Jul 142014
 
சோற்றுக்கற்றாழை

தூக்கம் களைந்து, திடுக்கிட்டு எழுந்தேன். மணி அதிகாலை 4:30. என்னடா இப்படி ஒரு கனவு? 2042 ஆம் ஆண்டில் இப்படியா இருக்கும்? காற்றை விலைக் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையா? நினைத்து பார்க்கவே பயமாக உள்ளதே.. புரண்டு புரண்டு படுத்து பார்த்தேன், தூக்கம் வரவில்லை. மொட்டை மாடியில் கொஞ்சம் நேரம் உலாவி விட்டு வரலாம் என்று தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் எடுத்து கொண்டு மாடிக்கு சென்றேன். தண்ணீரை சிறிது பருகிவிட்டு, தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலை பார்த்தேன். […]

Share
 Posted by at 12:53 am
Jul 142014
 
தண்ணீர் தொட்டி கல்வி

  ஒரு முறை மீயாப்பூரில் [ஐதராபாத்] உள்ள எனது நண்பர் இல்லத்திற்கு சென்று இருந்தேன். அவர் வீட்டு அருகில் உள்ள மூன்று மாடி நீர் சேமிப்புத் தொட்டி அருகில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். விசாரித்ததில், திரு.ஸ்ரீநிவாசன் என்பவர், “பொட்டுக்குச்சி சோமசுந்தர சாஸ்திரி ட்ரஸ்ட்” என்ற தொண்டு நிறுவனத்தை அங்கு நடத்தி வருகிறார் என்றும், அந்நீர் தொட்டி, வறுமை கோட்டிற்கு கீழிருக்கும் மாணவர்களுக்கு ஓர் டியுஷன் சென்டராக பயன் படுகிறது என்றும் தெரியவந்தது. அது மட்டுமில்லாமல், […]

Share
Jul 142014
 
கண்டுகொண்டேன் (சுய)நலத்தை!

மனைவியின் அமைதியான நிலைக்குத்திய பார்வையே மனக்கண்ணில் வந்து என்னை குற்றவாளியாக்கி கேள்விகள் கேட்டது. மௌனத்திற்கு வார்த்தைகளைவிட அர்த்தமும் வலிமையையும் உண்டு என்று புரிந்தது. மனைவியின் அடுத்து இருந்த இருக்கையில் அமர்ந்தேன். மனமோ பல நாட்களுக்கு முன்பு சங்கருடன் நடந்த நிகழ்விற்கு தாவியது. “என்ன சங்கர், அந்த A1 கேர் ஹாஸ்பிடல் பத்தின ரிப்போர்ட் தயாரிக்க வேண்டாம்ன்னு சொல்லியும் தயாரிச்சி என்கிட்டேயே கொண்டுவந்து தந்திருக்கீங்க?” மருத்துவமனை செயல்பாடுகள் கண்காணிப்பு மற்றும் அனுமதி தரும் அரசு அதிகாரி என்ற முறையில் […]

Share
 Posted by at 12:37 am
Jul 142014
 
அம்மா!!!!

ஈரைந்து மாதங்கள் எனை சுமந்து மூவைந்து மாதங்கள் பாலூட்டி சீராட்டி நாலைந்து மாதங்கள் நடைபயிற்று ஐந்தைந்து மாதங்கள் பிணி நீக்கி பேணி காத்து ஆறைந்து மாதங்கள் பசி மறந்து ஏழைந்து மாதங்கள் பள்ளி அனுப்பி எனை மேதையாக்க பேதையாய் நீ இருந்து என் கனவுகளை நீ சுமந்து நிசங்களை எனக்களித்து நிதர்சனமற்று  போனாலும் நெறிகெட்டு நான் போகா வண்ணம் காத்திட்ட என் தாயே மீண்டும் ஒரு முறை  எனை சுமப்பாயா கல்லறை சென்றிடும் முன் கருவறை கண்டிட […]

Share
Jul 142014
 
பழநிக்கு சவாலா?

  பழநி அந்த கல்லூரியில் வித்தியாசமாக சிந்திக்கும் சில மாணவர்களில் ஒருவன். புத்தகத்தில் உள்ளதை அப்படியே படித்து விட்டு பரிட்சையில் போய் கொட்டிவிடும் (வாந்தி எடுக்கும்) முறையை விரும்பாத மாணவன். சில ஆசிரியர்களுக்கு இதனால் அவனை புடிக்காது, அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தனர். ஒரு நாள் கணக்கு பரீட்சையின்போது, வீட்டில் ஒரு அசம்பாவிதம் ஆகியதால், பழநி சற்று கால தாமதமாய் பரீட்சை எழுத வந்தான். கணக்கு ஆசிரியர் அவனிடம் சிரித்துகொண்டே, “என்ன தம்பி மாடிகொண்டாயா? ஒரு […]

Share
Jul 142014
 
சரியா, தவறா?

  நம் கதையின் கதாநாயகர்கள் புலியும் குதிரையும். என்னடா! எதிரும் புதிருமாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? வழக்கத்திற்கு மாறாக இருவரும் உயிர் நெடுங்கால நண்பர்கள். தினமும் காலையும் மாலையும் மலை அடிவாரத்தை இருவரும் ஒன்றாக சுற்றி வருவது வழக்கம். இதை அடிக்கடி ஒரு நரி பார்த்து வந்தது. பொறாமையும் கொண்டது.  புலி குதிரயை கொன்றால் தனக்கும் விருந்து தான் என திட்டம் தீட்டியது. ஒரு நாள் புலியிடம் சென்று நரி “குதிரையுடன் நட்பாக இருக்கிறாயே, உனக்கு இது […]

Share
Jul 142014
 
நம்பமுடியாத மாற்றம்!

  “இன்று தான் என் வாழ்வின் கடைசி நாள் என ஒருவேளை இருந்தால்,  இப்போது செய்ய இருக்கும் இந்த வேலையைத் தான் செய்வேனா? என்று நான் ஒவ்வொரு காலையும் கண்ணாடியில் பார்த்து என்னை கேட்டதுண்டு. ஒருவேளை பதில் வரிசையாகப் பல நாட்கள் ‘இல்லை’ என்று வந்தால், தவறானப் பணியில் ஈடுபட்டுள்ளேன் என்று தெரிந்துக்கொண்டு அதை மாற்றிக்கொள்வேன்.” –    ஸ்டீவ் ஜாப்ஸ்     இன்று பிறந்த இந்த நாள்.. உங்கள் புதிய வாழ்க்கையின் முதல் நாளாக இருக்க […]

Share
 Posted by at 12:01 am
Share
Share