Jun 142015
 
பலூன் வியாபாரி

ஓரு ஊரில் பலூன் வியாபாரி வாழ்ந்து வந்தான். அவனிடம் பல வண்ணங்களில் பலூன்கள் கிடைக்கும். வியாபாரம் சரியாக நடக்காத தருணங்களில், ஹீலியம் வாயு நிரப்ப பட்ட ஒரு பலூனை காற்றிலே பறக்க விடுவான். அப்போது அதைப் பார்த்து  சிறுவர்கள் பலரும் தங்களுக்கு ஒரு பலூன் வேண்டும் என்று கேட்டு வாங்கி செல்வார்கள். ஒவ்வொரு முறையும் வியாபாரம் மந்தமாகும் பொழுதும் இந்த யுக்தியை பயன்படுத்து வியாபாரத்தை பெருக்குவது அவன் வாடிக்கை. ஒரு முறை காற்றில் ஹீலியம் பலூனை பறக்க […]

Share
May 142015
 
அன்னையர் தினம்

பிரபலமான MGR பாடல் ஒன்று FM-இல் ஒலித்தது எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே அருகில் இருந்த நண்பர் எந்த அம்மாவது தன் பிள்ளை கெட்டவனாக வளரணும்னு நினைப்பாளா அப்புறம் எப்படி நல்லவன் ஆவதும் கேட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலேனு கவிஞர் பாடினார் என்றார் நண்பர். கரெக்ட் சார். ஆனால் ஒரு தாயால் ஓர் மகனை பண்பில் சிறந்தவனாக வளர்க்க முடியும் என்றேன் ஏதாவது […]

Share
Apr 142015
 
மாதவனும் மாடும்!

மாதவன் மாடு மேய்க்கும் ஒரு சிறுவன். அவனுக்கு வினோதமான ஒரு ஆசை இருந்தது. ஒரு மாட்டை தூக்கிக் கொண்டு ஓட வேண்டும் என்பதே அது. இந்த ஆசைக்கு காரணம் அவன் ஊர் பெரியவர் பெரியசாமி தான். அவர் தினமும் தன் கொட்டகையில் உள்ள மாடுகளில் ஏதேனும் ஒன்றையாவது தூக்கிக் கொண்டு நடப்பார். மாதவனும் தினமும் அவன் மாடுகளை தூக்க முயற்சித்து கை கால்களில் காயம் பெற்றதே மிச்சம். அவன் பெரியசாமி இடமே சென்று இதற்கான தீர்வை கேட்டான். […]

Share
Feb 142015
 
கானல் நீர்

மாதவன் தன் வீட்டு முற்றத்தில் தொலைக்காட்சியை பார்த்தவாரே இறுக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தான். வடிவேலு தான் அடிவாங்கி பார்ப்பவர்களை சிரிக்க வைக்க முயற்சித்து கொண்டு இருந்தார். ஆனால் பயனில்லை. அலுவலக வேலை சுமை மாதவனை பயமுறித்தி கொண்டு இருந்தது. ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருப்பவன் மாதவன். நல்ல சம்பளம். பொறுப்புகள் அதிகம் உள்ள வேலை, போட்டியும் தான். கடந்த சில ஆண்டுகளாக பதவி உயர்வுக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் மாதவன், எப்போதும்விட கொஞ்சம் […]

Share
Jan 152015
 
செயல்பட்டால் தான் வெற்றி!

