Sep 122017
 
உலகமே உங்கள் கையில்!

நண்பர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு, “உங்கள் வெற்றி உங்கள் கையில் தான் உள்ளது”!! தமிழகத்தில் சாதித்துவரும் பல தொழிலதிபர்களை சந்தித்து, அவர்களைப் பற்றி சிறு தொகுப்புகளை வெளியிடும் ஒரு வாய்ப்பு சமீபத்தில் வந்தபோது, மேலுள்ள இந்த வரியின் முழு அர்த்தத்தை உணர்ந்தேன். இந்த வெற்றியாளர்களை சந்தித்தபோதும், அவர்கள் குணங்களை அருகிலிருந்து கவனித்தபோதும் சில முக்கியமான விஷயங்களை கற்று அறிந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். முதலில், இந்த சாதனையாளர்கள் வெளியில் உள்ள எந்த சூழ்நிலைகளும் தங்களது வெற்றியை தடுக்க […]

Share
Jul 312017
 
பயனில் சொல்..

“சார், உங்கள் மகன் படிக்கும் பள்ளியிலிருந்து தான் அழைக்கிறோம், உங்கள் மகன் எங்கள் பள்ளியில் இப்போது ஒரு பரீட்சை எழுத இருக்கிறான், இதனால் தான் உங்களை அழைத்தோம்” என்று ஒரு தந்தைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. தந்தை சற்று குழப்பத்துடன், “பரீட்சை நடத்த வேண்டுமெனில், நடத்துங்கள், இதற்கு ஏன் என்னை தொடர்பு கொள்கிறீர்கள்?” என்கிறார். “பையன் உங்களிடம், பள்ளியில் நடப்பவைகளுள் எதை கூறுகிறான், எதை கூறுவதில்லை என எங்களுக்குத் தெரிவதில்லை, எனவே தான் உங்களை அழைத்தோம். […]

Share
May 262017
 
Peepoo (பீப்பூ)

இருட்டை விமர்சிப்பதை விட்டுவிட்டு, ஒரு சிறு மெழுகுவர்த்தி ஏற்ற முயற்சியுங்கள் என ஒரு கூற்று உண்டு. அதனால் தான் சரித்திரம் எப்போதும் விமர்சன வீரர்களை விட செயல் வீரர்களையே பல நூற்றாண்டுகள் கடந்த பின்னும் பேசிக்கொண்டும், கொண்டாடியும் இருக்கிறது. அப்படி சரித்திரம் கொண்டாடும் செயல் வீரரான ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த பேராசிரியர் மற்றும் கட்டிட வடிவமைப்பாளரான ஆண்டெர்ஸ் வில்ஹேல்ம்சன் என்பவரைப் பற்றி தெரிந்துக்கொள்வோம். ஆண்டெர்ஸ் தனது குழுவுடன் 2005 ஆம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். அப்போது குடிசைப்பகுதிகளில் குடியிருந்த […]

Share
Apr 282017
 
உனக்குள் ஒரு சாதனையாளர்!

சென்னையில் சமீபத்தில் சிவில் சர்வீஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மாணவர்களுக்காக ஒரு நிகழ்ச்சி நடந்தது. சிவில் சர்வீஸ் தேர்வுகளைப் பற்றியும் அதற்குப் பின் உள்ள வாய்ப்புகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் சில அதிகாரிகளும் அந்த நிகழ்ச்சியில் கலந்த்துக்கொண்டனர். பெருந்திரளான மாணவர்களும் வந்திருந்தனர். மாணவர்களுக்காக கூட்டத்தில் பேச வந்த அதிகாரிகள் அனைவரும், பல சோதனைகளையும் சவால்களையும் தமது வாழ்வில் வெற்றிகரமாக சமாளித்து, வெற்றிப்பெற்று, தங்களது துறையில் சாதித்துக் கொண்டு இருப்பவர்கள். நிகழ்ச்சி முடிந்து அதிகாரிகள் […]

Share
Mar 152017
 
இதெல்லாம் சகஜம்மப்பா!

சென்ற வாரம் விடுமுறை வேண்டி பள்ளி மாணவன் ஒருவன் தன் ஆசிரியருக்கு எழுதிய விடுப்பு விண்ணப்பம் இணையத்தில் வைரலாகப் பரவியது. தேனி மாவட்டம், வருஷ நாடு அருகில் இருக்கும் பூசணியூத்து எனும் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு  படிக்கிறான் ஈஸ்வரன். ஈஸ்வரன் தனக்கு ஒருநாள் விடுப்பு கேட்டு எழுதிய கடிதத்தை தன் நண்பனிடம் கொடுத்து அனுப்பியிருந்தான். மாணவர்கள் எழுதும் வழக்கமான விடுப்பு விண்ணப்பம்தானே என்று நினைத்து அதைப் படித்த ஆசிரியருக்குப் பெரும் ஆச்சர்யத்தை அளித்தது […]

Share
Feb 152017
 
மாற்றி யோசிப்போம்!

