Oct 142016
 
சாதனையின் முதல் படி

Share this on WhatsApp கல்லூரியில் எங்களுடன் பொறியியல் படித்த நெருங்கிய நண்பருக்கு IITயில், டிசைன் பிரிவில் மேல் படிப்பு படிக்க ஆர்வம் வந்தது. டிசைனில் ஈடுபாடு இருந்தும், படங்கள் வரைவதில் அவருக்கு அத்தனை விருப்பம் இல்லை. ஆனாலும் டிசைன் பிரிவாயிற்றே, நேர்முகத் தேர்வின் போது ஏதேனும் படத்தை வரைய சொல்லி கேட்கலாம் என எண்ணி தன் வீட்டினுள் சுற்றி பார்த்திருக்கிறார். மேசை மீதுள்ள தொலைபேசி கண்ணில் படவே, அதையே வரைந்து பழகியுள்ளார். என்ன ஆச்சரியம்! நேர்முகத் […]

Oct 142016
 
Hydroponics - Future Farms

Share this on WhatsApp சென்னையில் 2009ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு, யு.கே நாட்டில் MBA, பின் 9 வருடங்கள் ஐடி துறையில் பிசினஸ் இதெல்லாம் முடித்து விவசாயத்தில் நுழைந்து உள்ளார் திரு.ஸ்ரீராம் அவர்கள். Future Farms என்ற நிறுவனத்தை தொடங்கி, Hydroponics  என்ற நவீன தொழில்நுட்ப  விவசாயம் செய்து, அதன் மூலம் நல்ல உணவு அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என விரும்புகிறார். இவரை சென்னை பெருங்குடியில் உள்ள இவரது தோட்டத்திற்குச் சென்று நமது B+ […]

Oct 142016
 
“மனிதனே முயன்று பார்”

Share this on WhatsApp மனிதா நாம் மண்ணில் பிறந்தது மடிவதற்காகவா! ஒரு முறை வீழ்ந்தால் என்ன, மறுமுறை எழுந்து வா ஒரு நாள் வாழும் பூ கூட, தேன் தந்து செல்கிறது, பல நாள் வாழும் நாம் பல தந்து செல்லலாமே?   வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று மூலையில் முடங்காதே முடியும் என்று முயன்று பார் உலகம் முழுவதும் உனதாகும் மண்ணுக்குள் புதைந்த விதை விருட்சமாக வெளிவருகிறது மனிதனாகிய நாம் விறகாக வீழ்வது ஏனோ ! […]

Oct 142016
 
அவள் அப்படித்தான் !

Share this on WhatsApp சென்னை. திருவல்லிக்கேணி.  வசதிகள் நிறைந்த, லேடீஸ் ஹாஸ்டல். வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி. தனமும் மஞ்சுளாவும் கடந்த 15 நாட்களாக, விடுதியின் அறை தோழிகள். கொஞ்சம் கட்டை குட்டை தனத்திற்கு , இரண்டு வருடங்களாக இதே திருவல்லிக்கேணி ஹாஸ்டல் வாழ்க்கை தான். மஞ்சுளா இப்போதுதான் கோவையிலிருந்து வந்த, தனத்தின் புது ரூம் மேட். பார்க்க சுமாரான அழகுள்ள யுவதி. இருவருக்கும் கிட்ட தட்ட 27 – 28 வயது. மணமாகாத குமரிகள் […]

Sep 142016
 
சூப்பர் ஸ்டார்

Share this on WhatsApp சென்ற வாரம் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் திரு.அமிதாப்பச்சன் அவர்கள் தனது பேத்திகளுக்கு, பெண் சுதந்திரம் குறித்து எழுதிய கடிதம் சமூக தளத்தில் வைரலாக பரவியது. அவர் கடிதத்தின் சுருக்கம் இவ்வாறு இருந்தது. “எனது பேத்திகள் நவ்யா மற்றும் ஆராத்யாவிற்கு, நீங்கள் இருவரும் பெண்கள் என்பதற்காகவே, மக்கள் உங்கள் மீது அவர்களது கருத்துக்களை திணிப்பார்கள், உங்களுக்கு தேவையற்ற எல்லைக் கோடுகளையும் வரைமுறைகளையும் நிர்ணயிப்பார்கள். நீங்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும், எவ்வாறு பழக […]