ஒரு ஊரில் பரம ஏழை ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அந்த ஊர் கோவிலை கடந்து செல்லும்போது, “கடவுளே, நான் உன்னை நினைக்காத நாள் இல்லை, இருந்தும் என்னை ஏன் இப்படி வறுமையில் வாட்டுகிறாய்?” என்று கதறி அழ, இறைவன் அவன் முன் தோன்றி, “நீ செல்வந்தன் ஆவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். “எனக்கு லாட்டரியில் பரிசு கிடைக்க வேண்டும்” என்று வேண்டினான். இறைவனும் அவனுக்கு வரம் அருளி மறைந்தார். இறைவனிடம் வரம் […]

Share
 Posted by at 12:04 am
Nov 142014
 
நெய்சோறு

ஒரு ஊரில் ஒரு குருகுலம் இருந்தது. குருவின் இல்லத்திலேயே, அந்த குருகுலம் இயங்கி கொண்டிருந்தது. படிப்பதற்கு,  விளையாடுவதற்கு, பிறபயிற்சிகள் எடுப்பதற்கு என தனிதனி இடங்கள் மற்றும் அறைகள் இருந்தன.  அந்த குருகுலத்தில், அனைவரும் சேர்ந்து உணவு உன்ன வேண்டும் என்று ஒரு பழக்கம் இருந்தது. குருமாதா (குருவின்மனைவி) அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்து தான் சமைப்பார். குரு மற்றும் மாணவர்கள் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து உணவு உண்பார்கள். ஒருநாள், குரு ஓர் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்ததால் சிறிது […]

Share
 Posted by at 12:12 am
Sep 172014
 
சிறந்த பங்களிப்பு

வழக்கமாக எல்லா கதையிலும் வருகிற மாதிரி, இந்த கதையிலேயும் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு யார் அதிக பங்களிப்பு செய்திருக்கின்றனர் என்பது தான் அந்த சந்தேகம். உடனே அவர் தன் சந்தேகத்தை தன் அமைச்சர்களிடம் கேட்டு, ஒரு வாரம் கழித்து வந்து பதில் தர சொன்னார். ஒரு வாரம் கழித்து அனைவரும் தங்களது பதிலைக் கூறினர். ஒரு அமைச்சர் “நமது தளபதி தான் சிறந்தவர்” என்றார். மற்றொருவார், “இல்லை! அனைவரின் உடல் நலமாய் இருந்தால் தானே எல்லா பணிகளையும் செய்யமுடியும். அதனால் […]

Share
Aug 152014
 
சிறந்த மாணவன்!

மஹாபாரதத்திலிருந்து ஒரு சின்ன சம்பவம்.. கெளரவர்களுக்கு பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனன் மேல் எப்போதும் பொறாமை உண்டு. பொறாமைக்கு காரணம் அவர்களுடைய குரு துரோணாச்சாரியர் அர்ஜுனன் மீது அன்பு செலுத்துகிறார் என்பதே. இதனை அவர்களின் குருவும் அறிவார். கௌரவர்களின் இந்த எண்ணம் தவறு என்று அவர்களுக்கு உணர்த்த ஒரு உபாயம் கண்டு பிடித்தார். துரோணர் எப்பொழுதும் மாணவர்களுடன் அருகில் உள்ள ஆற்றினில்  குளிப்பது வழக்கம். அன்று குளியல் எண்ணையை வேண்டுமென்றே  ஆசிரமத்தில் விட்டுச் சென்றார். ஆற்றங்கரையை அடைந்தவுடன், அர்ஜுனனை ஆசிரமத்திற்கு […]

Share
Jul 142014
 
சரியா, தவறா?

  நம் கதையின் கதாநாயகர்கள் புலியும் குதிரையும். என்னடா! எதிரும் புதிருமாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? வழக்கத்திற்கு மாறாக இருவரும் உயிர் நெடுங்கால நண்பர்கள். தினமும் காலையும் மாலையும் மலை அடிவாரத்தை இருவரும் ஒன்றாக சுற்றி வருவது வழக்கம். இதை அடிக்கடி ஒரு நரி பார்த்து வந்தது. பொறாமையும் கொண்டது.  புலி குதிரயை கொன்றால் தனக்கும் விருந்து தான் என திட்டம் தீட்டியது. ஒரு நாள் புலியிடம் சென்று நரி “குதிரையுடன் நட்பாக இருக்கிறாயே, உனக்கு இது […]

Share
Share
Share