சில வாரங்களுக்கு முன் நடந்த சம்பவம். நண்பர் திரு.லக்ஷ்மி நரசிம்மன் அவர்கள் சென்னை TVS நிறுவனத்தில் பல வருடங்களாக வேலை செய்து வருபவர். பத்து பைசா சமூகத்திற்காக கொடுத்து விட்டாலே, கட்-அவுட் வைக்கும் அளவு விளம்பரம் செய்துக்கொள்ளும் சில வேடிக்கை மனிதர்கள் வாழும் இன்றைய சூழ்நிலையில், பல நல்ல காரியங்களை சத்தமில்லாமல் செய்து வரும் எண்ணற்ற மனிதர்களுள் இவரும் ஒருவர். பொறியியல் படிக்கும் இவரது மகன் சாஹில் பிறந்த நாளை, இவர் கொண்டாடிய விதம் என்னை வியப்பில் […]

Share
Jan 142017
 
வானம் வசப்படும்!

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே! பொங்கல் வந்தாலே நமது குழுவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான். ஒன்று இது தமிழர்களின் அடையாளம், இரண்டு இந்த நன்னாளில் தான், நமது B+ இணைய இதழை துவக்கினோம். ஆம், இன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். நேர்மையாக கூற வேண்டுமெனில், இந்த இணைய இதழை ஆரம்பிக்கையில், இத்தனை தூரம், இத்தனை விதமான அனுபவம் தரும் பயணமாக இருக்கும் என கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. இந்தப் பயணம் ஒரு தனி மனிதனின் வெற்றி அன்று. […]

Share
Dec 132016
 
வர்தா புயல்!

பணம், பதவி, பேர், புகழ் போன்ற மாயைகளுக்காக எத்தனை தவறுகளை அறிந்தும் அறியாமலும் தினமும் செய்துக்கொண்டிருக்கிறோம்? இந்த மாயைகளின் அடிப்படையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரிவினங்களை ஏற்படுத்தி வாழும் காலம் முழுதும் நெருங்கிய மக்களிடம் கூட சண்டையிட்டு அடித்துக்கொள்கிறோம். ஆனால் நாம் செய்யும் பாவ புண்ணிய செயல்களுக்கு, தனக்கு ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை பேரிடர்களின் மூலம், நம்மை அவ்வப்போது  ஓங்கி அறைந்து, உணர்த்திச் செல்கிறது இயற்கை! நமக்குத் தான் ஆறறிவு உள்ளதே? […]

Share
Nov 212016
 
சிகரம் தொடு!

அது ஒரு அழகிய கிராமம். விவசாய நிலங்கள், சுற்றி மலைகள் என இயற்கை பொலிவுடன் இருந்தது. விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த மக்களும்  கடுமையாக உழைத்து செழிப்பாக இருந்து வந்தனர். சோலையாக விளங்கிய கிராமம், ஒரு சமயத்தில் நீர் வரத்து குறையவே, பாலைவனமாக மாறத் தொடங்கியது. மூன்று வேலை சாப்பாட்டுடன் மகிழ்ச்சியாக இருந்த மக்களின் நிலை, ஓரிரு வேலை என சுருங்கியது. பஞ்சம் தலை விரித்து ஆடியதில், மக்கள் அக்கம் பக்கம் உள்ள ஊர்களுக்குச் சென்று வேலை செய்ய […]

Share
Oct 142016
 
சாதனையின் முதல் படி

கல்லூரியில் எங்களுடன் பொறியியல் படித்த நெருங்கிய நண்பருக்கு IITயில், டிசைன் பிரிவில் மேல் படிப்பு படிக்க ஆர்வம் வந்தது. டிசைனில் ஈடுபாடு இருந்தும், படங்கள் வரைவதில் அவருக்கு அத்தனை விருப்பம் இல்லை. ஆனாலும் டிசைன் பிரிவாயிற்றே, நேர்முகத் தேர்வின் போது ஏதேனும் படத்தை வரைய சொல்லி கேட்கலாம் என எண்ணி தன் வீட்டினுள் சுற்றி பார்த்திருக்கிறார். மேசை மீதுள்ள தொலைபேசி கண்ணில் படவே, அதையே வரைந்து பழகியுள்ளார். என்ன ஆச்சரியம்! நேர்முகத் தேர்வில் இவரை, தொலைபேசி படத்தை […]