Sep 142016
 
பார்க்காமை

Share this on WhatsApp ” இதோ பாருங்க! உங்களுக்கு வயசாயிண்டே போறது. ரத்த கொதிப்பு, சர்க்கரை, இதோட சேர்ந்து போனஸா கொலஸ்ட்ரால் வேற! . இப்படி தூங்கிகிட்டே இருந்தால் விளங்கினால் போலதான் ! எழுந்துக் கொள்ளுங்க ! முதல்லே எழுந்து வாக்கிங் கிளம்பற வழியை பாருங்க ! .” மனைவியின் அதட்டல். ஒரு நாளைப் போல இதே தொந்திரவுதான். நிம்மதியாக என்னை இரவிலும் தூங்க விட மாட்டேங்கிறாங்க. வேறே வழியில்லை. கிளம்பிட்டேன். காலை 6.30 மணி. […]

Sep 142016
 
நா ஆல் பேங்க் மேனேஜர் பேசுறேன்!!!

Share this on WhatsApp ”சார் ICICI பேங்குலருந்து பேசுறேன்… கிரெடிட் கார்டு எதாவது யூஸ் பன்றீங்களா? “ “ஏற்கனவே நாலு கார்டு இருக்கு” “இதுல புது ஆஃபர் இருக்கு சார்” “டேய் நாலு கார்டுக்கே நாக்கு தள்ள வேலை பாக்க வேண்டியிருக்கு விட்ருங்கடா” ———— “சார்.. பர்சனல் லோன் எடுக்குற ஐடியா எதாவது இருக்கா?” “லோன் எடுக்குற ஐடியா இருக்கு… ஆனா திருப்பி கட்டுறதுக்கு தான் ஐடியா இல்லை…” “டொய்ங்ங்ங்ங்” ———- “சார்.. நாங்க sun […]

Sep 142016
 
பெண்ணே  உயிரோட்டம் நீ…..

Share this on WhatsApp பெண்ணே …  .. நீ வீட்டிலே அடைந்து கிடக்கும் கூண்டுக் கிளியல்ல நாட்டையே ஆளும் சுதந்திரப் பறவை !   நீ நிற்கும் நெடுமரம் அல்ல நீரில் மிதக்கும் மரக்கலம் !   நீ அலங்காரப் பதுமையல்ல அணி வகுக்கும் புதுமைப் பெண் !   நீ பயனில்லாக் காட்டுப் பூ அல்ல மக்கள் விரும்பும் மல்லிகைப் பூ !   நீ பாலியல் தொந்தரவு கண்டும் கேட்டும் பதுங்கும் பூனையல்ல […]

Aug 142016
 
தங்கப்பதக்கம்

Share this on WhatsApp தீபா கர்மாக்கர்! தற்போது பிரேசிலில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் Produnova Vault ஜிம்னாஸ்டிக் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்று, இதுவரை எந்த இந்திய பெண்ணும் செய்யாத சாதனையை புரிந்துள்ளார். இதுவரை உலகில் இந்த சாதனையை செய்த ஐந்தாவது பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கரணம் தப்பினால் மரணம் என்பதை மெய்பிக்கும் வகையில் உள்ள இந்த Produnova Vault ஜிம்னாஸ்டிக் போட்டிகளில், சென்ற சனிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் வீரர் சமீரி அயிட் […]

Aug 142016
 
எண்ணங்களின் சங்கமம் ஜே.பிரபாகர்

Share this on WhatsApp திரு.ஜே.பி என்ற ஜே.பிரபாகர் செய்து வரும் சமுதாய தொண்டுகள் நம்மை வியப்பில் ஆழ்த்த கூடியவை. எண்ணங்களின் சங்கமம் என்ற அமைப்பின் மூலம் 1100 சமுதாய தொண்டு புரிபவர்களையும், தன்னார்வ நிறுவனங்களையும் இணைத்து வைத்துள்ளார். வருடாவருடம் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, பல நல் எண்ணங்களின் சங்கமத்தை  கடந்த பதினொரு வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தற்போது இருளர் சமுதாயததிற்காக கடுமையாக உழைத்து, அவர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல நல்ல காரியங்களை செய்து […]

