக்கு கூட ஐந்து வருட அனுபவம் கேட்கின்ற காலம் இது. ஆனாலும், திலீபன் மனம் தளரவில்லை. மனு மேல் மனு போட்டுக் கொண்டேயிருந்தான். போட்ட அலுவலகங்களுக்கே மீண்டும் மீண்டும். வேலை வாய்ப்பு இணையதளம், ஈமெயில் மூலமாக. பதில் தான் ஒன்று கூட வரவேயில்லை. எதிர் […]

Share
Aug 152014
 
சுதந்திர தேசத்தில் சுதந்திரம் எங்கே???

  நேற்று…… அன்னியவன் கையில் பாரத தேசம் இருந்த போது, நம் மக்கள் அவலவாழ்க்கை வாழ்ந்தார்கள். விலை மாடுகள் போல நாடு கடத்தப்பட்டார்கள். எல்லாத் துயரங்களையும் நெஞ்சில் தாங்கியபடி தினம் தினம் கண்ணீர் வடித்துக்கொண்டே வாழ்ந்தார்கள். எங்கே எம் தேசம் விடியாதா? எங்கே எம்தேசம் விடியாதா.? சுதந்திர தாகம் மலராதா என்ற ஏக்கம்..   சுதந்திர வேள்வித் தீயில், ஆயிரம் ஆயிரம் வீரர்கள் மார்பில் குண்டுகள் பட்டு வழிந்த இரத்தத்தில் பிறந்தது பாரதக் கொடி, அதுவே எங்கள் தேசத்தின் அசோகக் கொடி..   இன்று……. அரும்பாடுபட்டுப் பெற்ற சுதந்திரம் எங்கே? அன்றாடம் பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இளம் பெண்களை பாலியல் வண்கொடுமை என்ற சொற்றொடர் தாங்கியபடி தினம் தினம் செய்திகள்.. பெற்ற சுதந்திரம் எங்கே பெற்ற சுதந்திரம் எங்கே?   மீன் பிடிக்க கடலுக்கு போன மீனவன் வரும்வரை, மனைவி கரையில் கண்ணீர் சிந்துகிறாள் சுதந்திர நாளில் செங்கோட்டையில் சிகப்புக் கம்பளம் விரித்து கொடி ஏற்ற, உப்புக்கடலில் மீனவன் இரத்தம் சிகப்பாகிறது எங்கே சுதந்திரம் புதைந்தது?   நாளை…… பட்டொளி வீசும் பாரதக்கொடி ஏறட்டும் பாரத மாந்தர்கள் மகிழட்டும் நெஞ்சினில் இனிப்பு திகட்டட்டும் சத்திய தர்மம் நிலைக்கட்டும் சமாதானம் நிலவட்டும்!   பாரத தேசத்தில் வாழ்வோருக்கும் வாழ்த்துக்கள்.. சுதந்திர […]

Share
Aug 152014
 
பயம்!!!

பயப்படாத மனிதர்கள் என்று யாரும் இந்த உலகில் இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைக் கண்டால் பயம். சிலருக்கு பேய் என்றால் பயம், சிலருக்கு இருட்டு என்றால் பயம், சிலருக்கு பாம்பைக் கண்டால் பயம், சிலருக்கு தனிமை என்றால் பயம், சிலருக்கு மனைவியைக் கண்டால் பயம், இன்னும் ஏன், சில ஹீரோயின்களுக்கு கரப்பாம்பூச்சிகளைக் கண்டால் கூட பயம். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றிற்கு பயந்துகொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏன் திடீரென பயத்தைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறோம் என்றால், ஒவ்வொரு […]

Share
Aug 152014
 
சிறந்த மாணவன்!

மஹாபாரதத்திலிருந்து ஒரு சின்ன சம்பவம்.. கெளரவர்களுக்கு பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனன் மேல் எப்போதும் பொறாமை உண்டு. பொறாமைக்கு காரணம் அவர்களுடைய குரு துரோணாச்சாரியர் அர்ஜுனன் மீது அன்பு செலுத்துகிறார் என்பதே. இதனை அவர்களின் குருவும் அறிவார். கௌரவர்களின் இந்த எண்ணம் தவறு என்று அவர்களுக்கு உணர்த்த ஒரு உபாயம் கண்டு பிடித்தார். துரோணர் எப்பொழுதும் மாணவர்களுடன் அருகில் உள்ள ஆற்றினில்  குளிப்பது வழக்கம். அன்று குளியல் எண்ணையை வேண்டுமென்றே  ஆசிரமத்தில் விட்டுச் சென்றார். ஆற்றங்கரையை அடைந்தவுடன், அர்ஜுனனை ஆசிரமத்திற்கு […]

Share
Aug 152014
 
பாட்டி கணக்கு!

  இந்த வருடம் சுதந்திரதினம் வெள்ளிக் கிழமை வருவதினால், மூன்று நாள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. செல்வம் தன் மகன் அர்ஜூனையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு கிராமத்திற்கு சென்று தனது பெற்றோர்களை சந்தித்து விட்டு வரலாம் என்று கிளம்பினார். அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன். இந்த காலத்து மாணவர்கள் போலவே எலெக்ட்ராநிக் உலகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவன். கிராமம் அவனுக்கு பிடிக்கவில்லை. வந்ததிலிருந்தே தனது டாப்லெட்டிலும், மொபைலிலும்  நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தான். அப்போது […]

Share
 Posted by at 12:04 am
Aug 152014
 
இதோ சுதந்திரம்!!

  எவரின் அனுமதியுமின்றி நீங்கள் நீங்களாகவே இருப்பது தான் உண்மையான சுதந்திரம்..     நீங்கள் விரும்புவதை செய்யும்போது சுதந்திரம் பிறக்கிறது, நீங்கள் செய்வதை விரும்பும்போது மகிழ்ச்சி பிறக்கிறது..   சுதந்திரமாக செயல்பட்ட மனிதர்களால் தான், சரித்திரமும் சாதனையும் படைக்க முடிந்துள்ளது..   மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் இருப்பதே மிகப்பெரிய சுதந்திரம்..     வாழ்நாள் முழுதும் கைதியாக வாழ்வதற்கு பதில், சுதந்திரத்திற்காக போராடி உயிரிழப்பது மேல்..   மகிழ்ச்சியின் ரகசியம் […]

Share
Share
Share