Share
Sep 142016
 
சூப்பர் ஸ்டார்

சென்ற வாரம் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் திரு.அமிதாப்பச்சன் அவர்கள் தனது பேத்திகளுக்கு, பெண் சுதந்திரம் குறித்து எழுதிய கடிதம் சமூக தளத்தில் வைரலாக பரவியது. அவர் கடிதத்தின் சுருக்கம் இவ்வாறு இருந்தது. “எனது பேத்திகள் நவ்யா மற்றும் ஆராத்யாவிற்கு, நீங்கள் இருவரும் பெண்கள் என்பதற்காகவே, மக்கள் உங்கள் மீது அவர்களது கருத்துக்களை திணிப்பார்கள், உங்களுக்கு தேவையற்ற எல்லைக் கோடுகளையும் வரைமுறைகளையும் நிர்ணயிப்பார்கள். நீங்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும், எவ்வாறு பழக வேண்டும், யாரைப் பார்க்க வேண்டும், […]

Share
Aug 142016
 
தங்கப்பதக்கம்

தீபா கர்மாக்கர்! தற்போது பிரேசிலில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் Produnova Vault ஜிம்னாஸ்டிக் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்று, இதுவரை எந்த இந்திய பெண்ணும் செய்யாத சாதனையை புரிந்துள்ளார். இதுவரை உலகில் இந்த சாதனையை செய்த ஐந்தாவது பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கரணம் தப்பினால் மரணம் என்பதை மெய்பிக்கும் வகையில் உள்ள இந்த Produnova Vault ஜிம்னாஸ்டிக் போட்டிகளில், சென்ற சனிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் வீரர் சமீரி அயிட் காலை இழந்த துயர சம்பவமும் […]

Share
Jul 142016
 
ரௌத்திரம் பழகு!!!

சமீபத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் திரு.எத்திராஜன் ராதாகிருஷ்ணன் என்ற உயர்ந்த மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் கான்பூர் ஐஐடி (IIT) முப்பது வருடங்களுக்கும் மேல் பல பொறியியல் துறைகளில் பாடங்கள் எடுத்து வருபவர். அவரது பொறியியல் புத்தகங்களை சுமார் பதிமூன்று உலக மொழிகளில், மற்ற நாடுகள் மொழி பெயர்த்துள்ளனர். பொறியியல் மட்டுமன்றி தமிழ் மீதும், இலக்கியங்கள் மீதும் தீராத ஆர்வம் கொண்டுள்ள இவர், தமிழில் சில நல்ல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பல […]

Share
Jun 142016
 
மாற்றம் – முன்னேற்றம் – ஷாலினி !!!

(நம் சர்வே லிங்க்) மஹாராஷ்டிர மாநிலத்தின் மாரத்வாடா பகுதிகளில் வறட்சி முன் எப்போதும் இல்லாத வகையில் இருப்பதை தினசரிகளில் பார்த்திருப்போம். குறிப்பாக, அம்மாநிலத்தின் ஔரங்காபாத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது லாசர் என்ற கிராமம். “இங்கு ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 17லிட்டர் தண்ணீர்  மட்டுமே கிடைக்கிறது, அதுவும் 14 நாளைக்கு ஒரு முறை தான் தண்ணீர் வண்டி அப்பகுதிகளுக்கு வருகிறது” போன்ற செய்திகள் எத்தனை ஆபத்தை வருங்காலத்தில் நாம் எதிர் நோக்கியுள்ளோம் என்று காண்பிக்கின்றன. […]

Share
May 142016
 
எதா ப்ரஜா, ததா ராஜா!!!

இலவசமில்லா தமிழகம் என்ற பதிவை நம் B+ இதழின் சென்ற டிசம்பர் மாதம் பதிவிட்டிருந்தோம். அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல் நமது குழு இரண்டு நிவாரணப் பணிகளை வெள்ளத்திற்குப் பின் செய்திருந்தது. ஆனால் அந்த மாத இதழில் பதிவிடாத ஒரு முக்கியமான நிகழ்வை இந்த இதழில் பதிவிடுகிறோம். இந்தப் பதிவு யார் மனதையும் காயப்படுத்துவதற்காக இல்லை. வெள்ள நிவாரணத்தின் போது, அன்று நம்மிடம் 200 குடும்பங்களுக்கு மட்டுமே  தேவைப்படும் பொருட்கள் இருந்தது. அதனால், சென்னையில் ஏதேனும் ஒரு […]

Share
Apr 142016
 
ஸ்ட்ரெட்சரா, சிக்ஸரா!