Aug 142016
 
என் அறியாமையை அழகாக்கும் குட்டி தேவதை

Share this on WhatsApp   இறுக மூடிய உள்ளங்கையைக் காட்டி அப்பா உள்ளே உள்ளது என்னவென்று கண்டுபிடி என்கிறாய்…   பதில் எதிர்ப்பார்த்து ஆர்வத்தில் படபடக்கும் உன் இமைகளின் மேலமர்ந்து ஒரு ஆனந்த ஊஞ்சலாடுகிறது என் மனம்…   பதிலாய் … தெரியலையே என்கிறேன் …   வானளவு வியாபித்திருக்கும் என் அறியாமையை ஒரு பெருஞ்சிரிப்பால் அழகாக்கி, “சும்மா … “ என்று சொல்லிய வண்ணம் பொத்திய வெறுங்கையை திறக்கிறாய்…   பெருவெளியும், ஆகாயமும் பெயரறியா […]

Aug 142016
 
வேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல !

Share this on WhatsApp விநாயகர் படத்தின் முன்பாக வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் விக்னேஷ் நின்று, வணங்கி விட்டு,  தன இருக்கையில் அமர்ந்து கொண்டு அலுவலகக் கோப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். “ அய்யா! வணக்கம்.  என் பெயர் தூங்கத் தேவர். என தன்னை அறிமுகப்படுத்தி விட்டு, “என்னை அய்யா நேரில் பார்த்து பேசணுமுன்னு சொன்னேங்கலாம்”  என்ற தூங்கத் தேவரின் பணிவான குரல் கேட்டு மாவட்ட ஆட்சியர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். தும்பைப்பூ போன்று வெண்மையான வேஷ்டி, […]

Jul 142016
 
ரௌத்திரம் பழகு!!!

Share this on WhatsApp சமீபத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் திரு.எத்திராஜன் ராதாகிருஷ்ணன் என்ற உயர்ந்த மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் கான்பூர் ஐஐடி (IIT) முப்பது வருடங்களுக்கும் மேல் பல பொறியியல் துறைகளில் பாடங்கள் எடுத்து வருபவர். அவரது பொறியியல் புத்தகங்களை சுமார் பதிமூன்று உலக மொழிகளில், மற்ற நாடுகள் மொழி பெயர்த்துள்ளனர். பொறியியல் மட்டுமன்றி தமிழ் மீதும், இலக்கியங்கள் மீதும் தீராத ஆர்வம் கொண்டுள்ள இவர், தமிழில் சில நல்ல […]

Jul 142016
 
சுஜித் குமார்!

Share this on WhatsApp மாற்றம் அறக்கட்டளையின் Managing Trustee, Infosys நிறுவனத்தின் சென்னை HR Head, தேசிய மனித வள மேம்பாட்டுக் குழுவின் (NHRD) சென்னை பகுதி தலைவர், சிறந்த மேடைப் பேச்சாளர் என்று திரு.சுஜித் குமார் அவர்களுக்கு பல முகங்கள். நம் B+ இதழுக்கான சாதனையாளர்கள் பகுதிக்கு இவரை பேட்டி எடுக்க சென்றபோது, “எப்படி இத்தனை வேலைகளையும் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல், பிடித்த வேலைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு செய்கிறேன், அது தான் […]

Jul 142016
 
மனிதனாக இரு !

Share this on WhatsApp   சுடர் விளக்காக இரு, அது முடியாவிடில் பரவாயில்லை. இரவில் சுடர் விடும் மின் மினி பூச்சிகளை கொன்று குவிக்காதே !   பள்ளி செல்ல மனமில்லையா ? பாதகமில்லை பள்ளி செல்லும் குழந்தைகளின் பாடப் புத்தகங்களை மறைத்து வைக்காதே !   உண்மை பேச மனமில்லையா ?  அது குற்றமில்லை அரிச்சந்திரன் வரலாற்றை குற்றம் கூறி பொய்யின் உதட்டிற்கு சாயம் பூசி அழகு பார்க்காதே !   கொடுமை கண்டு […]

Jul 142016
 
தூண்டிலில் சிக்கிய மீன்கள்

Share this on WhatsApp தங்கமணி : வயது 61  தங்கமணி ஒரு தனியார் கம்பனி வேலையிலிருந்து ஒய்வு பெற்றவர். பென்ஷன் இல்லை. “என்னங்க! இப்படி இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்திருக்கீங்களே? வயசு வந்த ரெண்டு பெண்களை கரை எத்தறதை பத்தி ஏதாவது யோசனை பண்ணீங்களா?” – மனைவி வனஜாவின் அலம்பல். கொஞ்ச நாளாக, தினமும் காலையில் தங்கமணி பேப்பர் படிக்க உட்காரும்போது இதுதான் நடக்கிறது. “கவலைப் படாதே வனஜா. பாக்கலாம், என் பி. எப் பணத்தை […]

Jun 142016
 
மாற்றம் – முன்னேற்றம் – ஷாலினி !!!

Share this on WhatsApp (நம் சர்வே லிங்க்) மஹாராஷ்டிர மாநிலத்தின் மாரத்வாடா பகுதிகளில் வறட்சி முன் எப்போதும் இல்லாத வகையில் இருப்பதை தினசரிகளில் பார்த்திருப்போம். குறிப்பாக, அம்மாநிலத்தின் ஔரங்காபாத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது லாசர் என்ற கிராமம். “இங்கு ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 17லிட்டர் தண்ணீர்  மட்டுமே கிடைக்கிறது, அதுவும் 14 நாளைக்கு ஒரு முறை தான் தண்ணீர் வண்டி அப்பகுதிகளுக்கு வருகிறது” போன்ற செய்திகள் எத்தனை ஆபத்தை வருங்காலத்தில் நாம் […]

Jun 142016
 
என்னை நோக்கி பாயும் தோட்டா!!!

Share this on WhatsApp (1986 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம்) மும்பையிலிருந்து புறப்பட்டு பாக்கிஸ்தானின் கராச்சி, ஜெர்மனியின் ஃப்ராங்ஃபோர்ட் (FrankFort) என இரண்டு இடை நிறுத்தங்களுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு செல்லும் விமானம்  Pan Am Flight-103. செப்டம்பர் 5, 1986 ஆம் ஆண்டு, அதிகாலை மும்பையிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் சுமார் 6 மணி அளவில், பாக்கிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கி பயணிகளை ஏற்றிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது ஏர்போர்ட் செக்யூரிட்டி வாகனம் ஒன்றில் நான்கு செக்யூரிட்டி […]

Jun 142016
 
மணிமாலா

Share this on WhatsApp மணியின் வீடு: மணிக்கு சென்னையில் ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் வேலை. நிறைய சம்பாதிக்கிறான். ஒரே பையன். பார்க்க லட்சணமாக இருப்பான். கல்யாணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருகிறார்கள். ஆனால், இப்போதெல்லாம் பெண் கிடைப்பதுதான் குதிரை கொம்பாக இருக்கிறதே! மணியின் அப்பா ஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியர். அவர் வேலையில் சேர்ந்ததும் மற்றும் ஒய்வு பெற்றதும் எழுத்தராக. கடைசி வரை உத்தியோக உயர்வு கிடைக்கவேயில்லை. எப்போதாவது மனுஷன் வருத்தப் பட்டாரா என்ன? நெவெர்.  […]

May 142016
 
எதா ப்ரஜா, ததா ராஜா!!!

Share this on WhatsApp இலவசமில்லா தமிழகம் என்ற பதிவை நம் B+ இதழின் சென்ற டிசம்பர் மாதம் பதிவிட்டிருந்தோம். அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல் நமது குழு இரண்டு நிவாரணப் பணிகளை வெள்ளத்திற்குப் பின் செய்திருந்தது. ஆனால் அந்த மாத இதழில் பதிவிடாத ஒரு முக்கியமான நிகழ்வை இந்த இதழில் பதிவிடுகிறோம். இந்தப் பதிவு யார் மனதையும் காயப்படுத்துவதற்காக இல்லை. வெள்ள நிவாரணத்தின் போது, அன்று நம்மிடம் 200 குடும்பங்களுக்கு மட்டுமே  தேவைப்படும் பொருட்கள் இருந்தது. […]