விளையாட்டுத்துறைக்கு மீடியாக்களின் உதவியும், மக்களின் ஆதரவும் பெருகி வரும் காலம் இது. “அப்படி இந்த விளையாட்டு போட்டிகளை ஏன் நடத்த வேண்டும்? இவைகள் என்ன தான் மக்களுக்கு கற்றுத் தருகின்றன? இவைகள் வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் மட்டும் தானே?” போன்ற கேள்விகள் விளையாட்டுப் போட்டிகளுக்கு எதிராக ஒருபக்கம் எழுகின்றன. இது போன்ற கேள்விகளில் ஓரளவு நியாயம் இருப்பினும், இம்மாதிரியான போட்டிகள் சில சமயம் பெரியளவில் பாசிடிவான சிந்தனைகளை நம்மில் விதைக்கவும் செய்கின்றன என்பதற்கு ஒரு உதாரண நிகழ்வைக் […]

Share
 Posted by at 12:23 am
Mar 142016
 
மனமிருந்தால் மார்க்கமுண்டு!

பள்ளிகளும் கல்லூரிகளும் கற்று தர இயலாத வாழ்க்கை பாடங்களை, சில சந்திப்புகளின் மூலமும், சம்பவங்களின் மூலமும் நாம் கற்றுக் கொள்ளலாம். சென்ற மாதம் நான் சந்தித்த இரு வேறு மனிதர்கள், இதை மிகத் தெளிவாகப் புரிய வைத்தனர். முதல் நபர் – பெயர் பிரபு. 18 வயது கூட நிறைந்திருக்குமா என நினைக்க வைக்கும் தோற்றம். தள்ளு வண்டியில் வேர்கடலை வறுத்து விற்பது இவனது தொழில். இந்த விற்பனை மூலம் இவனது மாத வருமானம் ரூபாய் முப்பாதாயிரத்திற்கும் […]

Share
Feb 142016
 
ரஜினிக்கு பத்மவிபூஷனா?

சென்ற மாதம் மத்திய அரசு அறிவித்த, நாட்டின் உயர்ந்த விருதுகளான பத்ம விருதுகள் பெயர் பட்டியலில், நடிகர் திரு.ரஜினிகாந்தின் பெயரும் இடம்பெற்றது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் பெருமளவில் விவாதிக்கப்பட்டது. அவரின் பெயர் சேர்க்கப்பட்டது சரி என அவர் ரசிகர்களும், தவறு என மற்றவர்களும் விவாதித்துக் கொண்டிருந்தனர். திரு.ரஜினிக்கு விருது கொடுத்தது சரியா தவறா என்ற வாதம் ஒரு புறம் இருக்க, சிறிதும் சர்ச்சையோ, சத்தமோ இல்லாமல், சினிமா அல்லாத மற்றத் துறைகளில்,  தமிழகத்தை சேர்ந்த மேலும் […]

Share
Jan 142016
 
எண்ணங்களின் சங்கமம்!!!

கடந்த ஆறாம் தேதி, அணுகுண்டை விட சக்திவாய்ந்த ஒரு  ஹைட்ரஜன் குண்டை வெடிக்கும் சோதனையை நடத்தி உலகையே உலுக்கி இருக்கிறது வட கொரியா. “அந்த ஹைட்ரஜன் குண்டு எழுப்பிய ஒலியை கேட்க மிகவும் குதுகலமாக இருந்தது, இதையே உலக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக தருகிறேன்” என்றும் கொக்கரித்துள்ளார் அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் யுன். உலகத்திலேயே அதிகமாக சுற்றுலா பயணிகள் செல்லும் நகரம் பாரிஸ். வருடத்திற்கு சுமார் மூன்று கோடி மக்களுக்கும் அதிகமாக  சுற்றுலாவிற்கு வரும் பாரிஸில், […]

Share
Dec 142015
 
இலவசமில்லா தமிழகம்!!

சுனாமிக்கு நிகரான  பேரிடராய் தமிழகத்தை வதம் செய்து சென்றுள்ளது கடந்த இரண்டு வார கனமழை. தமிழகமே, குறிப்பாக சென்னையும் கடலூரும் வெள்ளக்காடாய் சிக்கித் தவிக்க, இயற்கையின் கோரப்பிடியிலிருந்து மக்களை மீட்டெடுக்க மக்களே களம் இறங்கினர். எத்தனை கோடி பொருட்செலவில் நிவாரண பணிகள், எத்தனை கருணை இதயங்கள், பல மனிதர்கள் இறந்த சோகத்திலும் மனிதத்தன்மை இறக்கவில்லை என நிருபித்தனர். கலி முத்திவிட்டது, நல்லவர்கள் குறைந்துவிட்டனர் என்ற கூற்றெல்லாம் பொய்யானது. வாட்ஸப்பில் சென்ற வாரம் வந்த ஒரு தகவல். வெள்ள […]

Share
Share
Share